Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
ஆதாமே, நீ எங்கே இருக்கிறாய்?

(ஆதியாகமம் புத்தகத்தின் 89வது போதனை)
ADAM, WHERE ART THOU?
(SERMON #89 ON THE BOOK OF GENESIS)
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

நவம்பர்27, 2016அன்று கர்த்தருடைய நாள் ஞாயிறு மாலை வேளையில் லாஸ்ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்துகூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s DayEvening, November 27, 2016

“தேவனா கியகர்த்தர் மனுஷனை நோக்கி:நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்” (ஆதியாகமம்2:16-17).


தேவன் முதல் மனிதனாகிய ஆதாமைக் கபடற்ற பரிபூரணமானவனாக சிருஷ்டித்தார். அவன் அழகான தோட்டத்திலே வைக்கப்பட்டான். அந்தத் தோட்டத்தில் இருந்த மரங்கள் எல்லாம் புசிப்பதற்கு நல்லதாக இருந்தது. ஆதாம் அவைகளில் ஏறி ருசியுள்ள உணவைப் புசிக்க முடிந்தது. அந்த அழகான தோட்டத்தில் அவனுக்கு ஒரு கவலையும் இல்லை விரோதிகளும் இல்லை. அங்கு இருந்த மிருகங்கள் மற்றும் பறவைகள் அனைத்தும் சைவமாக இருந்தன. மனிதனை எந்த விதத்திலும் காயப்படுத்த அல்லது தீங்கு செய்ய ஒருவரும் இல்லை. அந்த மனிதனும் சைவமாக இருந்தான், அதனால் அவன்மி ருகங்களைக் கொன்று மாம்சம் புசிக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த ஏதேன் தோட்டத்தில் இருந்த அனைத்தும் சமாதானமாக இருந்தது. அங்கே புயல் இல்லை, மழையும் இல்லை அதனால் அவன் மறைந்து கொள்ள வேண்டியது இல்லை. “அப்பொழுது மூடுபனி பூமியிலி ருந்து எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது”(ஆதியாகமம் 2:6). மனிதன் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. அவனை நோயாளியாக்க ஒரு வியாதியும் அங்கே இல்லை. அவனுக்குச் சண்டை போட ஒரு விரோதியும் இல்லை, பயப்படத்தக்க மிருகங்களும் இல்லை. அது பரிபூரணமான ஒரு பரதீசாக இருந்தது.

ஆதாமைத் தொந்தரவு செய்ய ஒரு பாவமும் இல்லை. அவனுக்குள் எந்த பாவ சுபாவமும் இல்லை, அவனைக் கவலைப்படுத்த மனரீதியாக எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆதாம் தனக்குத் தானே சமாதானமாக இருந்தான். ஆதாம் தேவனோடும் சமாதானமாக இருந்தான். அது ஒரு பரிபூரணமான பரதீசியாக இருந்தது. அவன் நட்புக்காக ஒரு பெண்ணைத் தேடவேண்டிய அவசியம் இல்லாது இருந்தது. தேவன் அவனுக்கு மனைவியாக ஒரு பரிபூரணமான, அழகான, அவனுக்கு ஆறுதல் தந்து உதவி செய்ய க்கூடிய ஒரு பெண்ணைச் சிருஷ்டித்தார். அதனால் அவன் தனிமையாக இல்லை. அவள் பரிபூரணமாக இருந்தபடியினால், அவனுடைய இதயத்தைக் காயப்படுத்துபவளாக அவள் இல்லை, அவனை விட்டு அவள் விலக வேண்டிய அபாயமும் இல்லை, அவனுக்கு அன்பு காட்டாமல் அல்லது அவனை விட்டுப் பிரிந்துவிடும் சூழ்நிலையும் அங்கே இல்லை. அங்கே பாவமில்லாதபடியினால் தேவனைத் துக்கப்படுத்தாமல் அவள் அவனுடைய எல்லாவிதமான பால் உணர்வு ஆசைகளையும் தேவைகளையும் தீர்த்துத் திருப்தி படுத்தினாள்.அது பரிபூரணமான ஒரு பரதீசாக இருந்தது.

தேவன் ஒவ்வொரு நாளும் பரிபூரண இணக்கத்தோடு அவனுடன் பேசினார். அது வரையில் அவன் ஒரு போதும் சோதிக்கப்படவில்லை. அவன் தேவனுடைய கோபத்திற்கு ஆளாகும்படியாக எந்தக் காரியமும் செய்ய வேண்டியத் தேவையில்லை, அங்கே கோபத்தைச் சமாதானப்படுத்த வேண்டியதும் இல்லை. அவனை நேசித்த அழகான ஒரு ஸ்திரியோடு அவன் வாழ்ந்தான். ருசியான உணவு நிறைந்த தோட்டத்தில் அவன் வாழ்ந்தான். அவன் தேவனோடு சமாதானமாக இருந்தான். அது பரிபூரணமான ஒரு பரதீசாக இருந்தது.

