Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




வரிசையாக மற்றும் வாதாடி ஜெபித்தல் - பகுதி II

ORDER AND ARGUMENT IN PRAYER – PART II
(Tamil)

திரு. ஜான் சாமுவேல் கேஹன் அவர்களால்
by Mr. John Samuel Cagan

செப்டம்பர் 3, 2016 அன்று சனிக்கிழமை மாலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில்
உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Saturday Evening, September 3, 2016

“நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும். அப்பொழுது நான் அவர் ஆசனத்துக்கு முன்பாக வந்துசேர்ந்து, என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாய் வைத்து, காரியத்தை ரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன்” (யோபு 23:3-4).


நாம் வரிசையாக மற்றும் வாதாடி ஜெபிப்பது எப்படி என்பதைப் பற்றிப் பார்த்து வருகிறோம். இதைக் கவனிப்பதற்காக, நாம் வேத வசனங்களையும் கதைகளையும் மனதில் கொள்ள வேண்டியது முக்கியமாகும். ஒப்புடைமையோடு வாதாடுதல் ஓர் உறுதியான நிலையை அடைய சக்தி வாய்ந்த ஒரு வழியாகும். ஒப்புடைமை என்பது இரண்டு காரியங்களுக்கு இடையில் உள்ள ஒத்த கருத்துகளை ஆராய்ந்து பார்ப்பதாகும். நீ ஒரு பெரிய அற்புதமான காரியத்தைக் குறித்து ஜெபிப்பாயானால், வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெரிய அற்புதமான காரியத்தைச் சுட்டிக் காட்டுவாயாக. கவனத்தைக் குறைவாக இழுக்கும் விதத்தில் நீங்கள் ஜெபித்து கொண்டு இருந்தால், தேவன் எவ்வளவு வரிசையாக மற்றும் குறிப்பாக நன்கு புலப்படும் பகுதிகளில் செயல்படுகிறார் என்று தெளிவாக்கலாம். இவைகள் அனைத்தும் தேவன் ஜெபங்களுக்குப் பதில் அளிக்கிற காரணத்தினால் மட்டுமே அர்த்தமுள்ளவைகளாகும். வேதத்தில் தேவன் வரிசையாக, காரணங்களோடு, வாதாடி ஜெபிக்கும் ஜெபங்களுக்குப் பதில் கொடுத்துள்ளது பற்றி அநேக சம்பவங்களில் கூறப்பட்டுள்ளன. தேவனோடு போராடினவர்களைப் பற்றியும் வேதத்திலே அநேக உதாரணங்கள் உள்ளன.

I. முதலாவதாக, வரிசையாகச் செய்த ஜெபத்திற்குத் தேவனுடைய மறுமொழி.

வனாந்தரத்திலே மோசே இஸ்ரவேலருக்காக ஜெபித்தான். மக்கள் தேவனைவிட்டுத் திரும்பி பொன் கன்று குட்டியைத் தொழுது கொண்டார்கள். தேவன் அவர்களை அழித்துவிடுவதாகப் பயமுறுத்தினார். மோசே மக்களுக்காக ஜெபித்தான். வேதம் சொல்லுகிறது,

“மோசே தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி: கர்த்தாவே, தேவரீர் மகா பலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உம்முடைய ஜனங்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றியெரிவதென்ன? மலைகளில் அவர்களைக் கொன்று போடவும், பூமியின்மேல் இராதபடிக்கு அவர்களை நிர்மூலமாக்கவும், அவர்களுக்குத் தீங்குசெய்யும்பொருட்டே அவர்களைப் புறப்படப்பண்ணினார் என்று எகிப்தியர் சொல்லுவானேன்? உம்முடைய கோபத்தின் உக்கிரத்தை விட்டுத் திரும்பி, உமது ஜனங்களுக்குத் தீங்குசெய்யாதபடிக்கு, அவர்கள்மேல் பரிதாபங்கொள்ளும்” (யாத்திராகமம் 32:11-12).

