Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
எழுப்புதலுக்காக ஜெபித்துக் கொண்டிருத்தல்

PRAYING FOR REVIVAL
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ் ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

ஆகஸ்ட் 19, 2016 அன்று கர்த்தருடைய நாள் வெள்ளிக்கிழமை மாலை
வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Friday Evening, August 19, 2016


தயவுசெய்து அப்போஸ்தல நடபடிகள் 1:8க்குத் திருப்பி கொள்ளவும். இது ஸ்கோபீல்டு ஸ்டடி வேதாகமத்தில் 1148ம் பக்கத்தில் உள்ளது. நான் இதை படிக்கும்பொழுது தயவு செய்து எழுந்து நிற்கவும். இவைகள் முதல் கிறிஸ்தவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கிறிஸ்துவின் வார்த்தைகளாகும்.

“பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்” (அப்போஸ்தலர் 1:8).

நீங்கள் அமரலாம்.

சில பிரசங்கிமார்கள் இது பெந்தெகோஸ்தேவினத்தில் வெளிப்படும் பரிசுத்த ஆவியை மட்டுமே குறிப்பதாகச் சொல்லுகிறார்கள். இப்பொழுது நம்மீது பரிசுத்த ஆவி திரும்ப இறங்கி வரும்படியாக நாம் எதிர் பார்க்க முடியாது என்றும் அவர்கள் சொல்லுகிறார்கள். இன்று ஆவி ஊற்றப்படுதல் சாத்தியமாகும் என்று சொன்னால் மக்கள் பெந்தேகோஸ்தேவில் மாறி விடுவார்கள் என்று அவர்களில் அநேகர் பயப்படுகிறார்கள். எனவே அவர்கள் பெந்தேகொஸ்தே இயக்கத்திற்குப் பயந்து உணர்த்துதலையும் மாறுதலையும் அணைத்துப் போடுகிறார்கள். ஆனால் அவர்கள் நம்முடைய நாட்களில் பரிசுத்த ஆவி இறங்கி வரும் என்று நாம் எதிர்ப்பார்க்க முடியாது என்று சொல்லும் விஷயத்தில் தவறு செய்கிறார்கள். அவர்கள் நினைப்பது தவறு என்று நமது வசனத்தின் கடைசி மூன்று வார்த்தைகள் எடுத்துக் காட்டுகிறது, “பூமியின் கடைசி பரியந்தமும்”. ஒரு புதிய மொழி பெயர்ப்பு சொல்கிறதாவது, “பூமியின் தனிப்படுத்தப்பட்டப்பகுதி”. ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் பூமியின் “வெகு தூரமும்” அல்லது “கடைசி பரியந்தமும்” போகவில்லை ஆகையால், இயேசு எல்லா காலத்திலும் உள்ள, எல்லா கிறிஸ்தவர்களுக்கும் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் அவர்களுக்கும், நமக்கும், “பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது, நீங்கள் பெலனடைவீர்கள்” என்று சொன்னார். இது பேதுரு சிறிது காலத்திற்கு பிறகு, அப்போஸ்தலர் 2:39ல் சொன்ன வார்த்தைகளின் மூலமாக நிரூபிக்கப்படுகிறது. அதைத் திருப்பிக் கொள்ளுங்கள்.

“வாக்குத்தத்தமானது [பரிசுத்த ஆவியின்] உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொன்னார்” (அப்போஸ்தலர் 2:39).

அதனால் சீஷர்கள் திரும்ப எருசலேமுக்குச் சென்று, ஜெபிப்பதற்காக ஒரு மேல் அறையிலே பிரவேசித்தார்கள். அவர்கள் என்ன ஜெபித்தார்கள்? இயேசு அவர்களுக்கு வாக்குப்பண்ணி இருந்த பரிசுத்த ஆவியின் பெலனுக்காக அவர்கள் ஜெபித்தார்கள் அவர் சொன்னதாவது, “பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைவீர்கள்” (அப்போஸ்தலர்1:8). இதைப்பற்றி இயன் எச். மூரே அவர்கள் சொன்னதை நான் முழுமையாக ஒத்துக்கொள்ளுகிறேன். அவர் சொன்னார்,

பெந்தேகோஸ்து ஒரு புது யுகத்தை உண்டாக்கினபொழுது, ஆவியை ஊற்றும் கிறிஸ்துவின் வேலை அதோடு முடிந்துவிடவில்லை. ஆவியின் முழுமையான தொடர்பு முழு காலத்துக்காக [கிறிஸ்தவர்களுக்கு] குறிக்கப்பட்டது, பெந்தேகோஸ்தேவில் ஆரம்பமானது, அது நிலையானதாகவும் மற்றும் மாறாததாகவும் இல்லை; அது எங்கே அப்படி இருந்தது, சீஷர்கள் செய்ய வேண்டுமென்று தெளிவாக நடத்தப்பட்ட விஷயத்தில் அதிகமான தேவ ஆவிக்காக ஜெபித்ததில் என்ன நோக்கம் நிறைவேற முடியும்? சீஷர்கள் ‘எங்களுக்கு ஜெபிக்க கற்றுக் கொடுங்கள்’ என்று வேண்டி கொண்டதற்குப் பதிலாக இயேசு சொன்னார்: “நீங்கள், பொல்லாதவர்களாக இருந்து, உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது: பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்” (லூக்கா11:13). இந்த வாக்குத்தத்தமானது கிறிஸ்தவர்களுக்கு எப்பொழுதும் அதிகமாகப் பெற்றுக் கொள்ளும்படி இல்லாவிட்டால் அது தொடர்ந்து சம்பந்தமில்லாததாகவே இருக்கும். (Iain H. Murray, Pentecost Today? The Biblical Understanding of Revival, The Banner of Truth Trust, 1998, p. 21).

