Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
கிறிஸ்துவின் பாடுகள் – உண்மையும் பொய்யும்

(செய்தி எண்: 5 ஏசாயா 53)
CHRIST’S SUFFERING – THE TRUE AND THE FALSE
(SERMON NUMBER 5 ON ISAIAH 53)
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ் ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

மார்ச் 17, 2013 அன்று கர்த்தருடைய நாள் காலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி.
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Morning, March 17, 2013

“அவர் மெய்யாகவே நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்: நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்” (ஏசாயா 53:4).


நமது வேத வசனத்தின் முதற்பகுதி இயேசு “நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்” என்று சொல்லுகிறது. இந்த வேத வசனம் புதிய ஏற்பாட்டில் மத்தேயு 8:17ல் மேற்கோள் காட்டப்படுகிறது,

அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு நம்முடைய துக்கங்களைச் சுமந்தார் என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது” (மத்தேயு 8:17).

மத்தேயு 8:17 வேதபகுதி ஏசாயா 53:4ன் நேரடி மேற்கோள் என்பதைவிட அதன் அப்பியாசம் என்பது பொருத்தமாக இருக்கும். டாக்டர் எட்வர்ட் ஜே. யங் சொல்லுகிறார், “மத்தேயு 8:17ல் உள்ள வேத பகுதயில் வரும் நோய் நேரடியாக பாவத்தைக் குறித்தாலும், இந்த வசனம் பாவத்தின் விளைவின் நீக்கத்தையும் குறிக்கிறது என்பதால் ஏற்ற ஒன்று தான். நோய் பாவத்தின் பிரிக்க முடியாத நண்பன்” (Edward J. Young, Ph.D., The Book of Isaiah, William B. Eerdmans Publishing Company, volume 3, p. 345).

மத்தேயு 8:17ல் பாவமன்னிப்பு நோயைக் குணமாக்குவதில் வெளிப்படுகிறது. எனினும் மத்தேயு இதை ஒரு அப்பியாசமாகவே பயன்படுத்துவதைக் கருத்தில் கொண்டு, அதை முக்கிய அர்த்தமாக்கலாகாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பேராசிரியர் “ஹெங்ஸ்டென்பெர்க் தாசர் [கிறிஸ்து] பாவத்தை அதன் விளைவுகளுடன் சுமக்கிறார், அவற்றில் வியாதியும் வேதனையும் முக்கிய இடம் பெறுகிறது என சரியாகக் குறிப்பிடுகிறார். நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் மத்தேயு இயற்கையாகவே [ஏசாயா 53:4ல் உள்ள எபிரெய மொழிக்கு] வித்தியாசப்பட்டு… கிறிஸ்து நமது நோய்களையும் சுமந்தார் என்று கூறுகிறார்” (quoted in Young, ibid., page 345, footnote 13).

நான்கு சுவிசேஷங்களையும் கவனமாக நோக்கும்போது கிறிஸ்து ஆத்துமாவை இரட்சிப்பதன் மூலம் அதைக் குணமாக்க வல்லவர் என்பதை நிரூபிக்கவே வியாதிகளை சுகமாக்கினார். இந்த உதாரணமானது பத்து குஷ்டரோகிகள் சுகமடைவதில் காண முடிகிறது. அவர்கள் அவரை நோக்கி, “ஆண்டவரே, எங்களுக்கு இரங்கும்” என்றனர் (லூக்கா 17:13). இயேசு அவர்களை ஆசாரியனிடத்திற்கு அனுப்பினார், அப்படி “அவர்கள் போகும் வழியில் சுத்தமானார்கள்” (லூக்கா 17:14). அவர்கள் அவருடைய வல்லமையால் சுத்தமாக்கப்பட்டார்கள், எனினும் அவர்கள் அனைவரும் இரட்சிப்படையவில்லை. அவர்களில் ஒருவன் மட்டுமே திரும்ப வந்தான். அவன் தன் ஆவிக்குரிய பாவமன்னிப்பாகிய சுகத்தைப் பெற்றுக் கொண்டான், இவனுடைய இரட்சிப்பில், இயேசுவிடம் திரும்ப வந்து, “அவருக்கு முன்பாக முகங்குப்புற அவர் பாதத்தில் விழுந்து அவரைத் தொழுது கொண்டான் (லூக்கா 17:16). பின்பு இயேசு அவனை நோக்கி, “நீ எழுந்து, போ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” என்றார் (லூக்கா 17:19). அப்பொழுது தான் அவன் ஆவிக்குரிய விதமாகவும் சரீரப்பிரகாரமாகவும் சுகமடைந்தான். இதை இயேசு செய்த பல அற்புதங்களில் நம்மால் காண இயலும், உதாரணமாக யோவான் சுவிசேஷத்தில் அதிகாரம் ஒன்பதில் பிறவிக்குருடன் பார்வையடைந்த விதம். முதலாவது அந்த மனிதன் குருட்டுத்தனத்தில் இருந்து சுகம் பெற்றான், ஆனால் அவன் இயேசுவை “ஒரு தீர்க்கதரிசி”யாக மட்டுமே கண்டான் (யோவான் 9:17). பின்பு அவன் சொன்னான்,

“ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான்” (யோவான் 9:38).

அதற்குப் பின்பு தான் அந்த மனிதன் இரட்சிப்பு பெற்றான்.

ஆகவே சரீர சுகம் இரண்டாம் பட்சமானது என்ற முடிவுக்கு வருகிறோம், மேலும் ஏசாயா 53:4ல் உள்ள முக்கியக் குறிப்பு ஆவிக்குரிய சுகம் சம்பந்தப்பட்டது. டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீ சொன்னார்,

ஏசாயாவில் வரும் இந்த வேத பகுதி தெளிவாக நாம் நமது பாவங்களிலிருந்தும் அக்கிரமங்களிலிருந்தும் சுகமாக்கப்பட்டோம் என உரைக்கிறது [ஏசாயா 53:5]. “மெய்யாகவே நீங்கள் சொல்வது சரிதானா?”, என்று கேட்கிறீர்கள். இதைக் குறித்துத்தான் இந்த வேதபகுதி சொல்கிறது என்பதை அறிவேன் ஏனெனில் பேதுரு சொல்கிறார், “நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே நமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்” (1 பேதுரு 2:24). எவைகளிலிருந்து சுகம்? “பாவங்களிலிருந்து”. பேதுரு பாவத்தைக் குறித்து பேசுகிறதைத் தெளிவு படுத்துகிறார். (McGee, ibid., page 49).

இந்த விளக்கம் நம்மை நமது வேத பகுதிக்கு நேராக திருப்புகிறது,

“அவர் மெய்யாகவே நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்: நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்” (ஏசாயா 53:4).

இந்த வசனம் இயல்பாக இரு பகுதிகளாக பிரிந்திருக்கிறது: (1) கிறிஸ்துவின் பாடுகளுக்கான, வேதம் தரும் மெய்யான காரணம்; மற்றும் (2) குருடான மனிதரால் கணிக்கப்பட்ட தவறான காரணம்.

I. முதலாவதாக, கிறிஸ்துவின் பாடுகளுக்கான, பரிசுத்த வேதம் தரும் மெய்யான காரணம்.

“அவர் மெய்யாகவே நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்…”(ஏசாயா 53:4).

“மெய்யாகவே” என்னும் வார்த்தை கிறிஸ்துவின் பாடுகளைக் குறித்த வேதம் தரும் காரணத்திற்கும், குருடரான மனிதர்கள் கணிப்புக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்துகிறது. “மெய்யாகவே”, அதன்பின் உண்மையான வாக்கியம்; “நாமோ,” தொடர்ந்து தவறான வாக்கியம்;

“அவர் மெய்யாகவே நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்: நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்” (ஏசாயா 53:4).

மட்டுமல்லாமல் “பாடுகள்” மற்றும் “துக்கங்கள்” என்னும் வார்த்தைகள் சரியாகப் புரிந்து கொள்ளப்படல் வேண்டும். “துக்கங்கள்” என்னும் வார்த்தை எபிரெய மொழியில் “வியாதிகள்” என்ற அர்த்தங்கொள்கிறது. ஏசாயா இதை “பாவத்திற்கு” பொருளாக ஏசாயா 1:5-6ல் பயன்படுத்துகிறார். துக்கங்கள் பாவமாகிய நோயையும் அதன் உக்கிரத்தையும் குறிக்கிறது. “பாடுகள்” என்னும் வார்த்தை “வேதனையை உணர்தல் மற்றும் வலியைக்” குறிக்கிறது. ஆகவே, பாவமாகிய “நோயும் அதன் உக்கிரமமும்”, “பாடுகள், வேதனை மற்றும் வலியை” உண்டாக்குகிற பாவமும், இணைந்து கொள்ளும் அர்த்தம் - பாவம் என்னும் நோய் அல்லது அதன் வேதனை ஆகும்.

