Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
சூடுண்ட மனச்சாட்சி

THE SEARED CONSCIENCE
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

அக்டோபர் 16, 2016 அன்று ஞாயிறு காலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Morning, October 16, 2016

“ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங் களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்” (I தீமோத்தேயு 4:1).


கடைசிக் காலங்களில் மக்கள் மிகவும் மோசமாகப் போவார்கள் என்று வேதாகமம் நமக்குப் போதிக்கிறது. இப்பொழுது சம்பவித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு அடையாளங்களும் நாம் கடைசிக் காலங்களில் வாழ்கிறோம் என்ற உண்மையை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. அவை எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றிப் புதிய மொழி பெயர்ப்பில் சொல்லப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். வரலாற்றின் கடைசிக் காலத்தில் மக்கள் எப்படிச் செயல்படுவார்கள். அது சொல்லுகிறது,

“மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும் பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர் களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர் களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர் களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுக போகப்பிரியராயும், அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள். பொல்லாதவர்களும் எத்தர்களு மானவர்கள் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம் போகிறவர்களாகவுமிருந்து மேன்மேலும் கேடுள்ளவர் களாவார்கள்” (II தீமோத்தேயு 3:1-4, 12-13, NIV).

கடைசிக் காலத்தில் நாம் அனைவரும் சந்திக்கும் கொடுமையான நிலைமை இதுவாகும். இந்தப் பொல்லாத மற்றும் பாவம் நிறைந்த காலத்தில் இதைத்தான் நாம் சந்தித்து வருகிறோம். நாம் பொல்லாத மற்றும் கொடிய காலங்களில் வாழ்கிறோம் என்று வேதாகமம் சொல்வதில் ஆச்சரியமில்லை. நாம் பாலியல் குற்றங்கள் நிறைந்த காலத்தில் வாழ்கிறோம் என்பதில் ஆச்சரியமில்லை. திரைப்படங்கள் மிகக்கொடுமையாக, ஆசை இச்சைகளால் நிறைந்ததாக, பூதாகரமானதாக, இரத்தக்கொலைகளால் நிரப்பப்பட்டிருப்பதாக இருப்பதில் ஆச்சரியமில்லை. மக்கள் துறவிகளையும் பிசாசுகள் மற்றும் மரணத்தையும் விரும்புவதில் ஆச்சரியமில்லை. வாலிபர்கள் பைத்தியம்போல உளறிக்கொண்டு, மாரிசூனா மற்றும் ஈஸ்டேசி போன்ற போதைப் பொருள்களுக்குப் பின்னே போவதினால் நமது சபைகள் வெறுமையாக இருப்பதில் ஆச்சரியமில்லை. நீங்கள் ஞாயிற்றுக்கிழமையில் சபைக்குப் போவதினால் அவர்கள் உங்களைப் பார்த்து சிரிப்பார்கள் என்பதில் ஆச்சரியமில்லை. நீ பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்து வேதம் வாசித்து ஜெபித்தால் நீ மாய சக்தியுள்ளவன் என்று அவர்கள் நினைப்பதில் ஆச்சரியமில்லை. அதனால்தான் வேதம் சொல்லுகிறது, “கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று” (II தீமோத்தேயு 3:1).

ஆனால் இந்தவிதமான பாவம், குழப்பம், கொலைக்குக் காரணம் என்ன? நமது அரசியல்வாதிகள் ஏன் இவ்வளவு கொடியவர்களாக இருக்கிறார்கள்? மக்கள் நமது தெருக்களில் கூட்டங்கூடிக் காவலாளிகளைச் சுடுவதும் கட்டிடங்களைச் சுட்டெரிப்பதும் ஏன்? முஸ்லீம் தீவிரவாதிகள் அணுகுண்டுகள் வெடிப்பதும் கொலைகள் செய்வதற்கும் பின்னணி என்ன? உங்கள் சந்ததி நமது சபைகளைவிட்டுச் சுயநலம் மற்றும் பாவம் நிறைந்த வாழ்க்கையை வாழ்வது ஏன்? இதற்கான பதில் நமது பாடத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது,

“ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள்” (I தீமோத்தேயு 4:1).