அலெக்ஸான்டர் மூடி ஸ்டுவர்ட் சொன்னார், “அவருடைய சபையிலே பரிசுத்த ஆவி எப்பொழுதும் இருக்கும்பொழுது, அவர் அருகாமையில் வந்த சமயங்களில் மிகவும் அதிகமான வல்லமையை அங்கே வெளிக்காட்டுகிறார்” (Murray, ibid., p. 22).

1859ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரிய எழுப்புதலில் மெய்யாகவே நாம் இதுவரையில் மிக சிறிய அளவை மட்டுமே பார்த்திருக்கிறோம், மிகவும் சிறிதளவே. மாறுதல்கள் அற்புதமானவைகள் என்று அதிகமான சுவிஷேசகர்கள் விசுவாசிக்கவில்லை என்ற உண்மை எனக்கு உணர்த்தப்பட்டது. இன்று அதிகமான சுவிஷேசகர்கள் மாறுதலானது ஒன்றும் இல்லை அவைகள் மனித தீர்மானங்களே என்று நினைக்கிறார்கள். ஒரு “பாவியின் ஜெபத்தை” சொல்ல வைத்து ஒரு இழக்கப்பட்ட நபரை சம்மதிக்கச் செய்வதே போதுமானது என்று அவர்கள் நினைக்கிறார்கள். அந்த வார்த்தைகளை வெறுமனே சொல்லு அப்பொழுது நீ இரட்சிக்கப்படுவாய்! ஜோயல் ஓஸ்டீன் ஒவ்வொரு உபதேசத்தின் இறுதியிலும் அதைச் சொல்கிறார். அந்த ஜெபவார்த்தைகளைச் சொல்லும் மக்கள் அவருடன் இருக்கிறார்கள். பிறகு அவர் சொல்கிறார், “நீ இந்த வார்த்தைகளை சொன்னால் மறுபிறப்படைவாய் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம்”. பாருங்கள், அங்கே பரிசுத்த ஆவி அற்புதத்தைச் செய்யவேண்டிய அவசியமே இல்லை! நீ அந்த வார்த்தைகளைச் சொன்னால் போதும் “நீ மறுபிறப்படைந்து விடுவாய்”.

இது ஒரு பழங்கால பழக்கமான பாலாஜியனிசம் திரும்பி வருவதைப் போன்றது - மனிதனால் தனது சொந்த இரட்சிப்பைக் கொண்டுவர முடியும் என்று போதிக்கும் ஒரு போதனையாகும் அது - இந்தக் காரியத்தில், ஒரு சில வார்த்தைகளைச் சொல்லுவதன் மூலமாக அது முடியும்! அல்லது ஒரு கிறிஸ்துவ கூட்டத்தில் “முன்னுக்கு வருவதன்” மூலமாக - அல்லது கையை உயர்த்துவதன் மூலமாக! “யாரெல்லாம் இரட்சிக்கப்பட விரும்புகிறீர்களோ, உங்கள் கைகளை உயர்த்துங்கள்”. இது வெறுமையான பாலாஜியனிசம்! இது மதங்களுக்கு எதிரான பழமைக்குத் திரும்பவதாகும், ஓர் இழக்கப்பட்ட நபர் சில கிரியைகளின் மூலமாகத் தன்னைத் தானே இரட்சித்து கொள்ள முடியும் என்று அது போதிக்கிறது, அல்லது ஒரு சில ஜெப வார்த்தைகளைச் சொல்லுவதாலும் அது முடியும் என்று போதிக்கிறது. நான் அதை “மாயஜால ஜெபம்” என்று அழைப்பேன். அது கிறிஸ்தவம் அல்ல அது மெய்யாகவே “மாயஜாலமாகும்”. மாயஜாலத்தில் நீ சில வார்த்தைகளைச் சொல்லுவாய், அல்லது சில செய்கைகளைச் செய்வாய், அந்த வார்த்தைகளும் செய்கைகளும் ஒருவித வியக்கத்தக்க விளைவை உண்டாக்கும். “மாயஜால” யோசனைகள் நவீன சுவிசேஷகரின் மாறுதல்களுக்கான யோசனைகளாகும்! இந்தப் பிரச்சனையை உள்ளாகப் பரிட்சை செய்து பார்க்க டேவிட் மால்கம் பேனடின் புத்தகத்தை வாசிக்கவும், The Sinner’s Prayer: Its Origins and Dangers, Even Before Publishing, n.d., அமெசான் டாட் காம் இல் கிடைக்கும்.

