Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
சாத்தானை வெற்றி கொள்ளுவது எப்படி

HOW TO OVERCOME THE DEVIL
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

நவம்பர் 6, 2016 அன்று கர்த்தருடைய நாள் ஞாயிறு மாலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, November 6, 2016

“மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்” (வெளிப்படுத்தல் 12:11).


சாத்தானும் அவனுடைய தூதர்களாகிய பிசாசுகளும் பரலோகத்தை விட்டு வெளியே துரத்தப்பட்டார்கள். அவர்கள் இன்னும் வானத்திலே அவிழ்த்துவிடப் பட்டவர்களாக இருக்கிறார்கள். சாத்தான் “ஆகாயத்து அதிகாரப் பிரபு” (எபேசியர் 2:2) என்று அழைக்கப்படுகிறான். அந்தப் பிசாசுகள் இன்னும் “[வான] மண்டலங்களுக்கு” (எபேசியர் 6:12) போகமுடியும் – அவைகள் சில நேரங்களில் “வான மண்டலங்களுக்கு” போக முடியும். அதனால்தான் யோபு 1:6ல் “தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான்” என்று சொல்லுகிறது. ஆனால் உபத்திரவக் காலத்தின் 3½ வருடங்களுக்குப் பிறகு அவைகளால் அப்படி வர இயலாது. அந்த உபத்திரவக் காலமானது ஏழு வருடங்களாகும் அப்பொழுது அந்தி கிறிஸ்துவின் வருகையினால் இஸ்ரவேலர் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு மகா உபத்திரவம் உண்டாகும். அந்தி கிறிஸ்து இஸ்ரவேலரோடு உடன்படிக்கையை உறுதிபடுத்தின பிறகு அந்த உபத்திரவம் ஆரம்பமாகும் (தானியேல் 9:27).

அந்த ஏழு-வருட உபத்திரவக் காலத்தின் மத்தியில் சாத்தானும் அவனுடைய பிசாசுகளும் வானமண்டலங்களிலிருந்து அகற்றப்பட்டுப் பூமியிலே தள்ளப்படுவார்கள்! நாம் வாசிக்கிறோம்,

“வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம்பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச்சேர்ந்த தூதரும் யுத்தம்பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை. வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமற்போயிற்று. உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்” (வெளிப்படுத்தல் 12: 7- 9).

இதனால் சாத்தான் பயங்கரமாகக் கோபப்படுவான். “பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால்” (வெளிப்படுத்தல் 12:12) என்று பார்க்கிறோம்.

சாத்தானானவன் இப்பொழுதும் மிகுந்த கோபங்கொண்டிருக்கிறான். இஸ்ரவேலின் மறுபிறப்பு முடிவுகாலத்திற்கு அடையாளம் என்று அவன் அறிந்திருக்கிறான். அநேக பிரசங்கிகள் மற்றும் வேதவல்லுனர்களைவிட அதிகமாக அவன் கடைசிகால அடையாளங்களை நன்கு அறிந்திருக்கிறான். அதனால்தான் கிறிஸ்தவர்கள் “பிசாசின் வஞ்சகங்களைக்” குறித்து மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதனால்தான் இந்தக் கடைசி காலம் நெருங்கி வரும் இந்தச் சமயத்தில் அவனுக்கும் மற்றும் அவனுடைய பிசாசுகளுக்கும் விரோதமாக நாம் அதிகமதிகமாக “போராட” வேண்டும். அதனால்தான் நாம் இவ்வாறாக எச்சரிக்கப்படுகிறோம், “கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக” (II தீமோத்தேயு 3:1). மேலும் “பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று” (வெளிப்படுதத்தல் 12:12) ஏற்கனவே அவன் அறிந்து இருக்கிறான்.

மக்கள் சிலர் இப்பொழுது நாம் எழுப்புதலைப் பெறமுடியாது என்று போதிக்கிறார்கள். நம்முடைய சபைகளுக்கு எழுப்புதலைத் தேவன் அனுப்ப முடியாதபடிக்குச் சாத்தானுடைய வல்லமை இப்பொழுது மிகவும் அதிகமாக இருக்கிறது என்று அவர்கள் சொல்லுகிறார்கள்.

