Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
உபதேசத்துக்கு முன்பாகப் பாடப்பட்ட பாடல்கள், டாக்டர் ஹைமஸ் அவர்கள் முன்னிலையில் பாடப்பட்டவை:
“என்னுடைய தரிசனத்தை எல்லாம் நிரப்பும்” (ஆவிஸ் பர்ஜிசன் கிறிஸ்டியன்சன், 1895 - 1985)
“தேவனே, என்னை ஆராய்ந்து” (சங்கீதம்139:23-24).

சாத்தான் மற்றும் எழுப்புதல்

SATAN AND REVIVAL
(Tamil)

டாக்டர் ஹைமர்ஸ் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

செப்டம்பர் 15, 2016 அன்று வியாழக்கிழமை மாலை வேளையில் லாஸ்
ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Thursday Evening, September 15, 2016


தயவுசெய்து எழுந்து நின்று ஸ்கோபீல்டு ஸ்டடி பைபிளில் 1255ஆம் பக்கத்திற்குத் திருப்பிக் கொள்ளவும். அது எபேசியர் 6:11-12 ஆகும்.

“நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு” (எபேசியர் 6:11-12).

நீங்கள் அமரலாம்.

இந்த வசனம் சாத்தானுடைய பிசாசின் சேனைகள் உண்மையான கிறிஸ்தவத்துக்கு எதிரிகளாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. புதிய அமெரிக்கன் ஸ்டேன்டர்டு பைபிளில் 12ஆம் வசனம் இவ்வாறாக உள்ளது,

“ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், [“ஆள்பவர்கள்”, உங்கர்] வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு” (எபேசியர் 6:12, NASB).

டாக்டர் மெரில் எப். உங்கர் சொன்னார், ‘பொல்லாத ஆவிகளின் சேனையின் நியமணங்களில் அதிக உற்சாகமானது… இந்த “அந்தகார லோகத்தின் ஆளுகை செய்பவர்கள்” ஆகும்… இந்த ஆளுகை செய்யும் பொல்லாத ஆவிகள்” (Biblical Demonology, Kregel Publications, 1994, p. 196). டாக்டர் சார்லஸ் ரெயிரி அவர்கள் தானியேல் 10:13ன் விளக்கமாக, “பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி... ஆளுகை செய்பவர்களைத் தேவனுடைய திட்டத்தை எதிர்த்து நடக்கும்படியாக முயற்சி செய்த ஓர் அபூர்வ சக்தி வாய்ந்த ஜெந்து. தீயத் தூதர்கள் [பிசாசு “உலக சக்திகள்”] ராஜ்யங்களின் காரியங்களை ஆளுகை செய்யத் தேடுபவை... நல்ல மற்றும் தீயத் தூதர்களின் இடையில் யுத்தமானது ராஜ்யங்களைக் கட்டுப்படுத்தத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” (Ryrie Study Bible; note on Daniel 10:13).

அமெரிக்காவையும் மேற்கத்திய உலகத்தையும் கட்டுப்பாடு செய்யும்படி ஒரு பிசாசு ஆளுகையை எடுத்துக் கொண்டதாக நான் உணர்த்தப்பட்டேன். தானியேல் 10:20 வசனத்தைப் பற்றி ஸ்கோபில்டு மைய குறிப்பில் சொல்லப்படுவதாவது, “சாத்தானுடைய உலக முறையில் பிசாசுகள் கவனமாக உள்ளன”. இந்த வார்த்தை குறிப்பிடுவது “பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி”. இந்த “அதிபதி” தான் பெர்சியா ராஜயத்தைக் கட்டுப்படுத்தும் பிசாசு ஆகும். இன்று இந்த “மேற்கத்திய அதிபதி” அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளைக் கட்டுப்படுத்துகிறான். அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு நம்முடைய நாகரிகத்தை முழுவதுமாகப் பொருளுடைமை மயமாக்க அந்தப் பிரதானமான கட்டுப்படுத்தும் பிசாசுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆளுகை செய்யும் பிசாசின் பொருளுடைமைத் திட்டமானது எழுப்புதல்களைக் தடை செய்யும், நம்முடைய ஜெபங்களுக்கு இடையூராக இருக்கும், மற்றும் நமது மக்களை அடிமைப்படுத்தும். நம்முடைய மக்களுக்கு இந்த ஆளுகை செய்யும் பிசாசு என்ன செய்தது? பிசாசுகளைப் பற்றிப் பேசும்பொழுது, டாக்டர் லாயடு-ஜோன்ஸ் அவர்கள் இந்தப் பிசாசின் சக்தி என்ன செய்யும் என்று நமக்குச் சொன்னார். இந்தப் பிசாசின் சக்தி நம்முடைய மக்களின் மனங்களைக் குருடாக்கிவிடும் என்று அவர் சொன்னார். அவர் சொன்னார், “ஆவிக்குரிய முழுமையும் [யோசனை] போய்விட்டது. தேவனில் நடைமுறை சித்தாந்த நிலையில் உள்ள நம்பிக்கை போய்விட்டது... தேவன் மதம் மற்றும் இரட்சிப்பு போன்றவற்றுள் இருந்த நம்பிக்கை [இப்போது] தள்ளப்படுகிறது மற்றும் மறக்கப்படுகிறது” (Revival, Crossway Books, 1992, p. 13). இது “மேற்கத்திய அதிபதியின்” வேலையினாலும் அவனுக்குக் கீழ் உள்ள குட்டிப்பிசாசுகளினாலும் நடந்தது.

