Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் சபைகள்
ஏன் எழுப்புதலை அனுபவிக்காமல் இருக்கின்றன
என்பதற்கு இரண்டு காரணங்கள்

THE TWO REASONS WHY THE CHURCHES IN AMERICA
AND THE WEST DON’T EXPERIENCE REVIVAL
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

செப்டம்பர் 25, 2016 அன்று ஞாயிறு மாலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில்
உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, September 25, 2016


இந்த மாலை நேரத்தில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் சபைகள் ஏன் எழுப்புதலை அனுபவிக்காமல் இருக்கின்றன என்பதற்கு இரண்டு பிரதான காரணங்களைப் பற்றி நான் பேசப் போகிறேன். “எழுப்புதல்” என்று நான் சொல்லும்போது 18ம் நூற்றாண்டு மற்றும் 19ம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஏற்பட்ட தரமான எழுப்புதல்களைப் பற்றி நாம் வாசித்ததை நான் குறிப்பிடுகிறேன். இப்பொழுது நாம் வாழும், 20ம் நூற்றாண்டு மற்றும் 21ம் நூற்றாண்டின் முதல் பகுதியில் ஏற்பட்டதாகச் சொல்லப்படும் புதிய சுவிசேஷக மற்றும் பெந்தேகோஸ்தே “எழுப்புதல்களை” பற்றி நான் குறிப்பிடவில்லை.

தயவுசெய்து என்னோடேகூட II தீமோத்தேயு 3:1க்குத் திருப்பிக் கொள்ளவும் (இது ஸ்கோபீல்டு ஸ்டடி பைபிளில் 1280ம் பக்கத்தில் உள்ளது). இந்த அதிகாரத்தில் முதல் 7 வசனங்களை என்னோடே கூட நீங்கள் வாசிக்கும்படி நான் விரும்புகிறேன்.

“மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர் களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர் களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர் களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமை யுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப் புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப் பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு, எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண்பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள்” (II தீமோத்தேயு 3:1-7).

இப்பொழுது 13ம் வசனத்தை வாசிக்கவும்.

“பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மோசம் போக்குகிறவர்களாகவும், மோசம்போகிறவர்களாகவு மிருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்” (II தீமோத்தேயு 3:13).

இந்த வசனங்கள் நமக்கு “கடைசி நாட்களில்” (3:1) சபைகளில் ஏற்படும் பெரிய கொள்கை மீறுதலைப் பற்றிச் சொல்லுகின்றன. வசனம் 2 முதல் 4ல் நமது நாட்களில் “கிறிஸ்தவர்கள்” என்று அழைக்கப்படும் அநேகர் சமய கோட்பாடுகளுக்கு அடங்காமல் இருக்கும் நிலைமையைக் குறித்து விளக்குகிறது. இந்தப் பொய்க் “கிறிஸ்தவர்கள்” ஏன் இவ்வளவு பொல்லாதவர்களாகவும் கலகக்காரர்களாகவும் இருக்கிறார்கள் என்பதற்கான காரணத்தை 5ம் வசனம் கொடுக்கிறது,

“தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்” (II தீமோத்தேயு 3:5).

இந்த வசனத்தை நான் விவரிப்பதற்கு முன்பாக, டாக்டர் ஜெ. வெர்னான் மெக்ஜீ அவர்கள் இந்தப் பகுதியைப் பற்றிச் சொன்னதை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். “கடைசி நாட்களில்” வசனம் 1 பற்றி டாக்டர் மெக்ஜீ சொன்னார், “கடைசி நாட்கள் என்பது ஒரு தொழிற்நுட்ப வார்த்தையாக இங்கு உபயோகிப்படுத்தப்பட்டுள்ளது... [எதற்கெனில்] அது கடைசி நாட்களின் சபையைப் பற்றிப் பேசுகிறது”. 1 முதல் 4 வசனங்களைப் பற்றி டாக்டர் மெக்ஜீ சொன்னார், “பத்தொன்பது விதமான வித்தியாசமான விளக்கங்கள் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது... அது ஒரு அசுத்தமானதாகும் [குழு]... கடைசி நாட்களின் சபையில் [உள்ளே] என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதின் சிறந்த வேதாகம படத்தை அவைகள் நமக்கு முன் வைக்கின்றன” (J. Vernon McGee, Th.D., Thru the Bible, notes on II Timothy, chapter 3). அதன் பிறகு டாக்டர் மெக்ஜீ 5ம் வசனத்தை விவரிக்கிறார், “தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்...” டாக்டர் மெக்ஜீ சொன்னார், “தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்! அவர்கள் மத சடங்காசராங்களுக்குப் போவார்கள் ஆனால் அவர்கள் உண்மையில்லாமல் ஜீவனில்லாமல் இருப்பார்கள்” (ibid.). “கிறிஸ்தவர்கள்” என்று அழைக்கப்படும் இவர்களுக்கு “தேவ பக்தியின் ஒரு வேஷம்” இருக்கும் - அதாவது, அவர்கள் வெளி பிரகாரமாக வேஷதாரிகளாக இருப்பார்கள், ஆனால் அதனுடைய வல்லமை இல்லாதிருப்பார்கள். இதன் பொருள் அவர்கள் மெய்யாகவே தேவனுடைய வல்லமை மற்றும் கிறிஸ்துவின் இரத்தத்தினால் ஒருபோதும் மாற்றப்படாதவர்கள் என்பதாகும். இன்றுள்ள மிகவும் அதிகப்படியான சுவிசேஷகர்களின் நிலைமை ஏன் இப்படி இருக்கிறது என்பதை இந்த 7ம் வசனம் விளக்குகிறது. அவர்கள் “எப்போதும் கற்றுக்கொண்டிருப்பவர்கள், ஆனால் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிறார்கள்”. இந்த இரவில் அப்படிப்பட்டவர்கள் சிலர் இங்கு இருக்கிறார்கள்!

