Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
ஒரு நரகத்தின் வருடம் – ஓர் எழுப்புதலின் வருடம்!

A YEAR OF HELL – A YEAR OF REVIVAL!
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

ஜனவரி 1, 2017 அன்று கர்த்தருடைய நாள் ஞாயிறு மாலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, January 1, 2017

“தேவரீர் வானங்களைக் கிழித்திறங்கி, உருக்கும் அக்கினி எரியுமாப்போலவும், அக்கினி தண்ணீரைப் பொங்கப் பண்ணுமாப்போலவும், பர்வதங்கள் உமக்குமுன்பாக உருகும்படிசெய்யும்” (ஏசாயா 64:2).


இந்த இரவிலே நாம் இந்த மகத்தான வேத வசனத்திற்குத் திரும்புகிறோம். கடந்த ஆண்டிலே தேவன் நம்முடைய அநேக ஜெபங்களுக்குப் பதில் கொடுத்ததற்காக நான் நன்றி உள்ளவனாக இருக்கிறேன். இருந்தாலும் ஜான் கேஹன் இதை “ஒரு நரகத்தின் வருடம்” என்று அழைக்கிறார். நான் அவரோடு ஒத்துப்போகாமல் இருக்கமாட்டேன். அவர் பகுதி சரியானவர். சில வழிகளில் அது ஒரு நரகத்தின் வருடமாக இருந்தது. ஆனால் அதே சமயத்தில் அது ஒரு ஆசீர்வாதத்தின் வருடமாகவும் இருந்தது. ஜான் நீண்ட நாளாக மிகவும் முயற்சி செய்து இது ஒரு நரகத்தின் வருடம் என்று அழைத்தார். நாங்கள் முயற்சி செய்தபொழுது நாங்கள் தீய காரியங்களை நினைவு கூர்ந்தோம். ஆனால் நாங்கள் இளைப்பாறினபொழுது அதன்பிறகு நாங்கள் ஆசீர்வாதங்களை நினைத்தோம். நாம் அனைவரும் அப்படியே இருக்கிறோம். நாம் மனிதர்கள். நமது எண்ணங்கள் முன்னும் பின்னும் செல்லும். அவருடைய சோர்வில், அந்த அழகான ஜூலியை, கடந்த வருடம் அவளோடு அதிக கிறிஸ்தவ தேதிகளில் அதிகமான கேளிக்கையாக இருந்ததை ஜான் ஒரு நொடி மறந்தார். டிஸ்னே லேன்டின் அந்த அற்புதமான நாளை அவர் மறந்தார். சான்டா மோனிகா கடற்கரையில் அவளோடு சேர்ந்து வெறுங்காலில் அவர்கள் ஓடினதை அவர் மறந்தார். அவர்கள் இணைந்து ஜெபித்த அந்த நேரங்களில் இருந்த மகிழ்ச்சியை அவர் மறந்தார். நாங்கள் ஆரோன், ஜேக் மற்றும் நோவாவோடு இணைந்து, என்னுடைய வீட்டில் இரவில் அதிக நேரம் ஜெபித்த அந்தப் பெரிய ஜெப நேரத்தை அவர் மறந்தார். அவருக்கும் எனக்கும் இடையில் சித்தங்களில் இருந்த போராட்டத்தை அவர் மறந்தார், எங்களுக்குள் ஒருவருக்கொருவர் மதிக்கவும் மரியாதை செலுத்தவும், சகோதர தன்மையுள்ள நட்பு நித்தியகாலமாக நீடிக்கும் என்று நான் விசுவாசிக்கச் செய்த அந்தப் போராட்டத்தை அவர் மறந்தார். அவர் என்னிடம் சொன்னதை மறந்துவிட்டார், “நான் பெற்றிருந்த தாத்தாக்கள் யாரையும் எனக்குத் தெரியாது. டாக்டர் ஹைமர்ஸ், உங்களைப் போல மிகவும் நெருக்கமாக இருந்த தாத்தாவை நான் ஒருபோதும் அறிந்ததில்லை. என்னுடைய வாழ்க்கையிலே நீங்கள் செய்த முதலீடுக்காக உங்களுக்கு நன்றி. நான் உங்களுக்குத் துணைசெய்வேன் நான் உங்களில் விசுவாசமாக இருப்பேன்... தேவன் உங்களை ஆசீர்வதப்பாராக! உங்களால் செய்யமுடியும், டாக்டர் ஹைமர்ஸ்! – ஜான் சாமுவேல் கேஹன்”.

ஜான் ஒரு வல்லமையுள்ள தேவ மனிதன். நான் அவரைக் கர்த்தருடைய சேனை வீரனாக ஒரு தோழனாக உயர்த்திப் பிடிக்கிறேன். ஆனால் அவரும், நம்மெல்லாரையும் போல மனிதர் தான். நாம் சோர்ந்து போகும்போது தீய காரியங்களை மட்டுமே நினைப்போம். ஆனால் நாம் ஓய்ந்திருந்து எழுப்புதலடையும்போது, அந்த வருடம் நமக்கு எவ்வளவு நல்லதாக இருந்தது என்பதை நினைப்போம் – அற்புதமான ஜெபம் மற்றும் ஐக்கிய நேரங்களை, 2016ல் தேவன் நமக்குக் கொடுத்த வல்லமைமிக்க பக்தி மற்றும் அன்பை – நாம் ஜெபித்தபொழுது தேவன் நமக்குக் கொடுத்த பதிலை நினைப்போம்,

“தேவரீர் வானங்களைக் கிழித்திறங்கி, உருக்கும் அக்கினி எரியுமாப்போலவும், அக்கினி தண்ணீரைப் பொங்கப் பண்ணுமாப்போலவும், பர்வதங்கள் உமக்குமுன்பாக உருகும்படிசெய்யும்” (ஏசாயா 64:2 தமிழில்).

சில நேரங்களில் நானும் இதை “ஒரு நரகத்தின் வருடம்” என்று உணர்ந்தது உண்டு. என்னுடைய எண்ணங்கள் தாழ்வாக இருந்தபோது, என்னுடைய வாழ்க்கைப் பிடிப்பை இழந்ததாக நினைத்தது உண்டு. நான் உடைக்கப்பட்டு கண்ணீர்விட்டு மரிக்கும் நிலையில் இருப்பதாக நினைத்தேன் – நமது சபையின் வேதனை என் இருதயத்தை உடைத்தது. புற்றுநோய்க்காக அவர்கள் எனக்குக் கொடுத்த மருத்துவ சிகிச்சை பயங்கரமான “ஊஞ்சலாடும் மனநிலையை” கொடுத்தது. சில நேரங்களில் நான் மிகவும் ஆழமான மன அழுத்தத்தில் அமிழ்ந்தேன். கடந்த வருடத்தில் நேரத்திற்கு நேரம் எழுத்தளவாக நான் பிசாசின் வல்லமைகளினால் தாக்கப்பட்டேன். ஆரோன் யான்சி அந்த நேரங்களில் எனக்காக அங்கே இல்லாதிருந்தால் என்னால் சமாளித்திருக்க முடியும் என்று நான் நினைக்க முடியவில்லை. ஆரோனைப் போன்ற நெருங்கின நண்பர்கள் தேவனிடமிருந்து கிடைத்த பரிசு! கிறிஸ்டினா நகுயான் மற்றும் திருமதி லீ போன்ற ஜெப வீராங்கனைகள் தேவனிடமிருந்து கிடைத்த பரிசு!