மற்ற நாடுகளுக்கு அது உண்மையானதாக இல்லை. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் முழு விசையுடன் “பொருளுடைமை” பிசாசு ஆளுகைச் செய்ததைப் போல மூன்றாம் உலகத்தில் அதனால் ஆளப்படாத தேசங்கள் உள்ளன. லட்சக் கணக்கான இளைஞர்கள் சீனா, ஆப்பிரிக்கா, இந்தோசீனா, இன்னும் முஸ்லிம் நாடுகளிலும் உள்ளனர் – லட்சக் கணக்கான இளம் வாலிபர்கள் மாறுதலடைந்து வருகிறார்கள். அவர்களில் லட்சக் கணக்கானவர்கள் உண்மையான கிறிஸ்தவர்களாக மாறி வருகிறார்கள். ஆனால் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளில், லட்சக் கணக்கான இளைஞர்கள் சபைகளை விட்டு வெளியேறுகிறார்கள். மற்றும் மிகவும் சிறிதளவு இளைஞர்கள் மட்டும் உண்மையான கிறிஸ்தவர்களாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் மாறி இருக்கிறார்கள். நம்முடைய சபைகள் சக்தியற்று இருக்கின்றன. நம்முடைய ஜெபக் கூட்டங்கள் கைவிடப்பட்டன. நம்முடைய இளைஞர்களுக்குத் தேவன் மீது அன்பு இல்லை. போல்ஸ்டர் ஜார்ஜ் பர்னா அவர்களின் கூற்றுப்படி, ஏறக்குறைய 25 வயது நிரம்பிய 88% மக்கள் சபைகளை விட்டுப்போய்விடுகிறார்கள், அவர்கள் “ஒருபோதும் திரும்பவும் வருவதில்லை”. இழிபொருள் ஓவியத்தால் பிடிக்க பட்டார்கள், அதை அவர்கள் மணிக்கணக்காக வலைதளத்தில் பார்க்கிறார்கள். அவர்கள் மாரிஜுனா மற்றும் ஈஸ்டேஸி போன்ற போதைப் பொருள்களால் பிடிக்கப்பட்டார்கள். அவர்கள் ஜெபத்தைப் பார்த்துச் சிரிப்பார்கள், ஆனால் சமுதாய ஊடகங்களால் வசியப்படுத்தப்பட்டு மணிக்கணக்காக முடிவுவரையிலும் ஈர்க்கப்படுவார்கள். அவர்களுடைய கரங்களில் எப்பொழுதும் நவீன கைப்பேசியை வைத்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் உண்மையில் இவ்வகைச் சூழ்ச்சித்திறனின் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள். அவர்களுடைய ஒவ்வொரு இடைவேளை நேரங்களையும் அவைகளில் வெறித்துக் கொண்டிகிறார்கள். ஓசியா தீர்க்கதரிசியின் காலத்தில் இருந்த பழங்கால இஸ்ரவேலர் விக்கிரங்களில் சிக்கிக் கொண்டது போல இவர்களும் வெறித்து இருக்கிறார்கள். நம்முடைய வாலிப மக்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள சாத்தான் உபயோகப்படுத்தும் விக்கிரகம் சமுதாய ஊடகங்கள் ஆகும். அமொரிக்கா மற்றும் மேற்கில் உள்ள நம்முடைய ஏறக்குறைய எல்லா போதகர்களும் தங்கள் சபைகள் ஏன் இவ்வளவு பெலவீனமாக உலகப்பிரகாரமாக இருக்கிறது என்ற உணர்வு இல்லாமல் இருக்கிறார்கள்! டாக்டர் லீயோடு ஜோன்ஸ் சொன்னது போல, அவர்கள் பிசாசின் சக்திகளால் செயல் தொடர்பு கொண்டுள்ளதை உணராமல் இருக்கிறார்கள்!

ஓசியாவின் நாட்களில் இது மிகவும் மோசமாக இருந்தது அதனால் கர்த்தர் சொன்னார், “[இஸ்ரவேல்] விக்கிரகங்களோடு இணைந்திருக்கிறான், அவனைப் போகவிடு” (ஓசியா 4:17). அந்தத் தேசம் தேவனால் கைவிடப்பட்டது. அவர்கள் தேவனால் உதறித் தள்ளப்பட்டார்கள். அவர்கள் பிசாசுகளின் வல்லமையின் கீழ், தனித்து விடப்பட்டார்கள். நம்முடைய சொந்த இளைஞர்களே இழி பொருள் ஓவியம், மாரிஜுனா, சமுதாய ஊடகங்களில் மணிக்கணக்காகச் சக்தி வாய்ந்த பிசாசுகளின் கீழ் அடிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்! இழக்கப்பட்ட நண்பர்களால் இளைஞர்கள் பிசாசுகளின் சங்கலியில் சிக்கிக் கொண்டார்கள். இயற்பொருள்வாதம் போன்றவற்றால் பிசாசினால் இளைஞர்கள் அடிமைப் படுத்தப்படுகிறார்கள், ஆவிக்குரிய கிறிஸ்தவராக மாறமுடியாதபடி சிலருடைய உத்தியோகங்கள் அடிமைப்படுத்தப்படுகின்றன, மற்றவர்களை வெளி விவாகங்களின் மூலமாக மற்றும் இழிபொருள் ஓவியம் போன்ற முடிவில்லாத பொழுதுபோக்குகளால் அடிமைப்படுத்தப்படுகிறார்கள். “[இஸ்ரவேல்] விக்கிரகங்களோடு இணைந்திருக்கிறான், அவனைப் போகவிடு” (ஓசியா 4:17). உங்களில் சிலர் இன்று இரவில் சாத்தானுடைய சக்திகளால் அடிமைப்பட்டிருக்கலாம்.

நீங்கள் எங்களுடைய சபைக்கு வருகிறீர்கள். ஆனால் தேவன் இங்கே இல்லை. தேவன் இங்கே இல்லை என்று நீங்கள் உணரமுடியும்! ஓசியா தீர்க்கதரிசி சொன்னார், அவர்கள் போனார்கள்… “கர்த்தரைத் தேடும்படி தங்கள் ஆடுகளோடும் தங்கள் மாடுகளோடும் போவார்கள்; அவரைக் காணமாட்டார்கள்; அவர் அவர்களை விட்டு விலகினார்” (ஓசியா 5:6). தேவன் போய்விட்டார்! அவர் நம்முடைய சபைகளை விட்டு வெளியேறிவிட்டார். அவர் நம்முடைய சபையை விட்டு வெளியேறிவிட்டார். அவர் இல்லை. அவர் தோன்றிருக்கவில்லை ஆகையால் இங்கே அவர் இல்லை என்பதல்ல. அவர் தோன்றிருக்கிறார் ஆகையால் இங்கே அவர் இல்லை என்பதாகும்! தேவன் இருக்கிறார் - அதனால் தான் அவர் நம்மை விட்டுப் போய்விட்டார்! அவர் முற்றிலும் பரிசுத்தர். அவர் நம்முடைய பாவத்தின் மீது முற்றிலும் கோபமாக இருக்கிறார். அதனால் தான் அவர் உன்னைத் தனிமையாக விட்டுவிட்டார். உன்னுடைய வீட்டில் தனிமையாக. உன்னுடைய ஜெபங்களில் தனிமையாக. நமது சபையிலும் தனிமையாக. தேவனுடைய பிரசன்னத்தை உணராமல் தனிமையாக. என்னுடைய சொந்த அனுபவத்தில் நான் அதை உணர்ந்தேன் என்னுடைய வாலிப நாள்களில் வெள்ளை இனத்தவரின் சபையில் இருந்தபொழுது தேவன் அங்கே என்னோடு இல்லாததை அறிந்திருக்கிறேன். நான் தனிமையாக இருந்தேன் - சபைக்குள்ளேயே இருந்தாலும். தனிமை, கிரின்டே ஒரு பிரபலமான பாடலில் இவ்வாறாக எழுதினார்,

சில நேரங்களில் என்னை அங்கே யாராவது
கண்டுபிடிப்பார்கள் என்று நான் விரும்பினேன்
அதுவரையிலும் நான் தனிமையாக நடப்பேன்.
   (Green Day, “Boulevard of Broken Dreams,” 2004).