அவர்கள் பத்தாண்டுகளாக வேதாகமத்தைப் படிப்பவர்களாக இருக்க முடியும், ஆனால் ஒருபோதும் மாற்றபடவில்லை. டாக்டர் சார்லஸ் சி. ரெய்ரி, “அவர்[கள்] ஒருபோதும் கிறிஸ்துவின் இரட்சிப்பின் அறிவுக்குள்ளாக வர முடியாது” என்று சொன்னார் (Ryrie Study Bible; note on verse 7). இன்று லட்சக் கணக்கான சுவிசேஷகர்கள் இவ்விதமாக இருக்கிறார்கள். அவர்கள் மாற்றப்படாத, ஜென்ம சுபாவமான மனிதர்கள். அவர்களைப்பற்றி I கொரிந்தியர் 2:14 விவரிக்கிறது, “ஜென்மசுபாவமான [மாற்றப்படாத] மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்… அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்”. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் சபைகளில் 140 ஆண்டுகளாக ஏன் பிரதானமான எழுப்புதல் இல்லை என்பதற்கு இரண்டு காரணங்களை உங்களுக்குக் கொடுக்கிறேன்.

I. முதலாவதாக, 140 வருடங்களாகப் பிரதானமான எழுப்புதல் இல்லாது இருப்பதற்குக் காரணம் என்னவென்றால் நடைமுறையில் நாம் இழக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமே ஞானஸ்நானம் கொடுக்கிறோம்!

லட்சக் கணக்கான சுவிசேஷகர்கள் மாற்றப்பட்டதே இல்லை ஏனென்றால் அவர்கள் சார்லஸ் ஜீ. பின்னி என்பவரால் சபைகளுக்குள் வரவழைக்கப்பட்ட “தீர்மானம் எடுப்பவர்கள்” மூலமாக ஏமாற்றப்பட்டார்கள். அவருடைய போதனைகள் சபைகளுக்குள் மிகுந்த வலிமையுடன் வந்திறங்கின அவை லட்சக் கணக்கானவர்களை இரட்சிக்கப்பட்டுவிட்டதாக நினைக்கவைத்தது அதற்குக் காரணம் அவர்கள் “ஒரு தீர்மானம் எடுத்ததாலும்”, “பாவியின் ஜெப” வார்த்தைகளை ஜெபித்ததாலும், அல்லது வேதத்தில் ஒரு வசனத்தை விசுவாசித்ததாலும் அவர்கள் தாங்கள் இரட்சிக்கப்பட்டுவிட்டோம் என்று நினைத்தார்கள். ஆனால் அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் மூலமாக மாற்றப்பட்டவர்கள் அல்ல. தேவனுடைய ஆவியானவரின் முதலாவது வேலை பாவியைப் பாவ உணர்வுக்குக் கீழாகக் கொண்டு வருவதாகும். யோவான் 16:8, 9 சொல்கிறதாவது, “அவர் [பரிசுத்த ஆவி] வந்து, பாவத்தைக்குறித்தும்… உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார் [உணரச் செய்வார்]. அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்தும்”. இழக்கப்பட்ட ஒருவன் தன்னுடைய பாவத்தால் ஆழமாக உணர்த்தப்படாவிட்டால், அவன் கிறிஸ்துவின் தேவையை ஒருபோதும் மெய்யாகக் காணமாட்டான், அவருடைய சிலுவைப் பலியையும், கிறிஸ்துவின் இரத்தத்தால் சுத்திகரிப்பின் தேவையையும் உணரமாட்டான். மக்கள் இரட்சிக்கப்பட விரும்புவதை அநேக நேரங்களில் நாம் பார்க்கிறோம், ஆனால் அவர்கள் தங்கள் பாவத்தால் உணர்த்தபடாமல் இருப்பதால், அவர்களால் கிறிஸ்துவை ஒருபோதும் விசுவாசிக்க முடியவில்லை.

பரிசுத்த ஆவியானவரின் இரண்டாவது வேலை கிறிஸ்துவை மகிமைப்படுத்துவதாகும். இயேசு சொன்னார், “அவர் என்னுடையதில் [இருந்து] எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்” (யோவான் 16:14), அல்லது இயேசு யோவான் 15:26ல் சொல்லியிருக்கிறார் “அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார்”. பாவத்தினால் உணர்த்தப்பட்ட பிறகு, உணர்த்தப்பட்ட பிறகு மட்டுமே, பரிசுத்த ஆவியானவர், இயேசு ஒருவரால் மட்டுமே பாவத்தை மன்னிக்க முடியும் என்று பாவிக்கு எடுத்துக் காட்டுகிறார். மாறுதலின் இறுதியான வேலை பாவியைக் கிறிஸ்துவிடம் அழைத்து வருவதாகும். இயேசு சொன்னார், “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்…” (யோவான் 6:44). எவன் ஒருவன் இப்படியாகச் சொல்கிறானோ, “நான் கிறிஸ்துவிடம் எப்படி வரமுடியும்?” அவன் முதலில் தான் தன் பாவத்தினால் உணர்த்தப்பட வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளாதவனாக இருக்கிறான், அவன் தன் பாவத்திலிருந்து இரட்சிக்கப்பட நம்பிக்கையானவர் கிறிஸ்து ஒருவர் மட்டுமே என்று அறிந்து, பிறகு கிறிஸ்துவிடத்தில் கொண்டுவரப்பட வேண்டும். இரட்சிப்பின் முழுமையான வேலையும் தேவனுடைய வல்லமையில்தான் அடங்கி இருக்கிறது. சீஷர்கள் இயேசுவிடம், “அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும்” என்றார்கள். அதற்கு இயேசு அவர்களைப் பார்த்துப் பதிலளித்தார், “மனுஷரால் இது கூடாததுதான்; தேவனால் இதுகூடாததல்ல” (மாற்கு 10:26, 27).