ஆமாம், இன்னும் சில நல்ல காரியங்களும் 2016ல் இருந்தன. நம்முடைய அநேக இளைய மக்கள் என்னை வெறுத்திருந்தார்கள். இப்பொழுது என்னை நேசிக்கிறார்கள்! அவர்கள் புன்னகையோடு இவ்வாறாகச் சொல்லும்போது என்னுடைய இருதயம் மகிழ்ந்து பாடும்படி செய்கிறது, “போதகரே, நான் உங்களை நேசிக்கிறேன்!”

பிறகு என் அழகான மனைவி அனுப்பிய அட்டையைப் பார்த்தேன். அவள் சொன்னாள்,

அன்புள்ள ராபர்டுக்கு, தேவனுக்கு உங்களுடைய கீழ்ப்படிதல் நம்பிக்கை காரணமாக நான் இயேசுவை அறிந்து கொண்டேன். நீங்கள் இல்லாவிட்டால் எங்களில் ஒருவரும் இங்கே இருக்க மாட்டோம்... ராபர்டு, நான் உங்களை முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் நேசிக்கிறேன். எப்பொழுதும் அன்புடன், இலினா.

அவளுடைய இனிமையான வார்த்தைகளை படிக்கும்போது என்னுடைய இருதயம் மகிழ்ச்சியோடு பாடுகிறது! “ஓ தேவனே, இலினாவுக்காக உமக்கு நன்றி! அப்படிப்பட்ட உண்மையுள்ள, அன்பான பெண்ணை எனக்குக் கொடுத்ததற்காக உமக்கு நன்றி!” அவளுடைய அன்பு, உதவி மற்றும் அவளுடைய ஜெபமில்லாமல் என்னால் தீமையான நேரங்களை ஒருபோதும் கடந்து வந்திருக்க முடியாது. என்னுடைய முதல் பேரக்குழந்தை பேபி அன்னாளுக்காக, தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். அவள் முதலில், மொட்டைத் தலையை உடைய பெரிய வயதான என்னைப் பார்த்து சிறிது பயந்தாள்! ஆனால் கிறிஸ்துமஸ் முன் மாலைப் பொழுதில் அவள் என்மேல் தவழ்ந்தாள் – நான் அவளை என் கரங்களில் ஏந்தியிருக்கும்பொழுது அவள் என்னுடைய மூக்கின்மீது முத்தமிட்டாள். நான் உயிர் வாழும் வரையிலும் அந்த முத்தத்தை ஒருபோதும் மறக்கமாட்டேன்!

நாம் 2016ஐ பார்க்கும்பொழுது தேவன் நமக்குச் செய்தவைகளை மறக்க வேண்டாம்! அது சபை மரித்ததுபோல உணரப்பட்டது, நானும் மரித்தது பொலானேன், நமது எதிர்காலத்தில் ஜீவனுக்குரிய நம்பிக்கை இல்லாதிருந்தது. ஆனால், எல்லாம் இழக்கப்பட்டதாகக் காணப்பட்டபொழுது, தேவன் நமது ஜெபத்தைக் கேட்டார்,

“தேவரீர் வானங்களைக் கிழித்திறங்கி, உருக்கும் அக்கினி எரியுமாப்போலவும், அக்கினி தண்ணீரைப் பொங்கப் பண்ணுமாப்போலவும், பர்வதங்கள் உமக்குமுன்பாக உருகும்படிசெய்யும்” (ஏசாயா 64:2).

தேவன் நமக்குப் பதில் கொடுத்தார்! நான் “புதிய” பாப்டிஸ்டு ஆசாரிப்புக் கூடாரத்திற்குத் திட்டமிட்டேன். “வாலிப மக்களே, எழுந்திருங்கள்” என்று நான் பிரசங்கம் செய்தேன். வாலிப பையன்களும் பெண்களும் நாங்கள் பாட ஊக்கமாக ஜெபிக்க ஆரம்பித்தார்கள், அழுது மற்றும் தேவனிடம் எங்கள் மத்தியில் வரும்படி கெஞ்சினோம். அவர் இறங்கி வந்தார். டாக்டர் கேஹான் தமது 90 வயது தாயாரைக் கிறிஸ்துவிடம் நடத்தினபொழுது இது ஆரம்பித்தது. கிறிஸ்டினா நெக்யானுக்கு ஜெப ஆவி கொடுக்கப்பட்டது. திருமதி ஸர்லி லீக்கு ஜெப ஆவி கொடுக்கப்பட்டது. எழுப்புதலின் அக்கினி நம்மத்தியில் இறங்கினது. சில வாரங்களுக்குள்ளாக 28 பேர் பாவ உணர்வுக்குக் கீழாக வந்தார்கள் அதன்பிறகு நம்பிக்கையோடு மாற்றப்பட்டார்கள், சிலுவையிலே நமக்காக சிந்தின இரத்தத்தினால் கழுவி சுத்தம் செய்யப்பட்டார்கள்.

பிறகு எழுப்புதல் முடிந்தது என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் நாங்கள் நினைத்தது தவறு. தேவன் இன்னும் நம்மோடு இருக்கிறார்! ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குறைந்தது ஒரு புதிய நம்பிக்கையுள்ள மாறுதல் நிகழ்கிறது. உடனடியாக டாக்டர் சான் அப்படிப்பட்ட அபிஷேகத்தோடு பிரசங்கம் செய்தார் நான்குபேர் உணர்த்தப்பட்டு இரட்சிக்கப்பட்டார்கள், டிசம்பர் 25 அன்று –கிறிஸ்துமஸ் நாளன்று, மாலை கூட்டத்தில் நம்பிக்கையோடு மாற்றப்பட்டு இரட்சிக்கப்பட்டார்கள்! 2016ல் நம்பிக்கையோடு மாற்றப்பட்ட 28 பேர்களின் பட்டியல் இதோ.

