Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
சிலுவையின் மீதிருந்து இயேசுவானவரின்
கடைசி ஏழு வார்த்தைகள்

THE SEVEN LAST WORDS OF JESUS ON THE CROSS
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்
by Dr. R. L. Hymers, Jr.

மார்ச் 20, 2016 கர்த்தருடைய நாள் மாலை வேளையில்
லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி

A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, March 20, 2016

“கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அவரையும், அவருடைய வலது பக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடது பக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள்” (லூக்கா 23:33).


இயேசுவானவரின் சரீரபாடுகள் தீவரமானதாக இருந்தது. அது ஒரு வாரினால் அடித்ததிலிருந்து ஆரம்பித்தது அது எழுத்தளவில் தோலைக் கிழித்து ஆழமான வெட்டுக் காயங்களை அவருடைய முதுகிலே உண்டாக்கியது. அப்படியாக ஒரு வாரினால் அடித்தபோதே அநேக மக்கள் மரித்தார்கள். அடுத்தது, அவர்கள் முள்ளினால் ஒரு கிரீடத்தை செய்து அவரது தலையிலே வைத்து அடித்தார்கள். கூரான முட்கள் அவரது தலையின் தோலைக் கிழித்து உள்ளே இறங்கின, இரத்த ஊற்று அவரது முகத்திலிருந்து வழிந்தது. அவர்கள் முகத்திலேயும் அடித்தார்கள், அவர்மீது துப்பினார்கள், மற்றும் அவரது தாடையின் மயிரைத் தங்கள் கைகளால் பிடுங்கினார்கள். அதன்பிறகு அவரது சொந்த சிலுவையைச் சுமந்து, எருசலேமின் தெருக்களின் வழியாக கல்வாரி என்று சொல்லப்பட்ட கொலைகளத்துக்குச் சென்றார். இறுதியாக, பெரிய கூரான ஆணிகள் அவரது பாதங்களிலும் மற்றும் கைகளின் அடியில், உள்ளங்கையும் மணிக்கட்டும் சேரும் இடத்திலும் அரைந்தார்கள். இவ்வாறாக அவர் சிலுவையிலே ஆணிகளால் அறையப்பட்டார். இந்த வேதாகமம் சொல்லுகிறது:

“மனுஷனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும் [அவரது தோற்றம்], மனுபுத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும் [உருவழிந்தது], இவ்வளவு அந்தக்கேடு [அவ்வளவாக மனித சாயலில்லாமல் உருவழிந்தது] அடைந்தபடினாலே” (ஏசாயா 52:14).

இயேசுவானவரைப்போல மாறுவேடம் அணிந்து நடித்த ஆலிவுட் நடிகர்களின் திரைப்படங்களை நாம் பார்த்துப் பழகிபோனவர்கள். இந்தத் திரைபடங்கள் சிலுவையில் அறையும் ஆழமான பயங்கர நடுக்கத்தை மற்றும் கொடுமையை ஒருபோதும் போதுமான அளவு எடுத்துக்காட்ட முடியாது. இயேசுவானவர் உண்மையாக சிலுவையிலே அனுபவித்த கொடுமையை ஒப்பிட்டும்போது நாம் படங்களில் பார்ப்பது ஒன்றுமில்லை. உண்மையாக “கிறிஸ்துவின் அடங்காகோபம்” படத்தைப் பார்க்கும் வரையிலும் அவருக்கு நடந்ததை நாம் பார்க்கவில்லை. அது மெய்யாகவே பயங்கரமான கொடுமை.

அவரது தலை உச்சி வட்டம் பிளவுண்டு திறந்தது. அவரது முகத்திலும் கழுத்திலும் இரத்தவெள்ளம் இறங்கியது. அவரது கண்கள் வீங்கி ஏறக்குறைய மூடிக்கொண்டது. அவரது மூக்கு மற்றும் அவரது தாடை எலும்பும் மெய்யாகவே உடைந்தது. அவரது உதடுகள் கிழிந்து இரத்தம் வழிந்தது. அவரை அடையாளம் காண்பது கஷ்டமாக இருந்தது.