ஒவ்வொரு உண்மையான மாறுதலும் ஓர் அற்புதமாகும். தயவு செய்து என்னோடு மாற்கு 10:26க்குத் திருப்பிக் கொள்ளுங்கள். அது ஸ்கோபீல்டு ஸ்டடி பைபிளில் 1059ம் பக்கத்தில் உள்ளது.

“அவர்கள் பின்னும் அதிகமாய் ஆச்சரியப்பட்டு அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து மனுஷரால் இது கூடாததுதான்… (மாற்கு10:26, 27).

அவர்கள் கேட்டார்கள், “அப்படியானால் யார் இரட்சிக்கப்படக் கூடும்?” அதற்கு இயேசு, “மனிதனால் இது கூடாதது” என்றார். மனிதன் பாவ நிலையில் இருக்கும் போது இரட்சிப்புக்காக அவனால் ஒன்றும் செய்ய முடியாது தன்னைத்தானே இரட்சித்துக் கொள்ள உதவி செய்யவும் முடியாது! ஆனால் அதன்பிறகு இயேசு சொன்னார், “ஆனால் தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும்”. ஒரு நபருடைய இரட்சிப்பு தேவனிடமிருந்து வந்த அற்புதமாகும்! இந்த வருடத்திலே அநேக நம்பிக்கை நிறைந்த மாறுதல்களை நாங்கள் பார்த்திருக்கிறோம், அவைகளில் ஒன்று கடந்த இரவு நடந்தது. ஓவ்வொரு மெய்யான மாறுதலும் ஒரு அற்புதமாகும். பால் குக் சரியாகச் சொன்னார், “சக்திவாய்ந்த மற்றும் விஸ்தரிப்பு தருணங்களைத்தவிர பரிசுத்த ஆவியின் குணாதிசியத்திலும் எழுப்புதலின் குணாதிசியத்திலும் எந்தவித்தியாசமும் இல்லை” (Fire From Heaven, EP Books, 2009, p. 117).

ஒரு நபர் மாறுதல் அடையும்போது அது தேவனிடமிருந்து கிடைத்த அற்புதமாகும். அநேக மக்கள் குறுகிய காலத்தில் மாறுதல் அடைந்தால் அது தேவனிடமிருந்து கிடைத்த அற்புதமாகும். அதில் ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால் “சக்திவாய்ந்த மற்றும் விஸ்தரிப்பு தருணங்கள்” தான். நாம் எழுப்புதலுக்காக ஜெபிக்கும் பொழுது, பரிசுத்த ஆவி அநேகருடைய இருதயங்களில் இணைந்து கிரியை செய்ய வேண்டும் என்று ஜெபித்துக் கொண்டிருக்கிறோம்.

மாறுதல் அடைதலில் பரிசுத்த ஆவி என்ன செய்கிறது? முதலாவதாக, “அவர் வந்து, பாவத்தைக்குறித்து…. கண்டித்து உணர்த்துவார் (குற்றத்தை உணரச் செய்வார்)” (யோவான் 16:8). பால் குக் சொன்னார், “மக்கள் இயற்கையாகவே தங்கள் பாவத்திலிருந்து மாறுதல் அடைய மாட்டார்கள்; அவர்கள் சுபாவப்படி சுய நியாயம் உள்ளவர்கள். ஆவியின் விஷேசமான கிரியை தேவையாக இருக்கிறது. ஆவி கிரியை செய்யும்பொழுது, பாவ வெறுப்பு உண்டாகி [பயங்கரமான, வெறுப்பூட்டுகிற], ஒரு நபரை பாவத்தை வெறுக்கும்படியும் அதை விட்டுவிடும்படியும் செய்கிறது”. ஒரு பெண், “எனக்குள் வெறுப்பு உண்டானது” என்று சொன்னது போல அது இருக்கிறது. அது நான் எப்பொழுதும் பார்க்காத மாறுதலுக்குரிய நல்ல விளக்கமாகும். “எனக்குள் வெறுப்பு உண்டானது”. உனக்கு குறைந்த பட்சம் அது போன்ற எந்தவிதமான பாவ உணர்வும் ஏற்படவில்லையானால், நீ மெய்யாகவே மாறுதல் அடையவில்லை. அதனால் இரட்சிக்கப்படாதவர்கள் பாவ உணர்வு அடையும்படி பரிசுத்த ஆவிக்காக நாம் நிச்சயமாக ஜெபம் செய்ய வேண்டும்.