ஜூடி லீ
மார்ஜோரி கேஹன்
தாமஸ் லுங்
கிறிஸ்டினா நெகுயான்
அடிலா மஞ்சிவார்
செட்சுகோ ஷபாலகா
ஜெசி ஜகமிட்ஜின்
கிறிஸ்டினா லேவிஸ்
ஜெனிபர் யான்
ஆபிரகாம் சாங்
பாயாங் ஷங்
டாம் சியா
விர்ஜில் நிக்கெல்
ஜாசன் பால்டாஷர்
எமி கூவா
டைரிக் செம்பர்ஸ்
ஜூலி சிவிலே
மிங் வு
அலிசியா ஜகமிட்ஜின்
டானி கார்லாஸ்
டேனியேல் பரஹோனா
ஆயாகோ ஷபலகா
ஜூலிடா பிரிடோ
ராபர்ட் வாங்
ஜோசப் கோங்
ஆன்ரூ மாட்சுசாகா
ஜெசிகா என்
நோரிஸ் மென்ஜிவார்.

எனது நண்பர்களே, தேவன் நம்மை விட்டுவிடவில்லை! அவர் இறங்கி வந்தார் மறுபடி மறுபடியுமாக நமது சபைக்குள்ளே வந்தார், ஆகஸ்டிலே, செப்டம்பரிலே, அக்டோபரிலே – மற்றும் டிசம்பரிலே மட்டும் ஒன்பதுபேர் நம்பிக்கையோடு மாற்றப்பட்டார்கள். ஒரு வருடத்தில் இருபத்தி எட்டு பேர்! டோசோலஜி பாடலை எழுந்து நின்று பாடவும்!

எல்லா ஆசீர்வாதமும் கொடுக்கிற, தேவனை துதிசெய்;
கீழே இருக்கும் சகல ஜீவன்களும் அவரைத் துதிப்பதாக;
மேலுள்ள பரலோக சேனைகளே, அவரைத் துதியுங்கள்;
பிதா, குமாரன், மற்றும் பரிசுத்த ஆவிக்குத் துதி! ஆமென்.
(“Doxology” by Thomas Ken, 1637-1711).

பெண்கள் இதைப் பாடவும்! இப்பொழுது ஆண்களே நீங்கள் பாடுங்கள்! இப்பொழுது நாம் அனைவரும் சேர்ந்து நம்மால் முடிந்த வரையிலும் சத்தமாகப் பாடலாம்! இப்பொழுது நமது எழுப்புதல் பாடல், “என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும்” என்ற பாடலைப் பாடுங்கள். மனப்பாடமாகப் பாடுங்கள், அல்லது உங்கள் பாட்டுத்தாளைப் பாருங்கள். பாட்டுத்தாளில் 4வது பாடல் அதைப் பார்த்துப் பாடுங்கள். இப்பொழுது பாடுங்கள்!

என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், இரட்கரே, நான் ஜெபிக்கிறேன்,
   இயேசுவை மட்டும் இன்று நான் பார்க்கும்படி செய்யும்;
பள்ளதாக்கிலே நீர் என்னை நடத்தினாலும்,
   உமது மட்டற்ற மகிமை என்னைச் சுற்றிக் கொள்கிறது.
என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், தெய்வீக இரட்சகரே,
   உமது மகிமையினால் எனது ஆவி பிரகாசிக்கும் வரையிலும்.
என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், அனைவரும் பார்க்கட்டும்
   உமது பரிசுத்த சாயல் என்னில் பிரதிபலிப்பதை.

என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், எனது ஆசைகளை
   உமது மகிமைக்காக வையும்; என் ஆத்துமா வாஞ்சிக்கும்,
உமது பரிபூரணத்தாலும், உமது பரிசுத்த அன்பாலும்,
   பரத்திலிருந்து வரும் ஒளி என் பாதையில் பாய்ந்தோடும்.
என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், தெய்வீக இரட்சகரே,
   உமது மகிமையினால் எனது ஆவி பிரகாசிக்கும் வரையிலும்.
என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், அனைவரும் பார்க்கட்டும்
   உமது பரிசுத்த சாயல் என்னில் பிரதிபலிப்பதை.

என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், பாவமில்லாமலும்
   பாவத்தில் பிரகாசிக்கும் வெளிச்சத்தின் நிழலுமில்லாமலும்.
உம்முடைய ஆசிர்வதிக்கப்பட்ட முகத்தை மட்டும் பார்ப்பேனாக,
   உமது அளவில்லாத கிருபையினால் என் ஆத்துமாவுக்கு விருந்தளியும்.
என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், தெய்வீக இரட்சகரே,
   உமது மகிமையினால் எனது ஆவி பிரகாசிக்கும் வரையிலும்.
என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், அனைவரும் பார்க்கட்டும்
   உமது பரிசுத்த சாயல் என்னில் பிரதிபலிப்பதை.
(“Fill All My Vision” by Avis Burgeson Christiansen, 1895-1985).

சகோதர சகோதரிகளே, எழுப்புதலின் பெரிய பகுதி 2017ல் வரப்போகிறது என்று நான் விசுவாசிக்கிறேன். அதற்காக தினமும் ஜெபியுங்கள். வரும் வருடத்தில் அதிகமான தேவபிரசன்னத்திற்காகச் சில நேரங்களில் உபவாசித்து ஜெபியுங்கள்.

இப்பொழுது உங்கள் வேதகமத்தில் I கொரிந்தியர் 9:24க்குத் திருப்பிக் கொள்ளுங்கள். அது ஸ்கோபீல்டு ஸ்டடி வேதாகமத்தில் 1219ஆம் பக்கத்தில் உள்ளது. மீதியுள்ள போதனைகள் டாக்டர் கேஹன் அவர்களால் எழுதப்பட்டது.

“பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்” (I கொரிந்தியர் 9:24).

நீங்கள் அமரலாம். இப்பொழுது உங்கள் வேதாகமத்தை மூடிவிட்டு ஜாக்கிரதையாகக் கவனியுங்கள்.

பவுல் கிறிஸ்தவ வாழ்க்கையை ஒரு பந்தய ஓட்டத்திற்கு ஒப்பிடுகிறார். அவர் சொன்னார், “நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள் [பரிசு]” (I கொரிந்தியர் 9:24). பிறகு பவுல் சொன்னார், “அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்” (I கொரிந்தியர் 9:25). கிறிஸ்தவ பரிசு ஒரு பதக்கம் அல்ல. அது அதைவிட மேலானது. அந்தப் பரிசு இயேசு கிறிஸ்துவினால் அவர் தமது இராஜ்ஜியத்தை நிறுவ வரும்பொழுது கொடுக்கப்படும் பலன்களாகும்!

பவுல் சொன்னார் ஓடுகிறவன் “எல்லாவற்றிலும் இச்சை அடக்கமாக [சுய கட்டுப்பாட்டோடு] இருப்பான்” (வ. 25). ஒரு மல்லன் கொழுத்தவனாக இருக்க மாட்டான். அவன் சோம்பலாக இருக்க மாட்டான். அவன் தனது நேரத்தை வீணாக்க மாட்டான். அப்போஸ்தலனாகிய பவுல் அப்படி இருந்தார். அவர் சொன்னார், “ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்” (வ. 26). அவர் ஒரு பயிற்சியில்லாத மல்லனாக ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம் செய்யவில்லை. பவுல் மிஞ்சின நம்பிக்கை கொண்டவராக இல்லை. அவர் தோற்றுப்போக முடியும் என்று அறிந்திருந்தார். அவர் சொன்னார், “மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்” (வ. 27).