பரிசுத்த ஆவியானவர் “வெளிப்படையாக” சொல்லுகிறார். அதன் பொருள் தேவன் இதைப்பற்றி மிகத்தெளிவாகப் பேசுகிறார் என்று அர்த்தமாகும். இந்த முக்கியமான சத்தியத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்று அவர் விரும்புகிறார். உண்மையாகவே பிசாசுகள் இருக்கின்றன என்று நீ தெளிவாக உறுதியாக அறிந்து கொள்ள வேண்டுமென்று அவர் விரும்புகிறார். அவைகள் வஞ்சிக்கிற [ஏமாற்றுகிற] ஆவிகள் என்று தேவன் சொல்லுகிறார். உங்களைத் தவறான போதனைக்கு நடத்தும் பிசாசுகள் அவைகளே, “பிசாசுகளின் உபதேசங்கள்”. பாசாங்குத்தனமான போதகர்களால் இந்தப் பொய்ப் போதனைகள் வருகின்றன. அவர்கள் உங்கள் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் போதனை செய்பவர்களாக இருக்கக்கூடும். அவர்கள் பரிமாணக்கோட்பாடு என்ற பொய்யைப் போதிப்பார்கள். நீ மிருகமேயல்லாமல் வேறில்லை என்று அவர்கள் சொல்லுவார்கள். தேவன் இல்லை என்று அவர்கள் உனக்குப் போதிப்பார்கள். சரி மற்றும் தவறு என்ற காரியங்கள் எதுவுமில்லை என்று அவர்கள் உனக்குப் போதிப்பார்கள். வேதாகமத்தில் நிறையத் தவறுகள் இருப்பதாக அவர்கள் உனக்குப் போதிப்பார்கள். உங்கள் பெற்றோர்களில் அநேகர் இந்தப் பொய்களை உங்களுக்குப் போதிக்கக்கூடும்! நமது நகரங்களில் குற்றங்கள் நிறைந்திருப்பதில் ஆச்சரியமில்லை. எதை விசுவாசிக்க வேண்டும் என்று உனக்குத் தெரியாதிருப்பதில் ஆச்சரியமில்லை.

இந்தப் பிசாசின் மக்கள் இவைகளைச் செய்கிறார்கள் ஏனென்றால் அவர்களுடைய மனச்சாட்சிகள், “காய்ந்த இரும்பினால் சூடு போடப்பட்டிருக்கிறது”. அதன்பொருள் அவர்களுடைய மனச்சாட்சிகள் கொளுத்தப்பட்டுத் தீய்ந்துபோய் இருக்கிறது. அவர்களுடைய புனிதத்தன்மை கெடும்வரையிலும் அவர்களுடைய மனச்சாட்சி பிசாசுகளால் கொளுத்தப்பட்டு இருக்கிறது. சரி மற்றும் தவறு என்பதன் வேறுபாட்டினை அறியாத வண்ணம் அவர்களுடைய மனச்சாட்சிகள் கொளுத்தப்பட்டுத் தீய்ந்துபோய் இருக்கிறது. அநேகருடைய மனங்களையும் இருதயங்களையும் இப்பொழுது பிசாசுகள் தங்கள் முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன.

உங்களுடைய மனங்களையும் அழிக்க வேண்டும் என்பது இந்தப் பிசாசுகளின் நோக்கமாகும். அவைகள் உங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விரும்புகின்றன. உங்கள் மனச்சாட்சியைச் சூடுபோடுவதன் மூலமாக அவைகள் உங்களைக் கட்டுப்படுத்தும்.

தேவன் மனிதனைச் சிருஷ்டித்தபோது அவனுக்கு மனச்சாட்சியைக் கொடுத்தார். அவர் மனிதனுக்குள் “ஜீவசுவாசத்தை” வைத்தார். இதன் எபிரெய வார்த்தை “நெஷாமா” ஆகும். மிருகங்களுக்கு இல்லாத இரண்டு காரியங்களை இந்த நெஷாமா மிருகங்களுக்கு அல்லாமல் மனிதர்களுக்கு இரண்டு காரியங்களைக் கொடுக்கிறது – முதலாவதாக, தேவனை அறிந்து கொள்ளும் திறமை, இரண்டாவதாக, சரி மற்றும் தவறு என்று காரியங்களைப் பகுத்தறியும் திறமை.