பழைய புரோட்டஸ்டன்ட் மாற்றங்களில், முதலில் ஆழமான பாவ உணர்த்துதல் ஏற்பட்டு அது பாவியை நெருக்குதலுக்குள்ளாக்கும். அதன்பிறகு கிறிஸ்து ஒருவரே தனது நம்பிக்கை என்று பாவி உணர்ந்து, கிறிஸ்துவை நாடுவான், தேவன் அவனை மீட்பரிடம் கொண்டு செல்வார். இவைகள் அனைத்தும் தற்கால நவீன “தீர்மானதிட்டத்தில்” நிராகரிக்கப்படுகிறது. இன்று தேவையானதெல்லாம் ஒரு ஜெபத்தை சொல்லுவதும், அல்லது முன்னோக்கி வருவதுமேயாகும். மனிதனுடைய ஆத்துமாவில் தேவனுடைய வேலை முற்றிலுமாக நிராகரிக்கப்படுகிறது. நமக்கு எழுப்புதல் இல்லை என்பதற்கு முதலாவது காரணம் இதுவாகும்.

ஜான் கேஹன் என்பவர் நமது சபையின் ஊழியத்திற்குச் செல்ல விருப்பமுள்ள ஒரு இளைஞர். அவர் 15ம் வயதில் மனமாற்றமடைந்தவர். அவருடைய முழு சாட்சியையும் இங்கே இரண்டு காரணங்களுக்காகக் கொடுக்கிறேன். முதலாவதாக, மனமாற்றத்தை வெறும் தீர்மானமாக மாற்றிய பின்னிக்கு முன்பாக நடந்திருந்த “பழைய பள்ளி” மாற்ற முறையைத் தழுவிய இது ஒரு பரிபூரண மாற்றமாகும், இன்றுள்ள நிலைமைக்கு இது அவசியத் தேவையாகும். மற்றும், இரண்டாவதாக, கிறிஸ்துவை இரண்டு வருடங்களாகப் புறக்கனித்த ஒரு கல்லூரி மாணவர் நான் இதைப் படிக்கக் கேட்டபிறகு கடந்த சனிக்கிழமை அன்று மனமாற்றமடைந்தார். வெகுசில சாட்சிகளே யாரை வேண்டுமானாலும் மெய்யாகவே மாற்றும் என்று எனக்குத் தெரியும். ஜான் கேஹனின் இரட்சிப்பின் சாட்சி இங்கே கொடுக்கப்படுகிறது.