மோசே, “கர்த்தாவே, நீர் இந்த மக்களை அழித்துவிட்டால் உம்மைப் பற்றி மக்கள் என்ன சொல்லுவார்கள்? உம்முடைய மகத்துவமான நாமத்தைப் பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள்?” என்று தேவனிடம் சொன்னான். அதன் பிறகு மோசே தேவனுடைய வாக்குத்தத்ததை நினைவுபடுத்தினான்:

“உமது தாசராகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் இஸ்ரவேலையும் நினைத்தருளும்: உங்கள் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, நான் சொன்ன இந்தத் தேசம் முழுவதையும் உங்கள் சந்ததியார் என்றைக்கும் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக்கொண்டே அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே” (யாத்திராகமம் 32:13).

மோசே தேவனுடைய வாக்குத்தத்ததை நினைவுபடுத்துகிறார் அதாவது ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபுக்கு (இஸ்ரவேல்), அவர்களுடைய சந்ததிக்குக் கானான் தேசத்தைக் கொடுப்பேன் என்ற வாக்குத்தத்தை. “நீர் அந்த மக்களை இப்பொழுது அழித்துவிட்டால், உம்முடைய வாக்குத்தத்தம் நிறைவேறாமல் போகும்”. தேவன் மோசேயின் ஜெபத்திற்குப் பதில் கொடுத்தார். வேதம் சொல்கிறது, “அப்பொழுது கர்த்தர் தமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்குப் [தமது மனதை மாற்றிக் கொண்டார்] பரிதாபங்கொண்டார்” (யாத்திராகமம் 32:14). தேவன் தமது மனதை மாற்றிக் கொண்டார். அவர் அந்த மக்களை அழிக்கவில்லை. தேவன் மோசேயின் ஜெபத்திற்குப் பதில் கொடுத்தார்.

ஒரு வாதாடுதல் என்பது தேவனுடைய மக்களின் வருத்தங்களைக் குறிப்பிட்டும் இணைக்க முடியும். நாம் அனைவரும் மனிதர்கள். நமக்குக் கஷ்டங்கள் வரும்பொழுது, அவைகளால் நாம் வேதனையும் பாடுகளையும் அனுபவிக்கிறோம். லாசரு மரித்த சமயத்தில், இயேசுவும் அழுதார். நீ நேசிக்கும் ஒருவர் உன்னிடம் வந்து, அவர்கள் அடையும் வேதனையைச் சொல்லி, உதவிக்காகக் கேட்டுக்கொண்டால், அது உங்களை வல்லமையாகத் தூண்டும் சக்தியாக இருக்கும். நாம் மற்றவர்களிடம் எப்போதும் காட்டும் அன்பைவிட தேவன் மிகவும் அதிகமாக நமக்கு அன்பு காட்டுகிறார். உன்னுடைய இருதயத்தின் வேதனைகளை, உனது நண்பர்களின் இருதய வேதனைகளை, மற்றும் தேவனுடைய மக்களின் வேதனைகளை உங்கள் வாதாடும் ஜெபத்தில் கொண்டுவாருங்கள்.

எருசலேம் அழிக்கப்பட்ட பிறகு எரேமியா ஜெபிக்கறார், “கர்த்தாவே, எங்களுக்கு நேரிட்டதை நினைத்தருளும்; எங்கள் நிந்தையை நோக்கிப்பாரும்.” (புலம்பல் 5:1). எருசலேம் அழிக்கப்பட்ட பிறகு, சங்கீதக்காரர் சொன்னார்,

“தேவனே, புறஜாதியார் உமது சுதந்தரத்தில் வந்து, உமது பரிசுத்த ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி, எருசலேமை மண்மேடுகளாக்கினார்கள். உமது ஊழியக்காரன் பிரேதங்களை ஆகாயத்துப் பறவைகளுக்கும், உமது பரிசுத்தவான்களின் மாம்சத்தைப் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகக் கொடுத்தார்கள். எருசலேமைச் சுற்றிலும் அவர்களுடைய இரத்தத்தை தண்ணீரைப்போலச் சிந்தினார்கள்; அவர்களை அடக்கம்பண்ணுவாருமில்லை. எங்கள் அயலாருக்கு நிந்தையும், எங்கள் சுற்றுப்புறத்தாருக்குப் பரியாசமும் சக்கந்தமுமானோம்” (சங்கீதம் 79:1- 4).

