Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
கிறிஸ்து – திரள் கூட்டத்தாரால் புறக்கணிக்கப்படுதல்

(செய்தி எண்: 3 ஏசாயா 53)
CHRIST – REJECTED BY THE MASSES
(SERMON NUMBER 3 ON ISAIAH 53)
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ் ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

மார்ச் 13, 2013 அன்று கர்த்தருடைய நாள் காலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி.
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord's Day Morning, March 13, 2013

“எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது? இளங்கிளையைப் போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்கிற வேரைப் போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை. அவரைப் பார்க்கும்போது நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.” (ஏசாயா 53:1-2).


ஏசாயா தேவனுடைய தாசனின் பாடுகளைப் பற்றிய செய்தியை வெகுசிலர் மட்டுமே விசுவாசிப்பர், வெகுசிலர் மட்டுமே அவருடைய கிருபையை அனுபவிப்பர். ஏசாயா 53:1ஐ யோவான் மேற்கோள் காட்டி, கிறிஸ்துவின் காலத்தில் அநேக யூதர்களின் அவிவிசுவாசத்தை விளக்குவதைக் காணலாம்.

“அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாக செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை. கர்த்தாவே, எங்கள் மூலமாய் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது? என்று (ஏசாயா) தீர்க்கதரிசி சொன்ன வசனம் நிறைவேறும்படி இப்படி நடந்தது” (யோவான் 12:37-38).

அப்போஸ்தலனாகிய பவுலும் இயேசு பரமேறிப்போனதற்கும் 30 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வசனத்தை மேற்கோள் காட்டியுள்ளார். யூதரைப் பார்க்கிலும் அதிகமான அளவில் புறஜாதியார் கிறிஸ்து இயேசுவை ஏற்றுக் கொள்வார்கள் என்பதை விளக்குகிறார். பவுல் சொன்னார்.

“யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்கும் கர்த்தரானவர் தம்மை தொழுது கொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரிய சம்பண்ணராயிருக்கிறார். ஆனாலும் சுவிஷேசத்துக்கு எல்லாரும் கீழ்ப்படியவில்லை. அதைக் குறித்து (ஏசாயா) கர்த்தாவே எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? என்று சொல்லுகிறான்.” (ரோமர் 10:12,16).

கர்த்தராகிய இயேசுவும் இதையே நமக்குச் சொன்னார். இரட்சிக்கப்படும் விதத்தில் அவரை வெகுசிலரே விசுவாசிப்பார்கள் என்றார்,

“ஜீவனுக்குப் போகிற வாசல் (இடுக்கமும்), வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிப்பவர்கள் சிலர். ” (மத்தேயு 7: 14).

கிறிஸ்து இதே கருத்தை மறுபடியும் வலியுறுத்துகிறார்,

“இருக்கமான வாசல் வழியாக உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள். அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்கு சொல்லுகிறேன். ”(லூக்கா 13:24).

அநேகமாக அனைவரும் பரலோகம் போவார்கள் என்று உலக மக்கள் நம்புகிறார்கள். ஆனால் இயேசுவோ அதற்கு நேர் எதிரான காரியத்தை சொன்னார்,

“அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.” (மத்தேயு 7:14). “அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்கு சொல்லுகிறேன்.” (லூக்கா 13:24).

அந்தக் கடினமான சத்தியம் ஏசாயாவின் புலம்பலில் எதிரொலிக்கிறது,

“எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?”(ஏசாயா 53:1).

அது ஏன் அப்படி இருக்கிறது என்று நாம் கேட்கக்கூடும் யூதர்கள் பலம் பொருந்திய பெரிய ராஜாவை மகிமையும், ஐசுவரியமும் நிறைந்தவரை எதிர்நோக்க இருந்தனர். எனவே, பொதுவாக மனிதவர்க்கம் கிறிஸ்து ஒரு பாடு சகிக்கும் தாசனாக வந்து, அவர்கள் பாவங்களுக்கு கிரயம் செலுத்தும் விதத்தில் மரிப்பார் என எதிர்பார்க்கவில்லை.