நீங்கள் எப்படி உணர்வீர்கள் என்று எனக்குத் தெரியும். நான் வாலிபனாக இருந்தபோது லாஸ் எஞ்சலஸ்சின் தெருக்களில் தனிமையாக நடந்தேன், தனிமையாக, நான் உங்களைப் போல இளைஞனாக இருந்தபொழுது! நான் சீன பாப்திஸ்து சபையில் சேருவதற்கு முன்பாக, நான் ஒரு வெள்ளை இனத்தவரின் சபையில் இருந்தபொழுதும் தனிமையாக இருந்தேன். ஓ, ஆமாம்! அப்படிப்பட்ட உணர்வு என்ன என்பதை நான் நினைவு கூறுகிறேன்! அதை நான் வெறுக்கிறேன்! உன்னுடைய வீட்டில் அன்பை அழிக்கும் இயற்பொருள்வாதமாகிய பிசாசை நான் வெறுக்கிறேன், அது உன்னுடைய மகிழ்ச்சியை அழிக்கிறது, அது உன்னுடைய இருதயத்தை அழித்து உன்னை இவ்வளவாகத் தனிமைப்படுத்துகிறது. நம்முடைய சபையை வெளிர்ந்த நட்பற்றத் தன்மையை உண்டாக்கும் பிசாசை நான் வெறுக்கிறேன். நீ அனுபவிக்கும்படி தேவன் கொடுத்துள்ள நன்மையான காரியங்களை உன்னிடமிருந்து திருடிக் கொள்ளும் அமெரிக்காவின் பாவத்தை நான் வெறுக்கிறேன்! உங்களில் சிலர் உங்களுக்கு வேண்டியதைச் செய்வதாக உறுதியளித்துத் தலைவனாக நினைக்கும் ஓர் உறுப்பினரின் பின்னால் ஓடுபவராக இருக்கலாம். ஆனால் அவன் உங்களை ஒன்றும் இல்லாதவராக விட்டுவிட்டுப் போய்விடுவான்! அப்படியே அதிகமான பிரசங்கிகள் செய்தார்கள். அவர்கள் உங்களுக்கு எல்லாவற்றையும் வாக்குப் பண்ணினார்கள். ஆனால் உங்களுக்குக் கொடுக்க அவர்களிடம் உண்மையாக ஒன்றும் இல்லை! நீங்கள் பிசாசுனுடைய குருடாக்கும் செயலின் கீழ் இருக்கின்றீர்கள்! அப்படிப்பட்ட சாத்தானுடைய செயல் விளைவின் காரணமாக நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றீர்கள்! தேவன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளைவிட்டுப் போய்விட்டார்! நம்முடைய பாவத்தின் காரணமாக தேவன் நம்மைவிட்டு போய்விட்டார்! உன்னுடைய பாவத்தினால் தேவன் உன்னைத் தனிமையாக விட்டுவிட்டார்.

நம்முடைய சபையில் தேவன் இருக்க வேண்டும்! நம்மோடு அவருடைய பிரசன்னம் இருக்க வேண்டும்! இளம் வாலிபரே எங்களால் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. எங்களால் உங்களுக்கு உதவி செய்யவே முடியாது. தேவன் இறங்கி வராவிட்டால் எங்களால் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. நம்முடைய பாவங்களிலிருந்து நாம் மனந்திரும்ப வேண்டியது அவசியம்! நாம் ஜெபிக்கும் போது அழ வேண்டும். நாம் அழவில்லையானால் நம்முடைய ஜெபங்கள் வார்த்தைகளாக மட்டுமே இருக்கும்! சீனாவில் அவர்கள் அழுகிறார்கள் ஆகையால் தேவன் இறங்கி வந்தார்! இளம் வாலிபரே தேவன் இல்லாவிட்டால் எங்களால் உங்களுக்கு ஒன்றும் கொடுக்க முடியாது! நாங்கள் உங்களுக்கு ஒரு விருந்து கொடுக்க முடியும். ஆனால் உங்களுக்குத் தேவனை எங்களால் கொடுக்க முடியாது! நாங்கள் உங்களுக்கு ஒரு கூடைப்பந்து விளையாட்டு கொடுக்க முடியும். ஆனால் எங்களால் உங்களுக்குத் தேவனை கொடுக்க முடியாது! எங்களால் உங்களுக்குத் தேவனைக் கொடுக்க முடியாவிட்டால் உங்களுக்கு எங்களிடமிருந்து கொடுக்க ஒன்றும் இல்லை. உங்களுடைய தனிமையைக் குணமாக்க ஒன்றும் இல்லை! உங்களுடைய இருதயத்தை மகிழ்ச்சிப்படுத்த ஒன்றும் இல்லை! உங்களுடைய ஆத்துமாவை இரட்சிக்க ஒன்றும் இல்லை! நீங்கள் எங்களிடம் வருகிறீர்கள், உங்களுக்கு முன்பாக வைக்க எங்களிடம் ஒன்றும் இல்லை. ஒரு விருந்தைத் தவிர வேறொன்றும் இல்லை. ஒரு பிறந்த நாள் இனிப்பைத் தவிர வேறொன்றும் இல்லை! ஒரு பழைய வண்ணப்படத்தைத் தவிர வேறொன்றும் இல்லை. உங்களுக்கு முன்பாக வைக்க எங்களிடம் ஒன்றுமில்லை, உங்களுக்கு உதவி செய்ய ஒன்றுமில்லை, உங்களை நரக அக்கினியிலிருந்து காப்பாற்ற ஒன்றுமே இல்லை! எங்களிடம் தேவன் இல்லை என்றால் உங்களுக்குக் கொடுக்க ஒன்றுமே இல்லை! ஒன்று அல்லது இரண்டு பாடல்களைத்தவிர ஒன்றுமில்லை, சில வார்த்தை ஜெபத்தைத் தவிர ஒன்றுமில்லை. மரித்துப்போன ஒரு போதனையைவிட வேறொன்றுமில்லை. நாங்கள் கனியற்றவர்கள். நாங்கள் உதவியற்றவர்கள். உங்களுக்குத் தேவையான ஒன்றும் எங்களிடமில்லை. எங்களிடம் தேவன் இல்லை என்றால் எங்களிடமிருந்து உங்களுக்கு ஒன்றுமில்லை!

இரன்டு சனிக்கிழமை இரவுகளுக்கு முன்பு, நமது வசனத்தை மனப்பாடம் செய்யும்படி நான் உங்களிடம் கேட்டுக் கொண்டேன். உங்களில் அநேகர் அவைகளை மனப்பாடம் செய்தீர்கள்.