அவர் அவருடைய யூத மக்களின் பாடுகளைத் தேவனிடம் சொன்னார். அதன் பிறகு தம்முடைய சொந்த மதிப்பை, அவருடைய சொந்த நாமத்தைப் பற்றிக் கொண்டவராக அவர் ஜெபிக்கிறார். அவர் தேவனிடம் ஜெபித்ததாவது, “எங்களை இரட்சிக்கும் தேவனே, நீர் உமது நாமத்தின் மகிமையினிமித்தம் எங்களுக்கு உதவிசெய்து, உமது நாமத்தினிமித்தம் எங்களை விடுவித்து, எங்கள் பாவங்களை நிவிர்த்தியாக்கும்” (சங்கீதம்79:9). அதன்பிறகு அவர் ஜெபித்ததாவது, “அவர்களுடைய தேவன் எங்கே என்று புறஜாதிகள் சொல்வானேன்?” (சங்கீதம்79:10). அவர் தேவனுடைய நாமத்தையும் அவருடைய சொந்த கனத்தையும் சார்ந்து கொண்டவராக இழக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஜெபித்தார்.

நான் நின்று ஜெபிப்பதற்கு முன்பாக, வேதாகமத்தில் தேவன் செய்த எந்தக் காரியம் தற்பொழுதுள்ள சூழ்நிலைக்குப் பொருந்த முடியும் என்று யோசிக்க முயற்சி செய்வேன். வேதாகமத்திலிருந்து குறிப்பிட்டுத் தேவனுக்கு முன்பாக சம்பவங்களை அறிமுகப்படுத்துவது ஆதாரங்களை வைப்பது போலாகும். நீங்கள் வேதாகமத்தைப் படிக்கும்போது அதில் கவனம் செலுத்திப் படிக்க வேண்டியது முக்கியமானதாகும். அநேகமாக, நீங்கள் ஒரு வசனத்தை வார்த்தைக்கு வார்த்தை நினைவுப்படுத்த முடியாவிட்டாலும், நீங்கள் வேதத்திலிருந்து பெற்ற ஒரு கருத்தை நினைவில் கொள்ளலாம், அந்தக் கருத்தை உங்கள் வாதாடும் ஜெபத்தில் உபயோகிக்கலாம். ஒருவேளை அதற்குச் சில படைப்பாற்றலும் யோசனையும் தேவைப்படலாம், ஆனால் ஒருவரோடு சிறப்பாக வாதாடுவதற்கு அது நமக்கு அடிக்கடி தேவையாக இருக்கிறது, முக்கியமாக தேவனிடத்தில் வாதாடுவதற்கு அவை தேவை. அப்பொழுது இருந்ததைப் போலவே இப்பொழுதும் தேவன் மாறாதவராக இருக்கிறார். தாவீது ஜெபித்தார், “நீரே எனக்குச் சகாயர்; என் இரட்சிப்பின் தேவனே, என்னை நெகிழவிடாமலும் என்னைக் கைவிடாமலும் இரும்” (சங்கீதம் 27:9).

மோசே ஜெபித்தார், “கர்த்தாவே, தேவரீர் மகா பலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து [எங்களை] புறப்படப்பண்ணின உம்முடைய ஜனங்கள்” (யாத்திராகமம் 32:11). அவர் சொல்கிறார், “ஓ தேவனே, நீர் எங்களை எகிப்து தேசத்தில் இருந்து வெளியே கொண்டு வந்தீர். நாங்கள் வனாந்தரத்திலே அப்படியே மடிந்து போகும்படி எங்களை வெளியேவிட்டுவிடக் கொண்டு வரவில்லை!” தேவன் மற்றவர்களுக்கு என்ன செய்தார்? வேதாகமக் காலங்களில்? வரலாற்றில்? நமது சபையில்? உனக்கு என்ன செய்தார்? கடந்த காலங்களில் தேவன் என்ன செய்தார் என்பதை நினைவில் கொண்டு எப்படி வாதாடி ஜெபிக்கலாம் என்று யோசி.