      கிறிஸ்து செய்த மகத்தான காரியங்களோடு ஒப்பிடும்பொழுது என்னுடைய மாறுதலின் தருணத்தைத் தெளிவான வார்த்தைகளில் விவரிக்க நினைத்தால் அவை மிகவும் சிறியதாகக் காணப்படுகிறது. என்னுடைய மாறுதலுக்கு முன்னதாக நான் முழுவதும் கோபமும் வெறுப்புள்ளவனாகவும் இருந்தேன். என்னுடைய பாவங்களில் நான் பெருமை கொண்டு மக்களுக்கு வேதனை உண்டாக்குவதில் மகிழ்ச்சி அடைந்தேன், மற்றும் தேவனை வெறுத்தவர்களோடு நான் தொடர்பு கொண்டிருந்தேன்; பாவம் எனக்கு ஒரு வருத்தத்திற்குரிய “தவறாக” எனக்குத் தெரியவில்லை. இவ்விதமாக நான் வேண்டுமென்றே நானாக என் வழியை ஏற்படுத்திக் கொண்டேன். மிக விரைவாக என்னைச் சுற்றியுள்ள உலகம் என்னை நொறுக்கும்படியாகத் தேவன் நான் எதிர்பாராத பல வழிகளில் கிரியை செய்ய ஆரம்பித்தார். நான் மாற்றமடைவதற்கு முன்னதான வாரங்களில் நான் மரிப்பதைப்போல உணர்ந்தேன்: என்னால் தூங்க முடியவில்லை, என்னால் புன்முருவல் செய்ய முடியவில்லை, என்னால் எந்தவிதத்திலும் சமாதானத்தைக் காணமுடியவில்லை. நான் என் போதகரையும் தந்தையையும் மதித்ததில்லை அதனிமித்தம் என்னுடைய சபையில் சுவிசேஷ கூட்டங்களை நடத்தியவர்களையும் நான் பரிகாசம் செய்தது தெளிவாக என் நினைவில் இருக்கிறது.
      அந்த நேரத்தில் பரிசுத்த ஆவியானவர் மிகவும் உறுதியாக என்னுடைய பாவங்களை உணர்த்த ஆரம்பித்தார், ஆனால் நான் தேவனைப் பற்றியும் மாறுதலைப் பற்றியும் எனக்கிருந்த எல்லா நினைவுகளையும் முழு சித்தத்தோடு புறக்கனித்தேன். நான் அதைப்பற்றி நினைக்க மறுத்தேன், இருந்தாலும் என் துன்பத்தை என்னால் உணராமல் இருக்க முடியவில்லை. ஜூன் 21, 2009 ஞாயிற்றுக் கிழமை காலையில், நான் முழுமையாக வெறுமையாக்கப்பட்டேன். இவை எல்லாவற்றிலும் நான் மிகவும் சோர்வடைந்தேன். என்னையே நான் வெறுக்க ஆரம்பித்தேன், நான் என் பாவத்தையும் அது என்னை எப்படி உணர்த்தினது என்பதையும் வெறுத்தேன்.
      டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் பிரசங்கம் செய்து கொண்டிருந்தபொழுது, என்னுடைய பெருமை அதைத் துணிவாக நிராகரிக்க முயற்சி செய்தது, கவனிக்காதபடி செய்தது, ஆனால் அவர் பிரசங்கித்துக் கொண்டிருந்த வேளையில் என்னுடைய பாவங்களை நான் என் ஆத்துமாவில் உணர முடிந்தது. அந்த உபதேசம் முடியும் வரையிலும் நான் நிமிடங்களை எண்ணிக் கொண்டு இருந்தேன், ஆனால் அந்தப் போதகர் பிரசங்கம் செய்து கொண்டே இருந்தார், என்னுடைய பாவங்கள் முடிவில்லாததாக மிகவும் மோசமானதாக மாறியது. இனிமேலும் என்னையே நான் ஏமாற்றிக் கொள்ளக்கூடாது, நான் இரட்சிக்கப்பட வேண்டும்! அந்த அழைப்புக் கொடுக்கப்பட்டபொழுது நான் எதிர்த்திருந்தாலும், அதை இனிமேலும் தொடரவிட முடியாது. நான் மிகவும் மோசமான பாவி என்றும் தேவன் நீதி உள்ளவராக என்னை நரக ஆக்கினைக்குத் தீர்க்க வேண்டும் என்றும் அறிந்தேன். நான் போராடி மிகவும் களைத்துப் போனேன், எல்லாவற்றிலும் நான் மிகவும் சோர்வடைந்தேன். போதகர் எனக்கு அறிவுரை வழங்கினார், நான் கிறிஸ்துவுக்குள் வர வேண்டுமென்றார், ஆனால் நான் அப்படிச் செய்யவில்லை. என்னுடைய பாவங்களெல்லாம் என்னை உணர்த்தினபொழுதும் நான் இயேசுவை நோக்கிச் செல்லவில்லை. அந்தத் தருணம் மிகவும் மோசமானதாக இருந்தது ஏனென்றால் இரட்சிக்கப்பட வில்லையானால் நான் நரகத்திற்குத் தள்ளப்படுவேன் என்று உணர்த்தப்பட்ட நேரம் அது. நான் இரட்சிக்கப்பட “முயற்சி” செய்து கொண்டிருந்தேன், நான் கிறிஸ்துவை விசுவாசிக்க “முயற்சி” செய்து கொண்டிருந்தேன் ஆனால் என்னால் முடியவில்லை, நான் கிறிஸ்துவிடம் செல்ல என்னையே கட்டாயப்படுத்திப் பார்த்தேன் ஆனால் முடியவில்லை, நான் கிறிஸ்தவனாகும் முடிவை என்னால் எடுக்க முடியவில்லை, அது எனக்கு மிகவும் நம்பிக்கையற்ற உணர்வைக் கொடுத்தது. என்னுடைய பாவங்கள் என்னை நரகத்திற்குக் கீழே இழுப்பதை என்னால் உணர முடிந்தது இருந்தாலும் என்னுடைய முரட்டுக் குணம் என்னுடைய கண்ணீரை மறைத்துக் கொண்டிருந்தது. நான் இந்த மனப் போராட்டத்தில் சிக்கிக் கொண்டேன்.