“ஆ, உமது நாமத்தைச் சத்துருக்களுக்குத் தெரியப் பண்ணுவதற்கும், ஜாதிகள் உம்முடைய சந்நிதிக்கு முன் தத்தளிப்பதற்கும், தேவரீர் வானங்களைக் கிழித்திறங்கி, உருக்கும் அக்கினி எரியுமாப்போலவும், அக்கினி தண்ணீரைப் பொங்கப்பண்ணுமாப்போலவும், பர்வதங்கள் உமக்கு முன்பாக உருகும்படி செய்யும். நாங்கள் எதிர்பார்த்திராத பயங்கரமான காரியங்களை நீர் செய்தபோது, நீர் இறங்கினீர், உமது சந்நிதியில் பர்வதங்கள் உருகிப்போயின” (ஏசாயா 64:1-3).

அந்த வார்த்தைகளை உங்களில் சிலர் மனப்பாடம் செய்த பொழுது தேவன் இறங்கி வந்ததை என்னால் உணர முடிந்தது. எனக்குள்ளாக நான் அசைக்கப் பட்டேன். தேவனுடைய வல்லமையினால் என்னுடைய இருதயம் அசைக்கப் பட்டது. நான் ஒரு அழைப்புக் கொடுத்தேன். போதனை ஒன்றும் கொடுக்கப்படவில்லை. ஜெபம் ஒன்றும் செய்யப்படவில்லை. அந்த வார்த்தைகள் மட்டுமே,

“ஆ, உமது நாமத்தைச் சத்துருக்களுக்குத் தெரியப் பண்ணுவதற்கும், ஜாதிகள் உம்முடைய சந்நிதிக்கு முன் தத்தளிப்பதற்கும், தேவரீர் வானங்களைக் கிழித்திறங்கி, உருக்கும் அக்கினி எரியுமாப்போலவும், அக்கினி தண்ணீரைப் பொங்கப்பண்ணுமாப்போலவும், பர்வதங்கள் உமக்கு முன்பாக உருகும்படி செய்யும். நாங்கள் எதிர்பார்த்திராத பயங்கரமான காரியங்களை நீர் செய்தபோது, நீர் இறங்கினீர், உமது சந்நிதியில் பர்வதங்கள் உருகிப்போயின” (ஏசாயா 64:1-3).

திருமதி ______ கண்ணீரோடு ஜெபித்தார்கள்! அதன் பிறகு ஜேசன் ______ பெறுமூச்சோடு சத்தமாகக் கதரினார். ரெபேக்கா ______ கதறிக்கொண்டு பலிபீடத்திற்கு வந்தார். யாரோ ஒருவர், “ஆபிரகாமைப்பற்றி என்ன ______? என்று கூப்பிட்டார். அவர் வர ஆரம்பித்தார். ஆனால் அவர் சுற்றித் திரும்பிப் போய்விட்டார். அவருக்குப் பின்னால் மூன்றுபேர் ஓடினார்கள். பிசாசுகள் வெளியே வந்தன. கண்ணீர் சொரியப்பட்டது. கெஞ்சுதல் நடந்தது. இறுதியாக அவருக்குச் சமாதானம் வந்தது. சில நாட்களுக்குப் பிறகு அவர் இரட்சிக்கப்பட்டார்! பிறகு கிறிஸ்டினா ______ வந்தாள். நான் வேறொரு நபருக்காகப் பேசும்படி அவரை அழைப்பதற்கு முன்பாக ஜான் கேஹன் அவளிடம் ஒரு சில வார்த்தைகளைச் சொன்னார். அவளாகவே இயேசுவிடம் வந்தாள் - டாக்டர் கேஹன் அவளுடைய சாட்சியைக் கேட்டு, “இவள் மரணத்திலிருந்து ஜீவனுக்கு மாறிவிட்டாள்” என்று சொன்னார். சிலுவையில் அறையப்பட்ட இரட்சகருடைய இரத்தத்தினால் அவள் இரட்சிக்கப்பட்டாள். ஆபிரகாமோடு ஜெபித்த பிறகு ______, ஜாக் நெஹானும் நானும் டோக்ஸாலஜி பாடல் பாடினோம். ஆகஸ்டு 18, 27 மற்றும் 28 ஆகிய மூன்று நாட்களில், 13 நபர்கள் மனம் மாறினார்கள். அதை நான் ஒரு பிரசங்கியிடம் சொன்னேன் அதற்கு அவர் சொன்னார், “நீங்கள் சில எழுப்புதலை அனுபவிக்கிறீர்கள்”. உண்மைதான், ஆனால் அது மனமாறுதல்களோடு ஆரம்பித்தது. அது வழக்கமாகக் கிறிஸ்தவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கை செய்வதிலிருந்து ஆரம்பிக்கும். ஆனால் 4 கிறிஸ்தவர்கள் மட்டுமே தங்கள் பாவங்களை அறிக்கையிட்டார்கள் அதனால் எழுப்புதல் ஏற்பட்டது. நான்கு கிறிஸ்தவர்கள் மட்டுமே! ஆனால் உங்களில் மற்றவர்கள் எப்பொழுதும்போல வெளிர்ந்த நிலையில் ஜீவனில்லாமல் இருந்தார்கள்.

______ ஆறு அடி உயரமுள்ளவர். ஒரு பெரிய ஆப்ரிக்க அமரிக்கன் கோபமுகத்தோடு காணப்பட்டார். அவர் தனது முழங்காலில் இருந்து முகம் முழுவதும் கண்ணீரால் மூடப்படும் வரையில் அழுதார். கடந்த ஞாயிறு இரவில் இரட்சிக்கப்பட்ட கடைசி நபர் அவரே.