இரண்டாவதாக பரிசுத்த ஆவி மாறுதலில் செய்யும் வேலையானது பாவ உணர்வடைந்திருக்கும் நபர் கிறிஸ்துவை அறியும்படி செய்வதாகும். இயேசு சொன்னார், “அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார்” (யோவான்16:14). ஒரு புதிய மொழிபெயர்ப்பு சொல்கிறது, “அவர்… என்னுடையதில் இருந்து எடுத்து நீங்கள் அதை அறிந்து கொள்ளும்படி செய்வார்”. ஓர் இழக்கப்பட்ட நபருக்குப் பரிசுத்த ஆவி கிறிஸ்துவை அறிய செய்யாவிட்டால் அவர் ஒரு போதும் தனிப்பட்ட விதத்தில் கிறிஸ்துவை அறிந்து கொள்ளவே முடியாது. ஆனால் மெய்யான இரட்சிப்பில் நீ பாவ உணர்வு அடையவில்லையானால், பரிசுத்த ஆவி கிறிஸ்துவை உனக்கு அறியச் செய்ய முடியாது.

அதனால், பரிசுத்த ஆவி வல்லமையாக வந்து இறங்க வேண்டும் என்று நாம் ஜெபிக்கும்பொழுது, நாம் தேவனிடம் பிரதானமாக ஆவியை அனுப்ப வேண்டும் என்று கேட்டு கொள்ளும் காரணங்களாவன (1) இழக்கப்பட்ட நபர் வெறுக்கத்தக்க தனது பாவ சுபாவத்தை உணர வேண்டும், மற்றும் (2) பரிசுத்த ஆவி அந்த நபருக்கு கிறிஸ்துவை வெளிப்படுத்தும்படி நாம் கண்டிப்பாக ஜெபிக்க வேண்டும், அதனால் கிறிஸ்துவின் இரத்தத்தினால் பாவத்திலிருந்து சுத்திகரிக்கும் வல்லமையை அவர் உண்மையாக அறிந்து கொள்ள முடியும். ஓர் உண்மையான மாறுதலில் பாவ உணர்வு அடைதல் மற்றும் கிறிஸ்துவின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்படுதல் இரண்டும் தேவனாகிய பரிசுத்த ஆவியானவரின் பிரதானமான வேலையாகும், யோவான்16ஆம் அதிகாரத்தில் வெளிப்படுத்தப்பட்டபடி. பிரைன் எச். எட்வர்ஸ் சொன்னார், “எழுப்புதலுக்காக ஜெபிக்க வேண்டுமென்று சொல்லப்படும்பொழுது இன்று அநேக கிறிஸ்தவர்களுக்கு என்ன ஜெபிக்க வேண்டுமென்று தெரிவதில்லை” (Brian H. Edwards, Revival, Evangelical Press, 2004 edition, p. 80).

என்ன ஜெபிக்க வேண்டும் என்று அநேக கிறிஸ்தவர்கள் அறியாமல் இருப்பதற்கு ஒரு காரணம் இழக்கப்பட்ட மக்கள் பாவ உணர்வு அடைய வேண்டிய தேவையை அவர்கள் அறியாதிருப்பது ஆகும், “மாறுதலின் நெருக்கடியை” நம்முடைய முற்பிதாக்கள் செய்தது போல அவர்கள் விசுவாசிக்காமல் இருக்கிறார்கள். ஆனால் பரிசுத்த ஆவி இறங்கி வந்து நம்முடைய சபைக்கு வருகை தரும் இழக்கப்பட்ட மக்களை உணர்த்துபடியாக நாம் கண்டிப்பாக ஜெபிக்க வேண்டும் என்று நான் உங்களுக்கு சொன்னேன். அவர்கள் பாவ உணர்வு அடையாவிட்டால் இரட்சிக்கப்பட முடியாது.

அதன்பிறகு, அநேக சுவிஷேசகர்களுக்கு என்ன ஜெபிக்க வேண்டும் என்று தெரியாதிருப்பதற்கான மற்றொரு காரணமாவது நமது முற்பிதாக்கள் செய்தது போல மாறுதலின் “நெருக்கடியை” இன்று அவர்கள் விசுவாசிக்காமல் இருப்பதால் தான். ஒரு நபர் உணர்த்தப்பட்டால் அவர் “விழிப்படைகிறார்” ஆனால் இன்னும் இரட்சிப்படையவில்லை என்று நமது முற்பிதாக்கள் சொன்னார்கள். ஒரு விழிப்படைந்த நபர் பாவத்திலிருந்து திரும்ப வேண்டுமானால், ஒரு பெண் பிரசவ வேதனைபட்டுக் குழந்தையைப் பெற்றெடுப்பது போன்ற வேதனையை அனுபவிக்க வேண்டும் என்று நமது முற்பிதாக்கள் சொன்னார்கள். இந்த வழியில் மட்டுமே, ஒரு நபர், மெய்யான மாறுதலின் அனுபவத்தைப் பெற முடியும் என்று நமது முற்பிதாக்கள் சொன்னார்கள் (cf. the conversion of “Christian” in Pilgrim’s Progress).

ஜான் சாமுவேல் கேஹான் ஒரு தெளிவான நெருக்கடி மாறுதலை அனுபவித்தவர். அவருடைய மாறுதல் ஜான் பனியன் அவர்களுடைய மாறுதலைப் போன்றது, நவீன கால சுவிஷேசகர்களால் இரட்சிப்பு என்று அழைக்கப்படுவதை போலல்ல அவருடைய மாறுதல்.