      சில வருடங்களுக்கு முன்பாகப் பிரசங்கிக்கப்பட்ட வார்த்தைகள் திடீரென என் நினைவுக்கு வந்தது: “கிறிஸ்துவுக்கு ஒப்புக் கொடு! கிறிஸ்துவுக்கு ஒப்புக் கொடு!”. நான் இயேசுவுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றியவுடன் அது என்னால் என்றைக்கும் முடியாதோ என்று நினைக்கும் வண்ணம் என்னைக் கலங்கச் செய்தது. இயேசு தம்முடைய வாழ்க்கையை எனக்காகத் தந்தார். நான் இயேசுவுக்குச் சத்துருவாக இருந்தபொழுதும் அவருக்கு என்னை ஒப்புக் கொடுக்காமல் இருந்தும் எனக்காக அவருடைய ஜீவனைச் சிலுவையில் கொடுத்தார். இந்த எண்ணம் என் மனதை உடைத்தது; நான் எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும். இனிமேலும் நான் எனக்குள்ளே எதையும் வைத்துக்கொள்ளக் கூடாது, நான் இயேசுவைப் பற்றிக் கொள்ள வேண்டும்! அந்த நேரத்திலே நான் விசுவாசத்தின் மூலமாக அவருக்கு ஒப்புக்கொடுத்து இயேசுவிடம் தஞ்சமடைந்தேன். அந்த நேரத்தில் நான் மரிப்பதைப் போலக் காணப்பட்டேன், கிறிஸ்து எனக்கு ஜீவனைக் கொடுத்தார்! அங்கே என்னுடைய எந்தச் செயலோ மனத் தீர்மானமோ இல்லை ஆனால் எனது இருதயத்தில், கிறிஸ்துவுக்குள் இளைப்பாறிக் கொண்டிருந்தேன், அவர் என்னை இரட்சித்தார்! அவர் தமது இரத்தத்தினால் என்னுடைய பாவங்களைக் கழுவினார்! அந்த நேரத்திலே, நான் கிறிஸ்துவை நிராகரிப்பதை நிறுத்தினேன். நான் செய்ய வேண்டியதெல்லாம் அவரை விசுவாசப்பதே என்பது எனக்கு மிகவும் தெளிவானது; கிறிஸ்து மட்டுமே எனக்குள் இந்த மாற்றத்தைக் கொண்டு வந்தார் என்று என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. நான் என்னை ஒப்புக்கொடுக்க வேண்டும்! அந்த நேரத்தில் எந்தச் சரிர உணர்வோ அல்லது கண்களை மறைக்கும் ஒளியோ இல்லை, உணர்வும் எனக்கு தேவையில்லாதிருந்தது, நான் கிறிஸ்துவைப் பற்றிக் கொண்டேன்! கிறிஸ்துவை விசுவாசித்ததின் மூலமாக என்னுடைய ஆத்துமாவிலிருந்து பாவம் நீக்கப்பட்டதை உணர்ந்தேன். நான் என்னுடைய பாவத்திலிருந்து மனம் திரும்பினேன், நான் இயேசுவை மட்டுமே நோக்கிப் பார்த்தேன்! இயேசு என்னை இரட்சித்தார்.
      ஒரு நல்ல சபையில் வளர்ந்திருந்தாலும் இயேசுவுக்கு விரோதமான மோசமான பாவியாகிய என்னை மன்னிக்கத்தக்கதாக இயேசு எவ்வளவாக அன்பு கூர்ந்து இருக்க வேண்டும்! என்னுடைய மாற்றத்தின் அனுபவத்தையும் கிறிஸ்துவின் மேல் நான் கொண்டுள்ள அன்பின் விளக்கத்தையும் வெளிப்படுத்த மிகவும் குறைவான வார்த்தைகளாகவே இருக்கிறது. கிறிஸ்து எனக்காகத் தம்முடைய ஜீவனையே கொடுத்தார் அதற்காக என்னுடைய எல்லாவற்றையும் நான் அவருக்குக் கொடுக்கிறேன். நான் அவருடைய சபையில் துப்பினேன் மற்றும் அவருடைய இரட்சிப்பைக் கேலி செய்தேன் இருந்தாலும் இயேசு எனக்காகத் தம்முடைய சிங்காசனத்தைத் தியாகம் செய்து சிலுவையில் மரித்தார்; அவருடைய அன்பையும் இரக்கத்தையும் என்னால் எப்படிப் போதுமான அளவு எடுத்துச் சொல்ல முடியும்? இயேசு என்னுடைய வெறுப்பு மற்றும் கோபத்தை நீக்கி அதற்குப் பதிலாக அன்பை எனக்குக் கொடுத்தார். ஒரு புது ஆரம்பத்தைவிட எனக்கு அதிகமானதைக் கொடுத்தார் - அவர் எனக்குப் புதிய ஜீவனை கொடுத்தார். விசுவாசத்தின் மூலமாக மட்டுமே இயேசு என்னுடைய எல்லா பாவங்களையும் கழுவினார் என்பதை நான் அறிந்து கொண்டேன், என்றாலும் என்னுடைய உறுதியில்லாத ஆதாரத்தைக் கொண்டு இதை எப்படி அறிந்து கொள்ளமுடியும் என்று நான் திகைத்தேன், ஆனால் எப்பொழுதும் என்னையே நான் அறிவுறுத்திக்கொள்வது, “விசுவாசமென்பது பார்க்க இயலாத காரியங்களை உடைய பொருளானது” எனவே இயேசுவில் என்னுடைய நம்பிக்கை இளைப்பாறுகிறதைக் கவனமாக அறிந்த எனக்குச் சமாதானம் கிடைத்தது. இயேசுவே என்னுடைய ஒரே பதில் ஆவார்.
      தேவன் செய்த கிருபைக்காக நான் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன், அவர் எனக்குப் பல வாய்ப்புகளைக் கொடுத்ததாலும், நானாக ஒருபோதும் இயேசுவை வந்தடையமாட்டேன் என்பதால் கட்டாயப்படுத்தித் தேவன் என்னைத் தன் குமாரனிடம் கொண்டு சேர்த்ததாலும் நான் நன்றியுடன் இருப்பேன். இவைகள் எல்லாம் வார்த்தைகளே, ஆனால் இயேசு என்னை மாற்றினதற்காக, என் நம்பிக்கை அவரில் இளைப்பாறுகிறது. அவர் எனக்காக எப்பொழுதும் இருப்பவராக, என்னை விடுவிப்பவராக, என் இளைப்பாறுதலாக, மற்றும் என் இரட்சகராக இருக்கிறார். அவர் என்னை எவ்வளவாக நேசித்தார் என்பதை ஒப்பிட்டுப் பார்க்கும்போது நான் அவர்மேல் வைத்திருக்கும் அன்பானது மிகவும் குறைவானது. நான் அவருக்காக அதிக காலமாகவே உண்மையாகவோ ஒருபோதும் வாழமுடியாது, ஒருபோதும் நான் கிறிஸ்துவுக்காக அதிகமாகச் செய்துவிட முடியாது. இயேசுவுக்கு ஊழியம் செய்வது என்னுடைய மகிழ்ச்சி! நான் அவரை வெறுத்தவனாக இருந்தும் அவர் எனக்கு ஜீவனையும் சமாதானத்தையும் கொடுத்தார். இயேசுவே எனது குறிக்காள் அவரே எனது திசைகள். என்னை நானே நம்பவில்லை, ஆனால் அவரில் மட்டுமே என்னுடைய நம்பிக்கையை வைத்தேன், அவர் ஒருபோதும் எனக்குத் தவறினதில்லை. கிறிஸ்து என்னிடத்தில் வந்தார், ஆகையால் நான் அவரை விடமாட்டேன்.