நீங்கள் “பினோச்சியோ” என்ற டிஸ்னே திரைப்படத்தைப் பார்த்தீர்களா? பினோச்சியோ என்பது ஒரு மரத்தாலான பொம்மை. ஆனால் அது ஓர் உண்மைச் சிறுவனாக வேண்டுமென்று விரும்புகிறது. இருந்தாலும் அது ஒரு பொம்மையாக இருப்பதால் அதற்கு மனச்சாட்சி இல்லை. மனச்சாட்சிக்குப் பதிலாக, அதற்குச் சரி மற்றும் தவறு என்று காரியங்களைச் சொல்ல ஒரு சிறிய சில்வண்டு இருந்தது. அந்தச் சில்வண்டு இல்லாத சமயங்களில் அதற்கு அதிகத் தொந்தரவுகள் ஏற்பட்டன. ஆனால் அது ஓர் உண்மைச் சிறுவனாக மாறினபோது அவனுக்கு உதவிட அந்தச் சில்வண்டு தேவைப்படவில்லை. அது உண்மைச் சிறுவனாக மாறினபோது அவனுக்குள் சரி மற்றும் தவறு என்று சொல்லும் மெய்யான மனச்சாட்சியைப் பெற்றுக்கொண்டான்.

முதல் மனிதனுக்கு ஏற்பட்டது இதற்கு நேரெதிரானதாகும், அவன்தான் ஆதாம். ஆதாம் பாவம் செய்தபொழுது அவன் உண்மையான மனிதனிலிருந்து சாத்தானுடைய பொம்மையாக மாறினான். இப்பொழுது அவனுடைய மனச்சாட்சியை ஒரு பிசாசு அழித்து விட்டது அவன் சாத்தானுடைய பொம்மையாக மாறினான். ஆதாம் பாவம் செய்தபொழுது அவனுடைய மனச்சாட்சி சூடுண்டது பிறகு அது சரியாக வேலை செய்யவில்லை. தேவன் அவனுடைய பாவத்தை உணர்த்தினபோது அவன் சாக்குப்போக்குச் சொன்னான். பாவ உணர்வடைவதற்குப் பதிலாக, அவன் தேவனிடமிருந்து தன்னை மறைத்துக்கொள்ள முயற்சி செய்தான். தேவன் அவனைக் கண்டபொழுது, தன்பாவத்தை அவரிடம் அறிக்கை செய்வதற்குப் பதிலாக சாக்குபோக்குச் சொன்னான். தன் தகப்பனுடைய அழிந்துபோன மனச்சாட்சியை அவனுடைய முதல் மகன் காயின் சுதந்தரித்துக் கொண்டான். தன்னுடைய சகோதரனைக் கொலை செய்தபிறகும், அவன் பாவ உணர்வு அடையவில்லை. தன்பாவத்தை அறிக்கை செய்வதற்குப் பதிலாகச் சாக்குபோக்குச் சொன்னான். தன்பாவத்தை அறிக்கை செய்வதற்குப் பதிலாக அவன் மோசமான பொல்லாதவனாக மாறினான். அவனுடைய மனச்சாட்சி சாத்தானால் இப்பொழுது சூடான இரும்பினால் சூடுண்டது. “காயீன் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டுச் சென்று” நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான், அதன் பொருள் “அலைந்து திரியும்” தேசம் என்பதாகும். அவனுடைய பாவம் மன்னிக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்று அவன் உணர்ந்தான். அவன் தேவன்மீது கோபமாக இருந்தான். அவன் ஒரு நாடோடியாக, பூமியிலே மரணம் அடையும்வரை அலைந்து திரிந்து நரகத்திற்குப் போனான். சாத்தான் அவனைச் சோதித்தான். அவனுடைய சகோதரனைக் கொலை செய்யும்படி சாத்தான் செய்தான். அவனுடைய மனச்சாட்சி சாத்தானால் இப்பொழுது சூடான இரும்பினால் சூடுண்டது –அவன் இரட்சிக்கப்படுவதற்கு மிகவும் காலதாமதம் ஆகிவிட்டது. அந்த அளவிற்குச் சாத்தான் உன்னுடைய மனச்சாட்சியைச் சூடுபோட்டுவிட்டால் நீ இரட்சிக்கப்படுவது மிகவும் காலதாமதமாகிவிடும். நீ மறுபடியுமாக ஒருபோதும் குற்றஉணர்வு அடையமாட்டாய். உன்னுடைய மனச்சாட்சி மரித்துப்போகும். நீ இயேசுவிடம் அவருடைய இரத்தத்தினால் சுத்திகரிக்கப்பட ஒருபோதும் வரமாட்டாய். உன் வாழ்நாள் எல்லாம் அலைந்து திரிந்து கடைசியாக நீ மரித்து நரகத்திற்குப் போய் நித்திய காலமாக இருப்பாய். உங்கள் மனச்சாட்சி சூடு போடப்படும் வரைக்கும் நீங்கள் பாவம் செய்து கொண்டே இருந்தால் இந்தக் காலையிலே இங்கிருக்கும் ஒவ்வொருவருக்கும் அது நடக்கும். பாவ உணர்வை நீ ஒருபோதும் அடைய முடியாவிட்டால் அது நடக்கும். நீ கிறிஸ்துவிடம் வந்து அவர் சிலுவையிலே சிந்தின இரத்தத்தினால் ஒருபோதும் சுத்தம் அடையாவிட்டால் அது நடக்கும். ஒருவன் தனது பாவத்திற்காகக் குற்றஉணர்வு அடையமுடியாவிட்டால் அவனால் ஒருபோதும் இரட்சிக்கப்பட முடியாது. அவன் தேவனால் கைவிடப்பட்டவனாக இருப்பான். அவன் மன்னிக்கப்பட முடியாத பாவத்தைச் செய்தவனாவான். அவன் காயினைப் போலப் பிசாசுக்கு அடிமையானவனாவான்.

