Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




வரிசையாக மற்றும் வாதாடி ஜெபித்தல் - பகுதி 1

ORDER AND ARGUMENT IN PRAYER – PART I
(Tamil)

திரு. ஜான் சாமுவேல் கேஹன் அவர்களால்
by Mr. John Samuel Cagan

செப்டம்பர் 2, 2016 அன்று வெள்ளிக்கிழமை மாலை வேளையில் லாஸ்
ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Friday Evening, September 2, 2016

“நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் அவர் ஆசனத்துக்கு முன்பாக வந்து சேர்ந்து, என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாய் வைத்து, காரியத்தை ரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன்.” (யோபு 23:3-4).


கீழே வரும் “வரிசையாக மற்றும் வாதாடி ஜெபித்தல்” என்பது சி. எச். ஸ்பர்ஜன் அவர்களின் உபதேசத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். ஸ்பர்ஜன் அவர்களுடைய கருத்துக்கள் எளிமையான ஆங்கிலத்தில் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு, டாக்டர் ஹைமர்ஸ் மற்றும் டாக்டர் கேஹான் அவர்களின் உதவியோடு, நான் சில கருத்துக்களையும் வேதவசனங்களையும் சேர்த்திருக்கிறேன்.

நாம் இப்பொழுது வாசித்த வசனத்தில், யோபு தேவனைக்கண்டு அவரிடத்தில் ஜெபிக்க விரும்பினான். அவன் தேவனிடத்தில் சாதாரணமானவிதத்தில் பேசவிரும்பவில்லை. யோபுவின் கருத்துக்களில் இன்னும் சில அதிக தீவிரமான காரியங்கள் இருக்கின்றன. அவன் இவ்வாறாக ஜெபிக்க விரும்பினான்: “என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாய் வைத்து, காரியத்தை ரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன்” (யோபு 23:4). இந்த வசனத்திலிருந்து உண்மையான ஜெபத்தைப்பற்றிய இரண்டு காரியங்களைக் கற்றுக்கொள்ளலாம் - தீவிரமான ஜெபத்தைப் பற்றி.

I. முதலாவது, வரிசை படுத்தப்பட்ட தீவிரமான ஜெபம் – ஒழுங்குபடுத்தப்பட்டது.

யோபு சொன்னார், “என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாய் வைத்து” (யோபு 23:4).

நீங்கள் என்ன ஜெபிக்கப் போகிறீர்கள் என்பதை யோசியுங்கள். உண்மையாக உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை யோசியுங்கள். அந்த ஒரு காரியத்தின்மீது குறிப்பாகக் கவனத்தை வையுங்கள். அது உங்களுக்கு முக்கியமானதாக இருக்க வேண்டியது அவசியம். யாராவது ஜான் ஆர். ரைஸ் அவர்களிடம் ஜெப வேண்டுதல் கொடுத்தால், அவர் அதற்காக அப்படியே ஜெபிக்க ஒருபோதும் ஒத்துக்கொள்ள மாட்டார். அதற்குப் பதிலாக அவர் அந்த நபரிடம் தேவன் அவருக்கு அதற்காக ஜெபிக்க ஒரு பாரத்தைக் கொடுக்கும்படி ஜெபிக்கப் போவதாகச் சொல்லுவார். இல்லையென்றால் மெய்யாகவே அவர் அந்த வேண்டுதலை விரும்பமாட்டார் மற்றும் அவருடைய ஜெபம் உண்மையான ஒரு ஜெபமாக இருக்காது. உண்மையாக உனக்கு என்ன வேண்டும்? உனக்கு அது ஏன் வேண்டும் என்பதை குறிப்பெடுத்துக்கொள். அது ஏன் நடக்கவில்லை என்று புரிந்துகொள்ள முயற்சி செய். அது ஏன் உனது சக்திக்கு வெளியே இருக்கிறது என்பதை நினைத்துப்பார். அதைப்பற்றி உனக்கு உணர்வில்லாதிருந்தால், உணர்வைத் தரும்படி தேவனிடம் கேள். பதட்டமில்லாத ஜெபங்கள் ஒழுங்கில்லாததாக இருக்க வாய்ப்புண்டு. பதட்டமில்லாத ஜெபங்கள் அரைமனதோடு செய்யப்படவும் வாய்ப்புண்டு. அரைமனதோடு நீங்கள் ஏதோ ஒரு காரியத்திற்காக அணுகினால், அனேகமாக நீங்கள் சரியான ஆயத்தமாக இல்லை. நீ ஜெபிப்பதற்கு முன்பாக உன்னை நீயே ஆயத்தப்படுத்திக்கொள். சபையிலோ அல்லது வீட்டிலோ, விஷேசமாக ஜெபத்தை நீ முன் நின்று நடத்தினால், உன்னுடைய மேம்படுத்தலைச் சார்ந்திருக்க வேண்டாம். உன்னுடைய இருதயம் அப்பொழுதுள்ள வேலையில் நிலையாக வைக்கப்படவேண்டும். உன்னுடைய கவனம் அந்தச் சூழ்நிலையின் மேல் இருக்க வேண்டும். உனக்குச் சில பொருள்கள் தேவையாக இருக்கிறது. உனக்குச் சில பொருள்கள் முக்கியத் தேவையாக இருக்கிறது. ஆனால் அதை உன்னால் அடைய முடியவில்லை. அது உன்னுடைய சக்திக்கு வெளியில் இருக்கிறது. அது உன்னுடைய கட்டுப்பாட்டுக்கு வெளியே இருக்கிறது. அதனால் நீ இந்தப் பிரபஞ்சத்தின் தேவனிடம் இயேசுவின் நாமத்தில் கேட்க இருக்கிறாய். நீ தேவனை உணர்த்தும் விதத்தில் தேவனிடம் அணுகுவாய். உன்னுடைய தேவைகளுக்கு ஏற்ப அவர் உனக்குச் செய்ய வேண்டும் என்று தேவனை உணர்த்துகிறாய். அது ஒரு தீவிரமான சூழ்நிலையாகும். அது கவனமான கருத்தில்லாமல் அணுகக் கூடாதது. நீ எதற்காக ஜெபிக்கிறாய் என்று யோசித்து பார்.