ஆனால் அந்தக் கூட்டங்களில் என்னைக் கலங்க வைத்த இரண்டு காரியங்களை நான் கவனித்தேன், அது இன்னும் என்னைத் தொந்தரவு செய்து கொண்டிருந்தது. முதலாவது என்னவென்றால் அந்த மனமாற்றப்பட்ட 13 பேரைப்பற்றி நீங்கள் மகிழ்ச்சி அடையாதது என்னை கலங்கச் செய்தது. அவர்கள் இரண்டு அல்லது மூன்றுமுறை டாக்டர் கேஹன் அவர்களால் சோதிக்கப்பட்டார்கள். அவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள் என்று அவர் சொன்னார். நீங்கள் மகிழ்ச்சி அடையவில்லை. டாக்டர் கேஹன் அவர்களைக் கேட்டதை அவர்கள் முழுநம்பிக்கையோடு இரட்சிக்கப்பட்டார்கள் என்று அவர் சொன்னதை நான் உங்களிடம் சொன்ன பிறகும்கூட நீங்கள் மகிழ்ச்சி அடையவில்லை. நானும் ஜாக்கும் மட்டுமே டோக்ஸாலஜி பாடலைத் தொடர்ச்சியாகப் பாடினோம்! துதியின் சத்தமில்லை. தேவனுக்கு ஸ்தோத்திரமில்லை. இளஞ்சூடான மெச்சுதல் மட்டுமே. ஒரு மெல்லிய, வெதுவெதுப்பான மெச்சுதல் மட்டுமே. நீங்கள் எழுப்புதல்களைப் பற்றிப் படித்ததுபோல ஒரு சிறிய மகிழ்ச்சியின் சத்தமுமில்லை. இந்தக் குறுகிய கூட்டங்களில் 13 பேர் மனமாற்றம் அடைந்ததைப்பற்றி கிறிஸ்தவர்களாகிய நீங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவில்லை! ஒரு புன்னுறுவல் இல்லை! அல்லேலூயாக்கள் இல்லை! நான் எழுப்புதல்களில் பார்த்தது போல மகிழ்ச்சியின் சத்தங்கள் இல்லை. கடந்த காலத்தில் நிகழ்ந்த எழுப்புதல்களைப் பற்றி எழுதப்பட்டதைப் படித்தது போன்ற நன்றி செலுத்துதலின் வெளிப்படையான சத்தம் இல்லை! மகிழ்ச்சி நிறைந்த ஒன்றுமில்லை. நான் இரட்சிக்கப்பட்டவரின் பெயர்களை வாசித்தபொழுது வெறும் மெல்லிய மெச்சுதல் மட்டுமே காணப்பட்டது. நீங்கள் எழுந்து நின்று இடி முழக்கத்தோடு “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று சத்தமிடுவீர்கள் என்று நான் நினைத்தேன். ஆனால், இல்லை. ஒரு சிறிய, மென்மையான மெச்சுதல் - அப்படிப்பட்ட ஒரு உன்னதமான வெற்றி கிடைத்ததற்கு! இதுதான் முதலாவதாக என்னைக் கலங்கச் செய்தது.

இரண்டாவதாக என்னைப் பாதித்த காரியம் நான்கு நீண்ட கால கிறிஸ்தவர்கள் மட்டுமே அந்தக் கூட்டங்களில் எழுப்புதல் அடைந்தார்கள். நான்கு கிறிஸ்தவர்கள் மட்டுமே! மீதியான கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் எப்பொழுதும் இருப்பதது போலவே வெளிர்ந்த மற்றும் உணர்வற்ற நிலையில் இருந்தார்கள்! ஒருவர் சொன்னார், “நான் எழுப்புதல் அடைந்தேன். ஆனால் திருமதி ______ போல அல்ல”. என்னுடைய அன்பான சகோதர சகோதரிகளே, நீங்கள் திருமதி ______ போல மாறாவிட்டால், நீங்கள் எழுப்புதலை அடையவேஇல்லை! நீங்கள் திருமதி ______ போல மாறாவிட்டால் நீங்கள் தேவனால் தொடப்படவே இல்லை!

இரட்சிக்கப்படாதவர்கள் மத்தியில் ஏன் இவ்வளவு குறைவான எழுப்புதல் காணப்படுகிறது என்று நான் ஜான் கேஹன் அவர்களிடம் கேட்டேன். அவர் நீங்கள் குற்றம் நாடுகிற மற்றும் அவிசுவாசமுள்ளவர்கள் என்று சொன்னார். அவர் சொன்னது உண்மை என்று நான் நினைக்கிறேன். ஒரு மிகப்பெரிய பரிசுத்த ஆவியின் அசைவு ஏற்பட்டு 13 பேர் மனமாற்றப்பட்டார்கள், ஆனால் நீங்கள் அவ்விசுவாசிகளாக இருந்தீர்கள். நீங்கள் இதை விசுவாசிக்கவில்லை. நமக்குத் தேவனுடைய ஒரு பெரிய அசைவு ஏற்பட்டது, ஆனால் நீங்கள் மெய்யாகவே அதை விசுவாசிக்கவில்லை. ஏன் நீங்கள் மெய்யாக விசுவாசிக்கவில்லை? ஏன் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனென்றால் உங்களுக்குள் ஏதோ சில தீமை இருக்கிறது! உங்களுக்குள் ஏதோ சில பயங்கரமான தீமை இருக்கிறது! உங்களுக்கு ஆனந்த கண்ணீர் வரவில்லை. உங்களிடம் மகிழ்ச்சியான மாறுத்தரம் இல்லை. உங்கள் இருதயம் தீயதாக இருக்கிற காரணத்தால் உங்களுக்கு மகிழ்ச்சி இல்லை. உங்கள் இருதயம் தீமையானதாக இருக்கிறது ஏனென்றால் நீங்கள் அதை கவனமாக ஆராய்ந்து பார்க்கவில்லை. நீங்கள் சாத்தானால் சோதிக்கப்பட்டு இருக்கிறீர்கள். அதைக் கூட நீங்கள் உணராமல் இருக்கிறீர்கள். நீங்கள் “பிசாசின் தந்திரங்களால்” ஏமாற்றப்பட்டு இருக்கிறீர்கள் என்பதைக்கூட உணராமல் இருக்கிறீர்கள். சாத்தான் உங்களை வஞ்சித்து ஏமாற்றி இருப்பதை இன்னும் நீங்கள் உணராது இருக்கிறீர்கள்! ஓ, நீங்கள் எப்படி, “கர்த்தரிலும், அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்பட முடியும்”? நீங்கள் அவனுடைய வஞ்சகத்தினால் ஏமாற்றப்பட்டீர்கள் என்பதைக்கூட அறியாமல் இருந்தால் நீங்கள் எப்படிச் சாத்தானுக்கு “விரோதமாகப் போரிட” முடியும்? (எபேசியர் 6:10-11). டாக்டர் மெரில் எப். உங்கர் ஆப் டல்லாஸ் தியோலெஜிக்கல் செமினரி சொன்னது, “[கிறிஸ்தவர்கள்] சாத்தான் மற்றும் பிசாசுகளோடு பயங்கரமான சண்டை ஏற்பட்டு வெற்றி கொண்டவர்கள் மற்றும் ஆவிக்குரியவர்களாக இருப்பவர்கள், [பிசாசுகள்] உண்மையான ஆவிக்குரியதையும் மற்றும் கிறிஸ்தவ உபயோகமானதையும் கடுமையாக எதிர்ப்பவைகள்” (Biblical Demonology, Kregel, 1994, p. 101).

சகோதர சகோதரிகளே, நம்முடைய இருதயத்தை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியம். நம்முடைய பாவங்களை அறிக்கையிட வேண்டியது அவசியம், “சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே” (II கொரிந்தியர் 2:11). டாக்டர் லாய்டு-ஜோன்ஸ் சொன்னார், “இன்று உள்ள சபையில் இருக்கும் பிரதானமான [கெட்ட] காரணங்களில் ஒன்று என்னவென்றால் பிசாசு இருப்பதை மறந்தார்கள்... சபையானது முரட்டாட்டத்திலும் மயக்கத்திலும் உள்ளது; அது சண்டையைப் பற்றித் தெளிவு இல்லாமல் இருக்கிறது” (Christian Warfare, Banner of Truth, 1976, pp. 292, 106). சண்டையைப் பற்றி தெளிவே இல்லை. உன்னுடைய பாவங்கள் உன்னை மந்தப்படுத்திவிட்டது என்ற தெளிவு உனக்கு இல்லை. அறிக்கை செய்யப்படாத பாவங்கள் உன்னை தேவனிடமிருந்து பிரித்துவிட்டது என்று அறியாமல் இருக்கிறாய்!