பிசாசினால் உங்கள் மனச்சாட்சியைச் சூடுபோட்டுக் கொள்ளாதபடிக்கு நான் உங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கிறேன். உங்கள் மனச்சாட்சியை என்றென்றுமாகச் சூடுபோட்டுக் கொள்வதற்கு முன்பாக பாவத்திலிருந்து இயேசுவிடம் திரும்புங்கள்.

நீ ஓர் அவலட்சணமான மனச்சாட்சியோடு பிறந்திருக்கிறாய். நீ இதை ஆதாமிடத்திலிருந்து சுதந்தரித்துக் கொண்டாய், காயின் சுதந்தரித்துக் கொண்டதுபோல. குழந்தைப் பருவத்திலே மேலும் உன்னுடைய மனச்சாட்சியைச் சூடுபோட்டுக்கொண்டாய். உன்னுடைய பெற்றோரிடம் நீ பொய் சொன்னபோதெல்லாம், இன்னும் அதிகமாகச் சூடுபோட்டாய். நீ எதையாவது திருடின போதெல்லாம், இன்னும் அதிகமாகச் சூடுபோட்டாய். நீ பள்ளியிலே ஏமாற்றின போதெல்லாம், இன்னும் அதிகமாகச் சூடுபோட்டாய். நீ காம இச்சையோடு படங்களைப் பார்த்து பாலியல் எண்ணங்களோடு இருந்த போதெல்லாம் அதிகமாக அதைச் சூடுபோட்டாய். இறுதியாக இவைகளையெல்வாம் நீ வேண்டுமென்றே செய்தாய் – உன்னுடைய மனச்சாட்சியைப் பெரிய பெரிய பாவங்களினால் சூடுபோட்டுக்கொண்டாய். ஒருவரும் அறியாத பாவங்கள் அவை. உன் தாய் உனக்காக வெட்கப்படும்படியான பாவங்கள் அவை. உனது மனச்சாட்சி அதிகமதிகமாகச் சூடுபோடப்பட்டதாக மாறினது, இறுதியாக நீ செய்வேன் என்று ஒரு போதும் நினைக்க முடியாத பாவங்களையும் நீ செய்து கொண்டிருந்தாய். ஆனால் இப்பொழுது அவைகளில் நீ மகிழ்ந்து அனுபவித்துச் செய்து கொண்டிருக்கிறாய் – இப்பொழுது அவைகள் உன்னை உறுத்துவதே இல்லை. உன்னுடைய பாவங்கள் என்னவென்று உனக்குத் தெரியும். அவைகளை நான் குறிப்பிட வேண்டியதில்லை. நீ இனிமேலும் அவைகளைப்பற்றிக் கவலைப்படப் போவதில்லை. உண்மையாக நீ ஒரு பாவியாக இருப்பதை இப்பொழுது விரும்புகிறாய்.