ஓ தேவனே, நீர் 18ஆம் நூற்றாண்டு வெஸ்லி மற்றும் வொய்ட்பீல்டுக்கு செய்த எழுப்புதலை அனுப்பும்.
உமது ஆவியை சீனா மற்றும் லேவிஸ் தீவுக்கு அனுப்பினது போல அனுப்பும். இங்கேயும் உமது ஆவியை அனுப்ப உம்மால் முடியும்!
நீர் என் ஆத்துமாவை இரட்சித்தீர். இங்கே உள்ள மற்றவர்களின் ஆத்துமாக்களையும் இரட்சித்தீர். இந்த நபரையும் இரட்சியும்!
பயங்கரமாகப் பிரிந்து போயிருந்த எங்கள் சபையை நீர் இரட்சித்தீர். நீர் எங்களை மரிக்கும்படிக்கு மட்டுமே கொண்டு வரவில்லை. அதனால், கர்த்தாவே, எங்களுடைய சபை ஜீவனுள்ளதாக இருக்க செய்யும்!
நீர் மகத்துவமான காரியங்களைச் செய்தீர் (உதாரணங்கள்). நீர் என்னுடைய ஜெபங்களுக்குப் பதில் கொடுத்தீர். மற்றவர்களுடைய ஜெபங்களுக்கும் பதில் கொடுத்து இருக்கிறீர் (உங்களுடைய ஜெபங்களையும் அல்லது மற்ற மக்களுடைய ஜெபங்களையும் குறிப்பிடவும்). அதனால் இந்த ஜெபத்திற்குப் பதில் அளியும்!

இயேசு கிறிஸ்துவின் பரிந்து பேசும் ஜெபத்தோடு பாடுகளை, மரணத்தை, இரத்தத்தை, எப்பொழுதும் ஜெபத்தில் சொல்ல வேண்டும். தம்முடைய நாமத்தில் ஜெபிக்கும்படி கிறிஸ்து நம்மை அழைத்தார். இயேசுவே நம்முடைய நீதியாக இருக்கிறார். பிதாவாகிய தேவனிடம் செல்ல அவர் ஒருவரே வழியாக இருக்கிறார். இயேசு சொன்னார், “என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6). இயேசு தமது சீஷர்களிடம் சொன்னார், “என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்” (யோவான் 14:14). உனக்குச் சொந்தமாக எந்த நீதியும் இல்லை. நீ பாவியாக மட்டுமே இருக்கிறாய் வேறு எந்த விதத்திலும் நீ மாற முடியாது. ஆனால் நீ கிறிஸ்துவை நம்பி இருந்தால், உன்னைப் பாவம் மன்னிக்கப்பட்டவராக, இயேசுவின் இரத்தத்தினால் கழுவப்பட்டவராகத் தேவன் பார்க்கிறார். நீ கிறிஸ்துவின் நீதியைப் பெற்றுக் கொள்வாய். அதனால் நீ இயேசுவின் நாமத்தில் ஜெபிக்க முடியும் பிறகு தேவன் உன்னைக் கேட்பார் உன்னை ஒரு பாவியாக அல்ல – உண்மையில், உன்னை இயேசுவைப் போலவே அவர் பார்ப்பார். வேதாகமம் சொல்லுகிறது,

“இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம். ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்” (எபிரெயர் 4:14, 16).

வேதம் சொல்லுகிறது, “ஆகையால், சகோதரரே… அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறது” (எபிரெயர் 10:20). நாம் தேவனுக்கு முன்பாக நிற்க எந்த உரிமையும் நமக்கு இல்லை, ஆனால் கிறிஸ்துவுக்குள் அவருடைய இரத்தத்தினாலே அவருடைய பிரசன்னத்திற்குள் நேரடியாகப் பிரவேசிக்க நமக்குத் தைரியம் உண்டு.

கிறிஸ்து தாமே நமக்காக ஜெபித்துக் கொண்டு இருக்கிறார். வேதம் சொல்லுகிறது, “[நமக்காக] வேண்டுதல் [ஜெபம்] செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவர்” (எபிரெயர் 7:25).