உன் ஜெபத்தை ஒழுங்கு செய். ஒரேவிதமான வேண்டுதல்களை மறுபடியும் மறுபடியுமாகத் திரும்பச் சொல்லுவது ஜெபம் என்று சில மக்கள் நினைக்கிறார்கள். சிலர் தாங்கள் ஜெபிக்கும் ஒவ்வொரு நேரத்திலும் அதே காரியங்களைச் சொல்ல வேண்டும் அதுதான் ஜெபம் என்று நினைக்கிறார்கள். ஒருவர் ஒரே காரியத்தை ஒவ்வொரு நேரத்திலும் ஜெபித்து கொண்டு இருந்தால், தன்னுடைய ஜெபத்தின் மேல் அவர் கவனம் வைக்கவில்லை. அவர் தம்முடைய வேண்டுதலை தேவனிடம் தெரியப்படுத்த ஒரு வினாடி நேரம் செலவிட்டுத் தமது வேண்டுதலை முறைபடுத்தவில்லை. சிலர் மதம் சம்மந்தமான வார்த்தைகளைச் சொல்லுவது ஜெபம் என்று நினைக்கிறார்கள். ஆனால் தேர்தெடுக்கப்பட்டுக் கோர்க்கப்பட்ட வார்த்தைகள் மெய்யான விவாதங்களின் இடத்தை எடுத்துக் கொள்ள முடியாது. நான் உன்னிடமிருந்து கொஞ்சம் பணம் கடன் வாங்க விரும்பினால், என்னுடைய விவாதத்தை வலியுறுத்த பெரிய வார்த்தைகளை மட்டுமே சார்ந்திருக்க மாட்டேன். நான் ஒருவேளை என்னுடைய வார்த்தைத் தொகுதியை உடனடியாக மாற்றினால் உங்களுக்கு உணர்த்த முடியாது, ஆனால் நான் சொன்னது உங்களுக்கு அர்த்தத்தை உண்டாக்காது. மதச் சம்பந்தமான வார்த்தைகள் ஒத்தக்கருத்துக்களை மாற்ற முடியாது.