பிசாசை நம்மால் எப்படி ஜெயிக்க முடியும்? முதலாவதாக நம்முடைய இருதயங்களில் இருக்கும் பாவங்களைச் சுட்டிக்காட்ட வேண்டுமென்று தேவனிடம் நாம் கேட்க வேண்டியது அவசியமாகும். நாம் உண்மையாக ஜெபிக்க வேண்டும்,

“தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து நித்திய வழியிலே என்னை நடத்தும்” (சங்கீதம் 139:23, 24).

சபைக்காக நீ செய்யும் வேலையில் ஓய்ந்து இருக்காதே. உங்களில் அநேகர் நம்முடைய சபையில் கடினமாக உழைக்கிறீர்கள். நீங்கள் கடினமாக உழைக்கிறீர்கள், ஆனால் உங்களுடைய இருதயங்களில் பாவங்களை வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். உங்களுடைய ஜெபத்திலும்கூட ஓய்ந்து இருக்க வேண்டாம். நீங்கள் ஒவ்வொரு நாளும் ஜெபிக்கலாம் இருந்தாலும் உங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளை வைத்திருக்கலாம். நம்முடைய சபையில் ஒரு மனிதனிடம் நான் கேட்டேன், “நீங்கள் சரியாக இருக்கிறீர்களா? அவன் சொன்னான், “நான் சரியாக இருக்கிறேன்”. அவன் மெய்யாகவே சரியாக இருப்பதாக நினைத்தான். ஆனால் நான் அவனை அழித்துக் கொண்டு இருக்கும் வலிமையான பாவத்தைச் சுட்டிக்காட்டினேன். அவன் சொன்னான், “நான் அதை ஒருபோதும் ஒரு பாவமாக நினைத்ததே இல்லை”. அது உன்னுடைய இருதயத்திலும் உண்மையாக இருக்கிறதா? நீ ஒருபோதும் பாவம் என்று நினைக்காத காரியம் உன் இருதயத்திற்குள் இருக்கிறதா?

நமது சபை பிளவுப்பட்டு மற்றவர்கள் போய்விட்டபொழுது நீங்கள் சபையில் உண்மையாக இருந்தீர்கள். அதிலே ஓய்ந்து இருக்க வேண்டாம்! நீ சபையிலே உறுதியாக இருந்த போதிலும் நீ “ஒரு போதும் நினைக்காத” பாவம் உன் இருதயத்தில் இருக்கக்கூடும். உங்களில் சிலர் தங்கள் பிள்ளைகள் இரட்சிக்கப்பட வேண்டும் என்று ஜெபித்துக் கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் உங்கள் ஜெபங்கள் பதில் அளிக்கப்படவில்லை. உன்னுடைய இருதயத்தில் மறைக்கப்பட்ட பாவம் இருக்கக்கூடும் அல்லவா? நீ ஒரு போதும் பாவம் என்று நினைக்காததாக இருக்கலாம். ஆனால் அது ஒரு பாவம், நீ அதை உணர வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். உன்னுடைய பிள்ளைகளுக்காக நீ செய்யும் உன்னுடைய ஜெபங்கள் நீ உன்னுடைய பாவத்தை அறிக்கை செய்யாவிட்டால் பதில் அளிக்கப்படாது. தேவ வசனம் சொல்லுகிறது, “என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்” (சங்கீதம் 66:18). பரிசுத்தமான கிறிஸ்தவர்களின் ஜெபங்களுக்கே பதில் அளிக்கப்படும். நீங்கள் உங்கள் சகோதரர் அல்லது சகோதாரி இரட்சிக்கப்பட வேண்டும் என்று ஜெபித்தீர்கள். ஆனால் உங்கள் ஜெபங்களுக்குப் பதில் இல்லை. பதில் வரும் வரையிலும் “தொடர்ந்து ஜெபிக்கிறேன்” என்று சொல்லி உங்களை நீங்களே தேற்றிக் கொள்ளலாம். ஆனால் உங்களால் அவர்களுக்காக நீங்கள் இருக்கும் விதத்திலிருந்து “தொடர்ந்து ஜெபிக்க” முடியாது. “என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்” (சங்கீதம் 66:18). ஆனால், நீ சொல்லுகிறாய், “இது ஒரு சிறிய பாவம் மட்டுமே”. பிசாசு உன்னிடம் சொல்லுகிறது அது “சிறிய” பாவம் என்று - ஆனால் அது உன்னுடைய ஜெபங்களைத் தடைப்பண்ணுகிறது என்று நீ பார்க்க வேண்டியது அவசியம். உன்னுடைய இருதயத்தின் பாவங்களை நீ தேவனிடம் அறிக்கை செய்ய வேண்டியது அவசியம். நீ கண்டிப்பாக அவைகளை அறிக்கை செய்ய வேண்டும் அல்லது கர்த்தர் உன்னைக் கேட்க மாட்டார்.

ஈவன் ராபர்ட்ஸ் என்ற இளம் சுவிஷேசகர் 1904ல் வேல்ஸில் ஏற்பட்ட எழுப்புதலில் பெரிய அளவில் உபயோகப்படுத்தப்பட்டவர். எழுப்புதலின் ஆவியானவர் வருவதற்கு முன்பாக, ஈவன் ராபர்ட்ஸ் சொன்னார், “சபையின் எல்லாவிதமான கெட்ட உணர்வுகளையும் அகற்ற வேண்டும் – எல்லாவிதமான அழுக்கு [வெறுப்பு, கசப்பு], பொறாமை, கௌரவம் [மற்றவர்களை நியாயந்தீர்த்தல்], மற்றும் தவறான புரிந்து கொள்ளுதல்கள் [ஒத்துக் கொள்ளாமைகள், பெருமை]. எல்லாவிதமான [சபையில் மற்றவர்களோடு இருக்கும்] இடறல்களும் முற்றிலுமாக [அறிக்கை செய்து] மன்னிக்கப்படாதவரை ஜெபிக்காதே, ஆனால் உன்னால் மன்னிக்க முடியாது என்று நீ உணர்ந்தால், நீ வளைந்து கொடு [முழங்கால் படியிடு], மன்னிக்கும் ஆவியை வேண்டிக் கேள். அதன்பிறகு நீ பெற்றுக் கொள்வாய்” (Brian H. Edwards, Revival, Evangelical Press, 2004, p. 113)... “இயல்பான நேரங்களில் கிறிஸ்தவர்கள் இந்தக் காரியங்களைப் பற்றிக்கொண்டு இருக்கிறார்கள்... ஆனால் மெய்யான எழுப்புதலின் போது இரகசிய பாவங்கள் கொண்டு வரப்படும்... கிறிஸ்தவனின் மனங்களின் இருந்து, அவை எல்லாவற்றையும் அறிக்கை செய்யும் வரையிலும் சமாதானம் இருக்காது” (Edwards, ibid., p. 114).