தேவன் அவனுக்கு ஒரேயொரு சட்டத்தைக் கொடுத்தார். அது அவனுக்கு எளிதாகக் கடைபிடிக்கக்கூடிய ஒரு சட்டமாகவே இருந்தது. கீழ்ப்படியத்தக்க ஒரேயொரு எளிதான பிரமாணம். தேவன் அவனிடம் சொன்னார், “நீதோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்” (ஆதியாகமம்2:16-17). தேவன் அவனிடம் கேட்டுக்கொண்டது அதுவே ஆகும். அவன் அந்த நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியைப் புசிக்கக்கூடாது அவ்வளவே. அதுகடைபிடிக்க மிகவும் எளிதான ஒரு சட்டம். அது பரிபூரணமான ஒரு பரதீசாக இருந்தது.

இருந்தாலும், அந்தத் தோட்டத்திலே இன்னும் ஒரு நபர் இருந்தான். அங்கு சாத்தான் இருந்தான். அவன் பரலோகத்தில் தூதர்களில் ஒருவனாக இருந்தவன். ஆனால் அவன் தேவனுக்கு விரோதமாகக் கலகம் செய்தான் அதனால் பூமியிலே தள்ளப்பட்டான். சாத்தான் தேவனுடைய விரோதி ஆவான். ஆனால் ஆதாம் அவனிடமிருந்து கர்த்தரால் பாதுகாக்கப்பட்டான். தேவனுடைய இருதயத்தைக் காயப்படுத்த சாத்தானுக்கு ஒரே வழி ஆதாமைத் தேவனுக்கு விரோதமாகக் கலகம் செய்ய வைப்பது ஆகும்.

அந்தத் தோட்டத்தில் மிக முக்கியமான இரண்டு மரங்கள் இருந்தன. முதலாவது ஜீவ விருட்சம் ஆகும். ஆதாம் அந்தக் கனியைப் புசித்து இருந்தால், அவன் பரதீசியாகிய ஏதேனில் என்றென்றுமாக ஜீவித்து இருப்பான் (ஆதியாகமம் 3:22). ஆனால் அவன் நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியைப் புசித்தால் சாவான். அது பரிபூரணமான ஒரு பரதீசாக இருந்தது – கீழ்ப்படியத்தக்க ஒரேயொரு சட்டத்தைஉடையது – ஜீவ விருட்சத்தின் கனியைப் புசித்து நித்திய காலமாக வாழலாம். அதுவே அந்தச் சட்டத்தின் சாதகமான பக்கமாகும். நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியைப் புசித்தால் மரணம் ஏற்படும். அதுவே அந்தச் சட்டத்தின் பாதகமான பக்கமாகும். அது மிகவும் எளிதான ஒருசட்டம் – எளிதாகக் கீழ்ப்படியத்தக்கது. இந்த மரத்தின் கனியைப் புசித்து நித்தியமாக வாழ்வது. மற்ற மரத்தின் கனியைப் புசித்தால் நீ சாவாய். அது பரிபூரணமான ஒரு பரதீசாக இருந்தது, ஒரேயொரு, கீழ்ப்படியத்தக்க சட்டத்தை உடையது – மிக மிக சுலபமாகக் கீழ்ப்படியக்கூடிய ஒரு சட்டம்.

இப்பொழுது, ஆதாம் மற்றும் அவனுடைய மனைவியைத் தேவன் பாதுகாத்தபடியினால், சாத்தான் அவர்களுக்குத் தீங்கு செய்ய முடியவில்லை. அவனால் செய்ய முடிந்தது எல்லாம் அவர்களைச் சோதிப்பது ஆகும், சோதித்து அந்த எளிய சட்டத்தை உடைக்கும்படி செய்வதாகும். சாத்தான் ஒரு சுருண்டு நெளிகிற சர்ப்பம் அல்ல. அது தேவன் அவனையும் சர்ப்பத்தையும் சபித்த பிறகு நடந்ததாகும். ஆனால் இப்பொழுது, இந்த நேரத்தில், சாத்தான் ஒரு ஜந்துவாகத் தோட்டத்தில் நுழைந்தான். அதன் பிறகு அவனும் அவனுடைய பிசாசுகளும் கிறிஸ்துவின் கட்டளையினால் பன்றிகளுக்குள் நுழைந்தன. ஆனாலும், இங்கே, அவன் “ஒருஒளியின்தூதனாக” தோற்றமளிக்கிறான் (II கொரிந்தியர் 11:14).