சிலர் ஜெபத்தை தேவனிடம் சத்தம் போடுவதற்காகச் செய்வார்கள். ஆனால் ஒரு நபர் சத்தமிடுவது ஒரு விவாதத்திற்கு மாற்று அல்ல. ஒரு காரியத்திலிருந்து மற்றொரு காரியத்திற்கு மூர்க்கமாகப் போவதும் ஜெபமல்ல. ஒரு குறிபிட்ட வேண்டுதல் உனக்கு முக்கியமாக இருந்தால், அதைவிட்டு அடுத்ததற்கு உடனடியாக மாறுவதில் அர்த்தமில்லை மற்றும் முன்பு வேண்டினதை முழுமையாக முடிக்காமல் விடமாட்டாய். சிலர் மிகவும் பொதுவான வார்த்தைகளில் ஜெபிப்பார்கள்: “அன்புள்ள தேவனே, ஆலயத்தை ஆசீர்வதியும், இழக்கப்பட்டவர்களை இரட்சியும், என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதியும்”. ஆனால் அதில் அதிகமான கருத்துக்கள் அடங்கியிருக்காது. அது ஒரு உண்மையில்லை என்ற காரியத்திற்கு அடையாளமாகும். அது ஒழுங்குபடுத்தப்பட்ட முறையான ஜெபமும் அல்ல.

நீ நீதிபதியிடம் பேச ஒரு நீதிமன்றத்திற்குப் போனால், நீ என்ன பேசப் போகிறாய் என்று யோசிப்பாய். உன்னைக் கேட்கும் கேள்விகளுக்குக் கவனமாகப் பேச எச்சரிக்கையாக இருப்பாய். உனக்குத் தேவையானதைக் கொடுக்க நீதிபதியை எப்படி உணர்த்துவது என்று யோசிப்பாய். உன்னுடைய ஈடுபாடு மற்றும் ஆயத்தம் அந்த உரையாடலில் வேண்டுதலின் தீவிரத்திற்கு ஏற்ப அதிகமாகும் என்றும் நான் விவாதிப்பேன். உன்னுடைய வேலையில் உனக்கு ஏதாவது தேவைப்பட்டால் அதை உனது அதிகாரியிடம் கேட்கப் போகும்போது, என்ன பேசப் போகிறோம் மற்றும் அதை எப்படிக் கேட்கப்போகிறோம் என்று யோசிப்பாய். அப்படியே ஜெபிக்கும்போதும் தேவனிடத்தில் யோசித்துப் பேசு. ஒன்றுமற்ற வெறுமையான கருத்துக்களோடு தேவனிடம் அணுக வேண்டாம். முழுமையற்ற யோசனைகளோடும் தேவனிடம் அணுக வேண்டாம். இவைகளை நீயாகக் கடைபிடி.

சூழ்நிலையின் நிமித்தமாகப் பல்வேறு பக்கங்களைக் கவனமாகப்பார். உனக்கு மட்டுமல்ல உன்னைச் சுற்றியுள்ள மக்களின் சூழ்நிலைத் தாக்கம் எப்படி இருக்கிறது. அந்தச் சூழ்நிலையில் தேவனுடைய மகிமை இருக்குமா? அந்தச் சூழ்நிலையினால் தேவனுடைய ஊழியமும் தேவனுடைய இராஜ்ஜியமும் விருத்தியாகுமா? அந்த வேண்டுதல் கிடைக்காவிட்டால் பின்விளைவுகள் என்ன? உன்னுடைய வேண்டுதலை தேவன் நிறைவேற்றினால் என்ன நடக்கும்? ஒவ்வொரு சூழ்நிலைக்கும் அநேக வித்தியாசமான பக்கங்கள் உள்ளன. ஒரு தனிச் சம்பவம் அல்லது நிகழ்ச்சி உன்னுடைய அனுபவத்தோடு மட்டுமே ஆரம்பிப்பதோ அல்லது முடிவடைவதோ இல்லை. இந்த வேண்டுதல் முக்கியமானது. அது உனக்கு முக்கியமானது. அது உன்னுடைய குடும்பத்திற்கும், அல்லது உனது சபைக்கும், அல்லது உனது நண்பருக்கும், அல்லது ஒருவேளை தேவனுக்கும்கூட முக்கியமானதாக இருக்கலாம். தேவன் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை நினைவில் கொள். ஒரு மனிதனாகிய அதிகாரி அல்லது நீதிபதியைவிடத் தேவன் மகாபெரியவர் மற்றும் உயர்ந்தவர்.