இவைகள் ஜான் சாமுவேல் கேஹனின் 15வது வயதில் ஏற்பட்ட மாறுதலின் வார்த்தைகளாகும். இப்பொழுது அவர் ஊழியத்திற்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார். ஜான் கேஹனுக்கு என்ன நடந்ததோ அதுவே உண்மையான மாறுதலின் போதும் சம்பவிக்கும்! தேவன் ஜானுக்குச் செய்தபடியே உனக்கும் செய்ய வேண்டும்!

இன்று அநேக பிரசங்கியர்கள் ஒருவரை உடனடியாக ஒரு ஜெபத்தை சொல்லவைத்து, பிறகு அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்து விடுகிறார்கள் - நமது சபைகளில் லட்சக் கணக்கான இழக்கப்பட்ட மக்களில் ஒருவராக அவரையும் ஆக்கிவிடுகிறார்கள்! சபைகளில் எழுப்புதல் இல்லாததற்கு முதல் காரணமாக விளங்குவது பாவிகளின் இருதயத்தில் தேவன் கிரியை செய்யவிடாத வண்ணம் பிரசங்கிகள் செயல்படுவதே ஆகும். அவர்கள் தேவனுடைய கிரியையிலிருந்து பாவியைத் தூரமாக்குகிறார்கள் மற்றும் ஞானஸ்நானம் கொடுத்து அவனை இழக்கச் செய்கிறார்கள்! இன்று கொடுக்கப்படும் ஞானஸ்நாகங்கள் எல்லாமே ஏறக்குறைய இழக்கப்பட்டவர்களுக்கே என்று நான் நம்புகிறேன். நமக்கு எழுப்புதல் இல்லை என்பதற்கு இதுவே முதல் காரணமாகும்! உண்மையான மாறுதலில்லாமல் ஒவ்வொருவரும் இரட்சிக்கப்பட்டார்கள் மற்றும் ஞானஸ்நானம் பெற்றார்கள் என்று அறிவிக்கப்படுகிறார்கள்! நானும் அந்த விதமான பாவத்தைச் செய்தேன் என்று அறிக்கையிடுகிறேன். தேவனே, என்னை மன்னிப்பீராக. இன்னும் எதனால் தேவன் எழுப்புதலை 140 வருடங்களாக நிறுத்தி வைத்திருக்கிறார்? இன்னும் எதற்காக? ஆமாம், இன்னும் ஒரு காரணம் இருக்கிறது!

II. இரண்டாவதாக, 140 வருடங்களாக எழுப்புதல் இல்லாமல் இருக்கிறது ஏன் என்றால் கிறிஸ்தவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிடுதல் மற்றும் இயேசுவின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்படுதலுக்குப் பதிலாக நாம் பரிசுத்த ஆவியை வலிவுருத்துகிறோம்.

இது ஏற்கனவே நான் அறிந்த ஒன்றாகும். ஆனால் சமீபமாக எனக்கு அது அதிகத் தெளிவாக மாறினது. நான் மூன்று எழுப்புதல்களை நேரில் பார்த்த ஒரு சாட்சியாக இருக்கிறேன். முதலாவதானது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது – அது “ஞானஸ்நானத்தின்” ஆவியையோ, பாஷைகளையோ, குணமாக்குதலையோ, அல்லது அற்புதங்களையோ சார்ந்ததாக இல்லை. அது முற்றிலுமாகக் கிறிஸ்தவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிடுதல் மற்றும் கிறிஸ்துவின் இரத்தத்தினால் சுத்திகரித்துப் புதிதாக்கப்படுதலைச் சார்ந்ததாக இருந்தது.

இன்று நமது சபைகளில், மெய்யாக மாற்றப்பட்ட மக்கள் இன்னும் பாவங்களில் பிடிக்கப்பட்டிருக்கிறார்கள் - இருதயத்தின் பாவங்கள், மனதின் பாவங்கள், மாம்சத்தின் பாவங்கள். முதலாவது எழப்புதலில் நான் பார்த்தது, முழுசபையும் தங்கள் பாவங்களைப் பலிபீடத்தில் தேவனிடம் அறிக்கை செய்தார்கள், இயேசுவின் இரத்தத்தினால் தேவன் அவர்களுக்குச் சமாதானத்தைக் கொடுக்கும் வரையிலும் கண்ணீரோடு அழுதார்கள். அப்போஸ்தலனாகிய யோவான் சொன்னார்,

“நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (I யோவான் 1:9).

கிறிஸ்தவர்களின் பாவங்களைத் தேவன் எப்படிச் சுத்திகரிக்கிறார்? “அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” (I யோவான் 1:7).

முதலாவது, உள்ளும் மற்றும் வெளியிலுமிருக்கும், எல்லா பாவங்களையும் அறிக்கையிடுதல். இரண்டாவது, நமது பாவங்கள் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்படுதல். இது எளிமையானதாக இருக்கிறது, இல்லையா? இருந்தாலும் இன்று எத்தனை சபைகள் அதை வலியுருத்துகின்றன? அதை யாராவது செய்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை. நாம் 140 வருடங்களாக எழுப்புதல் இல்லாமல் இருப்பதற்கு அதுவே இரண்டாவது காரணமாகும்!

உண்மையான எழுப்புதலைப் பற்றிப் படித்து ஒரு பெரிய ஆராய்ச்சி செய்த, ப்ரையன் எட்வர்ட்ஸ் அவர்களின் வார்த்தைகளைக் கவனியுங்கள். அவர் சொன்னார்,

எழுப்புதல்... பயங்கரமான பாவ உணர்த்துதல் உண்டாவதிலிருந்து ஆரம்பிக்கிறது. எழுப்புதலைப் பற்றிப் படிப்பவர்களைத் தொந்தரவு செய்யும் ஒரு வடிவமாகப் பாவ உணர்த்துதல் இருக்கிறது. சில நேரங்களில் அந்த அனுபவம் அழுத்தத்தைக் கொடுக்கிறது. மக்கள் அடக்கமுடியாத அளவிற்கு, மோசமாகக் கசந்து அழுவார்கள்! கண்ணீர் மற்றும் துக்கம் இல்லாமல் [உண்மையான] உணர்த்துதல் என்ற ஒன்று இல்லை. (Edwards, Revival, Evangelical Press, 2004, p. 115).