தேவன் ஒரு மனிதன், அவர் ஒரு எந்திரமோ அல்லது ஒரு விசையோ அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். கர்த்தர் ஜெபத்திற்குப் பதிலளிப்பார், இருந்தாலும் நீ தொடர்ந்து விடாப்பிடியாகக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் - சில நேரங்களில் அநேக வருடங்களாகக் கேட்க வேண்டும். டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் தம்முடைய அம்மா இரட்சிக்கப்படுவதற்காக அநேக வருடங்கள் ஜெபித்தார்கள். மரியா மான்சன், சீன மிஷனரியைச் சேர்ந்தவர், எழுப்புதலுக்காக இருபது வருடங்களுக்கு மேலாக ஜெபித்தார். அநேக நேரங்களில் மக்கள் எழுப்புதல் வருவதற்கு முன்பாக முப்பது அல்லது நாற்பது வருடங்கள் ஜெபித்தார்கள்.

எப்படி ஜெபிக்க வேண்டும் என்று தமது சீஷர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காக, இயேசு விடாப்பிடியான நண்பனுடைய உவமையைக் கொடுத்தார். அவர் சொன்னார், “பின்பு, தனக்கு அவன் சிநேகிதனாயிருக்கிறதினிமித்தம் எழுந்து அவனுக்குக் கொடாவிட்டாலும், தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினிமித்தமாவது [தொடர்ந்து, விடாப்பிடியாக] எழுந்திருந்து, அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (லூக்கா 11:8). உனக்குப் பதில் கிடைக்கும் வரையிலும் விடாமல் ஜெபிக்க வேண்டும்.

இயேசு சொன்னார், “கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்” (மத்தேயு 7:7). இதன் கிரேக்க அர்த்தம் “தொடர்ந்து கேட்க வேண்டும்”, “தொடர்ந்து தேட வேண்டும்”, “தொடர்ந்து தட்ட வேண்டும்” என்பதாகும். உங்களுக்குப் பதில் கிடைக்க அதிக நேரம் ஆகலாம் ஆனால் விடக்கூடாது. கிறிஸ்து சொன்னார், “அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப் பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?” (லூக்கா 18:7). சில நேரங்களில் பதில் வருவதற்கு ஏன் அதிக நேரம் எடுக்கிறது? ஏனென்றால் தேவன் ஒரு நபர், அவர் விசை அல்ல. தேவன் ஒரு இயந்திரமாகவோ அல்லது விசையாகவோ இருந்திருந்தால், நீங்கள் ஒருமுறை ஜெபித்தவுடனே பதில் கிடைக்கலாம். ஆனால் தேவன் ஒரு மனிதன். சில நேரங்களில் தேவன் பதில் கொடுப்பதற்கு முன்பாக அதிக நேரம் காத்திருக்கும்படி செய்கிறார்.

ஏனென்றால் தேவன் ஒரு நபர், அவர் விசை அல்ல, சில நேரங்களில் “இல்லை” என்ற பதில் கிடைக்கிறது. ஜெபம் என்பது ஒரு மாயஜாலம் அல்ல. அது தேவனை மயக்கும் ஒரு வித்தை அல்ல. தேவன் செய்தாக வேண்டுமென்று ஜெபத்தின் மூலமாகக் கட்டாயப்படுத்த முடியாது. தேவன் காரியங்களைச் செய்ய வேண்டுமென்று வேண்டிக்கொள்ளுவது ஜெபமாகும். தேவன் ஒரு விசை அல்ல. அவர் ஒரு நபர். அவர் அன்புள்ள கவலைப்படுகிற தேவனாக இருப்தால், அவர் ஜெபத்திற்குப் பதில் கொடுக்கிறார்; ஒருவிசையைப் போலத் தானியங்கியாகச் செயல்படுவது அல்ல, ஆனால் ஒரு நபர் மற்ற நபருக்கு மறுமொழி கூறுவதைப் போலச் செயல்படுகிறார்.