அட்டர்னி ஜெய் செக்குலோ என்பவர் சமீபத்தில் சொன்னார், “ஈராக் மற்றும் சிரியாவில் கிறிஸ்தவர்களுக்கு இது ஒரு முடிவான நேரமாக இருக்கிறது. இங்கே அவர்கள் உயிரோடு எரிக்கப்படுகிறார்கள், சிலுவையில் அறையப்படுகிறார்கள் மற்றும் சிரச்சேதம் செய்யப்படுகிறார்கள். இப்பொழுது ISIS இயக்கத்தார் இரசாயன ஆயுதங்களை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். படுகொலைகள் தாங்கமுடியாததாக இருக்கின்றன”. இருந்தாலும் அதே சமயத்தில் எந்தக் காலத்திலுமில்லாத மிகப்பெரிய எழுப்புதல்கள் ஈரான், ஈராக் மற்றும் சிரியாவில் இடம்பெறுகின்றன. திரு. செக்குலோ அங்குள்ள முஸ்லிம் தீவிரவாதிகளைத் தடைசெய்ய தனக்குப் பணம் அனுப்பும்படி கேட்கிறார். அது அறிவில்லாமை என்று நான் சொல்லுவேன்! கண்துடைப்பு! அவர்களுக்குத் தேவையானது பணமல்ல! அவர்களுக்குத் தேவையானது தேவன் எழுப்புதலோடு அங்கே இறங்கிவந்து அவர்களைக் காக்கும்படி நாம் ஜெபிப்பதே! அதனால்தான் அவர்களுக்குக் கிறிஸ்தவர்கள் இப்படியாக ஜெபிக்கத் தேவைப்படுகிறார்கள்,

“ஆ, உமது நாமத்தைச் சத்துருக்களுக்குத் தெரியப்பண்ணுவதற்கும், ஜாதிகள் உம்முடைய சந்நிதிக்கு முன் தத்தளிப்பதற்கும், தேவரீர் [தொடர்ந்து] வானங்களைக் கிழித்திறங்கி, உருக்கும் அக்கினி எரியுமாப்போலவும் அக்கினி தண்ணீரைப் பொங்கப்பண்ணுமாப்போலவும், பர்வதங்கள் உமக்கு முன்பாக உருகும்படிசெய்யும்” (ஏசாயா 64:1-2).

டாக்டர் மார்டீன் லாயட்- ஜோன்ஸ் சொன்னார், “எழுப்புதல் தொடர்பாக இறுதி ஜெபம் இதுதான்!... சிறப்பான, அவசரமான ஜெபத்தால் தேவனுடைய ஆவி எழுப்புதலில் இறங்கி வந்து சந்திக்க வேண்டும். இதைவிட நல்லபடியாக இந்த [ஜெபத்தை] விளக்க கோபர்ஸ் பாடல் வரிகளால் மட்டுமே முடியும், ‘ஓ வானங்களைக் கிழித்து, சீக்கிரமாகக் கீழே இரங்கும், ஆயிரம் இருதயங்களை உமக்கு சொந்தமாக்கிக் கொள்ளும்’… இஸ்ரவேல் பிள்ளைகள்… விரோதி நாடுகளைச் சந்திப்பார்கள், அவர்களைச் சத்துருக்கள் சூழ்ந்துகொள்வார்கள், ஆனால் அதன் காரியம் என்ன? இங்கே பர்வதங்கள் உமக்கு முன்பாக உருகும்படி செய்ய வல்லமையுள்ள தேவன் இருக்கிறார் அதற்காகத்தான் நாம் [நிச்சயமாக] ஜெபித்துக் கொண்டிருக்க வேண்டும்” (Lloyd-Jones, Revival, Crossway Books, 1994 edition, pp. 305, 307).