பின்பு “சுமந்தார்” என்னும் வார்த்தையைக் கவனியுங்கள். அதன் அர்த்தம் “ஏற்றுக்கொள்வது”. ஆனால் “அது சுமப்பதையோ [அல்லது ஏற்றுக்கொள்வதையோ] விட மேலானது. அந்த சிந்தை தூக்கிச் சுமந்து செல்வதை குறிக்கும் விதத்தில் வருகிறது” (Young, ibid., p. 345). கிறிஸ்து மனிதனின் பாவத்தை, தன் தோளில் சுமந்து, அந்த பாவங்களை புறம்பாக்கி விடுகிறார். கிறிஸ்து தமது சிலுவையை எடுத்துக்கொண்டு கல்வாரிக்குச் சென்றது போல, தம்மிடம் மனந்திரும்புபவருடைய பாவத்தை சுமந்து அப்புறப்படுத்துகிறார். கிறிஸ்துவைக் குறித்து, அப்போஸ்தலன் பேதுருவும் இதைக் குறித்துத்தான் சொல்கிறார்,

“அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களை சுமந்தார்” (1 பேதுரு 2:24).

கெயில் மற்றும் டிலிட்ச் வேத வர்ணனை புத்தகம் சொல்வது போல,

இதன் அர்த்தம் [கிறிஸ்து] வெறுமனே நமது பாடுகளுடைய ஐக்கியத்தில் நுழைந்தார் என்பது மட்டுமல்ல, நாம் சுமக்க வேண்டிய நமக்கு தகுதியான பாவங்களை அவர் சுமந்து, அவைகளை எடுத்துப் போட்டது மட்டுமல்லாமல் … தம் சொந்த நபரில் [சொந்த சரீரத்தில்] அவைகளை சுமந்து, அவைகளால் அவர்களை விடுதலையாக்கும்படி அப்படி செய்தார். ஆனால் வேறொரு நபர் அனுபவிக்க வேண்டிய காரியத்தை ஒரு நபர் சுமக்கும் போது, அவர் அதைப் பொறுத்துக் கொள்வது மட்டுமல்லாமல், அவன் [இடத்தில்] அதை அனுபவிக்கிறார், இது பதிலீடு செய்யப்படல் என அழைக்கப்படுகிறது (Franz Delitzsch, Th.D., Commentary on the Old Testament in Ten Volumes, William B. Eerdmans Publishing Company, 1973 reprint, volume VII, p. 316).

கிறிஸ்து நமது பாவத்தைத் தம்முடைய சொந்த சரீரத்தில் ஏற்றுக்கொண்டு அவைகளை கல்வாரி மலையில், சிலுவையில், அப்புறப்படுத்தி, அங்கே நமது பாவத்திற்கான கிரயம் செலுத்தினார். “இதுவே பதிலீடு மரணம் என்று பொருள்படுகிறது”!!! “அவமானத்தையும் கொடூர பரியாசத்தையும் சுமந்தார்.” அதைப் பாடுங்கள்!

அவமானத்தையும் கொடூர பரியாசத்தையும் சுமந்தார்,
என் ஸ்தானத்தில் ஆக்கினையுடன் நின்றார்;
என் மன்னிப்பை அவர் இரத்தத்தால் முத்திரித்தார்;
அல்லேலூயா! என்ன அருமை இரட்சகர்!
   (“Hallelujah! What a Saviour!” by Philip P. Bliss, 1838-1876).

“நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களின் நிமித்தம் [அவர்] நொருக்கப்பட்டார்” (ஏசாயா 53:5).

“வேத வாக்கியங்களின் படியே, கிறிஸ்து நமது பாவங்களுக்காக மரித்தார்” (1 கொரிந்தியர் 15:3).

“அவர் மெய்யாகவே நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்…” (ஏசாயா 53:4).