நீ உன் ஜெபத்திற்கு எப்பொழுதும் பெற்றுக்கொள்ள முடியாது. தேவன் ஒரு நபர். அவர் “இல்லை” என்று சொல்லலாம். ஓர் இளம் பெண்ணான, ஆமி கார்மைக்கல் என்ற மிஷனரி தன்னுடைய கண்களின் நிறத்தை மாற்ற வேண்டும் என்று தேவனிடம் வேண்டினாள். அது நடக்கவில்லை, அவள் ஆச்சரியத்தோடு இருந்தபோது தேவன் “ஆம்” என்பதைப் போல அவளுக்கு “இல்லை” என்று பதில் சொன்னார்.

II. இரண்டாவதாக, தேவனுடைய வாக்குத்தத்தங்களை உரிமை பாராட்டி வரிசையாக ஜெபித்தல்.

தேவன் மெய்யானவர். தேவன் உண்மையுள்ளவர். தேவன் தமது வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுபவர். வேத வசனங்களெல்லாம் உண்மையுள்ளவைகள். தேவன் சொன்னார் என்று வேதத்தில் சொல்லப்பட்டதைச் சத்தியமாக எடுத்துக்கொண்டு அதை ஜெபத்தில் உரிமை பாராட்ட முடியும். இயேசு சொன்னார், “உம்முடைய வசனமே சத்தியம்” (யோவான் 17:17). அவர் சொன்னார், “வேதவாக்கியம் தவறாததாயிருக்கிறது” (யோவான் 10:35).

தேவனுடைய வார்த்தைகளை இவ்வாறாக உரிமை பாராட்டு:

“என்று சொன்னீரே” (ஆதியாகமம் 32:12).
“தேவரீர் சொன்னபடியே செய்தருளும்” (II சாமுவேல் 7:25).

சங்கீதத்தில் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்குப் பிடித்தது 27ஆம் சங்கீதமாகும். அவர் இரண்டு வயதாக இருந்தபொழுது அவருடைய தகப்பனார் அவரை விட்டுப் போய்விட்டார். அவர் 12 வயதாக இருந்தபொழுது அவருடைய தாயாருடன் அவரால் வாழ முடியவில்லை, பல ஆண்டுகள் அவரைச் சரியாக கவனிக்க முடியாத உறவினர்களோடு அவர் வாழ வேண்டியதாக இருந்தது. சங்கீதம் 27:10 என்ற வார்த்தைகளில் அவர் ஆறுதல் பெற்று கொண்டார், “என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்”.

இயேசு சொன்னார், “உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?” (மத்தேயு 7:9-11). என்னுடைய தகப்பனார், டாக்டர் கேஹன், இந்த வசனத்தை அநேக தடவைகள் உரிமை பாராட்டுவார். அவர் சொன்னார், “தேவனே, என்னுடைய மகன் மீன் கேட்டால் நான் அவனுக்குப் பாம்பைக் கொடுக்க மாட்டேன். அவன் என்னிடம் அப்பம் கேட்டால் நான் அவனுக்குக் கல்லைக் கொடுக்க மாட்டேன். மற்றும் தேவனே, அதே போல எனக்கும் நீர் செய்ய மாட்டீர். தேவனே, நான் ஜெபிக்கிறேன், எனக்குத் தேவையானதை நீர் தர வேண்டும்”. தேவன் அப்படியே செய்தார்.

என்னுடைய தகப்பனார் தேவனுடைய வார்த்தையை உரிமை பாராட்டி நன்மையான பொருள்களுக்காக வேண்டுவார் – அவருடைய தேவையானவைகளுக்காக. உன்னுடைய தேவைகளுக்காகத் தேவனுடைய வார்த்தையை உரிமை பாராட்டி நீ கேட்க முடியும். நீ தேவனுடைய வார்த்தையை உரிமை பாராட்டிக் கேட்க முடியும் தேவனுடைய உதவி மற்றும் அவருடைய பிரசன்னத்திற்காகவும் - தேவனுடைய பரிசுத்த ஆவியானவரை அனுப்பும் படியாகவும். கிறிஸ்து சொன்னார், “பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?” (லூக்கா 11:13).

கிறிஸ்து அவருடைய நாமத்தில் செய்யப்படும் ஜெபத்திற்குப் பதில் அளிப்பதாக அவர் வாக்குக் கொடுத்து இருக்கிறார், கிறிஸ்துவின் நாமத்தின் மூலமாக. இயேசு சொன்னார், “என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்” (யோவான் 14:14). அந்த வாக்குத்தத்ததை நீ ஜெபிக்கும் போது உரிமை பாராட்டு.