அந்த முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களுக்குப் பயங்கரமான காரியங்களைச் செய்ததை நீங்கள் படிக்கும்பொழுது, அமெரிக்காவில் உள்ள வழக்கறிஞர்களுக்குப் பணத்தை அனுப்ப வேண்டாம்! அவரோ, அல்லது இந்தப் பூமியிலுள்ள மற்ற எவரோ, அவர்களுக்கு எப்படி உதவி செய்ய முடியும்? அவர்கள் ஏற்கனவே எழுப்புதலை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள், நூற்றுக் கணக்கான முஸ்லிம்கள் காத்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் வந்துகொண்டு இருக்கிறார்கள். பணம் அனுப்ப வேண்டாம். அது அவர்களுக்கு உதவி செய்யவே முடியாது! சர்வ வல்மையுள்ள தேவனிடம் வல்லமையுள்ள ஜெபங்களை அனுப்புங்கள். அவர் மற்றும் அவர் ஒருவரால் மட்டுமே அவர்களை இரட்சிக்க முடியும். அந்தப் புதுக் கிறிஸ்தவர்கள் உயிரோடு எரிக்கப்பட்டாலும், சிலுவையில் அறையப்பட்டாலும் மற்றும் சிரச்சேதம் செய்யப்பட்டாலும் – தேவன் தம்முடைய புயங்களைத் திறந்து அவர்களைப் பரலோகச் சந்தோஷத்தோடு நித்தியத்தில் ஏற்றுக்கொள்வார் . அந்த இரத்தச் சாட்சிகள், தாங்கள் பட்ட பாடுகள் மூலமாக, இன்னும் அதிகமதிகமான முஸ்லிம்களைத் தீவிரவாதத்திலிருந்து திரும்பி, அவர்களுடைய ஆத்துமாக்களை இரட்சிக்க சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவிடம் கொண்டு வருவார்கள். இரண்டாம் நூற்றாண்டில் டெர்டுலியன் என்பவர், புறஜாதியர்களான ரோமர்களால் அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டபோது பழங்காலக் கிறிஸ்தவர்களைப்பற்றிச் சொன்னதுபோல, “இரத்தச் சாட்சிகளின் இரத்தமே சபையின் வித்து”. அநேக முஸ்லிம்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் திரும்பிக் கொண்டிருப்பதனால் அவர்களின் தலைவர்கள் ஏற்கனவே பயத்தால் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்திகளை நாம் கேள்விப்படுகிறோம். மாபெரும் புரட்சியாளராகிய லூத்தர் அவருடைய நாட்களில் துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்காக ஒரு பாடல் எழுதினார். அது உங்கள் பாட்டுத்தாளில் 7வது பாடலாக உள்ளது.

நம்தேவன் வல்லமையுள்ள ஒரு கோட்டை,
     ஒருபோதும் தோல்வியுராத ஓர் அரண்,
நமது உதவியாளர் அவர்,
     உபத்திரவத்தின் வெள்ளம் புரண்டு வெற்றிகொள்ளும்போது.
ஐயோ நமது பழங்கால எதிரி நம்மிடம்
     இன்னும் அதிமாக வேலையைக் காட்டுகிறான்;
அவனுடைய தொழில் வல்லமை மகாபெரியது,
     அவன், கொடூர ஆயுதங்களேந்தி வெறுப்போடு வருகிறான்,
பூமியிலே அவனுக்குச் சமமானது இல்லை.

நமது சொந்த பெலத்தை நம்பினால்,
     நமது போராட்டத்தில் இழப்புதான்,
நமது பக்கம் அதற்குச் சரியானவர் இல்லையா,
     தேவன் சொந்தமாகத் தெரிந்து கொண்டவர்.
அவர் யாராக இருக்கமுடியுமென்று கேட்பீர்களா?
     கிறிஸ்து இயேசுவானவர், அது அவரே;
அவருடைய பெயர் ஓய்வுநாளின் கர்த்தர்,
     காலாகாலத்திற்கும் மாறாதவர் அவரே,
அவர்தான் யுத்தத்தில் வெற்றிபெற வேண்டும்.
(“A Mighty Fortress Is Our God” by Martin Luther, Th.D., 1483-1546).