பவுலுக்கு என்ன வேண்டும் என்று அவர் அறிந்திருந்தார். அவர் தமது முழு முயற்சியையும் அதிலே செலுத்தினார். நாம் என்ன செய்யவேண்டும் என்று சொன்னாரோ அப்படியே அவர் தமது சொந்த வாழ்க்கையை வாழ்ந்தார்.

“ஆதலால் நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்” (I கொரிந்தியர் 9:24).

“ஆதலால் நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள் [பரிசு].” இந்த இரவிலே இந்தப் பாடத்தை நான்கு வழிகளிலே கொடுக்கிறேன்.

I. முதலாவதாக, குளிர்காலத்துக்கும் வசந்த காலத்துக்கும் பொறுத்தமான பாடம்.

நமக்கு அற்புதமான “விடுமுறை நாட்கள்” கொண்டாட்டங்கள் இருந்தன. நமக்கு ஒரு கிறிஸ்துமஸ் விருந்து இருந்தது. கிறிஸ்துமஸ் சம்பவத்தில் நாம் நமது இரட்சகரின் பிறப்பை நினைவுகூர்ந்தோம். கிறிஸ்துமஸ் நாளிலே நாம் மறுபடியுமாக ஒன்று கூடினோம். டாக்டர் சென் ஒரு சிங்கத்தைப்போலப் பிரசங்கம் செய்தார். நான்குபேர் இரட்சிக்கப்பட்டார்கள்! நாம் கர்த்தருடைய பந்தியை அனுசரித்தோம். கடந்த இரவு, புதுவருட முன் மாலையில், சர்சிகோ மற்றும் யாஷ்மின் விவாகம் செய்து கொண்டார்கள். இன்று புதுவருட தினம்.

ஆனால், “விடுமுறை நாட்கள்” என்றென்றும் நிலைத்திருக்காது. இப்பொழுது ஜனவரி மாதம். அடுத்தவார முடிவு வரையில் விடுமுறை இல்லை. இது குளிர்காலமாக இருக்கும். இது குளிராக இருக்கும். இதில் மழை பெய்யும். இது மிகவும் உற்சாகமானதாக இருக்காது. இதை உங்களால் கைகொள்ள முடியுமா? அல்லது நீங்கள் தோற்றுப்போய் சபையை விட்டுவிடுவீர்களா? நமது பாடம் சொல்லுகிறது, “ஆதலால் நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்”. உங்கள் மனதை பரிசின்மீது வையுங்கள்! என்ன நடந்தாலும் சபையிலே தங்கியிருங்கள்! உங்கள் மனதைக் கிறிஸ்து மற்றும் சபையின்மீது வையுங்கள்!

குளிர்காலம் ஒவ்வொரு வருடமும் வருகிறது, நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அந்தப் பெரிய ஜலப்பிரளயத்திற்குப் பிறகு தேவன் நோவாவிடம் சொன்னார், “பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை” (ஆதியாகமம் 8:22). குளிர்காலம் ஒவ்வொரு வருடமும் வருகிறது. நீங்கள் அதைக் கைகொள்ள முடியுமா? “ஆதலால் நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்”.

குளிர்காலத்திற்குப் பிறகு வசந்த காலம் வருகிறது. வசந்த காலம் தனது சொந்த சோதனையை உடையது. அதை நான் “அமெரிக்கரின் மகிழ்ச்சி இயந்திரம்” என்று அழைப்பேன். மூன்று வாரக்கடைசி நாட்கள் இருக்கின்றன. மக்கள் லாஸ் வேகாஸ், அல்லது சென் பிரான்சிஸ்கோ, அல்லது மற்ற இடங்களுக்குச் செல்லுவார்கள். பெலவீனமான மனதையுடையவர்கள் சபையை விட்டுவிடுவார்கள். அங்கே “வசந்தகால விடுப்பு” இருக்கும். மக்கள் வெளியே போக விரும்புவார்கள். அங்கே சமூக சம்பவங்கள் நடைபெறும். அங்கே குடும்ப நிகழ்ச்சிகள் நடக்கும். பாலியல் பாவங்கள் மற்றும் போதைப் பொருள்கள் கொன்ற ஆத்துமாக்களைவிட அதிகமாக இந்த அமாரிக்கரின் மகிழ்ச்சி இயந்திரம் கொன்றது. நீ ஒரு மல்யுத்த வீரனைப்போலப் போராடுவாயா? அல்லது விழுந்து போவாயா? நீ ஒரு மல்யுத்த வீரனைப்போல போராடுவாயா? ஒவ்வொரு நேரத்திலும் சபையில் இருப்பாயா? நீ சாத்தானின் சோதனையில் போராடி எப்பொழுதும் சபையில் இருப்பாயா? அல்லது நீ பெலவீனமாகி சபையை விட்டுவிடுவாயா? நீ பிசாசினால் சோதிக்கப்படும்போது சபையைவிட்டு பாவத்திற்குத் திரும்பிப் போய்விடுவாயா? “ஆதலால் நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்”.

நீங்கள் கிறிஸ்துவையும் சபையையும் நோக்கி இருந்தால் இந்த 2017வது ஆண்டு மகத்தான ஆண்டாக நமக்கு இருக்கும். அதுக்கும் இதுக்குமாக நேரத்தை வீணாக்க வேண்டாம். காலம் நிறைவேறினபடியினால் ஒன்றன்பின் ஒன்றான காரியங்களுக்காக கலங்க வேண்டாம்! இந்த 2017வது ஆண்டு மகத்தான ஆண்டாக நமக்கு இருப்பதாக! ஜெபத்திலே பிசாசோடு போராடுங்கள். ஒவ்வொரு நேரத்திலும் தொடர்ந்து சபைக்கு வாருங்கள். கிறிஸ்துவுக்கு மல்யுத்த வீரனைப்போலப் பரிசை வெற்றி கொள்ளுங்கள்!

நாம் பிரச்சனைகளையும் நெருக்கடிகளையும் உண்டாக்க வேண்டாம். நீ நமது சபையிலே ஒரு பிரச்சனையாக இல்லாதபடி தீர்மானம் செய்துகொள். அப்போஸ்தலநடபடி புத்தகத்தில் இருந்த கிறிஸ்தவர்களைப்போல நாம் “ஒரு மனமுள்ளவர்களாக” இருப்போம்! நாம் ஒரு மல்யுத்த வீரனைப்போல – நம்மை ஒன்றும் வெளியே இழுக்காதபடி இருந்தால் – நாம் மகத்தான வருடத்தை உடையவர்களாக இருக்க முடியும்! குளிர்காலமானாலும் வசந்த காலமானாலும் நீங்கள் கிறிஸ்துவையும் சபையையும் நோக்கி இருங்கள். ஒரு மல்யுத்தவீரரைப்போல இருங்கள். “ஆதலால் நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்” – வெற்றியை ஜெயங்கொள்ளுங்கள்! “தொடர்ந்து செல், கிறிஸ்தவ போர் வீரனே”. பாடல் பல்லவியை எழுந்து நின்று பாடுவோம்!