அதனால்தான் உங்களில் சிலர் சபைக்கு வருவதை வெறுக்க ஆரம்பிக்கிறீர்கள். உங்கள் பாவங்களைப்பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்லும்போது அதை வெறுக்கிறீர்கள். உங்கள் பாவங்களைப்பற்றி நான் உங்களுக்கு பிரசங்கிக்கும்போது உங்களில் சிலர் என்னை வெறுக்கிறீர்கள். நான் இனிமேலும் கடினமாகப் பேசமுடியாதபடி வியாதிபடும்போது உங்களில் சிலர் மகிழ்ச்சியடைகிறீர்கள். எனக்குப் பதிலாக ஜான் கேஹன் மற்றும் நோவா சாங் பிரசங்கம் செய்ய ஆரம்பித்தால் நீங்கள் மகிழ்ச்சி அடைகிறீர்கள். என்னைவிட அவர்கள் உங்கள்மீது எளிதாக இருப்பதாக நினைத்தீர்கள். ஆனால் இப்பொழுது அவர்கள் என்னைவிடக் கடினமாக உங்கள் பாவங்களுக்கு விரோதமாகப் பேசுகிறார்கள் என்று பார்க்கிறீர்கள். உங்களில் சிலர் இந்தச் சபையைவிட்டு வெளியே போவதன் மூலமாகப் பிரசங்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள மட்டுமே நினைக்கிறீர்கள்! நீங்கள் யார் என்று எனக்குத் தெரியும். உங்கள் முழு இருதயத்தோடும் என்னை வெறுக்கின்றீர்கள்! நான் போய்விட்டேன் என்று விரும்பினீர்கள். நோவாவும் ஜானும் கூடப் போகவேண்டும் என்று விரும்ப ஆரம்பிக்கிறீர்கள். நீங்கள் இந்தச் சபையைவிட்டுப் போகத் திட்டமிடும் அளவிற்கு உங்கள் மனச்சாட்சி இப்பொழுது அவ்வளவாகச் சூடுபட்டு இருக்கின்றது. பிசாசு தன்னுடைய கட்டுக்குள்ளே உங்களைத் திடமாக வைத்திருக்கிறான். அவன் சூடான இரும்பினால் உங்கள் மனச்சாட்சியைச் சூடுபோட்டிருக்கிறான். நீங்கள் இரட்சிக்கப்படும்படியாக இயேசுவிடம் திரும்பின ஒரு காலம் உண்டு. ஆனால் இப்பொழுது உங்களில் சிலர் இயேசுவையும் வெறுக்கிறீர்கள்! இயேசுவின் நாமத்தைக் கேட்கவும் வெறுக்கிறீர்கள்!

ஓ, எப்படி அவரை இவ்வளவாக வெறுக்க உங்களால் முடிகிறது? உன்னை நேசிக்கும் எந்த ஒருவரையும்விட அதிகமாக அவர் எப்பொழுதும் உன்னை நேசிக்கிறார்! இயேசு பரலோகத்தின் மகிமையைவிட்டு இங்கே கீழே இறங்கி வந்து உனக்காகப் பாடுபட்டார். பாவமில்லாத அவருடைய ஆத்துமாவிலே உன்னுடைய பாவம் வைக்கப்பட்டது. உன்னை இரட்சிக்க அவர் கெத்சமெனேவில் இரத்தத்தின் பெருந்துளிகளாய் வியர்வை சிந்தினார். உன்னை இரட்சிக்க அவர்கள் அவரை அடிக்கும்பொழுதும் அவருடைய தாடியைப் பிடுங்கும் போதும் அவரைத் துப்பும்போதும் அவர் அமைதியாக நின்றார். நீ ஒரு போதும் அறிந்த எவரும் உன்னை அவ்வளவாக நேசித்து உன்னைக் குணமாக்க உனக்குப் புதிய ஜீவனைக் கொடுக்க அதுபோலப் பாடுபட்டிருக்க மாட்டார்கள். இயேசு உன்னை நேசிக்கிறார். அவர் உன்னை மீட்பார். அவர் உன்னுடைய பயங்களை அமைதியாக்கி உனது ஆத்துமாவைக் குணமாக்குவார். அவர் உன்னுடைய ஏழ்மையான, உடைந்த மனச்சாட்சியைத் திரும்பச் சேர்ப்பார். அதனால்தான் அவர் உனக்காகச் சிலுவையிலே மரித்தார். அவர்கள் பெரிய ஆணிகளை அவருடைய கைகளிலும் கால்களிலும் உருவக் குத்தினார்கள். சூரிய உஷ்ணத்திலே அவர் சிலுவையிலே தொங்கினார் – அவருடைய நாவு அவ்வளவாக வரண்டுபோய் மேல் வாயோடு ஒட்டிக்கொண்டது.