சீனாவில் இது சரியாக நடந்தது. கம்யூனிஸ்டு சர்வாதிகாரி மேவோ டிசி டங்கின் மூலமாகச் சீனாவிலிருந்து வெளிநாட்டு மிஷனரிகள் துரத்திவிடப்பட்டனர். நாகரீகப் புரட்சி சமயத்தில், சபைகள் எரித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. போதகர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான சீனக் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள் மற்றும் சிறைப்படுத்தப்பட்டார்கள். ஆனால் தேவன் அவர்களோடு இருந்தார். ஒரு பெரிய கிறிஸ்தவ எழுப்புதல் ஆரம்பித்தது. கிறிஸ்தவம் பரவாதபடிக்குக் கம்யூனிஸ்டுகள் தங்களால் முடிந்த எல்லா முயற்சிகளையும் செய்தார்கள். ஆனால் அவர்கள் தோற்றுப்போனார்கள். இன்று 150 மில்லியனுக்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் சீனாவில் இருக்கிறார்கள். அமரிக்கா, கனடா, மற்றும் ஐரோப்பாவில் இருப்பதைவிட அதிகமான மக்கள் இன்று சீனச் சபைகளில் இருக்கிறார்கள்! கம்யூனிஸ்டு சீனாவில் தேவன் இதைச் செய்தார் – அதே தேவன் மத்திய கிழக்கு நாடுகளில் அதைச் செய்யமுடியும்! உண்மையாக , அவர் அதை செய்து கொண்டிருக்கிறார்! அந்த முஸ்லிம் நாடுகளில் பத்தாயிரத்துக்கும் அதிகமான கிறிஸ்தவர்களை எழுப்பும்படி தேவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்! மார்டின் லூத்தர் சொன்னதுபோல,

பொருள்களும் பிரியமானவர்களும் அழிந்தாலும்,
     அழியக்கூடிய இந்த அநித்திய ஜீவன் அழிந்தாலும்;
இந்தச் சரீரத்தை ஒருவேளை அவர்கள் கொல்லலாம்:
     இருந்தாலும் தேவனுடைய சத்தியம் இன்னும் நிலைத்திருக்கும்,
அவருடைய இராஜ்யம் நித்திய காலத்திற்கும் உள்ளது.

அந்தப்படியாகவே வரப்போகிற மகா உபத்திரவக் காலத்தில் உண்மையான கிறிஸ்தவர்களுக்கும் நடக்கும். சாத்தான் அவர்களைக் கொடூரமாகத் தாக்குவான்.

கிறிஸ்துவின் சத்ருக்கள் வந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களைச் சிறைப்படுத்தி சிரச்சேதம் செய்வான். ஆனால் அவர்கள் சாத்தானை ஜெயிப்பார்கள்! எப்படி?

“மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்” (வெளிப்படுத்தல் 12:11).

“ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்”. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் அவர்களை நித்தியத்திற்கும் பாதுகாக்கும். இன்றும்கூட, சாத்தான் உங்களைத் தாக்கும்பொழுது, அவன் உங்களை வருத்தப்படுத்தி நம்பிக்கையை இழக்கச் செய்யும்பொழுது, கிறிஸ்துவின் இரத்தத்தை நினைவில் கொள்ளுங்கள். இரட்சகரின் இரத்தத்தை நீங்கள் பார்க்கும்பொழுது, உங்களுடைய சுயபரிதாபம் மற்றும் பயத்திலிருந்து, உபத்திரவக்காலக் கிறிஸ்தவர்களைப்போல விடுவிக்கப்படுவீர்கள். தேவ ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் உங்களுடைய பாவம் மற்றும் துக்கத்தை நீக்கி சாத்தானை ஜெயிப்பீர்கள்.

அவர்கள் சாத்தானை ஜெயிப்பார்கள்

“தங்கள் சாட்சியின் வசனத்தினாலும்”. அவர்கள் இயேசுவைத் தங்கள் இரட்சகர் என்று சாட்சி சொல்லுவார்கள். உயிர்த்தியாகம் செய்தல் சாத்தான்மீது பெரிய வெற்றி பெறுதலாகும். “உயிர்த்தியாகம் செய்பவர்களின் இரத்தம் [மெய்யாகவே] சபையின் வித்தாகும்.” போதகர் சாமுவேல் லேம்ப் என்பவர் அநேக தடவைகள் சீனச்சிறையில் அடைக்கப்பட்டார். இறுதியாக அவர் சொன்னார், “கம்யூனிஸ்டுகள் என்னைச் சிறைப்படுத்துவதை நிறுத்திவிட்டார்கள். அவர்கள் என்னைச் சிறைப்படுத்துவதை நிறுத்திவிட்டார்கள் ஏனென்றால் என்னைச் சிறைப்படுத்தும் ஒவ்வொருதடவையும், நமது சபை வளர்ந்தது. அதிகமான உபத்திரவங்கள் என்றால் அதிகமான ஆசீர்வாதங்கள்!”

எழுந்து நின்று பாட்டுத்தாளில் உள்ள 8வது பாடலைப் பாடவும்.