டாக்டர் டபுள்யூ. ஏ. கிறிஸ்வெல் சொன்னார்,

கிறிஸ்துவின் சிலுவை மரணம் நம் பாவத்தின் பலனாகவும் விளைவாகவும் இருக்கிறது. கர்த்தராகிய இயேசுவைக் கொலை செய்தது யார்? மகிமையின் கர்த்தரை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தது யார்? சிலுவையில் பாடுபட்டு மரிக்க அவரை ஆணியடித்தது யார்? அது யாருடைய தவறு?... நம் அனைவருக்கும் அதில் பங்கு இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். என் பாவம் அவர் சிரசில் முள்முடியைப் பதியச் செய்தது. அவர் கரங்களிலும் கால்களிலும் என் பாவம் ஆணியைக் கடாவிற்று. என் பாவம் அவர் விலாவில் ஈட்டியால் குத்திற்று. என் பாவம் கர்த்தராகிய இயேசுவை சிலுவையில் அறைந்தது. அதுவே… நம் ஆண்டவரின் மரணத்தின் அர்த்தமாய் இருக்கிறது (W. A. Criswell, Ph.D., “The Blood of the Cross,” Messages From My Heart, REL Publications, 1994, pages 510-511).

“வேத வாக்கியங்களின் படியே, கிறிஸ்து நமது பாவங்களுக்காக மரித்தார்” (1 கொரிந்தியர் 15:3).

“அவர் மெய்யாகவே நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்…” (ஏசாயா 53:4).

“அவமானத்தையும் கொடூர பரியாசத்தையும் சுமந்தார்.” மறுபடியும் அதைப் பாடுங்கள்!

அவமானத்தையும் கொடூர பரியாசத்தையும் சுமந்தார்,
என் ஸ்தானத்தில் ஆக்கினையுடன் நின்றார்;
என் மன்னிப்பை அவர் இரத்தத்தால் முத்திரித்தார்;
அல்லேலூயா! என்ன அருமை இரட்சகர்!

அதுவே கிறிஸ்துவின் பாடுகளுக்கான மெய்யான காரணம் - உன் பாவத்திற்கு கிரயம் செலுத்த! ஆனால் மனிதர்கள் தங்கள் குருட்டுத்தனத்தினாலும், முரட்டாட்டத்தாலும், கிறிஸ்துவின் பதிலீட்டு மரணம் என்னும் அற்புதமான சத்தியத்தைப் பொய்யாக்கி விட்டனர்! இது நம்மை இரண்டாம் கருத்திற்கு அழைத்துச் செல்கிறது.

II. இரண்டாவதாக, கிறிஸ்துவின் பாடுகளுக்கான, விழியிழந்த மனிதரின் தவறான கணிப்பு

மறுபடியும் நமது வேத பகுதியைக் காண்போம். நாம் எழுந்திருந்து இந்த வசனப்பகுதியை சப்தமாய் வாசிப்போம்.

“அவர் மெய்யாகவே நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்: நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்” (ஏசாயா 53:4).

நீங்கள் அமர்ந்து கொள்ளலாம்.

நாமோ அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.” “நாம்”, ஆதாமின் சந்ததியான மனிதர்கள், சாத்தானால் பார்வை இழக்கப்பட்டு, நாம் கிறிஸ்துவின் மரணம் நமக்கான, பதிலீட்டு மரணம் என்பதை காண முடியாது இருக்கிறோம். நாம் அவர் சாதாரண மதியீனம் உள்ளவர், ஒருவேளை பைத்தியம் அல்லது நிலை கலங்கியவர், அல்லது, பரிசேயர் சொன்னது போல, ஏற்கனவே வேரூன்றியிருந்த ஆளுகைக்கு விரோதமாக “பிசாசு பிடித்தவன் போல” எழும்பியதன் மூலம் தனக்குத்தானே பாடுகளை வருவித்தவன் என நினைத்தோம். யோபின் சிநேகிதர்களைப் போல, அவர் தமது பாவத்திற்காகவும் தம்மேல் மனித கோபாக்கினையை வருவித்துக் கொண்டார் என நாம் நினைத்தோம். மிகச் சிறப்பாக சொல்ல வேண்டுமானால், அவர் ஒன்றுமில்லாத காரணத்திற்காக மரித்தார் என நாம் சொல்லுவோம். ஒரு முறையோ அல்லது மற்ற தடவையோ, இயேசு ஒரு சீர்திருத்தவாதி என நினைத்தோம். அவர் சமயத் தலைவர்களைக் கோபப்படுத்தி பகையை வளர்த்துக் கொண்டதால் தம்மீது மரணத்தை வருவித்துக் கொண்டார் என நினைத்தோம்.