ஜெபத்தில் உனக்கு என்ன மனபாங்கு இருக்க வேண்டும்? நாம் ஒன்றுமில்லை வெறும் “தூளும் சாம்பலும்” (ஆதியாகமம் 18:27) என்பதை மனதில் கொள்ளவேண்டும். தேவனிடமிருந்து நாம் எதையும் கேட்பதற்கு நம்மில் எந்த உரிமையுமில்லை. ஆனால் இயேசு கிறிஸ்து மூலமாக “கிருபாசனத்திற்கு முன்பாகத் தைரியமாக” (எபிரேயர் 4:16) நீ வரமுடியும். கிறிஸ்துவுக்குள்ளும் அவர் மூலமாகவும் நீ நேரிடையாகப் பிதாவினிடத்தில் வரமுடியும். இயேசுவின் நாமத்தில் நீ ஜெபிக்கும்பொழுது, தமது சொந்த குமாரன் இயேசு கிறிஸ்துவைக் கேட்பதுபோல அவர் உன்னைக் கேட்பார். நீ கிறிஸ்துவை நம்பி இருந்தால், அவர் மூலமாக நீ தேவனுடைய குமாரன் அல்லது குமார்த்தி ஆவாய். அது ஒரு சிறிய கருத்தல்ல. நீ இயேசுவின் நிமித்தமாகப் பிரியமானவன் மற்றும் தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டவன். தேவன் உன்னை கேட்பார்!

நீ என்ன கேட்கபோகிறாய் என்று யோசி. உனக்கு என்ன வேண்டும் என்பதை தெளிவுபடுத்திக்கொள். இயேசு நம்மை ஜெபிக்கச் சொன்னதாவது, “எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்” (மத்தேயு 6:11). அவர் தமது சீஷர்களுக்கு ஜெபிப்பதைப்பற்றிப் போதிக்கும்பொழுது அவர் சொன்ன உவமையானது, “நீ மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகத் தரவேண்டும்” (லூக்கா 11:5).

ஏதாவது ஒரு காரியத்திற்காக ஜெபிக்க வேண்டுமென்று நீ விரும்பினால், முதலில் அதற்காக ஜெபி. ஆபிரகாம் ஜெபித்தான், “இஸ்மவேல் உமக்கு முன்பாகப் பிழைப்பானாக!” (ஆதியாகமம் 17:18). ஸ்பர்ஜன் சொன்னார், “‘இஸ்மவேல்’ என்று கூறு, நீ நினைப்பது ‘இஸ்மவேல்’ என்றால்”.

யாராவது ஒருவர் மாறவேண்டுமென்று நீ ஜெபித்துக் கொண்டிருந்தால், அந்த நபருடைய பெயரைச் சொல்லி ஜெபி. நீ ஜெபித்துக் கொண்டு இருக்கும்பொழுது, அந்த நபருடைய பெயரை உன்னுடைய நினைவில் தேவனிடத்தில் கொண்டுவந்தால் போதும். அது சொல்லாமல் விடப்பட்டாலும், நீ இன்னும் தேவனிடத்தில் தொடர்ந்து யாருக்காகக் கேட்கிறாய் என்று சரியாகத் தெரிவிக்க முடியும். உன்னுடைய இருதயத்தின் பெருமூச்சையும் உச்சரிப்பையும் தேவனால் கேட்கமுடியும். ஒரு வேண்டுதலை நீ கேட்கவிரும்பினால், குறிப்பிட்டு அதைக் கேள். “இந்த வேலை எனக்குக் கிடைக்கும்படி உதவிசெய்யும்”. “என்னுடைய வியாதியை (அல்லது மற்றவருடைய வியாதியை) குணமாக்கும்”. “எனக்குப் பெயர்களும் தொலைபேசி எண்களும் கிடைக்கும்படி செய்யும். நான் இன்று இரவு சந்திக்கப் போகிறவர்களின் இருதயத்தையும் மனதையும் திறந்தருளும் அதனால் அவர்கள் தங்கள் பெயர்களையும் தொலைபேசி எண்களையும் எனக்குக் கொடுக்கும்படி செய்யும்”.

அவர்களைப்பற்றி நினைக்காமல் ஜெபங்களில் ஓடினால், நீங்கள் “வீண்வார்த்தைகளை அலப்புகிறீர்கள்” என்பது பொருள். இயேசு சொன்னார், “அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்” (மத்தேயு 6:7). நீங்கள் ஒரு ஜெபப்பட்டியலை வைத்துக்கொண்டு தொடர்ச்சியாக யோசனையில்லாமல் ஓடினால், ஒவ்வொரு முறையும் இதையே ஜெபித்தால் - வீட்டிலோ அல்லது சபையிலோ - நீங்கள் வீண்வார்த்தைகளை அலப்புகிறீர்கள் என்று பொருள். கத்தோலிக்கர் ஜெபமாலை அல்லது புத்த அட்டவணையைப் போல முணுமுணுப்பதாகும்.