சீன பாப்திஸ்து சபையில் 1969 மற்றும் 1970களில் கிறிஸ்தவர்கள் மத்தியில் பயங்கரமான உணர்த்துதல் ஏற்பட்டது. நான் அதைப் பார்த்தேன். சிலநேரங்களில் பாவ உணர்த்துதல் மக்களை ஈர்க்கும். மக்களை அடக்கமுடியாதபடி அழும்படி நெருக்கும். ஆனால் உணர்த்துதலும் துக்கமும் இல்லாமல் ஓர் எழுப்புதல் [கிறிஸ்தவர்கள் மத்தியில்] இருக்க முடியாது. ஆடிடோரியத்தின் ஒரு பக்கத்தில் யாரோ ஒருவர் அழ ஆரம்பித்தார். அதன் பிறகு ஒவ்வொருவரும் அழுதார்கள். அந்தக் கூட்டம் பல மணி நேரங்களாக அறிக்கையோடும், அழுகையோடும், ஜெபத்தோடும் மற்றும் மெல்லிய பாடல்களோடும் தொடர்ந்தது. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று ஒருவரும் நினைக்கவில்லை. அவர்கள் முகமுகமாகத் தேவனோடு இருந்தார்கள்.

கிறிஸ்தவர்கள் ஆழமான பாவ உணர்த்துதலால், வலியையும் தாழ்மைப்படுதலையும் உணராவிட்டால் எழுப்புதல் ஏற்படாது. தேவன் சலக்கிரனை செய்த அந்தக் கிறிஸ்தவர்களின் விம்மலால் அமைதி தடைசெய்யப்பட்டது. என்னுடைய சீனப் போதகர், டாக்டர் தீமோத்தேயு லின், என்ன செய்ய வேண்டுமென்று அறிந்திருந்தார். அவர் இது நடப்பதை நடக்கும்படி விட்டுவிட்டார் ஏனென்றால் தேவன் தமது மக்கள் மத்தியில் அசைவாடினதைச் சீனாவில் அவர் தமது அனுபவத்தில் அறிந்திருந்தார். நான் ஒரு போதும் பார்க்காத அதிக அற்புதமான தொடர்க்கூட்டங்கள் அவை. நம்முடைய சபையில் தேவன் அதைச் செய்வதைப் பார்க்க வேண்டுமென்று நான் எப்படியாக ஜெபித்தேன். நான்கு கிறிஸ்தவர்கள் தங்கள் இருதயங்களின் பாவங்களால் உணர்த்தப்பட்டு அவைகளை அறிக்கை செய்தபொழுது நமக்கு “எழுப்புதலின் தொடுதல்” உண்டானது. பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்தார் மற்றும் 13 இழக்கப்பட்ட மக்கள் மனமாற்றம் அடைந்தார்கள். ஆனால் நம்முடைய சபையின் மற்றவர்கள் ஒவ்வொருவரும் முழுமையாக அசைக்கப்படாமல் இருந்தார்கள். 13 பேர் மனமாற்றம் அடைந்தனர் ஆனால் நான்கு கிறிஸ்தவர்கள் மட்டுமே எழுப்புதல் அடைந்தார்கள் என்றால், உங்களில் 15 அல்லது 20 பேர் தங்கள் இருதயத்தின் பாவத்தைத் திருமதி ______ செய்தது போல் அறிக்கையிட்டால் நமது சபையில் என்ன நடக்கும் என்று நினைத்துப் பாருங்கள்! இன்று இரவிலே உன்னுடைய பாவங்களை நீ அறிக்கையிடுவாயா? அல்லது மகிழ்ச்சி இல்லாமல் இன்று இரவு வீட்டிற்குப் போவாயா? அறிக்கையிடாமல்? கண்ணீர் இல்லாமல்? எழுப்புதல் அடைந்த இருதயமில்லாமல்? எப்பொழுதும் போல வெளிர்ந்த மற்றும் மரித்த நிலையில் போகப் போகிறாயா?

திரு. க்யு டாங் லீ சொன்னார், “நான் ‘அந்த 39’ பேரில் ஒருவன். சபையில் பெரிய பிளவு ஏற்பட்டபொழுது என்னுடைய நண்பர்கள் மற்றும் பிறர் விட்டுப் போய்விட்டார்கள் நான் நமது சபையில் நிலைத்து இருந்தேன். நான் இரட்சிக்கப்பட்டேன். டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் நான் பின்மாற்றம் அடைந்துவிட்டேன் என்று சொன்னபொழுது, நான் நினைத்தேன், ‘இன்னும் நான் செய்வதற்கு என்ன இருக்கிறது? நான் ஏற்கனவே மனமாற்றம் அடைந்து விட்டேன். நான் இன்னும் என்ன செய்ய வேண்டும்?’ இயேசுவுக்காக என்னுடைய ஆதி அன்பை இழந்துவிட்டேன் என்பதை நான் உணராமல் இருந்தேன். டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் வெளிப்படுத்தல் 2:4-5ஐ குறிப்பிட்டார்கள், ‘ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு. ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பு’ (வெளிப்படுத்தல் 2:4, 5). அதன்பிறகு நான் முதலில் இரட்சிக்கபட்ட போது இருந்ததைத் போல இப்பொழுது இல்லை என்று நான் உணர்ந்து கொண்டேன். ‘நான் இருக்கிற வண்ணமாக’ மற்றும் ‘ஆச்சரியமான கிருபை’ போன்ற பாடல்களை நாங்கள் பாடும்பொழுது நான் அழுது ஆனந்த கண்ணீர் விடுவது வழக்கம். இப்பொழுது எந்தவிதமான அன்பும் மகிழ்ச்சியும் இல்லாமல் வெறும் வார்த்தைகளில் பாடுகிறேன். இப்பொழுது என்னுடைய ஜெபங்கள் சத்தமாக இருக்கிறது, ஆனால் என்னுடைய ஜெபங்கள் வெறும் வார்த்தைகளே, நல்ல வார்த்தைகள், ஆனால் வெறுமையான ஜெபங்கள் மட்டுமே. நான் இன்னும் முறையாக வாதாடி ஜெபித்தேன், ஆனால் தேவன் எனக்குப் பதில் தருவார் என்ற உண்மையான எதிர்பார்ப்பு இல்லாமல் வெறுமையாக ஜெபித்தேன். என்னுடைய சத்தமான ஜெபங்கள் எல்லாம் வெறும் வார்த்தைகளே. அவைகள் வெறுமையான ஜெபங்கள். என்னுடைய இருதயத்தின் பாவங்களை நான் அறிக்கை இட வேண்டியது அவசியம் என்று, அதன்பிறகு நான் அறிந்து கொண்டேன். வேதம் சொல்லுவதை நான் நினைவுபடுத்திக் கொண்டேன்,

‘நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்’ (I யோவான் 1:9).