ஆதியிலிருந்த சர்ப்பம் எப்படி இருந்தது என்பது நமக்குத் தெரியாது. ஆனால் அதற்குக் கால்கள் இருந்தன என்று அறிகிறோம். அது அவர்கள் அடிக்கடி பார்க்கக்கூடிய ஒரு ஜந்துவாக இருந்தது என்று நாம் அறிகிறோம், ஏவாள் அதனால் பயமுறுத்தப்படவில்லை. சாத்தான் இந்த மிருகத்தினுள் நுழைந்து அதன் வாயின் மூலமாக ஆதாமின் மனைவியுடன் பேசினான். அது அவளிடம் பேசினபொழு துஅவள் ஆச்சரியப்படவில்லை. ஒருவேளை அவள் அதனிடம் அநேக தடவைகள் பேசிப் பழகியிருந்திருக்கலாம். இன்றும்கூட அவன் அதே வழியில் செயல்படுகிறான். அவனைப்பற்றிப் பயமில்லாதபடி, அவர்கள் அவனிடம் பழகும் வரையிலும், அவன் பாவிகளுடைய மனதிலே பேசுகிறான்.

ஒருநாள் ஏவாள் தோட்டத்தில் தனிமையாக இருந்தாள்.ஆதாம் வேறு இடத்தில் தோட்டத்தைப் பராமரித்துக்கொண்டு இருந்திருப்பான் “அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்” (ஆதியாகமம் 2:15). ஏவாள் தோட்டத்தின் மத்தியிலிருந்து, நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தாள். அப்பொழுது சாத்தான் அவளிடம் வந்தான். அவளிடம் மெல்லியதாகப் பேசினான், “நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ” (ஆதியாகமம் 3:1).அதன்பிறகு சர்ப்பம் தேவனுடைய வார்த்தையைக் கேள்விகேட்டது. இன்றும் சாத்தான் அதைத்தான் செய்கிறான். வேதாகமத்தில் உள்ள தேவனுடைய வார்த்தைகளை விசுவாசிக்க வேண்டாம் என்று அவன் சோதிக்கிறான். தேவன் நமக்குச் சொல்லுவதை விசுவாசிக்க வேண்டாம் என்று சோதிக்கிறான். ஒரு போதகர் தேவனுடைய வார்த்தையை நமக்குப் போதிக்கும்போது அதை நம்பவேண்டாம் என்று அவன் சோதிக்கிறான். ஆனால், அதற்கும் அதிகமாக, சாத்தான் கர்த்தரின் வார்த்தையை வேறுவிதமாக மாற்றிச் சாவு மரத்தின் கனியையும் புசிக்கலம் என்று கூறுகிறான், எப்படியெனில் தேவன் சொல்லியிருக்கிறார், “நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்”. ஷேக்ஸ்பியர் சொன்னார், “பிசாசு தன்னுடைய நோக்கத்திற்காக வேதவசனங்களைப் பயன்படுத்த முடியும்”. இங்கே தேவனுடைய செய்தியின் இரண்டாவது பகுதியை பிசாசு விட்டுவிட்டான், “ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்” (ஆதியாகமம் 2:17). சர்ப்பம் தேவனுடைய வார்த்தையின் அந்தப் பகுதியை விட்டுவிட்டது. வேதத்திலே எந்த வார்த்தைகளையும் விட்டுவிடக்கூடாது என்று இரு இடங்களில் எச்சரிக்கப் படுகிறோம், உபாகமம் 12:32 மற்றும்வெளிப்படுத்தல் 22:19, அங்கே சொல்லப்பட்டிருக்கிறது, “ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன்எ டுத்துப்போடுவார்”. இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு சுயாதீன செமினரிகளிலும் தீமை போதிக்கப்படுகிறது.ஊழியத்திற்காகப் படிக்கும் இளம் வாலிபர்களுக்கு வேதாகமத்தின் பகுதிகள் உண்மையில்லை என்று போதிக்கப்படுகிறது. நான் சேர்ந்து படித்த சுயாதீன செமினரியில் எனக்கு இது கற்றுக் கொடுக்கப்பட்டது. இந்தப் பொல்லாத போதனையை ஒருவன் விசுவாசித்தால் அவனுடைய ஊழியத்தை அது அழித்துப்போடும். அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார், “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக” (II தீமோத்தேயு 3:16). வேத வசனம் ஒவ்வொன்றும் தேவனால் ஏவப்பட்டு மூலபாஷைகளாகிய எபிரெய மற்றும் கிரேக்க மொழிகளில் அருளப்பட்டிருக்கின்றன. அதனால்தான் நான் உறுதியாக கிங் ஜேம்ஸ் வேதாகமத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறேன். நவீன வேதாகமத்தில் “மற்றும்உபவாசம்” என்ற வார்த்தைகள் மாற்கு 9:29ல் விடப்பட்டுள்ளது, பிறகு ஏசாயா7:14ல் “கன்னிகை” என்றவார்த்தையை “இளம்பெண்” என்று மாற்றப்பட்டு இருக்கிறது.இந்த மாற்றங்களானது இரண்டு பழைய வேதாகமப்பிரதிகளிலிருந்து, இந்த நூதன மொழிபெயர்ப்பாளர்களால் மாற்றப்பட்டிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