இயேசு உன்னை வெறுக்கவில்லை. அவர் உன்னை எப்படி வெறுக்க முடியும்? அவர் உன்னை நேசிக்கிறபடியினால் இந்த உலகத்திலே வந்தார். அவர் உன்னை நேசிக்கிற காரணத்தினால் சொல்லிமுடியாத கோரமான மரணத்தை சிலுவையிலே சகித்தார். இயேசு உன்னை எப்பொழுதும் நேசித்தார். இயேசு உன்னை இப்பொழுதும் நேசிக்கிறார்.

என்னுடைய சாட்சி ஜான் கேஹனுடையதைவிட நேர் எதிரானது. இருந்தாலும் அடிப்படையில் அது ஒன்றுதான். ஜான் தன்னுடைய பாவத்தில் பெருமை கொண்டு மக்களுக்கு வேதனை உண்டாக்குவதில் மகிழ்ந்தார். நான் ஒருபோதும் என் பாவத்தில் பெருமை கொண்டதில்லை மக்களுக்கும் ஒருபோதும் வேதனை உண்டாக்க முயற்சி செய்ததில்லை. தேவனை வெறுத்தவர்களோடு ஜான் சேர்ந்துகொண்டார் – வேறு வார்த்தைகளில் சொன்னால், இழக்கப்பட்ட சபைப் பிள்ளைகளோடு சேர்ந்துகொண்டார். நான் சபைப் பிள்ளைகளை விரும்பவில்லை முடிந்த வரையிலும் அவர்களைத் தள்ளியே இருந்தேன். ஜான் ஒரு சில வாரங்களாகப் பாவ உணர்வுக்குக் கீழ்வந்தார். நான் ஏறக்குறைய ஏழு வருடங்களாகப் பாவ உணர்வுக்குக் கீழ்வந்தேன். ஜான் ஒரு கெட்டச் சிறுவனாக இருக்க விரும்பினார். நான் ஒரு நல்லப் பையனாக இருக்க விரும்பினேன். இந்த விஷயங்களில் எங்கள் சாட்சிகள் நேர் எதிரானது.

ஆனால் இரண்டு விஷயங்களில் நாங்கள் ஒன்று போலவே இருந்தோம். இருவரும் இரட்சிக்கப்பட முயற்சி செய்தோம் ஆனால் முடியவில்லை. ஜான் சொன்னார், “கிறிஸ்துவினிடத்தில் அப்படியே ஒப்படைக்க என்னால் முடியவில்லை, நான் ஒரு கிறிஸ்தவனாக மாறத் தீர்மானிக்க என்னால் முடியவில்லை, அது என்னை மிகவும் நம்பிக்கையற்றவனாக உணரும்படிச் செய்தது”. நானும் அப்படித்தான் உணர்ந்தேன். ஜான் பல வாரங்களாகப் பாவ உணர்வுக்குக் கீழ்வந்தார். நான் ஏறக்குறைய ஏழு வருடங்களாகப் பாவ உணர்வுக்குக் கீழ்வந்தேன். தேவன் கிறிஸ்துவிடம் இழுத்துக்கொண்டார் என்று ஜான் சொன்னார், “ஏனென்றால் நானாகவே கிறிஸ்துவினிடத்தில் ஒருபோதும் வரமுடியாது”. அவருக்கு என்ன நடந்ததோ, அப்படியே சரியாக எனக்கும் நடந்தது. ஜான் ஒரு கெட்டச் சிறுவனாக இருக்க முயற்சி செய்தார். நான் ஒரு நல்லப் பையனாக இருக்க முயற்சி செய்தேன். ஆனால் நாங்கள் இருவரும் எங்களையே நம்பி இருந்தோம் எங்களில் ஒருவரும் கிறிஸ்துவை நம்பி இருக்கவில்லை.