வாதிக்கப்பட்டு? ஆம், அவர் வாதிக்கப்பட்டார் என அறிந்திருக்கிறோம்! அடிக்கப்பட்டார்? ஆம் அவர் அடிபட்டார். சிறுமைப்படுத்தப்பட்டவர்? ஆம், அதையும் நாம் அறிந்திருக்கிறோம்! அவர்கள் தங்கள் கைகளை முறுக்கிக் கொண்டு அவர் கன்னத்தில் அறைந்தார்கள் என அறிந்திருக்கிறோம். அவர் சிலுவையில் ஆணி அறையப்பட்டார் என அறிந்திருக்கிறோம்! இந்த உண்மைகளை ஒவ்வொருவரும் அறிந்திருக்கிறார்கள்! ஆனால் அவைகளை தவறுதலாக புரிந்து கொண்டோம். தவறுதலாக நினைத்தோம். அவர் நம்முடைய துக்கங்களை அவர் சுமந்து, நம்முடைய பாடுகளை அவர் ஏற்றுக்கொண்டார் என்பதை நாம் அறிந்து கொள்ளவில்லை! சிலுவையில் அறையப்பட்டவராய் அவரை நாம் பார்த்தபோது, அவர் தமது தவறுதலுக்காவும் மீறுதலுக்காகவும் மரித்தார் என நினைத்தோம்.

“ஆனால் இல்லை! இது நம்முடைய மீறுதலுக்காகவும், நம்முடைய அக்கிரமங்களுக்காகவும், [தேவனுடன்] நாம் சமாதானம் உடையவர்களாய் இருக்கும் பொருட்டு, [பாவத்திலிருந்து] நாம் சுகமடையும்படியாகவும் அவர் அப்படியானார். சத்தியம் என்னவெனில் நாமே வழி தப்பி, நமது சுய விருப்பப்படி நடந்து போயிருந்தோம், ஆனாலும் [தேவன்] நமது பாவங்களை அவர் மீது, பழுதற்ற பதிலீடாகும்படி சுமத்தினார்” (William MacDonald, Believer’s Bible Commentary, Thomas Nelson Publishers, 1995, p. 979).

நமது மீறுதலுக்காக அவர் நமக்கு சமாதானம் தந்தார்,
நமது அடிமைத்தனத்திலிருந்து விடுதலை தந்தார்,
அவருடைய தழும்புகளால், அவருடைய தழும்புகளால்,
அவருடைய தழும்புகளால் நமதான்மாக்கள் சுகமடைகின்றன.
   (“He Was Wounded” by Thomas O. Chisholm, 1866-1960)

“அவர் மெய்யாகவே நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்: நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்” (ஏசாயா 53:4).

திரு. கிரிஃபித் அவர்களே, தயவாய் அந்த வசனத்தைப் பாடுங்கள்.

உன்னைக் குறித்து அது உண்மையாய் இருக்கிறதா? உன் பாவங்களை சுமப்பதல்லாமல், வேறொரு காரணத்திற்காய் மரித்தார் என நினைத்ததுண்டா? அப்படியானால், கிறிஸ்து உன் பாவங்களுக்காக உன் பாவத்தின் தண்டனையை நீக்க உன் இடத்தில் மரித்தார் என்பதை அறிந்தபடியால், எளிய விசுவாசத்துடன் அவரை நம்புவீர்களா? தேவ குமாரனைப் பற்றும் விசுவாசத்தால் நீதிமானாக்கப்பட்டு அவருடைய இரத்தத்தால் பாவமற சுத்திகரிக்கப்பட ஒப்புக்கொடுப்பாயா?

அவருடைய பாடுமரணத்தைக் குறித்து நீ கொண்டிருந்த தவறான எண்ணங்களை உன் மனதை விட்டு அகற்றும்படி உன்னைக் கேட்கிறேன். உன் பாவத்திற்கான தண்டனையை கிரயம் பெற்றுக் கொள்ளும்படி அவர் மரித்தார். அவர் உயிரோடு எழுந்தார். இப்போது அவர் பரலோகத்தில் தேவனுடைய வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கிறார். அவரை நம்பி உங்கள் பாவம் போக கழுவப்படுங்கள் என்று உங்களை அழைக்கிறேன்.