நான் கலந்து கொண்ட சுயாதீன செமினரியில் வகுப்பிற்கு ரிவைஸ்டு ஸ்டேன்டர்டு வேதாகமம் கொண்டு வரும்படி சொன்னார்கள். ஆனால் நான் அவர் களுக்குக் கீழ்ப்படியாமல் எப்போதும் என்னோடு கிங் ஜேம்ஸ் வேதாகமத்தைத்தான் எடுத்துச் சென்றேன். நான் “புதிய” மொழிபெயர்ப்பை நம்புவதே இல்லை, நீங்களும் அப்படியே இருங்கள். சில நேரங்களில் நான் அவைகளிலிருந்து கிங் ஜேம்ஸ் வேதாகமத்தோடு ஒத்துவரும் வார்த்தைகளை எடுத்துக் காட்டுவேன், ஆனால் என்னுடைய தனிப்பட்ட வேதவாசிப்பிலும் அல்லது என்னுடைய எந்த ஒரு போதனையிலும் பிரதானமான பாடமாக அவைகளை உபயோகப்படுத்த மாட்டேன். கிங் ஜேம்ஸ் வேதாகமத்தோடு உறுதியாக வாழ்க்கை முழுவதும் ஒட்டிக்கொண்டிருக்க தீர்மானம் செய்திருக்கிறேன், நீங்களும் அப்படியே இருக்கவேண்டும்!

அந்த நாளிலே தோட்டத்திலே சர்ப்பமாக வந்து தேவனுடைய சுத்தமான வார்த்தையைத் திரித்துக் கேள்வி கேட்டு ஏவாளை அவன் சோதித்ததான். தேவன் விலக்கப்பட்ட மரத்தின் கனியைப் புசிக்க வேண்டாம் என்று தெளிவாக அந்தத் தம்பதிகளிடம் சொல்லி இருந்தார். ஆனால் புசிக்க வேண்டாம் என்று மட்டும் சொன்னார். அதைத் “தொடக்” கூடாது என்பதைப் பற்றித் தேவன் ஒன்றும் சொல்லவில்லை. ஏவாள் சொன்னபொழுது, “நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும், அதைத்தொடவும்வேண்டாம், இல்லையேல் மரிப்பாய்” என்று அவள் தேவனுடைய வார்த்தையில் ஒன்றைக் கூட்டினாள். இது உபாகமம் 12:32ஐ மீறுவது ஆகும், அதில் கர்த்தர் சொல்வதாவது, “நான் உனக்கு விதிக்கிற யாவையும் செய்யும்படி கவனமாயிரு; நீ அதனோடே ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்” (உபாகமம்12:32). இந்தக் கட்டளையானது மறுபடியுமாக வெளிபடுத்தல் 22:18ல் கொடுக்கப்பட்டுள்ளது.

“ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்” (வெளிப்படுத்தல்22:18).

முற்போக்காளர்கள் வசனத்தைத் திரித்து தேவனுடைய வார்த்தைகளை விட்டுவிடுகிறார்கள். மார்மான்கள் போன்ற சடங்காச்சாரிகள் மார்மான் புத்தகத்தில் தேவனுடைய வார்த்தையில் சேர்க்கிறார்கள். இவ்வாறாக அந்தச் சோதனையில் தேவனுடைய வார்த்தைகளை விட்டுவிடுதலும், அல்லது அதனோடு சேர்த்தலும் நடைபெற்றது. குறானில் கிறிஸ்துவின் சிலுவை மரணம் விடப்பட்டு இருக்கிறது. சடங்காச்சாரிகள் அதனோடு சேர்க்கிறார்கள், கிறிஸ்தவ விஞ்ஞானிகள், மேரி பேக்கர் எடியின் எழுத்துகளைச் சேர்ப்பது போல. தேவனுடைய வார்த்தையைச் சேதப்படுத்துவது பொய்ப் போதனைகள் எல்லாவற்றிற்கும் வேராகும். இவ்வாறாக வேதத்தில் கூட்டுவதும் அல்லது அதன் பகுதிகளை மறைப்பதும் ஏவாளுக்கு ஏற்பட்ட சோதனை இந்த நாளிலும் நடக்க நேரிடும், எல்லா துரோகத்துக்கும் இருதயமான தேவ துரோகமாகும்.