மக்கள் குழுவாகச் சேர்ந்து செய்யும் ஜெபத்திற்குப் பதில் தருவதாகச் இயேசுவானவர் வாக்குப்பண்ணி இருக்கிறார், ஆலயத்தின் ஜெபக் கூட்டங்களிளோ அல்லது சிறிய குழுக்கள் சேர்ந்து ஜெபித்தாலோ இயேசு பதில் தருவார். கிறிஸ்து சொன்னார், “அல்லாமலும், உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத்தேயு 18:19). மறுபடியுமாக, இயேசு சொன்னார், “இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்” (மத்தேயு 18:20). நீங்கள் ஜெபிக்கும் போது இந்த வாக்குத்தத்ததை உரிமை பாராட்டுங்கள்.

நம்முடைய தேவைகளைச் சந்திப்பதாகத் தேவன் வாக்குக் கொடுத்திருக்கிறார். வேதம் சொல்லுகிறது, “என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்” (பிலிப்பியர் 4:19). நீ பணம் கேட்டு ஜெபித்தால் தேவன் உன்னைப் பணக்காரன் ஆக்குவார் என்பது இதன் பொருள் அல்ல. தேவன் உன்னுடைய எல்லா தேவைகளையும் சந்திப்பார் என்பதே இதன் பொருளாகும். அவர் உன்னுடைய தேவைகளைச் சந்திக்க சித்தமாக இருக்கிறார்! நீ ஜெபிக்கும் போது தேவனுடைய வசனத்தில் உள்ள இந்த வாக்குத்தத்ததை உரிமை பாராட்டு!

நீ செய்ய வேண்டியதைச் செய்ய தேவையான பெலத்தைக் கொடுப்பதாகத் தேவன் வாக்குக் கொடுத்திருக்கிறார். வேதம் சொல்கிறது, “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ [கர்த்தருக்குக் காத்திருப்பது என்பது ஜெபத்தைக் குறிக்கிறது!] புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்” (ஏசாயா 40:31). இந்த வாக்குத்தத்ததை நீ ஜெபிக்கும் போது உரிமை பாராட்டு!

நீ கஷ்டத்தில் இருக்கும்போது அவரை நோக்கிக் கூப்பிட்டால் அவர் உனக்குச் செவி கொடுப்பதாகத் தேவன் வாக்குப்பண்ணி இருக்கிறார். தேவன் சொன்னார், “ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்” (சங்கீதம் 50:15). இந்த வாக்குத்தத்ததை உரிமை பாராட்டு. தேவன் தமது வார்த்தையில் சொன்னதை அவரிடம் சொல்லு. அதன் பிறகு அவரை நோக்கிக் கூப்பிடு. “தேவனே, நான் ஆபத்தில் இருக்கிறேன். தயவுசெய்து எனக்கு உதவி செய்யும்”.

நீ ஒருபோதும் இதுவரை பார்க்காத காரியங்களுக்காக - எழுப்புதல் போன்ற காரியங்களுக்காக - ஜெபிக்கும்போது அதைக் கேட்பதாகத் தேவன் வாக்குப்பண்ணி இருக்கிறார். தேவன் சொன்னார், “என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்” (எரேமியா 33:3). நீ எழுப்புதலுக்காக ஜெபிக்கும் போது இந்த வாக்குத்தத்ததை உரிமை பாராட்டு.

ஒருபோதும் முடியாதது போலக் காணப்படும் காரியங்களுக்காக ஜெபிக்க பயப்பட வேண்டாம். கிறிஸ்து சொன்னார், “தேவனாலே எல்லாம் கூடும்” (மாற்கு 10:27). எரேமியா தேவனிடம் சொன்னார், “உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை” (எரேமியா 32:17).