சங்கீதக்காரன் ஜெபித்ததை நான் நினைவு கூர்ந்தேன், ‘உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தாரும்’ (சங்கீதம் 51:12). அவன் சொன்னதை நான் நினைத்தேன், ‘தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்’ (சங்கீதம் 51:17)”.

திரு. லீ அவர்கள் நமது சபைக்குப் பண நெருக்கடி ஏற்பட்ட சமயத்தில் இருந்த “அந்த 39” பேர்களில் ஒருவர். அவர் ஒரு உண்மையுள்ள உதவிக்கார உறுப்பினர். நான் பிரசங்கம் செய்தபொழுது மேடையில் எனக்குப் பின்புறமாக அமர்ந்து இருந்தார். அவர் நம்முடைய மக்களுக்கு ஓர் உதாரணமாவார். அவர், “எனக்கு இன்னும் என்ன வேண்டும்?” என்று கேட்டார். பிறகு தேவன் அவருடைய இருதயத்தின் பாவங்களைக் காட்டி அவைகளை அறிக்கை செய்ய வேண்டும் என்றார். அவர் முன்னே வந்து தம்முடைய பாவங்களை அறிக்கை செய்தார். அவருடைய முகம் சிவப்பாக மாறும் அளவுக்கு அவர் கடினமாக அழுதார். தேவன் அவரை மன்னித்தார் மற்றும் அவருடைய இருதயத்தின் மகிழ்ச்சியைத் திரும்பத் தந்தார். இப்பொழுது அவர் இழந்து போன சந்தோஷத்தோடும் கண்ணீரோடும் ஜெபிக்கிறார். அவர் சொன்னார், “எங்களிடம் வெறுமையான ஜெபங்கள் இருக்கிறது. நாங்கள் ஐக்கியத்தில் கைகளைக் குலுக்கிக் கொள்ளும்பொழுது, எங்களிடம் ஒட்டாத புன்முருவல்கள் இருக்கிறது, பொய்யான புன்முருவல்கள் இருக்கிறது. உண்மையான அன்பு இல்லை. பொய்யான புன்முருவல் மட்டுமே”.

திரு. லீ அவர்கள் ஒரு சபையை நடத்துபவர் ஆவார். ஆனால் நீ உன்னுடைய ஆதி அன்பை இழந்து விட்டால் எப்படி உன்னால் சபையை நடத்த முடியும்? நீ இருக்கும் வெறுமையான அதே மதத்துக்குள்ளே மட்டுமே நீ நம்முடைய வாலிபப் பிள்ளைகளை நடத்த முடியும். நம்முடைய சபையை நடத்தும் ஒவ்வொரு தலைவர்களும் தங்கள் பாவத்தை அறிக்கை செய்ய வேண்டியது அவசியம், அல்லது நம்முடைய சபைக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. நான் சொன்னேன், “நம்மைப் பார்க்க வரும் மக்கள் நமது சபை பெருமை வாய்ந்தது என்று நினைப்பார்கள். நமக்கு உண்மையான அன்பு இல்லாத பொய்யான மதம் மட்டுமே இருக்கிறது என்பதை அவர்கள் உணர மாட்டார்கள். நம்முடைய சபை விரைவில் மற்ற மரித்துப்போன சுவிஷேச சபையைப் போல மாறிவிடாமல் இருக்க வேண்டுமானால் நம்முடைய தலைவர்கள் மற்றும் நம்முடைய உறுப்பினர்கள் தேவனுடைய தேவையை உணர்ந்து, அவர்களுடைய பாவங்களைக் கண்ணீரோடு அறிக்கை செய்து, இயேசுவின் இரத்தத்தால் திரும்பச் சேர்க்கப்பட வேண்டும், அவர் தமது இரத்தத்தைச் சிந்தி நம்முடைய இருதயங்களைக் குணமாக்குவார், நாம் இரட்சிக்கப்பட்ட ஆரம்பத்தில் பெற்றிருந்த பரிசுத்த அன்பை நமக்குக் கொடுப்பார். இயேசு சொன்னார், “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்” (யோவான் 13:35). சகோதர சகோதரிகளே, பெரியோர்களும் சிறியோர்களுமாகிய நாம், நம்மில் அநேகருடைய பாவங்களை அறிக்கை செய்யாவிட்டால், நம்முடைய சபையிலே உண்மையான அன்பை உடையவர்களாக நாம் ஒருபோதும் இருக்க முடியாது.

நீங்கள் என் வார்த்தையைக் கேட்டு உங்கள் பாவங்களை இந்த இரவில் அறிக்கை செய்வீர்கள் என்று நான் ஜெபிக்கிறேன். தயவுசெய்து எழுந்து நின்று பாடுங்கள், “ஓ தேவனே, என்னை ஆராய்ந்து பாரும்”.

“தேவனே, என்னை ஆராய்ந்து,
என் இருதயத்தை அறிந்துகொள்ளும்;
என்னைச் சோதித்து,
என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.
வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ
என்று பார்த்து நித்திய வழியிலே என்னை நடத்தும்”
   (சங்கீதம் 139: 23, 24).

இப்பொழுது பாடுங்கள், “என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், பாவமில்லாமலும்”.

என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், பாவமில்லாமலும்
   பாவத்தில் பிரகாசிக்கும் வெளிச்சத்தின் நிழலுமில்லாமலும்.
உம்முடைய ஆசிர்வதிக்கப்பட்ட முகத்தை மட்டும் பார்ப்பேனாக,
   உமது அளவில்லாத கிருபையினால் என் ஆத்துமாவுக்கு விருந்தளியும்.
என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், தெய்வீக இரட்சகரே,
   உமது மகிமையினால் எனது ஆவி பிரகாசிக்கும் வரையிலும்.
என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், அதை அனைவரும் பார்க்கும்படியாக
   உமது பரிசுத்த சாயல் என்னில் பிரதிபலிக்கும்படியாக நிரப்பும்.
   (“Fill All My Vision” by Avis Burgeson Christiansen, 1895-1985).

தயவுசெய்து பலிபீடத்துக்கு வந்து உங்கள் பாவங்களை அறிக்கையிடப் பயப்பட வேண்டாம். தயவுசெய்து வருவதற்குப் பயப்பட வேண்டாம். நமது சபை மறுபடியுமாக ஜீவிக்க அப்படியாகச் செய்யுங்கள்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

பிரசங்கத்திற்கு முன்னதாகப் பாடப்பட்ட தனிப்பாடலைப் பாடியவர்
திரு. பென்ஜமின் கின்சாடு கிரிபீத்: “Revive Thy Work”
(by Albert Midlane, 1825-1909).