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

எங்களது பிரசங்கம் இப்போது உங்கள் கைப்பேசியில் கிடைக்கிறது.
WWW.SERMONSFORTHEWORLD.COM
என்கிற இணையதளத்திற்குச் செல்லவும்,
“APP” என்று எழுதப்பட்ட அந்தப் பச்சை நிற பொத்தானை அழுத்தவும்.
அதன்பிறகு வரும் வழிமுறையைப் பின்பற்றவும்.

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

ஏசாயா பாடுபட்ட அடிமையைப்பற்றி தீர்க்கதரிசனமாக முன்னறிவித்துச் சொன்னது சரியாக இருந்தது, “மனுஷனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு அந்தக்கேடு அடைந்தது” (ஏசாயா 52:14). அந்தப் பரியாசம் மற்றும் துப்புதல் அந்தத் தீர்க்கதரிசி மூலமாக முன்னறிவிக்கபட்டது: “அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக்கொடுத்தேன்; அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை” (ஏசாயா 50:6).

இது நம்மை சிலுவைக்குக் கொண்டு வருகிறது. இரத்தம் சொட்டுச் சொட்டாக வடிய, இயேசுவானவர் அங்கே சிலுவையில் அறையப்பட்டார். அப்படியாக அவர் சிலுவையிலே தொங்கிக்கொண்டு இருக்கும்பொழுது, சுருக்கமான ஏழு வாக்கியங்களைக் கொடுக்கிறார். இயேசுவானவர் சிலுவையில் சொன்ன அந்தக் கடைசி ஏழு வார்த்தைகளை நாம் தியானிக்கலாம் என்று நான் விரும்புகிறேன்.

I. முதலாவது வார்த்தை – மன்னிப்பு.

“கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அவரையும், அவருடைய வலது பக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடது பக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள். அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்” (லூக்கா 23:33-34).

இயேசுவானவர் சிலுவைக்குப் போனதற்குக் காரணம் – நமது பாவங்களை மன்னிப்பதற்காகவே. அவர் எருசலேமுக்குப் போவதற்கு நீண்ட காலத்துக்கு முன்பாகவே அவர் கொல்லப்படுவார் என்று அவர் அறிந்திருந்தார். உன்னுடைய பாவங்களுக்குரிய கிரயத்தைச் செலுத்த ஆர்ந்தமர்ந்து முடிவு செய்யப்பட்டு அவர் தம்மை சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்தார்.

“ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்” (I பேதுரு 3:18).

“கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்தார்” (I கொரிந்தியர் 15:3).

இயேசுவானவர், “பிதாவே, இவர்களுக்கு மன்னியும்,” என்று சிலுவையிலே தொங்கிக்கொண்டு இருந்தபொழுது ஜெபித்தார். தேவன் அவருடைய ஜெபத்துக்குப் பதில் கொடுத்தார். இயேசுவானவரை முழுமையாக நம்புகிற ஒவ்வொரு நபரும் மன்னிக்கப்படுவார். அவரது சிலுவை மரணம் உன்னுடைய பாவத்துக்குரிய தண்டனை கிரயத்தை செலுத்துகிறது. அவருடைய இரத்தம் உன்னுடைய பாவங்களை கழுவி நீக்குகிறது.

II. இரண்டாவது வார்த்தை – இரட்சிப்பு.

இயேசுவானவருக்கு இருபக்கத்திலும், இரண்டு கள்ளர்கள் சிலுவையில் அறையப்பட்டார்கள்.

“அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த [குற்றவாளிகளில்] ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான். மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம் நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு, இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்” (லூக்கா 23:39-43).

அந்த இரண்டாவது கள்ளனுடைய இரட்சிப்பு வெளிப்பாடு உள்ளதாக இருக்கிறது. அது காட்டுவது

1. இரட்சிப்பு என்பது ஞானஸ்நானத்தின் மூலமாக இல்லை அல்லது சபை உறுப்பினராவதிலும் இல்லை – அந்தக் கள்ளன் இந்த இரண்டையும் செய்யவில்லை.