எங்கள் பிதாக்களின் விசுவாசம்! இன்னும் ஜீவிக்கிறது,
     கடுங்காவல், தீ, பட்டயம் இவை இருந்தாலும்:
ஓ, எப்படி எங்கள் இருதயங்களின் துடிப்பு மகிழ்சியால் உயர்கிறது
     அந்த மகிமையான வார்த்தையை கேட்கும் போதெல்லாம்!
எங்கள் பிதாக்களின் விசுவாசம், பரிசுத்தமான விசுவாசம்!
     நாங்கள் மரணமட்டும் உமக்கு உண்மையாக இருப்போம்!
(“Faith of Our Fathers” by Frederick W. Faber, 1814-1863).

உபத்திரவக் காலத்தில் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவுக்காக மரிக்கச் சித்தமாக இருப்பதால் சாத்தானை ஜெயிப்பார்கள். “அவர்கள் மரணம் வந்தாலும் தங்கள் ஜீவனை நேசிக்கவில்லை”. அவர்கள் கிறிஸ்துக்காக மரிக்க வேண்டியதாக இருந்தாலும் தங்கள் ஜீவனை நேசிக்கவில்லை. அப்படியாக அவர்கள் சாத்தானை ஜெயித்தார்கள்! எழுந்து நின்று மறுபடியுமாக 8வது பாடலைப் பாடவும்,

எங்கள் பிதாக்களின் விசுவாசம்! இன்னும் ஜீவிக்கிறது,
     கடுங்காவல், தீ, பட்டயம் இவை இருந்தாலும்:
ஓ, எப்படி எங்கள் இருதயங்களின் துடிப்பு மகிழ்சியால் உயர்கிறது
     அந்த மகிமையான வார்த்தையை கேட்கும் போதெல்லாம்!
எங்கள் பிதாக்களின் விசுவாசம், பரிசுத்தமான விசுவாசம்!
     நாங்கள் மரணமட்டும் உமக்கு உண்மையாக இருப்போம்!

எங்கள் பிதாக்கள், சிறை இருளில் சங்கிலியால் கட்டப்பட்டார்கள்,
     இருந்தாலும் அவர்களின் இருதயமும் மனசாட்சியும் விடுதலையானது;
அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலம் எவ்வளவு இனிமையாக இருக்கும்,
     அவர்களைப்போல், இவர்களும், உமக்காக மரிக்க முடியுமானால்!
எங்கள் பிதாக்களின் விசுவாசம், பரிசுத்தமான விசுவாசம்!
     நாங்கள் மரணமட்டும் உமக்கு உண்மையாக இருப்போம்!

“மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்” (வெளிப்படுத்தல் 12:11).

இப்பொழுது சாத்தானை வெற்றி கொள்ளும் மக்கள் இந்த வார்த்தைகளைத் தங்கள் வாழ்க்கையில் இன்று கடைபிடித்து வாழ்பவர்கள். நமது சபைக்கு எழுப்புதலை அனுப்ப வேண்டும் என்று 42 வடங்களாகத் தேவனிடம் நாம் ஜெபித்துக் கொண்டு வருகிறோம். ஆனால் எந்த எழுப்புதலும் ஒருபொழுதும் வரவில்லை. அதற்குக் காரணம் எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. மக்கள் சிறிது நேரம் வந்தார்கள் பிறகு திரும்பப் பாவம் செய்யப்போய்விட்டார்கள். மாற்றமடையாத அப்படிப்பட்டவர்கள் எழுப்புதலை எப்படிக் காணமுடியும்? அது முடியாது. வருடாவருடம் அவர்கள் பாவமுள்ள, சுயநலமான வாழ்க்கையை வாழ்ச் சென்றார்கள். இறுதியாக விலகிச் செல்வதை அவர்கள் நிறுத்திக் கொண்டார்கள். கடைசியாக நம்முடைய பிள்ளைகளில் சிலர் உண்மையாக மாற்றப்பட்டார்கள். அதன்பிறகு, ஒரு சிலர் அப்படியே வர ஆரம்பித்து மெய்யாக மாறுதல் அடைந்தார்கள். கடைசியாக நான்கு அல்லது ஐந்து “சபைப்” பிள்ளைகள் மட்டும் மாறுதல் அடையாமல் இருந்தார்கள். பிறகு தேவன் இறுதியில் நம்முடைய ஜெபங்களுக்குப் பதிலளித்தார். பொல்லாதவர்கள் போனபொழுது, தேவன் நமக்கு எழுப்புதலை அனுப்பினார்.