நான் நல்லவனாக இருக்க முயற்சி செய்தேன். நான் எவ்வளவு கஷ்டப்பட்டு நல்ல பையனாக இருக்க முயற்சி செய்தேன் என்று தேவன் அறிவார். நான் புகைபிடிப்பதை நிறுத்தினேன். நான் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையிலும் சபைக்குப் போனேன். நான் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவிலும் சபைக்குப் போனேன். ஒரு போதகராக மாறவேண்டுமென்று அன்றாட வாழ்க்கையை நான் விட்டுவிட்டேன். நான் 17 வயதில் பிரசங்கம் செய்ய என்னை ஒப்புக்கொடுத்தேன். 19 வயதில் பாப்திஸ்த்துப் பிரசங்கியாக அங்கிகரிக்கப்பட்டேன். சில மாதங்களுக்குப் பிறகு சீனச் சபைக்குப் போதகராக இருக்கச் சென்றேன். நான் அவ்வளவு நல்லப் பையன் என்று ஒவ்வொருவரும் நினைத்தார்கள். ஆனால் என்னைப் பற்றிய உண்மை அவர்களுக்குத் தெரியாது. என்னுடைய இருதயம் எவ்வளவு கெட்டது என்று அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்குத் தெரியாது லூக்கா 18ல் இயேசு சொன்ன பரிசேயனைப்போல – நான் நல்லவனாக இருப்பதன் மூலமாக இரட்சிக்கப்பட முயற்சி செய்தது கொண்டிருந்தேன் என்று. நான் ஒரு சீனச் சிறுவனைப்போல இருந்தேன். நான் இருதயத்தில் ஒரு பாவியாக இருக்கிறேன் என்று என் மனச்சாட்சி என்னிடம் சொல்லிக்கொண்டிருந்ததை நிறுத்தும் அளவிற்கு நல்லவனாக என்னால் இருக்க முடியவில்லை. இயேசுவையே நேசிக்காத அசுத்தமான பாவியாக இருந்தேன். ஒருநாள் காலையில் இயேசு என்னிடம் வந்தார் அவர் என்னை நேசித்ததை நான் அறிந்தேன். அதுவரையிலும் அதற்கு முன்பாக அதை ஒருபோதும் நான் அறியவில்லை. நான் சபைப் பிள்ளைகளைவிட நல்லவன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் – ஆனால் நான் உண்மையாக அவர்களைவிட மோசமானவன். எனக்கு மதச் சம்மந்தமான வேஷம் இருந்தது, ஆனால் நான் இயேசுவையே அறியாதிருந்தேன். அதன்பிறகு அவர் என்னிடம் வந்தார். நானாகவே அவரிடம் ஒருபோதும் ஐக்கியமாகியிருக்க முடியாது. என்னுடைய மனச்சாட்சி பொய் என்று சொல்லிக் கொண்டிருந்தாலும், நான் போதுமான அளவிற்கு நல்லவன் என்று நினைத்தேன். பிறகு இயேசு என்னிடம் வந்தார். என்னை இரட்சியும் என்றுகூட நான் கேட்கவில்லை. ஆனால் எப்படியோ அவர் அதைச் செய்தார். அவர் என்னிடம் இறங்கி வந்து என்னைத் தம்மிடம் இழுத்துக் கொண்டார். அவர் தமது விலையேறப்பெற்ற இரத்தத்தினால் என்னைச் சுத்தமாகக் கழுவினார்.

என்னிடம் ஒருவர் கேட்டார், “போதகரே, இயேசுவின் இரத்தத்தைப்பற்றி எப்பொழுதும் ஏன் பேசுகிறீர்கள்?”. அது மிகவும் எளிமையானது. என்னால் செய்ய முடியாதிருந்ததை அவருடைய இரத்தம் எனக்காகச் செய்தது. என்னுடைய பாவம் நிறைந்த ஆத்துமாவைத் தமது சொந்த இரத்தத்தினால் கழுவிச் சுத்தம் செய்யும் அளவிற்கு அவர் என்னை நேசித்தார்.

இயேசு உன்னையும் நேசிக்கிறார். அவர் உன்னிடம் வருவார். இயேசுவை விசுவாசித்தால் உன்னுடைய பாவம், உன்னுடைய மனச்சாட்சி மற்றும் உனது சந்தேகங்கள் மற்றும் சோதனைகள் அனைத்தும் அவருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் பனியைப்போல வெண்மையாகக் கழுவப்படும் – ஏனென்றால் இயேசு உன்னை அவ்வளவாக நேசிக்கிறார்!