ஒவ்வொரு ஜெபகூட்டத்திலும் நின்று அதையே ஜெபித்து ஏதோ ஒரே காரியத்தை சொல்லுவாயானால், அது பதிலளிக்கப்படும் என்று எதிர்பார்க்காதே. நீ எதற்காக ஜெபிக்கப்போகிறாய் என்று யோசி. நீ தேவனிடத்தில் கேட்கிறாய் –ஆள்தத்துவமுள்ள தேவன் - சிலவற்றைக் குறிப்பாகக் கேட்கிறாய். பிறகு உனக்கு என்ன வேண்டுமோ அதை அவரிடம் வேண்டிக்கேள்.

II. இரண்டாவதாக, தீவிரமான ஜெபம் வாதாடி ஜெபிப்பதாகும் - காரணங்கள்.

யோபு சொன்னார், “காரியத்தை ரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன்” (யோபு 23:4). “நான் கேட்பவைகளைத் தேவன் ஏன் எனக்குக் கொடுக்க வேண்டும் என்ற காரணங்களால் என்வாயை நிரப்புவேன்”. எப்படிப்பட்ட வாதங்கள் - காரணங்கள் - உபயோகப்படுத்தப்பட வேண்டும்?

முதலாவதாக, தேவனுடைய குணத்தைபற்றிப் பேசு - அவர் என்னவாக இருக்கிறார். சோதோமை அழிக்கக்கூடாது என்று ஆபிரகாம் ஜெபித்தார். ஆபிரகாம் சொன்னார்,

“அப்பொழுது ஆபிரகாம் சமீபமாய்ச் சேர்ந்து: துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ? பட்டணத்துக்குள்ளே ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இருப்பார்கள், அதற்குள் இருக்கும் அந்த ஐம்பது நீதிமான்கள்நிமித்தம் இரட்சியாமல் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ? துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ என்றான்” (ஆதியாகமம் 18:23 - 25).

ஆபிரகாம் தேவனுடைய நீதியை வேண்டினான். அவன் சொல்கிறான், “பட்டணத்துக்குள்ளே ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இருப்பார்கள், அதற்குள் இருக்கும் அந்த ஐம்பது நீதிமான்கள்நிமித்தம் இரட்சியாமல் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ?” அது நியாயமாகுமா? “சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ?” உண்மையாக, அங்கே 10 நீதிமான்கள் இருந்தால் அதை அழிக்கமாட்டேன் என்பதை தேவன் ஒத்துக் கொள்ளும் வரையிலும் தொடர்ந்து ஜெபித்து கொண்டே இருந்தான். ஆபிரகாம் விடாப்பிடியாக இருந்தான் என்பதை கவனியுங்கள். கோபத்துக்குக் காரணம் இருந்தபொழுதும் ஆபிரகாமால் தைரியமாகக் கேட்க முடிந்தது. பாவம் இருந்தபொழுதும் இரக்கத்துக்காக ஜெபிக்க ஆபிரகாமுக்கு விசுவாசம் இருந்தது. தேவனுடைய குணத்தின் மேல் போதுமான அளவு நம்பிக்கை கொண்டவனாக அப்படிப்பட்ட விவாதத்தில் அவன் ஈடுப்பட்டான். ஆபிரகாம் தேவனுக்கு மரியாதை கொடுக்காமல் இல்லை. தேவன் மேல் மிகவும் அதிகமான மரியாதையை வைத்திருந்ததனால் தேவனுடைய குண நலத்தின் தன்மையை அறிந்து வேண்டுதல் செய்ய அவனால் முடிந்தது. தேவன் நல்லவர் என்று ஆபிரகாம் விசுவாசிக்காமல் இருந்திருந்தால், அவர் ஞானமாக அமைதியோடு இருந்திருக்க முடியும். ஆனால், தேவன் நீதிபரர் என்று ஆபிரகாம் அறிந்திருந்தான். அதனால் ஆபிரகாம் தேவனிடம் காரணங்களோடு வாதாடினான்.