தொடர்ந்து செல், கிறிஸ்தவ போர்வீரனே,
   போராட்டத்தில் முன்னேறுவதுபோல,
கிறிஸ்துவின் சிலுவையோடு முன்னேறு.
(“Onward, Christian Soldiers” by Sabine Baring-Gould, 1834-1924).

II. இரண்டாவதாக, இந்தப் பாடம் எழுப்புதலுக்குப் பொறுத்தமானது.

தேவன் சென்ற வருடம் எழுப்புதலோடு நமது சபைக்கு விஜயம் செய்தார் –நாற்பது வருடங்களுக்கு மேலாக முதல்முறையாக. அந்தக் கூட்டங்களில் தேவன் இறங்கி வந்தார். அவருடைய பரிசுத்த ஆவியானவர் நம்மோடு பிரசன்னராக இருந்தார். சில இரவுகளிலேயே அநேகர் மாற்றப்பட்டார்கள். சிலர் முடியாது என்று இருந்தவர்கள். அவர்கள் அநேக போதனைகளை கேட்டவர்கள். நான் அவர்களுக்கு அநேகமுறை ஆலோசனை வழங்கி இருக்கிறேன். அவர்கள் கடினமான குளிர்ந்த நிலையில் இருந்தார்கள். ஆனால் தேவன் இறங்கி வந்தபொழுது ஒன்றன்பின் ஒன்றாக அற்புதமான மாறுதல்! தேவனுடைய சொந்த பிரசன்னம் இருந்ததுதான் மிகப்பெரிய வெகுமதியாகும். நாம் ஜீவனுள்ள கிறிஸ்தவத்தை அனுபவித்தோம். தேவன் நம்மோடு இருந்தார். இதைவிடப் பெரிய எழுப்புதலை அனுப்பும்படி நாங்கள் எவ்வளவாக உமக்காக ஏங்குகிறோம் – ஓ, கர்த்தாவே!

நமது சபை ஒவ்வொரு வியாழக்கிழமையும் மற்றும் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஜெபிப்பதற்குக் கூடுகிறது. உங்களில் அநேகர் சிறிய குழுக்களாக கூடி எழுப்புதலுக்காக ஜெபிக்கிறீர்கள். எழுப்புதலுக்காகப் பிரசங்கிக்கும்படி வழிநடத்தும் தேவனுக்கு நான் நன்றி செலுத்துகிறேன். நம்மை ஜெபிக்கும் சபையாக இருக்க எனக்கு வழிநடத்தும் தேவனுக்கு நான் நன்றி செலுத்துகிறேன். இவைகள் அரிதான பொக்கிஷங்கள், நான் அறிந்தவரையிலும் அமெரிக்காவில் காணப்படாதவைகள். நீங்கள் சிறு குழுக்களாக உங்கள் ஜெபங்களிலெல்லாம் எழுப்புதல் மற்றும் ஆத்தும ஆதாயத்திற்காக ஜெபித்தால் அந்த இரண்டு காரியங்களை முன்வையுங்கள். அந்த இரண்டு காரியங்களை முன்வையுங்கள். நமது தேவை அந்த இருகாரியங்களே – தேவனுடைய பிரசன்னம் மற்றும் சுவிசேஷ ஊழியத்தின் மூலமாக அநேக புதிய மக்கள்.

நாம் பெரிதான எழுப்புதலுக்காக ஏங்க வேண்டியது அவசியம்! இப்பொழுது நாம் தேவனுடைய பிரசன்னத்தை அனுபவித்தோம் எழுப்புதல் ஏற்பட்டது, இன்னும் அதிகமாக நமக்குத் தேவை என்று நாம் விரும்புகிறோம். ஆனால் நான் உங்களை எச்சரிக்க வேண்டும். எழுப்புதலை எப்படிப் பெறவேண்டும் என்று எங்களுக்குத் தெரியும் என்று நினைக்க வேண்டாம். நீங்கள் நினைக்காதீர்கள், “நாங்கள் இதை இப்பொழுது பெற்றுவிட்டோம். என்ன செய்யவேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். நாம் இன்னொரு எழுப்புதலை உண்டாக்குவோம்”. அப்படி நீங்கள் நினைத்தால், நாம் ஒருபோதும் அதிக எழுப்புதலை பெறமுடியாது.

தேவன் ஓர் இயந்திரமல்ல. அவர் ஒரு நபர். அவர் சர்வ வல்லமை மற்றும் இராஜரீகமான தேவன். அவரை நம்முடைய திறமையினால் கையாள முடியாது –ஜெபித்தாலும் கூடமுடியாது. எழுப்புதல் ஒரு மந்திர சக்தியல்ல. அது நம்மால் செய்யக்கூடியதல்ல ஜெபிப்பதாலும் மற்றும் கிரியை செய்வதாலும் அது நடக்க முடியாது. பிசாசினால் பிடிக்கப்பட்ட பொய் தீர்க்கதரிசியாகிய சார்லஸ் பின்னி சபை எழுப்புதலை உண்டாக்க முடியும் என்று போதிக்கிறார் – ஆனால் அவர் தவறானவர். தேவனே எழுப்புதலுக்குக் காரணகர்த்தா. அவர் தெரிந்து கொள்ளும்பொழுது எழுப்புதலை அனுப்புகிறார்.

கடந்த கோடையிலே எழுப்புதல் எப்படி ஆரம்பமானது என்று நினைத்துப் பாருங்கள். ஆமாம், மக்கள் ஜெபித்தார்கள். ஆனால் தேவன் இறங்கிவந்தபொழுது அங்கே ஒருவரும் ஜெபித்துக் கொண்டிருக்கவில்லை. அங்கே பிரசங்கம் செய்யப்படவில்லை. தேவன் திடீர் என்று, ஆச்சரியவிதமாக இறங்கினார், மக்கள் ஏசாயா 64:1-3ஐ மனப்பாடம் செய்து கொண்டிருந்தார்கள். அவர் திடீர் என்று இராஜரீகத்தோடு வந்தார்.

சில கூட்டங்களில் தேவன் இறங்கி வரவில்லை. நேரத்திற்கு நேரம், மக்கள் எதிர்பார்த்து எழுப்புதல் தானாகவரும் என்றிருந்தபோது, தேவன் அங்கே இல்லை. தேவ ஆவியானவர் இல்லாதபோது கூட்டங்கள் மரித்ததாக வெறுமையாக இருந்தன. தேவன் இல்லாதபோது சில நேரங்களில் நான் கூட்டத்தை முன்னதாக முடிக்கவேண்டியிருந்தது.