      என்னுடைய மாறுதலுக்கு முன்பாக மரிப்பதை போல நான் உணர்ந்தேன்... நான் சமாதானத்திற்கான எந்த அறிகுறியும் காண முடியவில்லை... அந்த நேரத்தில் பரிசுத்த ஆவியானது மிகவும் உறுதியாக என்னுடைய பாவத்தை உணர்த்த ஆரம்பித்தது, ஆனால் என்னுடைய முழு சித்தத்தோடு எல்லா எண்ணங்களையும் தேவனை பற்றியும் மற்றும் இரட்சிப்பையும் நிராகரித்தேன். அதைப் பற்றி நினைக்க நான் மறுத்தேன், இருந்தாலும் அப்படியாகப் பாதிக்கப்பட்ட உணர்வுகளை என்னால் நிறுத்த முடியவில்லை. ஞாயிற்று கிழமை காலை ஜூன் 21, 2009ம் ஆண்டு, நான் முழுமையாக வெறுமையாக்கப் பட்டேன். நான் இவை எல்லாவற்றிலும் மிகவும் சோர்ந்து போய் இருந்தேன். என்னையே நான் வெறுக்க ஆரம்பித்தேன், என் பாவத்தை வெறுத்தேன் என்னை உணரவும் செய்தேன்.
      டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் பிரசங்கம் செய்து கொண்டிருந்தபொழுது, என்னுடைய பெருமை அதைத் துணிவாக நிராகரிக்க முயற்சி செய்தது, கவனிக்காதபடி செய்தது, ஆனால் அவர் பிரசங்கித்தபொழுது என்னுடைய பாவங்களை என் ஆத்துமாவால் உணர முடிந்தது. அந்த உபதேசம் முடியும் வரையிலும் நான் நிமிடங்களை எண்ணிக் கொண்டு இருந்தேன், ஆனால் அந்தப் போதகர் பிரசங்கம் செய்து கொண்டே இருந்தார், என்னுடைய பாவங்கள் முடிவில்லாததாக மிகவும் மோசமானதாக மாறியது. இனிமேலும் என்னையே நான் ஏமாற்றிக் கொள்ளக்கூடாது, நான் இரட்சிக்கப்பட வேண்டும்! அந்த அழைப்புக் கொடுக்கப்பட்டபொழுதும் நான் எதிர்த்தேன், ஆனால் அதை இனிமேலும் தொடரவிட முடியாது. நான் மிகவும் மோசமான பாவி என்று அறிந்தேன் தேவன் நீதி உள்ளவராக என்னை நரக ஆக்கினைக்குத் தீர்க்க வேண்டும். நான் போராடி மிகவும் களைத்துப் போனேன், எல்லாவற்றிலும் நான் மிகவும் சோர்வடைந்தேன். போதகர் எனக்கு அறிவுரை வழங்கினார், கிறிஸ்துவிடம் வர வேண்டுமென்றார், ஆனால் நான் போகவில்லை. என்னுடைய பாவங்களெல்லாம் என்னை உணர்த்தினபொழுதும் நான் இயேசுவிடம் போகவில்லை. அந்த நேரம் தான் மிகவும் மோசமானதாக இருந்தது ஏனென்றால் இரட்சிக்கப்பட வில்லையானால் நான் நரகத்திற்குப் போக வேண்டும் என்று உணர்த்தப்பட்ட நேரம் அது. நான் இரட்சிக்கப்பட “முயற்சி” செய்து கொண்டிருந்தேன், நான் கிறிஸ்துவை நம்ப “முயற்சி” செய்து கொண்டிருந்தேன் ஆனால் என்னால் முடியவில்லை, நான் கிறிஸ்துவிடம் செல்ல என்னையே கட்டாயப்படுத்திப் பார்த்தேன் ஆனால் முடியவில்லை, அது எனக்கு மிகவும் நம்பிக்கையற்ற உணர்வை கொடுத்தது. என்னுடைய பாவங்கள் என்னை நரகத்திற்குக் கீழே இழுப்பதை என்னால் உணர முடிந்தது இருந்தாலும் என்னுடைய முரட்டுக் குணம் என்னுடைய கண்ணீரை மறைத்துக் கொண்டிருந்தது. நான் இந்த மனப் போராட்டத்தில் சிக்கிக் கொண்டேன்.