2. இரட்சிப்பு என்பது நல்ல உணர்வின் மூலமாக இல்லை – அந்தக் கள்ளன் தீய நினைவுகள் மட்டும் உள்ளவனாக இருந்தான் – அவன் சிலுவையில் அறையப்பட்டான் அதேபோல பாவஉணர்த்துதலின் கீழ் இருந்தான்.

3. இரட்சிப்பு என்பது முன்னுக்கு போவதினாலோ அல்லது உனது கையை உயர்த்துவதாலோ வருவதில்லை – அவனுடைய கைகள், அதேபோல பாதங்கள் சிலுவையில் ஆணி அடிக்கப்பட்டிருந்தது.

4. இரட்சிப்பு என்பது “இயேசுவானவரை உன் இருதயத்துக்குள் வரவேற்பதன்” மூலமாக வருவதில்லை. அப்படி செய்ய வேண்டும் என்று யாராவது சொல்லி இருந்தால் அந்தக் கள்ளன் ஆச்சரியப்பட்டிருப்பான்!

5. இரட்சிப்பு என்பது “பாவியின் ஜெபத்தை சொல்லுவதன்” மூலமாக வருவதில்லை. அந்தக் கள்ளன் இந்த ஜெபத்தை செய்யவில்லை. இயேசுவானவரிடம் தன்னை நினைவு கூரும் படியாக மட்டுமே கேட்டான்.

6. இரட்சிப்பு என்பது நீ வாழும் வாழ்க்கை வழியை மாற்றுவதன் மூலமாக வருவதில்லை. அந்தக் கள்ளனுக்கு அதை செய்ய நேரமில்லை.


இந்தக் கள்ளன் இரட்சிக்கப்பட்டான் அதேபோல நீயும் இரட்சிக்கப்பட வேண்டியது அவசியமாகும்:

“கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீ இரட்சிக்கப்படுவாய்” (அப்போஸ்தலர் 16:31).

இயேசுவானவரை முழுஇருதயத்தோடும் விசுவாசி, அந்தச் சிலுவையில் அறையப்பட்ட கள்ளனை இரட்சித்ததுபோல, அவர் உன்னை தமது இத்தத்தின் மூலம் இரட்சிப்பார் மற்றும் நீதிமானாக்குவார்.

III. மூன்றாவது வார்த்தை – பாசம்.

“இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள். அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்” (யோவான் 19:25-27).

இயேசுவானவர் யோவானிடம் தமது தாயாரைக் கவனித்துக் கொள்ளும்படியாக சொன்னார். நீ இரட்சிக்கப்பட்ட பிறகு கிறிஸ்தவ வாழ்க்கையில் நிறைய இருக்கிறது. நீ கவனிக்கப்படவேண்டியது அவசியமாகும். கிறிஸ்து அப்போஸ்தலனாகிய யோவானிடம் தமது அன்பான தாயாரைக் கவனித்துக் கொள்ளும்படியாக ஒப்புக்கொடுத்தார். அவர் உன்னை ஸ்தலசபையின் கவனிப்புக்கு ஒப்புக்கொடுக்கிறார். ஸ்தலசபையின் கவனிப்பு மற்றும் பாசம் இல்லாமல் ஒருவரும் கிறிஸ்தவ வாழ்க்கையை வாழமுடியாது. நமது நாளில் இது அடிக்கடி மறந்து விடப்பட்ட ஒரு உண்மையாகும்.

“இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே [எருசலேமில்] சேர்த்துக்கொண்டு வந்தார்” (அப்போஸ்தலர் 2:47)

IV. நான்காவது வார்த்தை – கடும் துயரம்.

“ஆறாம் மணி நேரமுதல் ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்” (மத்தேயு 27:45-46).

இயேசுவானவர் கடும் துயரமாக கதறினதானது தேவதலைமையின், திரித்துவத்தின் உண்மையைக் காட்டுகிறது. குமாரனாகிய தேவன் சிலுவையிலே உனது பாவங்களைச் சுமந்தார், பிதாவாகிய தேவன் தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார். வேதாகமம் சொல்லுகிறது:

“தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே” (I தீமோத்தேயு 2:5-6).

V. ஐந்தாவது வார்த்தை – துன்பம்.

“அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார். காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது: அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள்” (யோவான் 19:28-29).