தேவன் இன்றும் மாறாதவராக இருக்கிறார். வேதம் சொல்லுகிறது, “நான் கர்த்தர், நான் மாறாதவர்” (மல்கியா 3:6). வேதம் சொல்லுகிறது, “இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” (எபிரெயர் 13:8). தேவன் அப்பொழுது இருந்தது போலவே இப்பொழுதும் மாறாதவராக இருக்கிறார். நீ தேவனிடம் ஜெபிக்கலாம், அவர் உன்னைக் கேட்பார், அந்த நாட்களில் மக்கள் ஜெபித்தபொழுது கேட்டது போலவே இப்பொழுதும் தேவன் உன்னைக் கேட்பார். ஒரு நீதிமன்றத்தில், வழக்குரைஞர் அடிக்கடி மனு செய்வார்கள். முன்னதாக நடந்த சம்பவத்தை ஓர் உதாரணமாக எடுத்துக் கொண்டு அதே போன்ற சூழ்நிலைகளை கவனிக்கும்படி தங்கள் வழக்குகளில் வாதாடுவார்கள். நீங்கள் வேதத்தை வாசிக்கும்பொழுது அல்லது வேதம் பிரசங்கிக்கப்பட்டதைக் கேட்டு, என்ன படித்தாய் என்ன சொல்லப்பட்டது என்பதை நினைத்துப் பார். கடந்த காலங்களில் தேவன் என்ன செய்தார் எப்படிச் செய்தார் என்பது இன்று தேவனால் என்ன செய்ய முடியும் என்பதற்குப் பொறுந்தும். உன்னுடைய வாழ்க்கையில் தேவன் என்ன செய்தார் என்பதைக் கவனித்துப் பார். அதைக் குறிப்பாக வைத்துக் கொண்டு எதிர்காலத்தில் தேவனால் என்ன செய்ய முடியும் என்று யோசி. உன்னைச் சுற்றிலும் உள்ள மக்களுக்குத் தேவன் என்ன செய்தார் என்பதை நினை. விழித்திருந்து ஜெபிக்க வேண்டும் என்று இயேசு தமது சீஷர்களுக்குச் சொன்னார். பதில் கொடுக்கப்பட்ட ஜெபங்களில் தேவனுடைய வல்லமை இருந்ததை வைத்து அதனோடு தொடர்பு இல்லாததுபோல இருக்கும் சம்பவங்களைப் பாலம் போல இணைத்துவிடு. தேவனுடைய கொள்கை மாறாத குணாதிசியத்தோடு இணைத்து யோசித்து பார். தேவன் கடந்த காலங்களில் என்ன செய்தார் என்று நினைத்துப் பார். தேவன் எப்படிப்பட்டவர் என்பதை உரிமை பாராட்டு. வேதாகமத்தில் பெரிய மனிதர்கள் ஜெபித்ததை போலவே தேவனிடம் ஜெபி.

இரண்டாவதாக, தேவனுடைய நிலைப்புத் தன்மையை நீ உரிமை பாராட்டலாம். எலியா பாகாலின் தீர்க்க தரிசிகளை எதிர் கொண்டான். அந்தப் பொய்த் தீர்க்கதரிசிகளின் ஜெபங்களுக்குத் தேவன் பதில் அளிக்கவில்லை. ஆனால் எலியா தன்னுடைய பலியை ஏற்றுக் கொள்ளும்படி தேவனிடம் ஜெபித்தான். எலியா சொன்னதாவது,

“ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படி செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கப்பண்ணும். கர்த்தாவே, நீர் தேவனாகிய கர்த்தர் என்றும், தேவரீர் தங்கள் இருதயத்தை மறுபடியும் திருப்பினீர் என்றும் இந்த ஜனங்கள் அறியும்படிக்கு, என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும் என்றான்” (I இராஜாக்கள் 18:36-37).

எலியா ஜெபித்தார், “நீரே உண்மையுள்ள தேவன் என்பதை எங்களுக்குக் காட்டும்”. தேவன் எலியாவுக்குப் பதில் அளித்தார். தேவன் வானத்திலிருந்து அக்னியை அனுப்பி எலியாவின் பலியைப் பட்சித்தார்.

வருடங்கள் கடந்தது, எலியா பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டான், அவனுடைய சீஷனாகிய எலிசா ஜெபித்தார், “எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே?” (II இராஜாக்கள் 2:14). “எங்கே நீர் இருக்கிறீர், கர்த்தாவே?” தேவன் தம்மை அவனுக்குக் காண்பித்து யோர்தான் ஆற்றின் தண்ணீரை எலிசாவுக்காகப் பிரித்தார். தேவன் உண்மையானவர் என்பதை உணர்த்தினார்.