அப்போஸ்தலர் 8ஆம் அதிகாரத்தில் எத்தியோப்பிய மந்திரி கூட யூத ஆசாரியர் மற்றும் பரிசேயரைப் போல இந்த உண்மைகளை காணமுடியாதவனாய் இருந்தான். அவன் ரதம் போய்க்கொண்டிருக்கையில் ஏசாயா 53 அதிகாரம் வாசித்து செல்ல பிலிப்பு என்னும் சுவிஷேசகன் அவனை சந்திக்கிறான்.

“பிலிப்பு ஓடிப்போய்ச் சேர்ந்து (ஏசாயா) தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசிக்கிறதைக் கேட்டு: நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா? என்றான்... அது எனக்கு எப்படித் தெரியும்” (அப்போஸ்தலர் 8:30-31).

இந்த ஆப்பிரிக்கன் யூத மதத்திற்கு மாறியிருந்தவன். அவன் வெளிப்படையாகவே பழைய ஏற்பாட்டு வேதத்தை அறிந்தவன், ஆனாலும் யூத அறிஞர்களைப் போலவே இந்த வசனத்தை தெளிவாய் அறிய முடியாத குருடனாய் இருந்தான்.

இந்த வசனப்பகுதியை வாசிக்கும் எந்த நபரும், மேசியா வரும் போது, பணம் படைத்தவராக, பிரபலமானவராக, மனித மகிமை மேன்மையால் சூழ்ந்திருந்தவராக வராமல், அவர் “துக்கம் நிறைந்தவராகவும் பாடு சகிக்கிறவராகவும்,” மேலும் “மனிதரால் புறந்தள்ளப்பட்டவராகவும்” வந்தார். எனினும், இந்த சத்தியம் வேதாகமத்தில் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது,

“அவர் தமக்குச் சொந்தமானவைகளிடத்தில் (யூத ஜனங்கள்) வந்தார், அவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.” (யோவான் 1:11).

அவரைக் குறித்து வெளிப்படையாய் வேதாகம தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருந்தும் இஸ்ரவேல் தேசத்தார் முழுமையாக, இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை. நமது தீர்க்கதரிசி நமக்குக் காண்பிக்கிறார்,

“இளங்கிளையைப் போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப் போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை (அழகு, வல்லமை) சௌந்தரியமில்லை (மேன்மை, வல்லமை) நாம் அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.” (ஏசாயா 53:2).

ஆதலால், யூதர்கள் அவரை வெறுத்ததை கடுமையாக நியாயத்தீர்க்கக்கூடாது, ஏனெனில் புறஜாதியாரும் அநேக பகுதிகளில் அவரை வெறுத்தனர். ஸ்பர்ஜன் சொன்னார்,

யூதருக்கு மெய்யாய் காணப்படுவது புறஜாதியாருக்கும் அவ்வண்ணமே காணப்படுகிறது. இயேசு கிறிஸ்துவின் சுவிஷேசம் இவ்வுலகத்தில் மிக எளிய ஒன்று, எனினும் எந்த மனிதனும் (தேவனால்) போதிப்படையும் வரை அதை புரிந்து கொள்வதில்லை... ஆவிக்குரியவைகளை புரிந்து கொள்ளும் புத்திக் கூர்மையை பாவம் மழுங்கடித்துவிட்டது... அது உன் வாழ்வில் எப்படி இருக்கிறது? நீயும் குருடனாய் இருக்கிறாயா? நீங்களும் குருடரா? நீங்கள் அப்படியிருந்தால், இயேசுவுக்கடுத்த விசுவாசம் குறித்து அவர் (தேவன்) உங்களுக்குப் போதிப்பாராக: (C.H. Spurgeon, “A Root out of Dry Ground” The Metropolit Tabernacle Pulpit, Pilgrim Publications, 1971 reprint, volume XVIII, pages 565-566).