தேவனுடைய பிரசன்னத்தை இழந்து போவது சுலபம். சாத்தான் எப்பொழுதும் இங்கே இருக்கிறான். ஆனால் தேவன் இல்லாதிருக்க முடியும். தேவனை அத்தியவசியமாக விரும்பாத இடத்தில் தேவன் வரமாட்டார். நாம் “விடுமுறைகளிலும்” இந்த வாழ்க்கைக்குரிய காரியங்களிலும் திருப்தி அடைவோமானால், தேவன் நம் மத்தியில் இருக்கமாட்டார். தேவன் நம்மோடு இருக்க நாம் விரும்பாவிட்டால், அவர் நம்மோடு இருக்க மாட்டார். ஆனால் அவர் இன்னும் நம்மோடு இருக்கிறார். நான் இந்தப் போதனையைக் கடந்த இரவு தயார் செய்துகொண்டிருந்தேன். நடு இரவில் போன் ஒலித்தது. அது உட்டி, பாவ உணர்த்துதலினால் அழுதுகொண்டும் புலம்பிக் கொண்டும் இருந்தார். நான் டாக்டர் சான் அவர்களை எழுப்பினேன் அவர் உட்டியின் அறைக்குச் சென்றார். உட்டி இன்று காலை இரண்டு மணிக்கு மாற்றப்பட்டார் – இந்த வருடத்தின் கடைசி நாளிலே காலை 2.00 மணிக்கு நமது 29வது மாற்றத்தை நாம் பெற்றோம்! டோசோலோஜிக்காக எழுந்திருக்கவும்!

ஆனால் ஒருபோதும் நிச்சயிக்க வேண்டாம் – கொடுக்கப்பட்டதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் – தேவன் நம்மோடு இருந்திருக்க வேண்டும். தேவன் எழுப்புதலை அனுப்பி விடுவார் என்று ஒருபோதும் நினைத்துவிட வேண்டாம். சிம்சோனைப்போல இருக்க வேண்டாம் “கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல்” எப்போதும்போல “உதறிப்போட்டு வெளியே போவேன்” (நியாதிபதிகள் 16:20). இஸ்ரவேல் மக்கள் போல் இருக்காதீர்கள் அவர்கள் தேவனுடைய அற்புதத்தினால் எரிகோவை வென்றார்கள், அதன்பிறகு சிறிய பட்டிணமாகிய ஆயியை அடைந்தார்கள். அவர்கள் சொன்னார்கள், “எல்லாரும் போக வேண்டியதில்லை... அவர்கள் கொஞ்சம்பேர் தான்… ஆனாலும் அவர்கள் ஆயியின் மனுஷருக்கு முன்பாக முறிந்தோடினார்கள்” (யோசுவா 7:3,4). நமது பாடம் சொல்லுகிறது, “ஆதலால் நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்”. சங்கீதம் சொல்லுகிறது, “கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்” (சங்கீதம் 126:5). அது இவ்வாறாக சொல்லவில்லை, “அறிவோடு விதைக்கிறவர்கள் மகிழ்சியோடு அறுப்பார்கள்”. அது இவ்வாறாக சொல்லவில்லை, “சுயநம்பிக்கையோடு விதைப்பவர்கள் சந்தோஷத்தோடு அறுப்பார்கள்”. இல்லை, கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள். வல்லமை தேவனுக்கு மட்டுமே சொந்தமானது என்று அறிந்தவர்களாக, நாம் எழுப்புதலுக்காக அதிகமாக ஜெபிப்போம். தேவன் இறங்கி வரும்வரையிலும் ஜெபியுங்கள் – ஆனால் ஓ தேவனே, சாத்தானோடு போராட எங்களுக்கு உதவி செய்யும், நீர் மிகுந்த வல்லமையான எழுப்புதலோடு இறங்கி வரும்வரையிலும் ஜெபத்திலே போராட எங்களுக்கு உதவி செய்யும்! நீர் மறுபடியும் இறங்கி வரவேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம்! இறங்கி வாரும், நாங்கள் ஜெபிக்கிறோம்! எழுப்புதலில் இறங்கி வாரும்! “தொடர்ந்து செல், கிறிஸ்தவ போர்வீரனே!” என்ற பல்லவியை எழுந்து நின்று பாடுவோம்.

தொடர்ந்து செல், கிறிஸ்தவ போர்வீரனே,
   போராட்டத்தில் முன்னேறுவதுபோல,
கிறிஸ்துவின் சிலுவையோடு முன்னேறு.

III. மூன்றாவதாக, இந்தப் பாடம் ஆத்தும ஆதாயத்திற்குப் பொறுத்தமானது.

ஏற்கனவே சபையில் இருக்கும் மக்களுக்கு உள்ளே – உள்பக்கம் – பார்ப்பது சுலபம். சில நேரங்களில் அப்படிச் செய்வது சரியானது. ஆனால் இங்கே இல்லாத இழக்கப்பட்ட மக்களிடம் போவதற்கு இதுதான் ஏற்ற தருணமாகும். நாம் ஆத்தும ஆதாயத்திற்குக் கவனம் செலுத்த வேண்டும்! நமக்கு அதிகமான பெயர்கள் மற்றும் தொலைப்பேசி எண்கள் கிடைக்கும்படி நாம் மல்யுத்த வீரரைப்போல போராட வேண்டியது அவசியமாகும். இழக்கப்பட்ட மக்களை உள்ளே கொண்டு வருவதற்காக நாம் மல்யுத்த வீரரைப்போலப் போராட வேண்டியது அவசியமாகும். அப்படிப் போராடி அவர்களை உள்ளே கொண்டுவராவிட்டால், தேவன் தொடர்ந்து நம்மத்தியில் எழுப்புதலை அனுப்பமாட்டார். நான் இன்னும் அதிகமாகச் சொல்ல வேண்டியதாக இருக்கிறது, ஆனால் நான் இங்கே நிறுத்தவேண்டியதாயிருக்கிறது. டாக்டர் சென் அவர்கள் உட்டியைக் கொண்டுவரப் போராடினார். அவர் அவனைத் தமது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவர் உட்டிக்காக இரவும் பகலும் ஜெபித்தார். பிறகு உட்டி அழுதுகொண்டு தொலைப்பேசியில் என்னைக் கூப்பிட்டார். நான் டாக்டர் சென் அவர்களைக் கூப்பிட்டேன், அவரைத் தூக்கத்திலிருந்து எழுப்பினேன், அவர் உட்டியை வருடத்தின் கடைசி நாளில் அதிகாலை இரண்டு மணிக்கு, கிறிஸ்துவினிடம் நடத்தினார்!