      சில வருடங்களுக்கு முன்பாகப் பிரசங்கிக்கப்பட்ட வார்த்தைகள் திடீரென என் நினைவுக்கு வந்தது: “கிறிஸ்துவுக்கு ஒப்புக் கொடு! கிறிஸ்துவுக்கு ஒப்புக் கொடு!”. நான் இயேசுவுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றியவுடன் அது என்னால் என்றைக்கும் முடியாதோ என்று என்னைக் கலங்கச் செய்தது. இயேசு தம்மோட வாழ்க்கையை எனக்காகத் தந்தார். நான் இயேசுவுக்குச் சத்துருவாக இருந்தபொழுதும் அவருக்கு என்னை ஒப்புக் கொடுக்கமல் இருந்தும் எனக்காக அவருடைய ஜீவனைச் சிலுவையில் கொடுத்தார். இந்த எண்ணம் என் மனதை உடைத்தது; நான் எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும். இனிமேலும் நான் எனக்குள்ளே எதையும் வைத்துக்கொள்ளக் கூடாது, நான் இயேசுவைப் பற்றிக் கொள்ள வேண்டும்! அந்த நேரத்திலே நான் விசுவாசத்தின் மூலமாக அவருக்கு ஒப்புக்கொடுத்து இயேசுவிடம் வந்தேன். அந்த நேரத்தில் நான் மரிப்பதைப் போலக் காணப்பட்டேன், கிறிஸ்து எனக்கு ஜீவனைக் கொடுத்தார்! அங்கே என்னுடைய எந்தச் செயலோ மனத் தீர்மானமோ இல்லை ஆனால் எனது இருதயத்தில், கிறிஸ்துவுக்குள் இளைப்பாறிக் கொண்டிருந்தேன், அவர் என்னை இரட்சித்தார்! அவர் தமது இரத்தத்தினால் என்னுடைய பாவங்களைக் கழுவினார்! அந்த நேரத்திலே, நான் கிறிஸ்துவை நிராகரிப்பதை நிறுத்தினேன். நான் செய்ய வேண்டியதெல்லாம் அவரை விசுவாசப்பதே என்பது எனக்கு மிகவும் தெளிவானது; கிறிஸ்து மட்டுமே எனக்குள் இந்த மாற்றத்தைக் கொண்டு வந்தார் என்று என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. நான் என்னை ஒப்புக்கொடுக்க வேண்டும்! அந்த நேரத்தில் எந்தச் சரிர உணர்வோ அல்லது கண்களை மறைக்கும் ஒளியோ இல்லை, உணர்வும் எனக்கு தேவையில்லாதிருந்தது, நான் கிறிஸ்துவைப் பற்றிக் கொண்டேன்! இருந்தாலும் கிறிஸ்துவை விசுவாசித்ததின் மூலமாக என்னுடைய ஆத்துமாவிலிருந்து பாவம் நீக்கப்பட்டதை உணர்ந்தேன். நான் என்னுடைய பாவத்திலிருந்து திரும்பினேன், நான் இயேசுவை மட்டுமே நோக்கிப் பார்த்தேன்! இயேசு என்னை இரட்சித்தார்.
      ஒரு நல்ல சபையில் வளர்ந்தாலும் இயேசுவுக்கு விரோதமான மோசமான பாவியாகிய என்னை மன்னிக்கத் தக்கதாக இயேசு எவ்வளவாக அன்பு கூர்ந்து இருக்க வேண்டும்! என்னுடைய மாற்றத்தின் அனுபவத்தையும் கிறிஸ்துவின் மேல் நான் கொண்டுள்ள அன்பின் விளக்கத்தையும் வெளிப்படுத்த மிகவும் குறைவான வார்த்தைகளாகவே இருக்கிறது. கிறிஸ்து எனக்காக தம்முடைய ஜீவனையே கொடுத்தார் அதற்காக என்னுடைய எல்லாவற்றையும் நான் அவருக்குக் கொடுக்கிறேன். நான் அவருடைய சபையில் துப்பினேன் மற்றும் அவருடைய இரட்சிப்பைக் கேலி செய்தேன் இருந்தாலும் இயேசு எனக்காகத் தம்முடைய சிங்காசனத்தைத் தியாகம் செய்து சிலுவையில் மரித்தார்; அவருடைய அன்பையும் இரக்கத்தையும் என்னால் எப்படிப் போதுமான அளவு எடுத்துச் சொல்ல முடியும்? இயேசு என்னுடைய வெறுப்பு மற்றும் கோபத்தை நீக்கி அதற்கு பதிலாக அன்பை எனக்குக் கொடுத்தார். ஒரு புது ஆரம்பத்தைவிட எனக்கு அதிகமானதைக் கொடுத்தார் - அவர் எனக்குப் புதிய ஜீவனை கொடுத்தார்.