ஒரு பெண் உண்மையான, இருதய உணர்வோடு எழுப்புதலுக்காக ஜெபிக்க ஆரம்பித்தாள். அதன்பிறகு பெண்களில் ஒருவர் உடைக்கப்பட்டு எழுப்புதலுக்காகக் கண்ணீரோடு ஜெபித்தார். அதே நேரத்தில் மூன்று வாலிபர்கள் என் வீட்டிற்கு வந்து என்னோடு எழுப்புதலுக்காக ஜெபித்தார்கள். இறுதியாக, உலகப்பிரகாரமான இழக்கப்பட்ட மக்கள் எல்லாரும் போனபொழுது, நம்முடைய ஜெபங்கள் கேட்கப்பட்டது. சில வாரங்களில் 24 பேர் நம்பிக்கையோடு மாற்றப்பட்டார்கள்! அவர்கள் பாவத்தின் ஆழமான உணர்த்துதலுக்குள்ளாகக் கொண்டுவரப்பட்டார்கள். அவர்கள் இயேசுவிடம் வந்தபொழுது கதறி அழுதார்கள். அவர்களில் இரண்டுபேர் 80 வயதைக் கடந்தவர்கள், நமது நாட்களில் இது வழக்கத்துக்கு மாறானதாகும். அவர்களில் 13 பேர் கல்லூரி வயதுடையவர்கள். அவர்களில் ஒருவர் இழக்கப்பட்ட தென் பாப்திஸ்தைச் சேர்ந்தவர். அவர் ஏற்கனவே இரட்சிக்கப்பட்டதாக அநேக மாதங்களாக என்னிடம் வாக்குவாதம் பண்ணினார். ஆனால் அவர் இந்த வருடம் தான் எழுப்புதலில் மெய்யாகவே இரட்சிக்கப்பட்டார்! இவ்வளவு குறுகிய காலத்தில் 24 பேர் இரட்சிக்கப்பட்டதை நாங்கள் ஒருபோதும் பார்த்ததில்லை. இந்தக் கூட்டங்களில் தேவனுடைய பிரசன்னத்தை நாங்கள் அனைவரும் உணரமுடிந்தது. இன்னும் சில வாரங்களில் அவர்களில் பாதிபேருக்கு நான் ஞானஸ்நானம் கொடுப்பேன்.

இது மிகவும் மகிழ்ச்சியான நேரமாக இருக்கப் போகிறது, தேவன் தமது ஆவியை ஊற்றி, கிறிஸ்துவினிடத்தில் இந்த மக்களைச் சேர்த்து அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தால் பாவத்தைச் சுத்திகரித்ததினால், தேவனுக்கு நன்றி செலுத்தும் நேரமாக இது இருக்கும். தேவன் உங்களுக்கு என்ன செய்தார் என்று அடுத்த சனிக்கிழமை இரவு சாட்சி கொடுக்கத் தயாராக இருங்கள்!

இந்த வருட முடிவிற்குள்ளாக இன்னும் ஒரு சில நம்பிக்கையான மாற்றங்கள் இருக்கும். கடந்த இரவு இன்னும் ஒன்று நமக்குக் கிடைத்தது. தேவன் நமக்கு முதலாவது எழுப்புதலைக் கொடுத்த வருடமாக இந்த 2016ஆம் ஆண்டை நாம் எப்பொழுதும் நினைவுகூறுவோம் என்று நான் நம்புகிறேன்.