நமது பாவங்களுக்காக கிரயத்தைக் கொடுக்க இயேசுவானவர் பெரிய துன்பத்தை அடைந்தார் என்பதை இந்த வார்த்தை நமக்குக் காட்டுகிறது:

“நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப் பட்டார்” (ஏசாயா 53:5).

VI. ஆறாவது வார்த்தை – பிராயசித்தம்.

“இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொன்னார்” (யோவான் 19:30).

நான் இதுவரையிலும் சொன்ன அதிகமானவைகளை ஒரு கத்தோலிக்க பாதிரியார் கொடுத்திருக்க முடியும். ஆனால் இந்த ஆறாவது வார்த்தையில் புரோட்டட்ஸ்டென்டின் மறுமலர்ச்சி இருக்கிறது, அதேபோல கடந்த காலங்கள் முழுவதிலும் இருந்த பாப்டிஸ்டு நம்பிக்கை அடங்கி இருக்கிறது. இயேசுவானவர் சொன்னார், “முடிந்தது.”

இயேசுவானவர், “முடிந்தது” என்று சொன்னது சரியா? கத்தோலிக்க சபை சொல்லுகிறது, “இல்லை.” அவர் ஒவ்வொரு மாஸிலும், புதிதாக சிலுவையில் அறையப்பட வேண்டியது அவசியம் என்று அவர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் அது தவறு என்று வேதாகமம் சொல்லுகிறது.

“இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப் பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப் பட்டிருக்கிறோம்” (எபிரெயர் 10:10).

“ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தி யிருக்கிறார்” (எபிரெயர் 10:14).

“அன்றியும், எந்த ஆசாரியனும் நாடோறும் ஆராதனை செய்கிறவனாயும், பாவங்களை ஒருக்காலும் நிவர்த்திசெய்யக்கூடாத ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்திவருகிறவனாயும் நிற்பான். இவரோ [இயேசு], பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார்” (எபிரெயர் 10:11-12).

நமது பாவங்களுக்கு முழுபிராய சித்தத்தையும், சிலுவையிலே ஒரேதரமாக, இயேசுவானவர் செலுத்தி விட்டார் .

இயேசுவானவர் எல்லாவற்றையும் செலுத்தி விட்டார்,
நான் அவருக்கு செலுத்த வேண்டிய சகலவற்றையும்;
பாவம் ஒரு இரத்தாம்பர கறையை விட்டு சென்றது,
அதை அவர் கழுவி உறைந்த பனியைப்போல வெண்மையாக்கினார்.
(“இயேசுவானவர் எல்லாவற்றையும் செலுத்தி விட்டார்” by Elvina M. Hall, 1820-1889).

VII. ஏழாவது வார்த்தை – தேவனுக்கு ஒப்புவித்தல்.

“இயேசு பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார்” (லூக்கா 23:46).

இயேசுவானவர் மரணத்துக்கு முன்பாக பிதாவாகிய தேவனுக்கு எல்லாவற்றையும் முழுமையாக ஒப்புவித்தார் என்பதை இந்தக் கடைசி தகவல் மூலமாக காட்டினார். பெரிய ஸ்பர்ஜன் சுட்டிக்காட்டினார், இது இயேசுவானவரின் முதலாவதாக பதிவுசெய்யப்பட்ட வார்த்தைகளைப் பிரதிபலிக்கிறது, “என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா [தெரியுமா]” (லூக்கா 2:49). இயேசுவானவர் ஆரம்பத்திலிருந்து இறுதி வரையிலும், தேவனுடைய சித்தத்தைச் செய்தார்.

அவரை சிலுவையில் அறைந்த கடினமான நூற்றுக்கதிபதிகளில் ஒருவன் இந்த ஏழு வாக்கியங்களை நின்று கவனித்துக் கொண்டிருந்தான். அந்த நூற்றுக்கதிபதி அநேகர் சிலுவையில் அறையப்பட்டதைக் கவனித்து இருப்பான், ஆனால் இயேசுவானவர் மரித்ததைபோல ஒருவரையும் ஒருபோதும் காணவில்லை, ஒரு அற்புதமான போதனையைப் பிரசங்கித்துக்கொண்டே அவரது இரத்தம் வெளியே வழிந்தோடியது.

“நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக்கண்டு மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்” (லூக்கா 23:47).

அந்த நூற்றுக்கதிபதி இன்னும் சிறிது அதிகமாக இயேசுவானவரைப்பற்றி யோசித்தான், அதன்பிறகு சொன்னான்,

“மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன்” (மாற்கு 15:39).

அவர் தேவனுடைய குமாரனாக இருக்கிறார்! அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் – உயிரோடு, சரீரபிரகாரமாக – ஜீவனோடு இருக்கிறார். அவர் பரலோகத்துக்கு எழுந்தருளி போனார். அவர் தேவனுடைய வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கிறார். “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீ இரட்சிக்கப்படுவாய்” (அப்போஸ்தலர் 16:31).

தேவனை விசுவாசித்தால் போதும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் நினைப்பது தவறு. தேவனை விசுவாசிப்பதால் மட்டுமே ஒருவரும் இரட்சிப்படைவதில்லை. இயேசுவானவர் தாமே சொன்னார், “என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6). டாக்டர் A. W. டோசர் சொன்னார், “தேவனிடத்தில் செல்வதற்கு அநேக வழிகளில் கிறிஸ்து ஒரு வழி அல்ல, அல்லது பல வழிகளில் அவர் சிறந்த வழி அல்ல; அவர் மட்டுமே ஒரே வழியாக இருக்கிறார்” (That Incredible Christian, p. 135). நீ இயேசுவானவரை நம்பவில்லையானால், நீ இழக்கப்பட்டாய். நீ எவ்வளவு “நல்லவராக” இருந்தாலும் பரவாயில்லை, எவ்வளவுக்கு அதிகமாக அடிக்கடி நீ சபைக்குப் போனாலும், அல்லது வேதம் வாசித்தாலும் பரவாயில்லை, நீ இயேசுவானவரை நம்பவில்லையானால் நீ இழக்கப்பட்டாய். “என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.” இயேசுவானவர் ஒருவர் மட்டுமே உன் பாவங்களை தம் இரத்தத்தினால் கழுவுவார். ஆமென்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

போதனைக்கு முன்னதாக வாசிக்கப்பட்ட வேதபாகம்: மாற்கு 15:24-34.
போதனைக்கு முன்னதாக பாடப்பட்ட தனிப்பாடல்:
“Blessed Redeemer” (Avis Burgeson Christiansen, 1895-1985).


முக்கிய குறிப்புகள்

சிலுவையின் மீதிருந்து இயேசுவானவரின்
கடைசி ஏழு வார்த்தைகள்

THE SEVEN LAST WORDS OF JESUS ON THE CROSS

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்
by Dr. R. L. Hymers, Jr.

“கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அவரையும், அவருடைய வலது பக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடது பக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள்” (லூக்கா 23:33).

(ஏசாயா 52:14; 50:6)

I.   முதலாவது வார்த்தை – மன்னிப்பு, லூக்கா 23:33-34;
I பேதுரு 3:18; I கொரிந்தியர் 15:3.

II.   இரண்டாவது வார்த்தை – இரட்சிப்பு, லூக்கா 23:39-43; அப்போஸ்தலர் 16:31.

III.  மூன்றாவது வார்த்தை – பாசம், யோவான் 19:25-27; அப்போஸ்தலர் 2:47.

IV.  நான்காவது வார்த்தை – கடும் துயரம், மத்தேயு 27:45-46;
I தீமோத்தேயு 2:5.

V.   ஐந்தாவது வார்த்தை – துன்பம், யோவான் 19:28-29;
ஏசாயா 53:5.

VI.  ஆறாவது வார்த்தை – பிராயசித்தம், யோவான் 19:30; எபிரெயர் 10:10; எபிரெயர் 10:14, 11-12.

VII. ஏழாவது வார்த்தை – தேவனுக்கு ஒப்புவித்தல், லூக்கா 23:46; லூக்கா 2:49; 23:47; மாற்கு 15: 39; அப்போஸ்தலர் 16:31; யோவான் 14: 6.