இப்பொழுது, நமது வேதபகுதி வசனம் 2ல், இயேசு ஏன் புறக்கணிக்கப்பட்டார் எனும் மூன்று காரணங்களை நாம் காணப் போகிறோம். இரண்டாம் வசனத்தை சத்தமாய் வாசியுங்கள்,

“இளங்கிளையைப் போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப் போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.” (ஏசாயா 53:2).

I. முதலாவதாக, கிறிஸ்து வெறுக்கப்பட காரணம், அவர் மனிதன் முன்பாக இளங்கிளையைப் போலத் தோன்றுகிறார்.

இந்த உண்மையின் காரணமாக வெகு சிலரே விசுவாசிக்கின்றனர்.

“அவர் அவனுக்கு முன்பாக இளங்கிளையைப் போல எழும்புகிறார்…”(ஏசாயா 53:2)

அல்லது, டாக்டர். கில் சொன்னதுபோல, “ஒரு இளங்கிளையைப் போல, அந்த வார்த்தையின் படியே, ஒரு மரத்தின் வேரில் இருந்து வளரும்… ஒன்றைக் குறித்து கவனிப்பாரில்லை, அதிலிருந்து எவ்வித நம்பிக்கையும் இல்லை; மேலும் அந்த (வாசகத்தின்) உருவகம் (தாழ்வான) மற்றும் கிறிஸ்துவின் எதிர்பார்ப்பு மிகுந்து இராத தோற்றம் (அவரது பிறப்பில்) வெளிப்பட்டது, ஆகவே யூதர்கள் அவரை விசுவாசியாமல், புறக்கணித்து அவரை அவமதித்தனர்” (John Gill, D.D., An Exposition of the Old Testament, The Baptist Standard Bearer, 1989 reprint, volume I, pp. 310-311).

“அவர் அவனுக்கு முன்பாக இளங்கிளையைப் போல எழும்புகிறார்…” (ஏசாயா 53:2).

இதன் அர்த்தம் என்னவெனில், கிறிஸ்து பிதாவாகிய தேவனுக்கு “முன்பாக” பிறந்து வளர்ந்து பிதாவால் காணப்பட்டு பெலப்படுத்தப்பட்டார். ஆனால், Dr. யங் சொல்வது போல், “மனிதனுக்கு முன்பாகவோ தாசர் (இயேசு) இளங்கிளைப் போல் காணப்பட்டார்… மனிதர்கள் இளங்கிளைகளை வெட்டி எரிவர், ஏனெனில் அது மரத்தில் இருந்து உயிர்சத்து பெற்று வாழ்ந்து கொண்டிருந்தது, மேலும் மனிதனின் பார்வையில் வெட்டி எரிய வேண்டியதாய் இருந்தது” (Edward J. Young, Ph.D., The Book of Isaiah, William B. Eerdmars Publishing Company, 1972, volume 3, pp. 341-342).

இதே காரணத்தால் அல்லவா பிரதான ஆசாரியரும், பரிசேயரும் இயேசுவை ஒழிக்க விரும்பினர்? அவர்கள் சொன்னவை,

“நாம் இவனை இப்படி விட்டுவிட்டால் எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர் வந்து நம்முடைய ஸ்தானத்தையும் ஜனத்தையும் அழித்துப் போடுவார்கள்” (யோவான் 11:48).

“மனிதர்கள் இளங்கிளைகளை வெட்டி எரிவர், ஏனெனில் அவை மரத்தின் சாரத்திலிருந்து உயிர் வாழ்கின்றதால் மனிதரின் பார்வையில் களைந்து வீசப்பட வேண்டியவை” (Young, ibid.). இயேசுவை விசுவாசித்தால், யூதர் நாங்கள் அடையாளத்தை இழந்துவிடுவோம் என அஞ்சினார். “இளங்கிளையைப்” போல, அவர்களின் ஐயம், இயேசு அவர்களது தேசம் என்னும் “மரத்தின் சாரத்தை உறிஞ்சிவிடுவார்,”என பயந்தனர்.