சர்ப்பமானது ஏவாளை இதுவரையிலும் சோதித்ததால் தேவ வசனத்தின் மீது சாத்தானுடைய தாக்குதலுக்கு அவள் தயாரானாள். அவன் அவளிடம் சொன்னான், நீ விலக்கப்பட்ட கனியைப் புசித்தால் “நீங்கள் சாகவே சாவதில்லை”.

“அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான். அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்” (ஆதியாகமம்3:6,7).

அவர்கள் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள். இப்பொழுது தாங்கள் நிர்வாணிகளான பாவிகள் என்று அறிந்து கொண்டார்கள். மனஸ்தாபப்பட்டு மனந்திரும்பி தேவனுடைய இரக்கத்தை வேண்டுவதற்குப் பதிலாக, “அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டு பண்ணினார்கள்” (ஆதியாகமம்3:7). அதுபோலவே பாவிகள் இன்றும் செய்கிறார்கள். அவர்கள் தங்கள் பாவங்களைப் பலவிதமா னவழிகளில் மூடப்பார்க்கிறார்கள், “நற்கிரியைகள்”செய்வதன் மூலமாக அல்லது “தேவபக்தியின் வேஷத்தைத் தரித்துக்கொண்டு” (II தீமோத்தேயு 3:5) தங்களைக் காத்துக்கொள்ள முயற்சி செய்கிறார்கள்.

இப்பொழுது அவர்கள் தேவனுடைய கூப்பிடும் சத்தத்தைக் கேட்டார்கள், “ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி... ஒளித்துக்கொண்டார்கள். அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார்” (ஆதியாகமம் 3:8,9). டாக்டர் W.A. கிரிஸ்வெல் என்பவர் சொன்னார்,

தேவன் ஒருபோதும் சொல்லாத துக்கமா னவாக்கியம், “ஆதாமே, நீ எங்கே இருக்கிறாய்?” [இதற்குமுன்பாக] மனிதனும் மனுஷியும் பரலோக ஆவலோடு கர்த்தரைச் சந்தித்தார்கள்... அது எப்பொழுதும் ஒரு மகிழ்ச்சியான, மகிமையான [தேவன்] அவர்களிடம் வந்து பேசின நேரமாகும். அவர்களுக்குப் பயமில்லாதிருந்தது. ஆனால் இப்பொழுதோ [அவர்கள்பாவம்செய்தார்கள்].மனிதன் பயப்பட்டான். இருவரும் வெட்கப்பட்டார்கள். தேவன் சோகமான குரலோடு கூப்பிட்டார், “ஓஆதாமே, நீ எங்கே இருக்கிறாய், நீ என்ன செய்தாய்?” இந்த இதயமுடைந்த கேள்விக்குப் பதில்தான் பாவத்தின் கிருபையின் மற்றும் நிவாரணபலியின் முழுகதையும் ஆகும்.(W. A. Criswell, Ph.D., Basic Bible Sermons on the Cross, Broadman Press, 1990, p. 55).

தேவன் இன்று இரவிலே உன்னை அழைக்கிறார், “ஓ பாவியே, நீ எங்கே இருக்கிறாய்?”

“அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீஎங்கே இருக்கிறாய் என்றார்” (ஆதியாகமம் 3:9).

விண்ணப்பம்

இப்பொழுது நான் இந்தப் பகுதிக்கும் இந்தப் பாடத்திற்குமான விண்ணப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறேன். இந்த இரவிலே நீ எங்கே இருக்கிறாய்?

1. நீ தேவனிடமிருந்து மறைந்து கொண்டிருக்கிறாயா? மனந்திரும்ப மறுத்து கிறிஸ்துவிடம் வராமல் இருக்கிற அனைவரும் தேவனிடமிருந்து மறைந்து கொண்டிருக்கிறார்கள். அது நீயா? பரிசுத்த ஆவியானவர் உன்னைக் கிறிஸ்துவிடம் அழைக்கும் பொழுது நீ தேவனிடமிருந்து மறைந்து கொண்டிருக்கிறாயா? இந்த இரவிலே அது உன்னுடைய பாவமாக இருக்கிறதா?

2. வேதாகமத்தை விசுவாசிக்க மறுக்கும் காரணத்தினால் நீ தேவனிடமிருந்து மறைந்து கொண்டிருக்கிறாயா? தேவனுடைய வார்த்தை ஒரு பழைய புத்தகம் என்று நினைக்கும்படி சாத்தான் செய்கிறானா? ஆதை நீ நம்ப வேண்டியதில்லை என்று சொல்லுகிறானா? நீ ஆதாயம் செய்ய வேண்டிய பரலோகம் இல்லை மற்றும் பயப்படத்தக்க நரகமும் இல்லை என்று சொல்லுகிறானா? இந்த இரவிலே அது உன்னுடைய பாவமாக இருக்கிறதா?