ஒரு மெய்யான இரட்சிப்புப் பற்றிய உதாரணத்தை ரோமர் 7ன் கடைசி இரண்டு வசனங்களில் அப்போஸ்தலனாகிய பவுல் கொடுக்கிறார் என்று டாக்டர் மார்டீன் லாய்ட்-ஜோன்ஸ் சொன்னதை நானும் நம்புகிறேன். இந்த வார்த்தைகள் பவுலின் சொந்த மாற்றத்தை விவரிப்பதாக டாக்டர் லாய்ட்-ஜோன்ஸ் சொன்னார். நான் ஒத்துக்கொள்ளுகிறேன். பவுல் சொன்னார்,

“நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரண சரிரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” (ரோமர் 7:24).

இதுதான் உணர்த்தப்படுதல்! - ஒரு பாவியானவனுக்குத் தனது பாவம் இருதயத்தில் உணர்த்தப்பட்டு வெறுக்கப்பட்டு தன்னை அறியும்பொழுது ஏற்படும் மாற்றம். அதன்பிறகு பவுல் சொன்னார்,

“நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய்த் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்” (ரோமர் 7:25).

இதுதான் இரட்சிப்பு - கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் அந்த வாதிக்கப்பட்ட பாவி விடுவிக்கப்பட்டபொழுது! அது இங்கே இருக்கிறது, முதல் முறையாக, அந்தப் பாவி, நம்பிக்கையற்ற பாவத்திற்கு அடிமை என்று உணர்த்தப்பட்டு, இறுதியாக இயேசுவிடம் திரும்பி அவருடைய இரத்தத்தினால் சுத்தம் செய்யப்படுகிறான். அனேக சுவிசேஷகர்கள் சகல முக்கியம் வாய்ந்த இந்த இரண்டு அனுபவங்களுக்கு ஊடாக எவரையும் எப்போதும் அனுமதிப்பதில்லை என்பது நம்முடைய நாட்களில் காணப்படும் ஒரு மிகப்பெரிய துக்ககரமான காரியமாகும். முதலாவதாக மனசாட்சி முன் நிறுத்தி, அல்லது அதுகூட இல்லாமல், தீர்மானம் எடுப்பவர்கள் அவர்களை ஒரு பாவியின் ஜெபத்தை சொல்லச் செய்வார்கள் அவ்வளவே. 1859ம் ஆண்டிலிருந்து அமரிக்காவில் தேசம் முழுவதுமாக எழுப்புதல் இல்லாமல் இருப்பதற்கு அந்த ஒரு மிகப்பெரிய காரணமே முக்கியமானதாக இருக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன்.

ஆதனால், நமது சபை ஒரு எழுப்புதலை அனுபவிக்க வேண்டுமென்று நீ விரும்பினால் இவைகள்தான் நீங்கள் ஜெபிக்க வேண்டிய மிக முக்கியமானவைகளாகும். முதலாவதாக, பாவத்தில் இழக்கப்பட்ட மக்கள் உணர்த்தப்படும்படி அவருடைய பரிசுத்த ஆவியை அனுப்ப வேண்டுமென்று தேவனிடம் ஜெபிக்க வேண்டும். இரண்டாவதாக, அவர்களுக்கு இயேசுவை வெளிப்படுத்தவும் அவர்கள் இயேசுவை நெருங்கவும், அவருடைய சிலுவையின் மரணத்தின் மூலமாக மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளவும், அவருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தின் மூலமாகப் பாவத்திலிருந்து சுத்திகரிக்கப்படவும் தேவனுடைய ஆவியின் கிரியைக்காக ஜெபிக்க வேண்டும்!

போதகர் பிரைன் எச். எட்வர்ட்ஸ் அவர்களின் வார்த்தையின்படி எழுப்புதல் ஜெபம் “மாற்றப்பட்டவர்கள், வியாக்கூலத்தில் இருப்பவர்கள் (விழிப்படைந்தவர்கள்), மற்றும் விழிப்படையாதவர்கள்” போன்றவர்களை மையமாக வைத்து ஜெபிக்கப்படுகிறது (Revival, Evangelical Press, 2004 edition, p. 127). எழுப்புதல் ஜெபங்கள் ஏன் “மாற்றப்பட்டவர்களையும்” “வியாக்கூலத்தில்” இருப்பவர்களையும் “விழிப்படையாதவர்களையும்” மையமாகக் கொண்டிருக்கிறது? ஏனென்றால் மாற்றப்பட்டவர்கள் பின்வாங்கிப் போகலாம். முதலாவது சீன பாப்திஸ்டு சபையில் இரட்சிக்கப்பட்ட மக்களிடையே இருதயத்தில் பாவம் இருந்தவர்கள் மத்தியில்தான் எழுப்புதல் ஆரம்பித்தது. அவர்கள் எல்லாருக்கும் முன்பாக வெளிப்படையாக, கண்ணீரோடு, தங்கள் பாவங்களை அறிக்கையிட ஆரம்பித்தார்கள். சபைக்குள்ளேயே சிலர் மற்றவர்கள் மீது கசப்புணர்வு கொண்டிருந்தார்கள். சிலர் தங்கள் வாழ்க்கையில் இரகசிய பாவங்களை அனுமதித்திருந்தார்கள். பாவங்களைப்பற்றிக் கவலையில்லை என்று, தங்களைத் தேற்றிக்கொண்டார்கள். ஆனால் பரிசுத்த ஆவி இறங்கி வந்ததால், அவர்கள் இருதயம் நொறுங்கப்பட்டார்கள். அவர்கள் தங்களது ஜெபங்களில் வெறுமையும் உயிரின்மையும் இருப்பதை உணர்ந்து கொண்டார்கள். அவர்கள் சபைக்குள்ளே மற்றவர்கள்மீது கோபமும் கசப்பும் இருந்ததை உணர்ந்து கொண்டார்கள். மற்றவர்கள் தேவன் அவர்கள் செய்யவிரும்பினதை செய்யாமல் இருந்தார்கள்.