அதே காரணத்திற்காக அல்லவா நீங்களும் அவரை வெறுக்கிறீர்கள்? அதைக் குறித்து ஆழமாய் சிந்தியுங்கள்! உங்கள் வாழ்விலும் உண்மையல்லவா – உங்களுக்கு முக்கியமாய் இருக்கும் சிலதை இழந்துவிடுவோம் என்னும் பயம் – அவரிடத்தில் வந்து அவரை விசுவாசித்தால் நடக்கும் என நினைக்கிறீர்களல்லவா? இதுபோலவே, “மரத்தின் சாரத்தை உறிஞ்சி விடுவது போல்” கிறிஸ்து உங்களில் வந்தால், மிக முக்கியமான என்று சிலவற்றை உறிஞ்சிவிடுவார் என்று பயப்படுகிறீர்கள் என்பது உண்மை அல்லவா?

The Saturday Evening Post என்னும் செய்தித்தாளின் 1929 அக்டோபர் மாதம் வந்த ஒரு செய்தியின் பிரதியினைத் தருமாறு டாக்டர். ஹேகன் அவர்களிடம் கேட்டேன். அது ஆல்பர்ட் ஐன்ஸ்டன் அவர்களது நேர்காணல். அவரிடம் நிருபர், “இயேசுவின் வரலாற்றுப் பூர்வமான வாழ்வை நம்புகிறீர்களா?”என்று கேட்டார். ஐன்ஸ்டீன் பதிலளிக்கையில், “கேள்விக்கு இடமில்லாத வகையில் இயேசுவின் பிரசன்னத்தை உணராமல் ஒருவரும் சுவிசேஷங்களை வாசிக்க முடியாது. கிறிஸ்துவின் ஆளுமை ஒவ்வொரு வார்த்தையிலும் வெளிப்படுகிறது. அப்படிப்பட்ட வாழ்வுடன் எவ்வித கற்பனைக் கதையும் நிறைந்திருக்கவில்லை (The Saturday Evening Post, October 26, 1929, p. 117). கிறிஸ்துவைப் பற்றி உயர்வான எண்ணம் உடையவராய் இருந்தவர் ஐன்ஸ்டீன். எது அவரை நிறுத்தியது? நிச்சயமாக அது புத்திக்கூர்மையின் அடிப்படையிலான பிரச்சனை அல்ல. ஐன்ஸ்டீன் ஒரு விபச்சாரக்காரர், மேலும் அந்தப் பாவத்தை விட்டு விட அவருக்கு மனதில்லை. அது தான் பிரச்சனைக்கு காரணம். மெய்யான கிறிஸ்தவனாக வேண்டுமானால், நீங்கள் சில காரியங்களை விட்டுவிட வேண்டியது மிக அவசியம்.

இப்போது, அது சத்தியமில்லை என்றால் தான் ஒரு துர்உபதேசியாகி விடுவேன். எதையுமே இழக்காமல் நீங்கள் கிறிஸ்துவிடம் வரலாம் என்று நான் சொன்னால் நான் தவறான உபதேசத்தைப் போதிக்கறவனாய் இருப்பேன். கிறிஸ்துவிடம் வர வேண்டுமெனில் சில கிரயம் செலுத்துவம் அவசியமாகிறது! உங்கள் வாழ்வே கிரயமாகிறது! கிறிஸ்து அதை எவ்வாறு தெரிவிக்க முடியும்? அவர் சொன்னார்,

“ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன், தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்து போவான், என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்த மாகவும், தன் ஜீவனை இழந்து போகிறவன் அதை இரட்சித்துக் கொள்ளுவான். மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு இலாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?” (மாற்கு 8:34-37).