3. நீ ஒரு நல்ல நீதியான வாழ்க்கை வாழ்வதாக நினைத்துக் கொண்டிருக்கிறாயா? நீ போதுமான அளவிற்கு நல்லவன் என்று நினைக்கிறாயா, உன்னுடைய பாவங்களை அறிக்கையிட வேண்டிய அவசியமில்லை மற்றும் கிறிஸ்துவின் தியாக பலியினால் இரட்சிக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறாயா? உன்னுடைய நல்ல நீதியான வாழ்க்கை உன்னை இரட்சிக்கப் போதுமானதா? இந்தப் பொய்யைச் சாத்தான் உனக்குச் சொன்னானா? அதைத்தான் நீ விசுவாசிக்கிறாயா? இந்த இரவிலே அது உன்னுடைய பாவமாக இருக்கிறதா?

4. தேவன் எழுப்புதலோடு இரங்கி வந்தபொழுது உன்னுடைய பாவத்தை உணர்ந்தாயா, மனதின் பாவத்தினால் பொல்லாத இருதயத்தின் பாவத்தினால் நீ உணர்த்தப்பட்டாயா? தங்கள் பாவங்களுக்காக அழுதவர்களைப் பார்த்து அவர்கள் பெலவீனமானவர்கள் அல்லது முட்டாள்கள் என்று நினைத்தாயா? இப்பொழுது அதை நினைக்கிறாயா? தங்கள் பாவங்களுக்காக அழுது மனந்திரும்பினவர்களைப் பார்த்து அது அவர்கள் முட்டாள்தனம் என்று நினைக்கும்படி சாத்தான் செய்தானா? இந்த இரவிலே அது உன்னுடைய பாவமாக இருக்கிறதா?

5. ஜான் கேஹன் பாவத்தினால் தூக்கமில்லாமல் போராடினதை நீ கேட்டபொழுது, அவர் சிறிது வித்தியாசமானவர் என்று நினைத்தாயா? அது அவசியமில்லை என்று நினைத்தாயா, அது ஒரு முட்டாள் பையன் பாவத்திற்காகக் கவலைப்படுகிறான் என்று நினைத்தாயா? ஜான் கேஹன் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார் என்று சாத்தான் நினைக்கச் செய்கிறானா? அப்படியெல்லாம் உன்னுடைய ஆத்துமாவிற்குத் தேவையில்லை என்று சொல்லுகிறானா? இந்த இரவிலே அது உன்னுடைய பாவமாக இருக்கிறதா?

6. ஓர் உண்மையான மாறுதல் வரவேண்டுமானால் நீ பாவத்திற்கு விரோதமாகப் போராட வேண்டும், உன்னுடைய பாவத்திற்காக ஆழமான துக்கம் அடைய வேண்டும் என்று நான் சொல்லும்பொழுது நீ சாத்தானைக் கவனித்தாயா? நான் சொன்னதை நிராகரித்து, நீ இருக்கும் வழியில் சரியாக இருக்கிறாய் என்று நினைத்தாயா? இந்த இரவிலே அது உன்னுடைய பாவமாக இருக்கிறதா?

7. நான் சொன்னதைக் கேட்டபொழுது, நீ செய்த பாவங்கள் மிகவும் சிறியவைகள் உன்னை நரகத்திற்குத் தீர்ப்புச் செய்யாது என்று நினைத்தாயா? சாத்தான் உன்னுடைய மனதிலே அந்த எண்ணத்தை வைத்தபொழுது அதை நீ விசுவாசித்தாயா? உன்னுடைய பாவங்கள் மிகவும் சிறியவைகள் தேவன் உன்னை நியாயந்தீர்க்க மாட்டார் என்று நினைத்தாயா? இந்த இரவிலே அது உன்னுடைய பாவமாக இருக்கிறதா?

8. நீ இன்னும் இழக்கப்பட்ட நண்பர்களை உடையவனாக இருக்கிறாயா? கிறிஸ்தவர்கள் அல்லாத நண்பர்கள் உனக்கிருந்தாலும், தேவன் உன்னை ஆசீர்வதித்து இரட்சிப்பார் என்று நினைக்கிறாயா? வேதாகமம் இப்படியாகச் சொல்வதைக் கேட்டு, “உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்” (யாக்கோபு 4:4) நீ உன்னுடைய உலக நண்பர்களை விட்டுவிட்டாயா? அல்லது அவர்களோடு இருப்பது சரியானதுதான் என்று நினைத்தாயா? சாத்தான் அந்த எண்ணத்தை உன்னுடைய இருதயத்திலே போட்டிருக்கிறானா?இந்த இரவிலே அது உன்னுடைய பாவமாக இருக்கிறதா?