என்னை ஒருவரும் நேசிப்பதாக நான் ஒருபோதும் உணரவில்லை. நான் ஒரு புறஜாதியான். எனக்கு இரண்டு வயது இருக்கும்போது என்னுடைய தந்தை போய்விட்டார். எனக்குப் பன்னிரண்டு வயதிருக்கும்போது என்னுடைய தாயோடு வாழ முடியவில்லை. என்னை விரும்பாத மக்களோடு நான் வாழ்ந்தேன். ஒருவருக்கும் நான் தேவைப்படாதவனாக இருந்தேன். அது என்னை ஒரு பரிசேயனாக மாற்றியது. நான் அவர்கள் எல்லாரையும்விட நல்லவனாக இருந்திருப்பேன்! நான் என்னை ஒரு கிறிஸ்தவனாக ஆக்கிக் கொள்வேன்!

ஆனால் என்னால் அதைச் செய்ய முடியவில்லை! நான் மேலும் மேலும் முயற்சி செய்தேன்! ஆனால் என்னால் அதைச் செய்ய முடியவில்லை. நான் இழக்கப்பட்டேன் – மதத்தில் இழக்கப்பட்டேன்! ஆனால் இயேசு என்னை நேசித்தார். அவர் என்னை நேசித்ததை திடீரென நான் அறிந்தேன். அவர் என்னிடம் வந்தார் எனது ஆத்துமாவைத் தம்முடைய இரத்தத்தினால் இரட்சித்தார். என்னைப் போன்ற ஒரு பாசாங்குக்காரனை அவரால் இரட்சிக்கக் கூடுமானால், இந்தக் காலையிலே இங்கே இருக்கும் யாரை வேண்டுமானாலும் அவரால் இரட்சிக்க முடியும். அவர் உன்னை நேசிக்கிறார். அவர் உன்னுடைய பாவங்களையெல்லாம் கழுவுவார் – உன் இருதயத்தின் பாவங்களை, உனது வாழ்க்கையின் பாவங்களை. அவர் உன்னை நேசிக்கிறார். அவர் உன்னிடம் வருவார். அவர் தமது பரிசுத்தமான இரத்தத்தினால் உன்னைச் சுத்தமாகக் கழுவுவார். அவர் சித்தமுள்ளவராக இருக்கிறார் என்று நான் அறிவேன் ஏனென்றால் அவர் உன்னை நேசிக்கிறார். ஆமென்.

இரட்சகர் சொல்வதை நான் கேட்கிறேன்,
   “உனது பலம் உண்மையில் சிறியதே;
குழந்தையின் பெலவீனம், விழித்திருந்து ஜெபி,
   உனது எல்லாவற்றையும் எனக்குள் கண்டு கொள்”.
இயேசு அதை எல்லாம் செலுத்தினார்,
   அவருக்கு நான் கடன் பட்டதை எல்லாம்;
பாவம் இரத்தாம்பரக் கறையை உண்டாக்கினது,
   அவர் பனியைப்போல வெண்மையாக அதைக் கழுவினார்.


கர்த்தாவே, மெய்யாகவே இப்பொழுது உணர்கிறேன்
   உம்முடைய வல்லமை உம்முடையது மட்டுமே,
குஷ்ட தழும்புகளை மாற்றும்
   மற்றும் கல்லான இருதயத்தை இளக்கும்.
இயேசு அதை எல்லாம் செலுத்தினார்,
   அவருக்கு நான் கடன் பட்டதை எல்லாம்;
பாவம் இரத்தாம்பரக் கறையை உண்டாக்கினது,
   அவர் பனியைப்போல வெண்மையாக அதைக் கழுவினார்.

நன்மை ஒன்றும் என்னிடமில்லை அதனால்
   உமது கிருபையை உரிமை பாராட்டுவேன்,
என் வஸ்திரங்களைக் கல்வாரி ஆட்டுக்குட்டியின்
   இரத்தத்தினால் வெண்மையாகக் கழுவிக்கொள்வேன்.
இயேசு அதை எல்லாம் செலுத்தினார்,
   அவருக்கு நான் கடன் பட்டதை எல்லாம்;
பாவம் இரத்தாம்பரக் கறையை உண்டாக்கினது,
   அவர் பனியைப்போல வெண்மையாக அதைக் கழுவினார்.
(“Jesus Paid It All” by Elvina M. Hall, 1820-1889).

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

பிரசங்கத்திற்கு முன்னால் திரு. ஆரோன் யான்சி வாசித்த வேத பகுதி: II தீமோத்தேயு 3:1-8.
பிரசங்கத்திற்கு முன்னதாகப் பாடப்பட்ட தனிப்பாடலைப் பாடியவர் திரு. நோவா சாங்:
“Jesus Paid It All” (by Elvina M. Hall, 1820-1889).