அது மிகத் தெளிவு, இல்லையா? கிறிஸ்துவிடம் வரவேண்டுமானால் உங்களை நீங்களே வெறுத்து, உங்கள் சொந்த யோசனைகளையும் உங்கள் சொந்த திட்டங்கள் மற்றும் விருப்பங்களையும் விட்டுவிட வேண்டும். உங்களையே முழுமையாக அவருக்கு நேராக்க வேண்டும். அதுவே கிறிஸ்துவில் உன் நம்பிக்கையைக் குறிக்கிறது. நீங்கள் அவரை நம்புகிறீர்கள் – உங்களை அல்ல, நீங்கள் உங்களையே அவருக்கு தருகிறீர்கள் – உங்கள் சொந்த சிந்தனைகள் மற்றும் இலக்குகளை அல்ல. உங்கள் வாழ்வை அவரிடம் ஒப்புக் கொடுக்கிறீர்கள். கிறிஸ்துவுக்கு உங்களை அர்ப்பணித்து விடுவதன் வாயிலாக உங்கள் ஜீவனை “இழக்கும்” போது மட்டுமே, உங்கள் ஜீவன் நித்திய காலமாக இரட்சிப்பு அடையும்.

ஆகவே, “இளங்கிளை” எனக் குறிக்கப்படும் பதம் தேவனுடைய பார்வையில் ஜீவன் தருபவர் கிறிஸ்துவே என்பதை அடையாளப்படுத்துகிறது. ஆனால் மனித பார்வையில் ஜீவனை எடுக்கிறவராகத் தோன்றுவதால், அநேக ஜனங்க்ள அவரை புறக்கணிக்கின்றனர். அவர் அவர்களுடைய வாழ்வில் “ஆதிக்கம்” செலுத்த விரும்புவதில்லை! அவர்கள் ஜீவனை இழந்து, அவரால் நடத்தப்படுவதைக் குறித்து பயப்படுகிறார்கள்.

II. இரண்டாவதாக, கிறிஸ்து புறக்கணிக்கப்பட்டதற்கான காரணம், அவர் வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கற வேரைப் போலக் காணப்படுவதே.

“இளங்கிளையைப் போலவும் வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப் போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்...” (ஏசாயா 53:2).

முதல் கருத்தை எடுத்துச் சொல்லுவதில் அதிக நேரம் எடுத்துவிட்டேன். ஆனால் கிறிஸ்து “வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப் போல” காணப்பட்டது எப்படி என்பதை எளிதாக அறியலாம். டாக்டர் யங் சொல்கிறார்,

வறண்ட நிலம் தாசருடைய (கிறிஸ்து) தாழ்வான நிலை மற்றும் பின்னணியில் வருவதைக் குறிக்கிறது. இது தாசர் வாழ வேண்டிய பரிதாபமான சூழல்களைக் காண்பிக்கிறது... தண்ணீரற்று வறண்டு இருக்கும் நிலத்தில் தாக்குப்பிடித்து வாழ்வது போராட்டமான ஒன்று (Young, ibid., p. 342).

இந்த தீர்க்கதரிசனம் கிறிஸ்து வந்து பிறந்த ஏழ்மை நிலையைக் குறிக்கிறது. அவரது தந்தை ஓர் தச்சராவார். அவரது தாயார் ஓர் ஏழை கன்னியாய் இருந்தாள். “வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப் போல” அவர் தொழுவத்தில் பிறந்து, ஏழைகளுக்கு நடுவே வளர்ந்தார். அவர் தம் வாழ்வின் பெரும் பகுதியை தாழ்வான ஏழைகளுக்கு மத்தியில் ஊழியம் செய்வதில் செலவு செய்தார். அவருடைய சீஷர்கள் சாதாரண மீனவர்கள். “வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப் போலவும்” அவர் ஏரோது ராஜாவால், ரோம ஆளுநர் பிலாத்துவால், தேர்ந்த வேத பாரகர் மற்றும் பரிசேயரால் புறக்கணிக்கப்பட்டார். அவரை சவுக்கால் அடித்து குற்றுயிராக்கி, பின்னர் கைகளையும் கால்களையும் சிலுவையில் அறைந்தனர். அவரது நொறுக்கப்பட்ட மரித்த சடலத்தை கடன் வாங்கப்பட்ட கல்லறையில் வைத்தனர். “வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப் போலவே” இவர் பூமியில் வாழ்ந்த நாள் முழுவதும், அவருடைய பாடு மரணமும் அமைந்தது. ஆனால், தேவனுக்கு ஸ்தோத்திரம், அவர் மூன்றாம் நாளில் “வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப் போல”! உயிரோடு எழும்பினார். அல்லேலுயா!