9. யாருடனாவது பால் உறவு கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்கிறாயா – ஒருவேளை இந்தச் சபையிலே உள்ளவர்களாகக்கூட இருக்கலாம் – நீ நினைக்கும் நினைவுகள் சரியானது என்று சொல்லி அது கொழுந்துவிட்டு எரியும்படி சாத்தான் உன் இச்சையைத் தூண்டுகிறானா? இந்த இரவிலே அது உன்னுடைய பாவமாக இருக்கிறதா?

10. மணிக்கணக்காகவீ டியோ விளையாட்டு விளையாடுவது சரி என்று நினைக்கிறாயா? அது தீமையில்லாத வேடிக்கை என்று சாத்தான் சொன்னானா? இந்த இரவிலே அது உன்னுடைய பாவமாக இருக்கிறதா?

11. போதகராகிய எனக்கு நீ பயப்படுகிறாயா? ஏன் எனக்குப் பயப்படுகிறாய்? நான் மிகவும் கடினமாக இருக்கிறேன் என்று பயப்படுகிறாயா? நான் சொல்வதிலும் அல்லது செய்வதிலும் நீ ஏதாவது குற்றம் கண்டு பிடிக்கிறாயா? நீ தேவனிடமிருந்து மறைந்து கொண்டிருப்பதால் எனக்குப் பயப்படும்படி சாத்தான் செய்கிறானா, அதனால் நான் பரிபூரணமாக இல்லை என்று குற்றம் சாட்டும்படி செய்கிறானா? இன்று காலையிலே ஜான் கேஹன் தனது போதனையிலே என்னைப்பற்றிச் சொன்னதுபோல சொல்வாயா, “நமது போதகருக்காகத் தேவனுக்கு ஸ்தோத்திரம்!” என்று அவரோடு சேர்ந்து சொல்ல முடியுமா? “உன்னுடைய ஆத்துமாவைக் கவனிக்கிறதற்காக”நீ என்னை நேசிக்கிறாயா –அல்லது எனக்குப் பயந்து உன்னுடைய இரகசிய வாழ்க்கையை என்னிடமிருந்து மறைத்துக் கொள்ளுகிறாயா, தேவனால் பேசப்பட்ட மனிதனாகிய, ஆதாம் தனது இரகசிய வாழ்க்கை கடிந்து கொள்ளப்படாமல் மறைத்ததுபோல மறைத்துக் கொள்ளுகிறாயா? எனக்குப் பயப்படும்படிசெய்து சாத்தான் உன்னை வஞ்சிக்கிறானா? இந்த இரவிலே அது உன்னுடைய பாவமாக இருக்கிறதா? (எபிரெயர் 13:17).

12. போதகரிடம் முறையிட்டுப் பேசாமல் ஒரு குறிபிட்ட நபரை உன்னுடைய ஆண் நண்பராக அடைய அல்லது பெண் நண்பராக அடைய நீயாக ஆசைப்படுகிறாயா? சபையை நடத்தும் போதகரை நம்புகிறாயா, அல்லது ஆதாம் தோட்டத்தில் செய்ததுபோல, நீ அவரிடமிருந்து மறைந்து கொள்கிறாயா? இந்த இரவிலே அது உன்னுடைய பாவமாக இருக்கிறதா?

13. உன் இருதயத்திலே சில இருளான காரியத்தினால் உன் வாய் மூடப்பட்டிருக்கறதா இப்படியாக நாங்கள் கேட்கும்பொழுது, “நீ கிறிஸ்துவை நம்புவாயா?” அது தான் சாத்தான் உனக்குச் சொன்னானா? நீ ஒன்றும் சொல்லாவிட்டால் இயேசுவை விலகின காரியத்துக்கு மன்னிப்படைவாய் என்று சாத்தான் உனக்குச் சொன்னானா? இந்த இரவிலே அது உன்னுடைய பாவமாக இருக்கிறதா?

14. சபையில் உள்ள யார் மீதாவது உனக்குப் பொறாமையாக இருக்கிறதா? அவர்கள் புகழப்படுகிறார்கள் ஆனால் அந்தப் புகழ் உனக்கு இல்லையே என்ற பொறாமையா? இந்த இரவிலே அது உன்னுடைய பாவமாக இருக்கிறதா?