இயேசு சொன்னார், “இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்” (லூக்கா 19:10). மறுபடியுமாக, கிறிஸ்து சொன்னார், “அப்பொழுது எஜமான் ஊழியக்காரனை நோக்கி: நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா” (லூக்கா 14:23). அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த பிறகு இயேசு சொன்னார், “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் [சீஷராக்குங்கள்]” (மத்தேயு 28:19). டாக்டர் ஜான் ஆர். ரைஸ் சொன்னார், “கிறிஸ்தவர்களின் மனதையும் பிரயாசங்களையும் நிரப்பி இருப்பது ஆத்துமாக்களை ஆதாயம் செய்யும் அதிமுக்கியமான காரியமாகும்” (The Golden Path to Successful Personal Soul Winning, Sword of the Lord Publishers, 1961, p. 55). அவர் சரியானவர்!

ஒருபோதும் மறக்க வேண்டாம் சபையின் பிரதானமான வேலை என்னவென்றால் அது ஆத்தும ஆதாயம் ஆகும்! இந்த நகரத்திலிருக்கும் இழக்கப்பட்ட இளைய மக்களைப் போராடிக் கொண்டு வாருங்கள்! இப்பொழுது இங்கே இல்லாத அநேகரைக் கொண்டுவரப் போராடுங்கள்! டாக்டர் சென் போராடி உட்டியை இரட்சிக்கச் செய்ததுபோலப் போராடுங்கள்! வெளியில் கல்லூரிகளுக்கும் மால்களுக்கும் போய் பெயர்களையும் தொலைப்பேசி எண்களையும் கொண்டுவாருங்கள். சுவிசேஷத்தைக் கேட்க அவர்களை சபைக்குக் கொண்டு வாருங்கள். நாம் சந்திக்கும் ஒவ்வொரு சமயத்திலும் ஒரு பெயராவது கொண்டு வாருங்கள். டாக்டர் சென் போராடி உட்டியை இரட்சிக்கச் செய்ததுபோல அவர்களை நேசியுங்கள் மற்றும் பொறுப்பெடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் வரும் பொழுது அவர்களை அறிந்துகொள்ளுங்கள். அவர்களை இங்கே இருக்கச் செய்ய உங்களால் முடிந்ததை செய்யுங்கள் அவர்கள் மாற்றப்படும் வரையிலும் – அதன்பிறகு அவர்கள் நம்முடனே இருப்பார்கள், ஏனென்றால் அவர்கள் மாற்றப்பட்டிருப்பார்கள்!

நமது பாடம் சொல்லுகிறது, “ஆதலால் நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்”. பவுல் சொன்னார், “நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்” (I கொரிந்தியர் 9:26). பவுல் அரைமனதோடு வேலை செய்யவில்லை. அவர் தமது நேரத்தை வீணாக்கவில்லை. அவர் தமது மனதை ஆத்தும ஆதாயத்திற்காக திருப்பினார், அவர் “ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணவில்லை”. அதுதான் ஆத்துமாக்களை ஆதாயம் செய்வதற்கு வழி! அப்படியாகத்தான் டாக்டர் சென் போராடி உட்டியை கிறிஸ்துவுக்காக வென்றார். அவர்களை உள்ளே கொண்டுவாருங்கள். டாக்டர் சென் அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்!

நம்முடைய நேரத்தையும் பிரயாசத்தையும் ஆத்துமாக்களை ஆதாயம் செய்யப் பயன்படுத்துவோம்! இந்த வருடத்திலே மக்களை உள்ளே கொண்டுவருவோம். உங்களையும் உங்கள் நண்பர்களையும் மட்டும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம். தேதிக்குறிப்பதை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம். இழக்கப்பட்டவர்களைக் கொண்டுவருவதைப் பிரதானமான வேலையாகக் கொள்ளுங்கள். நாம் இழக்கப்பட்டவர்களை வெற்றி கொள்வதைக் குறிக்கோளாக வைப்போம். லேசர் பீமைப்போல நோக்குவோம். அரைமனதோடு செய்ய வேண்டாம், “காற்றிலே சிலம்பம் செய்பவர்போல”. நிச்சயமில்லாமல் உங்கள் பிரதான நோக்கம் வேறுவழியில் இருக்க, ஏதோ சிலதைப் பக்கவழியில் செய்ய வேண்டாம். அந்தவிதமாக மக்களைக் கொண்டுவர முடியாது. நமது பாடம் சொல்லுகிறது, “ஆதலால் நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்”. நாம் பிசாசோடு ஜெபத்திலே போராடுவோம் அதனால் அநேக இளைய மக்களை உள்ளே கொண்டு வருவோம்! “தொடர்ந்து செல், கிறிஸ்தவ போர்வீரனே”. பல்லவியை மறுபடியுமாக எழுந்து நின்று பாடுவோம்.

தொடர்ந்து செல், கிறிஸ்தவ போர்வீரனே,
   போராட்டத்தில் முன்னேறுவதுபோல,
கிறிஸ்துவின் சிலுவையோடு முன்னேறு.

IV. நாலாவதாக, இந்தப் பாடம் இன்னும் இழக்கப்பட்டிருக்கிற உங்களுக்குப் பொறுந்தும்.

இன்னும் மாற்றப்படாதிருக்கிற உங்களுக்காக நான் சில வார்த்தைகளைச் சொல்ல வேண்டியது அவசியமாகும். நமது பாடம் சொல்லுகிறது, “ஆதலால் நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்”. அது உங்களுக்கும் பொறுந்தும்.

நமது பாடம் சொல்லுகிறது, “ஆதலால் நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்”. நான் பிரசங்கம் செய்யும்பொழுது அங்கே உட்கார்ந்திருக்க வேண்டாம்! கிறிஸ்து சொன்னார், “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்” அந்த இடுக்கமான இரட்சிப்பின் வாசல், கிறிஸ்துவே (லூக்கா 13:24). நீங்கள் பிரயாசப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் முழுமையாக பிரயாசப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? “உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்” இது “ஆதலால் நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்” என்ற வசனத்திற்கும் பொறுந்தும். உங்கள் ஆத்துமாவைப்பற்றி நீங்கள் கவனமாக இருந்தால், தேவன் உங்களைக் கிறிஸ்துவினிடத்தில் நடத்துவார். ஆனால் நீங்கள் இரட்சிப்பிற்காகப் பிரயாசப்படாவிட்டால், நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம்.