ஆனாலும் அநேகர் அவரை விசுவாசிக்கவில்லை, அவர்கள் அவரை “ஜீவனை உறிஞ்சி விடுபவராகவும்” “மரித்துப்போன யூதராகவும்” நினைக்கிறார்கள்.

“எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது? இளங்கிளையைப் போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப் போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்... (ஏசாயா 53:1-2).

III. மூன்றாவதாக, அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமும் இல்லை, அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாததால் அவர் புறக்கணிக்கப்பட்டார்.

தயவு செய்து இரண்டாம் வசனத்தை எழுந்து நின்று சத்தமாய் வாசிப்போம்.

“இளங்கிளையைப் போலவும் வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப் போலவும், அவனுக்கு முன்பாக எழும்புகிறார். அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும் போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது. ” (ஏசாயா 53:2).

நீங்கள் அமர்ந்து கொள்ளலாம்,

இயேசுவுக்கு “அழகுமில்லை சௌந்தரியமுமில்லை”எந்தவித மாட்சியோ மகிமையோ காணப்படவில்லை. டாக்டர். யங் சொன்னார் “நாம் கிறிஸ்துவைப் (தாசரை) பார்க்கும் போது அவரை விரும்பத் தக்க ரூபம் அவருக்கு இல்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், வெளித்தோற்றப்படியான நமது தீர்ப்பு, சரியான மற்றும் நீதியான ஒன்று அல்ல. இது வருந்தத்தக்க சித்திரம், தாசர் (கிறிஸ்து) தம் சொந்த மக்களுடன் வாசம் பண்ணினார், அவரது சரீர தோற்றத்திற்குப் பின்னால் அவரது மகிமையை நமது விசுவாசக் கண்கள் கண்டிருக்க வேண்டும்; எனினும் அவரது வெளித்தோற்றத்தைப் பார்க்கும் போது, இஸ்ரவேல் கண்களுக்கு விரும்பத்தக்க ஒன்றும் காணப்படவில்லை… தாசரின் (கிறிஸ்து) தோற்றம் மனிதனால், தவறான பார்வையில் நோக்கும் பட்சத்தில், அவனை முற்றிலும் தவறான முடிவுக்கு கொண்டு செல்லும்”. (Young, ibid.).

வெளித்தோற்றப்படி இயேசுவுக்கு உலகை கவரக்கூடிய அழகோ அல்லது மாட்சிமையோ காணப்படவில்லை. அவர் வெற்றி அல்லது பிரபலம் அல்லது பணம் அல்லது பூமிக்குரிய இன்பத்தை வாக்குப்பண்ணவில்லை. அதற்கு முற்றிலும் எதிர்மறையானது. இந்த ஆராதனையின் துவக்கத்தினால் திரு. புருதோம் அவர்கள் வாசித்த வேத பகுதி கிறிஸ்து நமக்கு தருவதைப் பற்றிய பகுதி.

“ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன், தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்து போவான், என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்த மாகவும், தன் ஜீவனை இழந்து போகிறவன் அதை இரட்சித்துக் கொள்ளுவான். மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்காண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு இலாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?” (மாற்கு 8:34-37).