15. அழைப்புக் கொடுக்கும்போது நீ வரமறுக்கிறாயா? வேதம் இப்படியாகச் சொல்கிறதை நீ தள்ளிவிடுகிறாயா, “மதியீனனுடைய வழி அவனுடைய பார்வைக்குச் சரியாக இருக்கும்: ஆனால் ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவன் ஞானமுள்ளவன்”? போதனையின் முடிவில் ஆலோசனையைக் கேட்க மறுக்கும் மதியீனனாக இருக்கிறாயா? இந்த இரவிலே அது உன்னுடைய பாவமாக இருக்கிறதா?

இந்த ஆண்டிலே நமது சபையில் ஏற்பட்ட ஏழுப்புதலின்போது கிறிஸ்துவை நம்ப முடியாதபடி தடையாக இருந்தது இந்தப் பாவங்களா அல்லது வேறு ஏதாவது பாவங்களா? “ஓ ஆதாமே, நீ எங்கே இருக்கிறாய்?” உன் பாவத்தைக் குறித்துத் தேவன் பேசும் சத்தத்தை உன்னால் கேட்க முடிகிறதா? ஆதாமோடு சேர்ந்து நீயும், “நான் சத்தத்தை கேட்டேன்… நான் பயந்தேன்… என்னை மறைத்துக் கொண்டேன்” என்று சொல்கிறாயா? நான் இரண்டு வேத வசனங்களோடு உன்னை விட்டு விடுகிறேன்,

“தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்” (நீதிமொழிகள் 28:13).

“அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” (I யோவான் 1:7)

தயவுசெய்து அனைவரும் எழுந்து நிற்கவும். டாக்டர் கேஹன், ஜான் கேஹன் மற்றும் நான் இங்கே மேடைக்கு முன்பாக உங்களுக்கு ஆலோசனை கொடுக்க இருக்கிறோம் உங்களில் யாராவது பாவத்திலிருந்து திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்கத் தயாராக இருந்தால் இங்கே வரவும் – அவருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே சகல பாவங்களும் சுத்திகரிக்கப்படுவீர்கள். பாடல் எண் 7ஐ பாடும் பொழுது, உங்கள் இருக்கையை விட்டு இங்கே முன்னால் வாருங்கள். இது 7வது எண் பாடல் ஆகும்.

என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், இரட்கரே, நான் ஜெபிக்கிறேன்,
     இயேசுவை மட்டும் இன்று நான் பார்க்கும்படி செய்யும்;
பள்ளதாக்கிலே நீர் என்னை நடத்தினாலும்,
   உமதுமட்டற்ற மகிமை என்னைச் சுற்றிக் கொள்கிறது.
என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், தெய்வீக இரட்சகரே,
   உமது மகிமையினால் எனது ஆவி பிரகாசிக்கும் வரையிலும்.
என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், அனைவரும் பார்க்கட்டும்
   உமது பரிசுத்த சாயல் என்னில் பிரதிபலிப்பதை.

என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், எனது ஆசைகளை
   உமது மகிமைக்காக வையும்; என் ஆத்துமா வாஞ்சிக்கும்,
உமது பரிபூரணத்தாலும், உமது பரிசுத்த அன்பாலும்,
   பரத்திலிருந்து வரும் ஒளி என் பாதையில் பாய்ந்தோடும்.
என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், தெய்வீக இரட்சகரே,
   உமது மகிமையினால் எனது ஆவி பிரகாசிக்கும் வரையிலும்.
என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், அனைவரும் பார்க்கட்டும்
   உமது பரிசுத்த சாயல் என்னில் பிரதிபலிப்பதை.

என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், பாவமில்லாமலும்
   பாவத்தில் பிரகாசிக்கும் வெளிச்சத்தின் நிழலுமில்லாமலும்.
உம்முடைய ஆசிர்வதிக்கப்பட்ட முகத்தை மட்டும் பார்ப்பேனாக,
   உமது அளவில்லாத கிருபையினால் என் ஆத்துமாவுக்கு விருந்தளியும்.
என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், தெய்வீக இரட்சகரே,
   உமது மகிமையினால் எனது ஆவி பிரகாசிக்கும் வரையிலும்.
என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், அனைவரும் பார்க்கட்டும்
   உமது பரிசுத்த சாயல் என்னில் பிரதிபலிப்பதை.
(“Fill All My Vision,” Avis Burgeson Christiansen,1895-1985).

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

பிரசங்கத்திற்கு முன்னால் திரு. நோவா சாங் வாசித்த வேத பகுதி: ஆதியாகமம் 3:8-10.
பிரசங்கத்திற்கு முன்னதாகப்பாடப்பட்ட தனிப்பாடலைப் பாடியவர் திரு. பென்ஜமின் கின்கேய்டு கிரிஃபீத்: “Search Me, O God” (139:23-24)/
“I Am Coming, Lord” (Lewis Hartsough, 1828-1919; chorus only).