ஆனால் இயேசுவைக் குறித்த சரியான அறிவு மட்டும் போதாது. அவரது மரணத்தைக் குறித்த எல்லா காரியங்களையும் அறிந்தும் நீங்கள் கிறிஸ்தவரல்லாது இருக்கலாம். கிறிஸ்துவின் சிலுவை மரணம் குறித்து நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; அவர் பாவிகளின் ஸ்தானத்தில் மரித்தார், என அறிந்தும் மனந்திரும்பாதவர்களாய் இருக்கலாம். உயிரோடு எழும்பிய இயேசு கிறிஸ்துவை நீங்கள் நம்ப வேண்டும். நீங்கள் அவரை நம்பி அவருக்கு உங்களை ஒப்புக்கொடுக்க வேண்டும். அவரே இரட்சிப்பிற்கான வழி. நித்திய ஜீவனுக்கான வழியும் அவரே. இப்பொழுதே அவரை நம்புங்கள், உடனே நீங்கள் பாவமன்னிப்பையும் பாவத்திலிருந்து விடுதலையையும் பெற்றுக்கொள்வீர்கள். திரு. கிரிஃபித், அந்த பத்தியைத் திரும்பவும் பாடுங்கள். உங்கள் இரட்சிப்பைக் குறித்து எங்களோடு பேச விரும்பினால், அவர் பாடிக் கொண்டிருக்கும் போது இந்த அறையின் பின்பகுதிக்குச் செல்லவும்.

நமது மீறுதலுக்காக அவர் நமக்கு சமாதானம் தந்தார்,
நமது அடிமைத்தனத்திலிருந்து விடுதலை தந்தார்,
அவருடைய தழும்புகளால், அவருடைய தழும்புகளால்,
அவருடைய தழும்புகளால் நமதான்மாக்கள் சுகமடைகின்றன.

டாக்டர் சான், ஒப்புக்கொடுத்தவர்களுக்காக ஜெபியுங்கள். ஆமென்.

இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால், டாக்டர் ஹைமர் அவர்களுக்கு e-mail அனுப்புங்கள். அவர் உங்களிடமிருந்து பதிலைப் பெற விரும்புகிறார். நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென்றும் குறிப்பிடவேண்டும். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் e-mail: rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம். ஆனால், முடிந்தால் ஆங்கிலத்தில் எழுதவும். தபால் மூலம் அனுப்பவிரும்பினால், அவரது விலாசம்: Dr. Hymers P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசி மூலமும் தொடர்பு கொள்ளலாம்: (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை Internet மூலம் ஒவ்வொரு
வாரமும் கேட்கலாம்: www.sermonsfortheworld.com.
தமிழ்ப் பிரசங்கங்களுக்கு இங்கே கிளிக் பண்ணவும்

இந்தப் பிரசங்கங்களைப் பயன்படுத்த Dr. Hymers அவர்களின் அனுமதி
பெற வேண்டியதில்லை. அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். ஆனால்,
Dr. Hymers அவர்களின் video செய்திகளை அனுமதி இல்லாமல்
பயன்படுத்தக்கூடாது.

பிரசங்கத்திற்கு முன்னால் போதகர் வாசித்த வேத பகுதி: 1 பேதுரு 2:21 - 25.
பிரசங்கத்திற்கு முன்னால் தனிப்பாடல் பாடியவர் திரு. பென்ஜமின் கினாசிட் கிரிஃபித்:
“He Was Wounded” (by Thomas O. Chisholm, 1866-1960; to the tune “Oak Park”).


முக்கிய குறிப்புகள்

கிறிஸ்துவின் பாடுகள் - உண்மையும் பொய்யும்

(செய்தி எண்: 5 ஏசாயா 53)
CHRIST’S SUFFERING – THE TRUE AND THE FALSE
(SERMON NUMBER 5 ON ISAIAH 53)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ் ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

“அவர் மெய்யாகவே நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்: நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்” (ஏசாயா 53:4).

(மத்தேயு 8:17; லூக்கா 17:13,14,16,19;
யோவான் 9:17,38; 1 பேதுரு 2:24)

I. முதலாவதாக, கிறிஸ்துவின் பாடுகளுக்கான, பரிசுத்த வேதம் தரும் மெய்யான காரணம், ஏசாயா53:4அ, 5; 1 கொரிந்தியர் 15:3.

II. இரண்டாவதாக, கிறிஸ்துவின் பாடுகளுக்கான, விழியிழந்த மனிதரின் தவறான கணிப்பு, ஏசாயா 53:4ஆ.