கிறிஸ்து சுய வெறுமையை தருகிறார். தன் வாழ்வின் கட்டுப்பாடு மற்றும் எதிர்காலம் குறித்த கட்டுப்பாடு இழப்பைத் தருகிறார். கிறிஸ்து ஆத்தும இரட்சிப்பு, பாவ மன்னிப்பு மற்றும் நித்திய வாழ்வை தருகிறார். ஆனால் அவை கண்களுக்கு புலப்படாதவை, தொட முடியாதவைகள் மனித உணர்வு அல்லது பார்வையில் காணக்கூடாதவை, ஆவிக்குரிய விதத்தில் நிதானிக்கப்பட வேண்டியவை. ஆகவே, தேவனால் உள்ளான கண்கள் திறக்கப்படாதவர்களால் கிறிஸ்து புறக்கணிக்கப்படுகிறார், ஏனெனில்

“ஜென்ம சுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான். அவைகள் அவனுக்கு பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்ற பிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதல்ல அவைகளை அறியவுமாட்டான்” (I கொரிந்தியர் 2:14).

ஆனால், இந்த காலையில் தேவன் உங்களோடு இடைபடுவாரோ, என ஏங்குகிறேன். தேவன் உங்களோடு சொல்கிறார்; “அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தும், உன்னை என் குமாரனுக்கு நேராக ஈர்க்கிறேன்”. உங்கள் இருதயத்தில் இப்படி ஒரு உணர்வு ஏற்பட்டதுண்டா? இவ்வுலகம் நிலையற்ற சுகத்தையும் அல்லது நிலையற்ற வெற்றியை மட்டுமே கொடுக்க முடியும் என்பதை உணர்ந்ததுண்டா? உங்கள் ஆத்துமாவைக் குறித்து எப்போதாவது சிந்தித்ததுண்டா? இயேசு உங்கள் பாவத்தை கழுவாதிருந்தால் உங்கள் நித்தியத்தை செலவிடுவீர்கள் என சிந்தித்ததுண்டா? இவைகளை குறித்து சௌந்தரியமும் இல்லாத... விரும்பத்தக்க ரூபம் இல்லாதிருந்த” அவரை நோக்க எளிய விசுவாசமுடன் வருவீர்களா? (ஏசாயா 53:2). நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, முழு இருதயத்தோடும் அவரை விசுவாசிப்பீர்களா? நீங்கள் அவ்வாறு செய்ய வேண்டும் என்று உங்களுக்காக ஜெபிக்கிறேன்.

திரு. கிரிஃபித் அவர்கள் முன்பாக வந்து பாமாலையின் இரு கவிகளைப் பாடும்போது நாமும் எழுந்து நின்று பாடுவோம்.

உலகை எடுத்து, இயேசுவைத் தாரும்,
ஒரே நாமத்தில் எல்லா சந்தோஷமும்;
அவர் அன்போ என்றும், நித்த வருடமாய்
ஒரே விதமாய் நிலைக்கும்.
உலகை எடுத்து, இயேசுவைத் தாரும்,
அவர்தம் சிலுவையில் எப்போதும் என் நம்பிக்கை;
தெளிவான, பிரகாசமான தரிசனமளவும்,
முகமுகமாய் என் ஆண்டவரை சந்திப்பேன்.
ஓ, என்னே அவர் இரக்கத்தின் உயர ஆழம்!
ஓ, என்னே அவர் அன்பின் நீள அகலமும்!
ஓ, மீட்பின் நிறைவே, மேலான வாழ்வின் வாக்கே!
(“Take the World, But Give me Jesus” by Fanny J. Crosby, 1820-1915).