ஆனால் சபையானது எப்பொழுதும் ஒரு எழுப்புதலின் நிலையிலேயே இருக்கும் என்று நாம் நினைத்துவிடக் கூடாது. தேவன் இதை மறுபடியுமாகச் செய்வதற்கு, அநேக மாதங்கள், அல்லது வருடங்கள்கூட ஆகலாம். அந்த காலக் கட்டங்களில் அவருடைய ஆவியை ஊற்றின பெரிய தருணத்திற்காக நாம் தேவனுக்கு நன்றி செலுத்த வேண்டியது அவசியமாகும். தொடர்ந்து எழுப்புதலின் நிலையிலேயே இருக்க வேண்டும் என்று நாம் முயற்சி செய்யக்கூடாது இல்லையேல் நாம் ஏமாற்றமும் வருத்தமும் அடைவோம். ஒரு சபை தொடர்ந்து எழுப்புதலின் நிலையிலேயே இருக்க முடியாது. நமக்கு ஸ்டீராய்டு புத்துணர்வளிக்கும்! ஆனால் அது நம்மை எரித்துப்போடும். அதனால், நாம் இப்பொழுது சிறிது நிறுத்தி அந்த 24 மாற்றங்களுக்காகத் தேவனைத் துதிப்போம். அவ்வப்பொழுது அதிக மாற்றங்கள் இருக்கும். எதிர்காலத்தில், இதைவிடப் பெரிய, இன்னுமொரு எழுப்புதல் இருக்கலாம் என்று நான் விசுவாசிக்கிறேன். இவ்வருடத்தின் மீதியான காலத்தில், நாம் தேவனுடைய வல்லமையிலும் கிறிஸ்துவின் இரத்தத்திலும் களிகூர்ந்திருப்போம். இந்தப் புதிதாக மாற்றம் அடைந்தவர்களுக்காக நாம் ஜெபிப்போம், அவர்கள், உபத்திரவக் காலத்துக் கிறிஸ்தவர்கள் போல் ஜெயிப்பார்கள், “மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை [சாத்தானை] ஜெயித்தார்கள்” (வெளிப்படுத்தல் 12:11). தேவன் அனுப்பின எழுப்புதலின் கருத்துப் பாடலை எழுந்து நின்று பாடுவோம். அது உங்கள் பட்டுத்தாளின் 9வது பாடல்.

என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், இரட்கரே, நான் ஜெபிக்கிறேன்,
     இயேசுவை மட்டும் இன்று நான் பார்க்கும்படி செய்யும்;
பள்ளதாக்கிலே நீர் என்னை நடத்தினாலும்,
     உமது மட்டற்ற மகிமை என்னைச் சுற்றிக் கொள்கிறது.
என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், தெய்வீக இரட்சகரே,
     உமது மகிமையினால் எனது ஆவி பிரகாசிக்கும் வரையிலும்.
என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், அனைவரும் பார்க்கட்டும்
     உமது பரிசுத்த சாயல் என்னில் பிரதிபலிப்பதை.

என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், எனது ஆசைகளை
     உமது மகிமைக்காக வையும்; என் ஆத்துமா வாஞ்சிக்கும்,
உமது பரிபூரணத்தாலும், உமது பரிசுத்த அன்பாலும்,
     பரத்திலிருந்து வரும் ஒளி என் பாதையில் பாய்ந்தோடும்.
என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், தெய்வீக இரட்சகரே,
     உமது மகிமையினால் எனது ஆவி பிரகாசிக்கும் வரையிலும்.
என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், அனைவரும் பார்க்கட்டும்
     உமது பரிசுத்த சாயல் என்னில் பிரதிபலிப்பதை.

என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், பாவமில்லாமலும்
     பாவத்தில் பிரகாசிக்கும் வெளிச்சத்தின் நிழலுமில்லாமலும்.
உம்முடைய ஆசிர்வதிக்கப்பட்ட முகத்தை மட்டும் பார்ப்பேனாக,
     உமது அளவில்லாத கிருபையினால் என் ஆத்துமாவுக்கு விருந்தளியும்.
என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், தெய்வீக இரட்சகரே,
     உமது மகிமையினால் எனது ஆவி பிரகாசிக்கும் வரையிலும்.
என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், அனைவரும் பார்க்கட்டும்
     உமது பரிசுத்த சாயல் என்னில் பிரதிபலிப்பதை.
(“Fill All My Vision” by Avis Burgeson Christiansen, 1895-1985).

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

பிரசங்கத்திற்கு முன்னால் திரு. ஆபெல் புருதோம் வாசித்த வேத பகுதி: வெளிப்படுத்தல் 12:7-12.
பிரசங்கத்திற்கு முன்னதாகப் பாடப்பட்ட தனிப்பாடலைப் பாடியவர் திரு. பென்ஜமின் கின்கேய்டு கிரிஃபீத்:
“A Mighty Fortress Is Our God” (Martin Luther, 1483-1546).