ஆழம், அசௌகரியம் மற்றும் பாவ உணர்த்துதலினால் தாழ்மைப்படுதல் இல்லாமல், எழுப்புதல் என்பது இருப்பதில்லை. (Edwards, ibid., p. 116)

நான் பார்த்த முதல் எழுப்புதல் என்பது சில கிறிஸ்தவர்களின் அழுகை மற்றும் அவர்களின் பாவ அறிக்கையோடு ஆரம்பித்தது. விரைவில் அது சபை முழுவதுமாக நிறைந்த அழுகை, பாவ அறிக்கை, மற்றும் சில வருடலான பாடல்களோடு மணிக்கணக்காகத் தொடர்ந்தது. அவ்வளவுதான். பாஷைகள் இல்லை. ஆவியின் நிரப்புதல் இல்லை. குணமாக்குதல் இல்லை. ஆவியின் அலைச்சல் இல்லை. பாவ அறிக்கைகள், அழுகைகள், ஜெபங்கள், மற்றும் வருடலான பாடல் மட்டுமே. அது மணிக்கணக்காக நிகழ்ந்தது.

பிறகு அது ஒன்று அல்லது இரண்டு நாட்களில் நின்றது - ஆனால் அதன்பிறகு ஆவி மறுபடியும் வந்தது - மறுபடியும் மறுபடியுமாக சிறிது இடைவெளி விட்டுவிட்டு மூன்று வருடங்களாக வந்துகொண்டே இருந்தது. எழுப்புதல் நிறைவடைந்த நேரத்தில் 150 பேருக்கும் குறைவாக இருந்த சபையானதில், 3,000 பேருக்கு மேலானோர் சேர்க்கப்பட்டிருந்தார்கள். ஒவ்வொரு ஞாயிறு காலையிலும், ஒரு கூட்டம் மட்டுமே நடந்த இடத்தில், நான்கு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டியிருந்தது, அதோடு இரவில் இரண்டு கூட்டங்கள் கூடுதலாக நடந்தன.

நமது சபைகளில் அதிக மக்கள் கூட்டம் வேண்டும் என்பதற்காக எழுப்புதல் ஜெபம் செய்ய வேண்டும் என்று நான் நினைக்க மாட்டேன். பரிசுத்தமான சபையாக இருக்க வேண்டும் என்பதில் மட்டுமே மெய்யான நோக்கமாக இருக்க வேண்டும்! நமக்குச் சுத்தமான சபை அவசியமாகும்!

நாங்கள் பெரிய விழாக்கள் நடத்தினோம். நாங்கள் கிறிஸ்தவத் தொலைக்காட்சிகள் நடத்தினோம். நாங்கள் குணமாக்கும் கூட்டங்கள் நடத்தினோம். சபைகளில் பாஷைகள் மற்றும் பல அனுபவங்களைப் பார்த்தோம். ஆனால் நாங்கள் பழைய, சரித்திரபூர்வமான எழுப்புதலை அமெரிக்காவில் 140 ஆண்டுகளாகக் காணவில்லை! நாம் மற்றக் காரியங்களால் விலகிப் போனோம். பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்தவர்களின் பாவத்தைக் குறித்து உணர்த்த நாம் அனுமதிக்கவில்லை. இயேசுவிடம் தமது பரிசுத்தமான, பலியின் இரத்தத்தினால் நம்மைச் சுத்தம்பண்ணிப் புதிதாக்க நாம் கதறிக் கேட்கவில்லை!

நமது சபையில் எழுப்புதலின் “தொடுதல்” இருந்தது. 4 இரவுக் கூட்டங்களில் 11 பேர் மாற்றப்பட்டார்கள், திறமைவாய்ந்தவரான டாக்டர் கேஹன் அவர்களால், அவர்கள் இரு தடவைகள் சோதிக்கப்பட்டார்கள். அந்த 11 பேரும் மாற்றப்பட்டார்கள் என்று அவர் சொன்னார். மேலும் 8 கிறிஸ்தவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு ஒவ்வொரு இரவிலும் கண்ணீரோடு ஜெபித்தார்கள். நமது சபை ஆரம்பித்த 41 ஆண்டுகளில், ஒருபோதும் இப்படிப்பட்ட கூட்டங்கள் நடைபெற்றதில்லை.