ஆண்டவர் உங்கள் இருதயத்தில் பேசியிருந்தால், கடந்து போகும், இந்த உலகத்தின் இச்சைகளை விட்டுவிட ஆயத்தமாயிருந்தால், கிறிஸ்து இயேசுவிடம் வந்து விசுவாசத்தோடு அவருக்கு உங்களை அர்பணிக்க ஆயத்தமானால், அவருடைய இரத்தத்தால் உங்கள் பாவம் கழுவப்பட வேண்டுமானால், மேலும் இதைக் குறித்து நீங்கள் எங்களோடே பேச விரும்பினால் இந்த அறைக்குப் பின் புறத்தில் கடந்து வருவீர்களா? டாக்டர் ஹேகன் உங்களை அமைதியான இடத்திற்கு அழைத்துச் சென்று இதைக் குறித்து பேசுவார். இயேசுவின் மேலான எளிமையான விசுவாசத்தின் மூலமாக இரட்சிக்கப்பட முன்வரும்படி உங்களுக்காக ஜெபிக்கறேன். டாக்டர் சான் தயவு செய்து முன்பாத வந்து அர்பணித்தவர்களுக்காக ஜெபிக்கவும். ஆமென்.

இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால், டாக்டர் ஹைமர் அவர்களுக்கு e-mail அனுப்புங்கள். அவர் உங்களிடமிருந்து பதிலைப் பெற விரும்புகிறார். நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென்றும் குறிப்பிடவேண்டும். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் e-mail: rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம். ஆனால், முடிந்தால் ஆங்கிலத்தில் எழுதவும். தபால் மூலம் அனுப்பவிரும்பினால், அவரது விலாசம்: Dr. Hymers P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசி மூலமும் தொடர்பு கொள்ளலாம்: (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை Internet மூலம் ஒவ்வொரு
வாரமும் கேட்கலாம்: www.sermonsfortheworld.com.
தமிழ்ப் பிரசங்கங்களுக்கு இங்கே கிளிக் பண்ணவும்

இந்தப் பிரசங்கங்களைப் பயன்படுத்த Dr. Hymers அவர்களின் அனுமதி
பெற வேண்டியதில்லை. அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். ஆனால்,
Dr. Hymers அவர்களின் video செய்திகளை அனுமதி இல்லாமல்
பயன்படுத்தக்கூடாது.

பிரசங்கத்திற்கு முன்னால் வேதம் வாசித்தவர் திரு. ஆபேல் புருதோம்: மாற்கு 8:34-37.
பிரசங்கத்திற்கு முன்னால் தனிப்பாடல் பாடியவர் திரு. பென்ஜமீன் கினாசிட் கிரிஃபித்:
“Take the World, But Give Me Jusus” (by Fanny J. Crosby, 1820-1915).


முக்கிய குறிப்புகள்

கிறிஸ்து – திரள் கூட்டத்தாரால் புறக்கணிக்கப்படுதல்

(செய்தி எண்: 3 ஏசாயா 53)
CHRIST – REJECTED BY THE MASSES
(SERMON NUMBER 3 ON ISAIAH 53)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ் ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

“எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்ததவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது? இளங்கிளையைப் போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கற வேரைப் போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, சௌந்தர்யமுமில்லை, அவரைப் பார்க்கும்போது நாம்அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது (ஏசாயா 53:1,2).

(யோவான் 12:37-38; ரோமர் 10:12,16; மத்தேயு 7:14;
லூக்கா 13:24; அப்போஸ்தலர் 8:30-31; யோவான் 1:11)

1. முதலாவதாக, கிறிஸ்து வெறுக்கப்பட காரணம், அவர் மனிதன் முன்பாக இளங்கிளையைப் போலத் தோன்றுகிறார், ஏசாயா 53:2a; யோவான் 11:48; மாற்கு 8:34-37.

2. இரண்டாவதாக, கிறிஸ்து புறக்கணிக்கப்பட்டதற்கான காரணம்,
அவர் வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போல் தோன்றுகிறார், ஏசாயா 53:2b.

3. மூன்றாவதாக, அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமும் இல்லை,
அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாததால் அவர் புறக்கணிக்கப்பட்டார். ஏசாயா 53:2c; மாற்கு 8:34-37; 1 கொரிந்தியர் 2:14.