சில காரியங்களில் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் மறுக்கும் கிறிஸ்தவன் நமது சபையில் இருக்கலாம். இது எழுப்புதலைத் தடை செய்ய முடியும்! கென்டக்கியில் உள்ள வில்மோர் ஆஸ்பரி கல்லூரியில் 1970ல் எழுப்புதல் உண்டானபோது, நூற்றுக்கணக்காண மாணவர்கள் மெய்யாக மாற்றப்பட்டுத் தாங்களாகவே அறிக்கை செய்ய முடிவுசெய்தார்கள்… வெளிப்படையாக. அவர்கள் வரிசையில் நின்றார்கள், சிலநேரங்களில் மணிக்கணக்காகக் காத்திருந்தார்கள், ஆலயத்தின் ஒலி பெருக்கியில் அறிக்கையிட்டார்கள்… தங்களது [கீழ்படியாமையை] ஜெபத்திற்காக வேண்டிக் கொண்டார்கள்.

ஆஸ்பரியில் கூட்டங்களை நடத்தினவர் பிரசங்கம் செய்யவில்லை. அதற்கு பதிலாக, தனது சாட்சியைச் சுருக்கமாகக் கொடுத்தார், அதன் பிறகு மணவர்கள் தங்கள் கிறிஸ்தவ அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும்படி அழைப்புக் கொடுத்தார். அது எதுவும் வழக்கத்திற்கு மாறானதாக இல்லை. ஒரு மாணவன் தனது பங்கிற்குப் பதிலளித்தார். பிறகு மற்றவர். பிறகு மற்றவர். “பிறகு பலிபீடத்தில் மனம் திறந்து பேச ஆரம்பித்தார்கள்”, அவர் சொன்னார், “அது மனம் திறந்து பேச வைத்தது”. மெதுவாக, விவரிக்க முடியாதபடி, மாணவர்களும் கல்லூரிப் பணியாட்களும் அமைதியாக ஜெபித்துக் கொண்டும், அழுதுகொண்டும், பாடிக்கொண்டும் இருந்தார்கள். தாங்கள் தீமைசெய்தவர்களைத் தேடித் தங்கள் செய்கைக்கு மன்னிப்புக் கோரினார்கள். அந்த சபைக் கூட்டம் எட்டு நாட்கள் தொடர்ந்து நடந்தது [ஒரு நாளுக்கு 24 மணிநேரமும்].

இதேபோலத் தான் முதலாம் சீன பேப்திஸ்ட் சபையிலும் நிகழ்ந்தது, ஆஸ்பரி எழுப்புதல் நடந்த அதே நேரத்தில் அதுவும் நடந்தது. அதுவும் பல மணி நேரங்கள் நடந்தது, சீன இளைஞர்கள் அறிக்கை செய்து ஜெபித்தார்கள். வெளிப்படையான அறிக்கை 1910ல் கொரியன் எழுப்புதலில் பொதுவாக இருந்தது. இன்று சீனாவில், கண்ணீரோடு கூடிய வெளிப்படையான அறிக்கை, கிறிஸ்தவர்களிடம் பொதுவாகக் காணப்படுகிறது, பெரிய எழுப்புதல் நடந்து கொண்டிருக்கிறது. ஈவன் ராபர்ட்ஸ், “கர்த்தாவே, என்னை வளையும்” என்று அழுதார், அவர் தன்னைத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்து 1905ல் நடந்த வெல்ஸ் எழுப்புதலில் தலைவராக இருந்தார். உங்களைப் பற்றிக் கூறுங்கள்? தேவன் உங்களை வளைக்க வேண்டுமென்று ஜெபிப்பீர்களா? “தேவனே, என்னை ஆராய்ந்து” என்ற பாடலைப் பாடவும்.

“தேவனே, என்னை ஆராய்ந்து,
என் இருதயத்தை அறிந்துகொள்ளும்;
என்னைச் சோதித்து,
என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்
வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ
என்று பார்த்து நித்திய வழியிலே என்னை நடத்தும்”
   (சங்கீதம்139:23,24).

ஜீவனுள்ள தேவனுடைய ஆவியே,
இறங்கி வாரும், நாங்கள் ஜெபிக்கிறோம்.
ஜீவனுள்ள தேவனுடைய ஆவியே,
இறங்கி வாரும், நாங்கள் ஜெபிக்கிறோம்.
என்னை உருக்கும், என்னை உருவாக்கும்,
என்னை உடையும், என்னை வளையும்.
ஜீவனுள்ள தேவனுடைய ஆவியே,
இறங்கி வாரும், நாங்கள் ஜெபிக்கிறோம்.

ஒரு எழுப்புதலில் தேவன் தம்முடைய ஆவியை இறக்கினால் இது நம்முடைய சபையிலும் நடக்க முடியும். “தேவனே, என்னை ஆராய்ந்து” என்ற பாடலை மென்மையாகப் பாடவும்.

“தேவனே, என்னை ஆராய்ந்து,
என் இருதயத்தை அறிந்துகொள்ளும்;
என்னைச் சோதித்து,
என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்
வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ
என்று பார்த்து நித்திய வழியிலே என்னை நடத்தும்”
   (சங்கீதம்139:23,24).

ஆமென்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.