நீ விசுவாசிக்க முடியாத காரியங்கள் நடக்கும், அல்லது நடக்க முடியும் என்று நீ ஜெபிக்க முடியும். ஒரு மனிதன் கிறிஸ்துவிடம் தன் மகன் எப்படியாகப் பிசாசினால் கஷ்டப்பட்டான் என்று சொன்னான். கிறிஸ்து அவனிடம் கூறினார், “நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்” (மாற்கு 9:23). அந்த மனிதன் சொன்னான், “விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும்” (மாற்கு 9:24). அந்தப் பிள்ளையின் தகப்பன் இது நடக்கும் என்று விசுவாசிக்க முடியாவிட்டாலும் கிறிஸ்துவானவர் அந்தப் பொல்லாத ஆவியிலிருந்து அந்தப் பிள்ளையை விடுவித்தார். உன்னுடைய நம்பிக்கை பெலவீனமாக இருந்தாலும், பதில் வரும் என்று உன்னால் விசுவாசிக்க முடியாவிட்டாலும் நீ ஜெபிக்க வேண்டுமென்று தேவன் உன்னை உற்சாகப்படுத்துகிறார்.

டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் “அவிசுவாசம் மற்றும் எழுப்புதல் - ஒரு புதிய உள்நோக்கு” என்ற ஒரு போதனையைப் பிரசங்கித்தார்.

நீ எப்படி ஜெபிக்க வேண்டும் என்று அவர் காட்டினார், எழுப்புதலின் அதிசயம் போன்ற காரியங்களுக்காக, நீ அதை ஒருபோதும் பார்க்காவிட்டாலும் அதற்காக ஜெபிக்க வேண்டும். வேதாகமத்தில் தேவன் சொன்னார், “தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்” (ஏசாயா 44:3). லேவிஸ் என்ற தீவிலிருந்த ஒரு மனிதன் அந்த வாக்குத்தத்தைத் தனது ஜெபத்திலே உரிமை பாராட்டினான். அங்கே தேவன் ஒரு பெரிய எழுப்புதலை அனுப்பினார்.

வேதாகமத்தில் அநேகம், அநேகமான வாக்குத்தத்தங்கள் உள்ளன. தேவன் தமது வார்த்தையைக் கனம் பண்ணுவார். ஜெபத்தில் அவருடைய வார்த்தையை உரிமை பாராட்டுங்கள். அவருடைய வாக்குத்தத்தங்களை உரிமை பாராட்டுங்கள்! தேவன் உன்னுடைய வரிசையாக மற்றும் வாதாடி ஜெபிக்கும் ஜெபத்தைக் கேட்பார். ஆமென்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.


முக்கிய குறிப்புகள்

வரிசையாக மற்றும் வாதாடி ஜெபித்தல் - பகுதி II

ORDER AND ARGUMENT IN PRAYER – PART II

திரு. ஜான் சாமுவேல் கேஹன் அவர்களால்
by Mr. John Samuel Cagan

“நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும். அப்பொழுது நான் அவர் ஆசனத்துக்கு முன்பாக வந்துசேர்ந்து, என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாய் வைத்து, காரியத்தை ரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன்” (யோபு 23:3-4).

I.   முதலாவதாக, வரிசையாகச் செய்த ஜெபத்திற்குத் தேவனுடைய மறுமொழி, யாத்திராகமம் 32:11-12, 13, 14; புலம்பல் 5:1; சங்கீதம் 79:1-4, 9, 10; சங்கீதம் 27:9; யோவான் 14:6, 14; எபிரெயர் 4:14, 16; 10:19; 7:25; லூக்கா 11:8; மத்தேயு 7:7; லூக்கா 18:7.

II  இரண்டாவதாக, தேவனுடைய வாக்குத்தத்தங்களை உரிமை பாராட்டி வரிசையாக ஜெபித்தல், யோவான் 17:17; யோவான் 10:35; ஆதியாகமம் 32:12; II சாமுவேல் 7:25; சங்கீதம் 27:10; மத்தேயு 7:9-11; லூக்கா 11:13; யோவான் 14:14; மத்தேயு 18:19, 20; பிலிப்பியர் 4:19; ஏசாயா 40:31; சங்கீதம் 50:15; எரேமியா 33:3; மாற்கு10:27; எரேமியா 32:17; மாற்கு 9:23, 24; ஏசாயா 44:3.