ஆனால் அதன் பிறகு நான் பாவம் செய்தேன். அதை ஒரு “பாவம்” என்று அழைக்க வேண்டாம் என்று டாக்டர் கேஹன் என்னிடம் சொன்னார். ஆனால் நான் பாவம் செய்தேன் என்று நான் நினைக்கிறேன். நான் பெருமை கொண்டேன், நாம் எழுப்புதல் பெற்றோம் என்ற பெருமை கொண்டேன்! மெய்யாகவே எழுப்புதல் அப்பொழுதுதான் ஆரம்பித்தது. ஆனால் இயேசுவின் இரத்தத்தைக் குறித்தும் உணர்த்துதலைக் குறித்தும் பிரசங்கிப்பதை நான் நிறுத்தினேன். கூட்டத்தை வேறொன்றுக்குத் திருப்பினேன், இயேசுவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்குப் பதிலாகப் பரிசுத்த ஆவிக்கு முக்கியத்துவம் கொடுத்தேன். பரிசுத்த ஆவியைப் பற்றி இயேசுவானவர் சொன்னதை நான் நினைத்திருக்க வேண்டும், “அவர் என்னைக்குறித்துச் சாட்சிகொடுப்பார்” (யோவான் 15:26). யாரோ ஒருவரைப் பரிசுத்த ஆவியைக் குறித்துப் பேச நான் ஒருபோதும் அனுமதித்திருக்கக்கூடாது. அவைகளே என்னுடைய பாவங்கள் ஆகும். பெருமையின் பாவம் மற்றும் கர்வத்தின் பாவம். அவைகளை உங்களுக்கு முன்பாக இந்த இரவிலே அறிக்கையிடுகிறேன். பெருமையின் பாவம் மற்றும் கர்வத்தின் பாவம். தயவுசெய்து, ஒவ்வொருவரும், இயேசுவையும் அறிக்கையையும் புறக்கணித்த என்னைத் தேவன் மன்னிக்கும்படி ஜெபிக்கவும் (அவர்கள் ஜெபிக்கிறார்கள்). நான் முதல் எழுப்புதலில் பார்த்ததுபோல, இப்பொழுது தேவன் நம்மிடம் திரும்பி வரும்படி தயவுசெய்து ஜெபிக்கவும். தேவனுடைய பிரசன்னம் நம்மிடம் திரும்பி வரும்படி ஜெபிக்கவும். சீனாவில் நடந்ததுபோல, தயவு செய்து கண்ணீரோடு ஜெபிக்கவும் (அவர்கள் ஜெபிக்கிறார்கள்). தயவுசெய்து எழுந்து நின்று பாடுங்கள், “அல்லேலூயா, எப்பேற்பட்ட இரட்சகர்”. இப்பொழுது பாடுங்கள், “ஜீவனுள்ள தேவனுடைய ஆவியே”. இப்பொழுது பாடுங்கள் “என்னை ஆராயும், ஓ தேவனே”. இப்பொழுது “என் பார்வையை எல்லாம் நிரப்பும்” என்ற பாடலின் முதல் மற்றும் கடைசிச் சரணங்களைப் பாடுவோம். செல்வி ங்குயன், தேவன் மறுபடியுமாகத் திரும்பி வரும்படி ஜெபிக்கவும். இங்கே இருப்பவர்களில் அநேகர் இன்னும் இழக்கப்பட்டுப் பின்வாங்கிப் போயிருக்கிறார்கள். தேவன் அவர்களுக்காக இறங்கி வரும்படி ஜெபிக்கவும்.

எழுப்புதல் திரும்ப உங்களிடத்தில் வரவேண்டும் என்பதற்காக ஜெபிக்க விரும்புகிறவர்கள், எழுந்து நின்று தேவன் மறுபடியுமாக இறங்கி வரும்படி ஜெபிக்கவும். சீனாவில் அவர்கள் செய்தது போல ஜெபிக்கவும். தங்கள் பாவங்களை அறிக்கை செய்ய விரும்புகிறவர்கள், பலிபீடத்திற்கு இறங்கி வரவும். தங்கள் பாவங்களை இயேசுவின் இரத்தத்தால் சுத்தம் செய்ய விரும்புகிறவர்கள், இங்கே இறங்கி வந்து உங்கள் பாவங்களை அறிக்கை செய்யுங்கள். இயேசு தங்களை இரட்சிக்க வேண்டும் என்று விரும்புகிறவர்களே, நீங்களும் வாருங்கள். நமது சபையில் 25 வருடங்களாக இழக்கப்பட்டவராகக் கலந்து கொண்டிருந்த ஒரு தெற்கத்திய பாப்திஸ்து பாமரர், மெய்யான மாறுதலின் அனுபவத்தோடு வந்து இயேசுவை விசுவாசித்தார். ஆமென்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

பிரசங்கத்திற்கு முன்னால் திரு. ஆரோன் யான்சி வாசித்த வேத பகுதி: II தீமோத்தேயு 3:1-5.
பிரசங்கத்திற்கு முன்னதாகப் பாடப்பட்ட தனிப்பாடலைப் பாடியவர் திரு. பென்ஜமின் கின்கேய்டு கிரிஃபீத்:
      “Farther Along” (by W. B. Stevens, 1862-1940; arranged and altered
by Barney E. Warren, 1867-1951).


முக்கிய குறிப்புகள்

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் சபைகள்
ஏன் எழுப்புதலை அனுபவிக்காமல் இருக்கின்றன
என்பதற்கு இரண்டு காரணங்கள்

THE TWO REASONS WHY THE CHURCHES IN AMERICA
AND THE WEST DON’T EXPERIENCE REVIVAL

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

“மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறி யாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாத வர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகர முள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப் பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப் பட்டவர்களை நீ விட்டு விலகு. பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு, எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண்பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள்” (II தீமோத்தேயு 3:1-7).

(II தீமோத்தேயு 3:13, 5; I கொரிந்தியர் 2:14)

I.   முதலாவதாக, 140 வருடங்களாகப் பிரதானமான எழுப்புதல் இல்லாது இருப்பதற்குக் காரணம் என்னவென்றால் நடைமுறையில் நாம்
 இழக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமே ஞானஸ்நானம் கொடுக்கிறோம்! யோவான் 16:8, 9, 14; 15:26; 6:44; மாற்கு 10:26, 27.

II.  இரண்டாவதாக, 140 வருடங்களாக எழுப்புதல் இல்லாமல் இருக்கிறது ஏன் என்றால் கிறிஸ்தவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிடுதல் மற்றும் இயேசுவின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்படுதலுக்குப் பதிலாக நாம் பரிசுத்த ஆவியை வலிவுருத்துகிறோம், I யோவான் 1:9, 7; யோவான் 15:26.