நீங்கள் இரட்சிபிற்காகப் பிரயாசப்பட்டு கிறிஸ்துவினிடத்தில் வராவிட்டால் நீங்கள் ஒருபோதும் இரட்சிப்படைய மாட்டீர்கள்! நீங்கள் இரட்சிப்பைப் “பெற்றுக்கொள்ள” முடியாது. நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ள முடியாது. எந்தப் பாவ உணர்வுமில்லாமல் இயந்திரத் தன்மையாக, நீ அழைப்பிற்கு முன்வருவாயானால், நீ மாற்றப்பட முடியாது. ஒவ்வொரு நாளும் வீடியோ விளையாட்டில் மணிக்கணக்காக உட்கார்ந்திருந்தால், நீ ஒருபோதும் மாற்றப்பட முடியாது. நீ தொடர்ந்து உனது கணினியில் பாலியல் காட்சிகளைக் கவனித்துக் கொண்டிருந்தால், நீ ஒருபோதும் மாற்றப்பட முடியாது. தேவன் உன்னைப் பார்க்கிறார் நீ கவனமாக இல்லை என்று அறிகிறார். உன்னையே பார்த்து உனக்குள் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால், நீ ஒருபோதும் மாற்றப்பட முடியாது. யூதாசும் காயினும் அவர்களுக்காக வருத்தப்பட்டார்கள். அவர்கள் இருவரும் நரகத்திற்குச் சென்றார்கள். நீ உன்னுடைய பாவங்களைப் பாராதபடிக்கு, உன்னுடைய பிரச்சனைகளையும், உணர்வுகளையும் கவலைகளையும் பார்த்துக் கொண்டிருந்தால், நீ ஒருபோதும் மாற்றப்பட முடியாது. இயேசு ஒரு மனோதத்துவ மருத்துவர் அல்ல. அவர் உன்னுடைய பிரச்சனைகளையும், உணர்வுகளையும் கவலைகளையும் தீர்ப்பதற்காக மரிக்கவில்லை. ஏதோ ஒரு நிச்சயமான உணர்வைக் கொடுக்க அவர் மரிக்கவில்லை. தேவன் உன்னைத் தண்டிக்காதபடிக்கு அவர் உன்னுடைய பாவ கிரயங்களைக் கொடுக்க மரித்தார். அதனால்தான் “கிறிஸ்துவானவர் நமது பாவங்களுக்காக மரித்தார்” (I கொரிந்தியர் 15:3). நீ மெய்யாகவே பாவவியாதியில் இல்லையானால் – அதைப்பற்றி உன்னுடைய வாய் ஏதோ சில வார்த்தைகளைச் சொன்னாலும் – பிறகு கிறிஸ்துவின் மரணம் உன்னை இரட்சிக்காது.

கிறிஸ்து உன்னுடைய பாவகிரயங்களைக் கொடுக்க சிலுவையிலே மரித்தார். உன் பாவங்களைக் கழுவ அவர் இரத்தம் சிந்தினார். உனக்கு ஜீவனைக் கொடுக்க அவர் உயிர்த்தெழுந்தார். நீ அவரை நம்பினால் அவர் உன் பாவங்களை மன்னிப்பார். உன் ஜீவனுக்காகப் போராடு. உன் பாவத்தை நினைத்துப் பார்க்க உன்னை நீயே பலவந்தம் செய்துகொள். உன்பாவத்திலிருந்து கிறிஸ்துவிடம் வந்து ஜீவனைப்பெற்று இரட்சிக்கப்படப் போராடு! எழுந்து நின்று உங்கள் பாட்டுத் தாளில் உள்ள நாலாவது பாடலைப் பாடலாம். முதல் மற்றும் கடைசிச் சரணங்களை மட்டும் பாடலாம் “என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும்”. உங்கள் பாட்டுத்தாளில் நாலாவது பாடல் அதைப் பார்த்து பாடுங்கள்.

என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், இரட்கரே, நான் ஜெபிக்கிறேன்,
   இயேசுவை மட்டும் இன்று நான் பார்க்கும்படி செய்யும்;
பள்ளதாக்கிலே நீர் என்னை நடத்தினாலும்,
   உமது மட்டற்ற மகிமை என்னைச் சுற்றிக் கொள்கிறது.
என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், தெய்வீக இரட்சகரே,
   உமது மகிமையினால் எனது ஆவி பிரகாசிக்கும் வரையிலும்.
என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், அனைவரும் பார்க்கட்டும்
   உமது பரிசுத்த சாயல் என்னில் பிரதிபலிப்பதை.

என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், பாவமில்லாமலும்
   பாவத்தில் பிரகாசிக்கும் வெளிச்சத்தின் நிழலுமில்லாமலும்.
உம்முடைய ஆசிர்வதிக்கப்பட்ட முகத்தை மட்டும் பார்ப்பேனாக,
   உமது அளவில்லாத கிருபையினால் என் ஆத்துமாவுக்கு விருந்தளியும்.
என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், தெய்வீக இரட்சகரே,
   உமது மகிமையினால் எனது ஆவி பிரகாசிக்கும் வரையிலும்.
என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், அனைவரும் பார்க்கட்டும்
   உமது பரிசுத்த சாயல் என்னில் பிரதிபலிப்பதை.
(“Fill All My Vision” by Avis Burgeson Christiansen, 1895-1985).

நீங்கள் என்னிடத்திலோ, அல்லது டாக்டர் ஜான் கேஹன், அல்லது டாக்டர் கேஹனிடத்திலோ உங்கள் பாவத்திலிருந்து உங்களை இரட்சிக்க கிறிஸ்து சிலுவையிலே சிந்தின இரத்தத்தைப்பற்றிப் பேச விரும்பினால், இங்கே முன்னுக்கு இறங்கி வாருங்கள்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

போதனைக்கு முன்னதாக தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:
“தொடர்ந்து செல், கிறிஸ்தவ போர்வீரனே”
((by Sabine Baring-Gould, 1834-1924; stanzas and chorus, verses 1, 2 and 4).


முக்கிய குறிப்புகள்

ஒரு நரகத்தின் வருடம் – ஒரு எழுப்புதலின் வருடம்!

A YEAR OF HELL – A YEAR OF REVIVAL!

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ் ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

“தேவரீர் வானங்களைக் கிழித்திறங்கி, உருக்கும் அக்கினி எரியுமாப்போலவும், அக்கினி தண்ணீரைப் பொங்கப் பண்ணுமாப்போலவும், பர்வதங்கள் உமக்குமுன்பாக உருகும்படிசெய்யும்” (ஏசாயா 64:2).

“பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக் கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்” (I கொரிந்தியர் 9:24).

(I கொரிந்தியர் 9:25, 26, 27)

I. முதலாவதாக, குளிர்காலத்துக்கும் வசந்த காலத்துக்கும் பொறுத்தமான பாடம், ஆதியாகமம் 8:22.

II. இரண்டாவதாக, இந்தப் பாடம் எழுப்புதலுக்குப் பொறுத்தமானது, நியாதிபதிகள் 16:20; யோசுவா 7:3, 4; சங்கீதம் 126:5.

III. மூன்றாவதாக, இந்தப் பாடம் ஆத்தும ஆதாயத்திற்குப் பொறுத்தமானது, லூக்கா 19:10; 14:23; மத்தேயு 28:19; I கொரிந்தியர் 9:25.

IV. நாலாவதாக, இந்தப் பாடம் இன்னும் இழக்கப்பட்டிருக்கிற உங்களுக்குப் பொறுந்தும், லூக்கா 13:24; I கொரிந்தியர் 15:3.