மூன்றாவதாக, தேவனுடைய வாக்குத்தத்தங்களைப் பற்றிப் பேசு - அவர் தமது வார்த்தையில் உண்மையாக இருப்பவர். II சாமுவேல், 7ஆம் அதிகாரத்தில், தேவன் நாத்தான் தீர்க்கதரிசி மூலமாகத் தாவீதுக்கு ஒரு குமாரன் பிறப்பான் என்றும், அவன் தேவனுடைய ஆலயத்தைக் கட்டுவான் என்றும், அவன் எருசலேமிலே அவருடைய சிங்காசனத்திலே வீற்றிருப்பான் என்றும், இஸ்ரவேல் மக்கள் என்றென்றும் நீடித்திருப்பார்கள் என்றும் வாக்குப் பண்ணினார். தாவீது தேவனிடம் சொன்னார்,

“உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலர் என்றைக்கும் உம்முடைய ஜனமாயிருப்பதற்கு, அவர்களைத் திடப்படுத்தி, கர்த்தராகிய நீர் தாமே அவர்களுக்குத் தேவனானீர். இப்போதும் தேவனாகிய கர்த்தாவே, நீர் உமது அடியானையும் அவன் வீட்டையும் குறித்துச் சொன்ன வார்த்தையை என்றென்றைக்கும் நிலைவரப்படுத்த, தேவரீர் சொன்னபடியே செய்தருளும். அப்படியே சேனைகளின் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் தேவனானவர் என்று சொல்லி, உம்முடைய நாமம் என்றென்றைக்கும் மகிமைப்படுவதாக; உமது அடியானாகிய தாவீதின் வீடு உமக்கு முன்பாக நிலைநிற்பதாக. உனக்கு வீடு கட்டுவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தராயிருக்கிற நீர் உமது அடியானின் செவிக்கு வெளிப்படுத்தினீர்; ஆகையால் உம்மை நோக்கி இந்த விண்ணப்பத்தைச் செய்ய உமது அடியானுக்கு மனத்தைரியம் கிடைத்தது. இப்போதும் கரித்தராகிய ஆண்டவரே, நீரே தேவன்; உம்முடைய வார்த்தைகள் சத்தியம்; தேவரீர் உமது அடியானுக்கு இந்த நல்விசேஷங்களை வாக்குத்தத்தம் பண்ணினீர். இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி அதை ஆசீர்வதித்தருளும்; கர்த்தரான ஆண்டவராகிய தேவரீர் அதைச் சொன்னீர். உம்முடைய ஆசீர்வாதத்தினாலே உமது அடியானின் வீடு என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக என்றான்” (II சாமுவேல் 7:24-29).

தாவீது தேவனிடத்தில் ஜெபம் பண்ணி அவருடைய வாக்குத்தத்தைக் காக்கும்படியும் அந்தக் காரியங்கள் நிறைவேறும்படியும் வேண்டினான். வேதம் சொல்லுகிறதாவது, “தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக” (ரோமர் 3:4). புதிய ஆங்கிலப்பதிப்பில் சொல்லப் படுவதாவது, “ஒவ்வொரு மனிதரும் பொய்யர் என்றாலும், தேவன் உண்மையுள்ளவர்”. வேதம் சொல்வதாவது, “உன் தேவனாகிய கர்த்தரே தேவன் என்றும், தம்மில் அன்புகூர்ந்து, தமது கற்பனைகளைக் கைக் கொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறைமட்டும் உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன்” (உபாகமம் 7:9). தேவன் தம்முடைய வாக்குத்தத்தங்களைக் காக்கிறவர். தேவனுடைய வாக்குத்தத்தங்களை ஜெபத்தில் அவரிடம் உங்களால் கொண்டு வர முடியும். இந்தத் தலைப்பின் செய்தியை அடுத்த செய்தியில் நான் தொடருவேன்.

ஒழுங்கு மற்றும் விவாதிக்கும் ஜெபத்தில் கவனமான யோசனை மற்றும் ஆயத்தம் தேவையாக இருக்கிறது. தேவனிடத்திலிருந்து மெய்யாக உனக்கு என்ன வேண்டும் என்று பிரித்து உன்னை ஆயத்தப்படுத்திக்கொள். இந்த வேண்டுதலுக்காகத் தேவனைச் சார்ந்து இருப்பதாகக் கவனமாக யோசித்து நிச்சயப்படுத்திக்கொள். இந்தத் தேவைக்குத் தேவன் உனக்கு வேண்டும் என்று உணர்த்தப்பட்டு, இது ஏன் நடக்க வேண்டும் என்ற உன்னுடைய எண்ணங்களை நேர்ப்படுத்து. இந்த வேண்டுதல் ஏன் முக்கியமானது? இந்த நொடியில் உன்னுடைய வேண்டுதல் கொடுக்கப்பட வேண்டும் என்பது ஏன் முக்கியமானது? உனக்குள் ஒரு பாரம் மற்றும் அவசரத்தை அந்த எண்ணம் உருவாக்கும்படி அனுமதி. உன்னுடைய வேண்டுதல் கிடைப்பது சிக்கலானது என்பதைப்பற்றி விவாதத்தை உருவாக்கும் எண்ணத்தைக் கைவிடு. முதலீடு செய்யப்படாத இருதயத்திலிருந்து உறுதியான விவாதம் வரமுடியாது. வேண்டுதலைப் பல கோணங்களில் இருந்து அணுகு. அதிக கனப்பரிமாணம் அல்லது அவசியமில்லாத ஒப்புவித்தல் சார்ந்த ஜெபங்களைத் தவிர். கவனமில்லாமல் ஜெபங்களில் சொன்னதைத் திரும்பச் சொல்லாதே. பொதுவாக இருக்கும் ஜெபங்களைத் தவிர். பிரத்யேகமாக ஜெபி. வேதத்தில் தேவன் செய்ததைக் குறிப்பிட்டு உன் ஜெபத்தில் விவரி. உன்னுடைய வாழ்க்கையில் தேவன் செய்ததை விவரிக்கும் வகையில் ஜெபி. அதேவார்த்தைகளை மறுபடியும் மறுபடியுமாகச் சொல்வது தேவன் கவனிப்பார் என்ற எண்ணத்தை வளர்க்காது. எப்படியானாலும், முறைபடுத்தப்பட்ட விவாதத்துடன்கூடிய ஜெபத்தினால் தேவனிடம் வாதாடு. தேவனிடம் வாதாடு. தேவனுடைய குணாதிசயங்களை நினைத்து வேண்டு. தேவனுடைய நிலைப்புத்தன்மையை அறிந்து மனுசெய். தேவனுடைய வாக்குத்தத்தங்களை வைத்து அவரிடம் முறையிடு. தேவன் தமது வாக்குத்தத்தங்களைக் கனப்படுத்துவார். தேவன் உன்னுடைய உண்மையான மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்டு வாதாடும் ஜெபத்தைக் கேட்பார்.

“நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் அவர் ஆசனத்துக்கு முன்பாக வந்து சேர்ந்து, என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாய் வைத்து, காரியத்தை ரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன்” (யோபு 23:3-4).

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

முக்கிய குறிப்புகள்

வரிசையாக மற்றும் வாதாடி ஜெபித்தல் - பகுதி 1

ORDER AND ARGUMENT IN PRAYER – PART I

திரு. ஜான் சாமுவேல் கேஹன் அவர்களால்
by Mr. John Samuel Cagan

“நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் அவர் ஆசனத்துக்கு முன்பாக வந்து சேர்ந்து, என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாய் வைத்து, காரியத்தை ரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன்.” (யோபு 23:3-4).

I.   முதலாவதாக, வரிசைபடுத்தப்பட்ட தீவிரமான ஜெபம் -ஒழுங்குபடுத்தப்பட்டது, ஆதியாகமம் 18:27; எபிரெயர் 4:16; மத்தேயு 6:11; லூக்கா 11:5; ஆதியாகமம் 17:18; மத்தேயு 6:7.

II.  இரண்டாவதாக, தீவிரமான ஜெபம் வாதாடி ஜெபிப்பதாகும் - காரணங்கள், ஆதியாகமம் 18:23-25; மல்கியா 3:6; எபிரெயர் 13:8; I இராஜாக்கள் 18:36-37; II இராஜாக்கள் 2:14; II சாமுவேல் 7:24-29; ரோமர் 3:4; உபாகமம் 7:9.