Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.

கர்த்தருடைய தாசரின் பாடு மற்றும் வெற்றி!

(செய்தி எண்:1 ஏசாயா.53)

THE SUFFERING AND TRIUMPH OF GOD’S SERVANT!
(SERMON NUMBER 1 ON ISAIAH 53)
(Tamil)

டாக்டர். ஆர். எல். ஹைமெர்ஸ் ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

பெப்ருவரி 24, 2013 அன்று கர்த்தருடைய நாள் காலை வேளையில் லாஸ்
ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Morning, February 24, 2013


“இதோ, என் தாசன் ஞானமாய் நடப்பார். அவர் உயர்த்தப்பட்டு, மேன்மையும், மகா உன்னதமுமாயிருப்பார். மனுஷனைப் பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரனைப் பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு அந்தக்கேடு அடைந்தபடியினாலே, அவரைக் கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள். அப்படியே, அவர் அநேகம் ஜாதிகளின் மேல் தெளிப்பார்; அவர் நிமித்தம் ராஜாக்கள் தங்கள் வாயை மூடுவார்கள்: ஏனெனில், தங்களுக்கு தெரிவிக்கப்படாதிருந்ததை அவர்கள் காண்பார்கள்; கேள்விப்படாதிருந்ததை அவர்கள் அறிந்து கொள்வார்கள்” (ஏசாயா 52:13 – 15).

தயவாய் இந்த வேத பகுதியினைத் திறந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த வசனங்கள் ஏசாயா 52ல் வாசிக்கப்படுவதை விட, 53 உடன் இணைத்து வாசிப்பதே அதிக சிறப்பானது என்பது, அறிவர். ஜான் கில், அவர்களின் மற்றும் “மிக அதிகப்படையான” நவீனகால வேதவர்ணனையாளர்களின் கருத்து. (Frank E. Gaebelein, D.D., The Expositor’s Bible Commentary, Regency Reference Library, 1986, volume 6, p. 300).

இந்த வேத பகுதி முழுவதும், 13வது வசனமுதல் 53 அதிகாரம் 12 வசனங்கள் “தேவனுடைய பாடு சகிக்கும் தாசரைக்” குறிக்கிறது. மேத்யு ஹென்றி அவர்கள் கீழ்காணும் விதத்தில் குறிப்பிடுகிறார்,

இங்கே துவங்கி, அடுத்த அதிகாரத்தின் முடிவு வரைக்கும் தொடர்கிற தீர்க்கதரிசனம் தெளிவாக இயேசுவை சுட்டிக்காட்டுகிறது: இக்கால யூத (ரபீக்கள்) இந்த வேத பகுதியைத் திரித்துக் கூறி அதீத முயற்சி செய்தாலும், முற்கால யூதர்கள் இந்த வசனப்பகுதி மேசியாவை வெளிப்படுத்துவதாகப் புரிந்து கொண்டனர்... ஆனால் பிலிப்பு, (இந்த பகுதியைக் கொண்டு) கந்தாகே மந்திரியிடம் இயேசுவைப் பிரசங்கித்து, இவ்வசனங்களை தர்க்கங்களுக்கு இடமில்லாமல் நிரூபணம் செய்யும் விதத்தில் “பேசத்தொடங்கி இந்த வேத வாக்கியத்தை முன்னிட்டு” இயேசுவைக் குறித்து அவனுக்குப் பிரசங்கித்தான். அப்.8:34இ 35 (Matthew Henry’s Commentary on the Whole Bible, Hendrickson Publishers, 1996 reprint, volume 4, p. 235).

பழங்கால யூத எழுத்துக்களும், புராதன ரபீக்களான அபென் எஸ்றா மற்றும் ஆஸ்லெக் ஆகியோர் முதலாய், இந்த பகுதி மேசியாவைக் குறிப்பிடுவதாக சான்றளிக்கின்றனர். (John Gill, D.D., An Exposition of the Old Testament, The Baptist Standard Bearer, 1989 reprint, volume I, p. 309).

அது மட்டுமல்லாது, காலாகாலமாய் கிறிஸ்தவ ஆசிரியர்களும், இந்த வேதபகுதி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறிக்கும் தீர்க்கதரிசனம் எனவே பார்க்கின்றனர். ஸ்பர்ஜன் இவ்விதமாக உரைத்தார்,

அவர்கள் வேறு எவ்விதம் செய்ய முடியும்? வேறு எந்த தீர்க்கதரிசியுடன் இந்த பகுதியை ஒப்பிட முடியும்? அது நாசரேத் ஊரானானால், தேவ குமாரனானால், இம்மூன்று வசனங்களில் சரியாக வெளிப்படாத பட்சத்தில், அவை முழுவதும் நடு இரவினைப் போல் இருண்டு போய்விடும். இதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையினையும் இயேசுவிடம் ஒப்பிட எந்த தயக்கமும் நாங்கள் காண்பிப்பதில்லை (C. H. Spurgeon, “The Sure Triumph of the Crucified One,” The Metropolitan Tabernacle Pulpit, Pilgrim Publications, 1971 reprint, volume XXI, p. 241).

மேத்யு ஹென்றி ஏற்கனவே சொன்னது போல, சுவிசேஷகனாகிய பிலிப்புவும் இந்த பகுதி இயேசுவின் பாடுமரணத்தை முன்குறிப்பதாக எடுத்துரைத்தார்.

“மந்திரி பிலிப்பை நோக்கி, தீர்க்கதரிசி யாரைக்குறித்து இதைச் சொல்லுகிறார்? தம்மைக்குறித்தோ, வேறொருவரைக்குறித்தோ? எனக்குச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். அப்பொழுது பிலிப்பு பேசத்தொடங்கி, இந்த வேத வாக்கியத்தை முன்னிட்டு இயேசுவைக் குறித்து அவனுக்குப் பிரசங்கித்தான்” (அப்போஸ்தலர் 8:34-35).

நாமும் கூட நம் முன் சொன்ன புராதான யூதப் பாரம்பரியம், குருமார்கள், பிலிப்பு மற்றும் கிறிஸ்தவ வேத வர்ணனையாளர்கள் சொல்வதைவிட மேலாக சொல்ல இயலாது. நம் தியானப்பகுதியின் ஒவ்வொரு வார்த்தையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் மேசியாவைக் குறித்த தீர்க்கதரிசனமாகும்.

I. முதலாவதாக, கிறிஸ்து தேவனுக்குச் செய்யும் ஊழியத்தைக் காணலாம்.

பிதாவாகிய தேவன் 13 ஆம் வசனத்தில் பேசுகிறார்,

“இதோ, என் தாசன் ஞானமாய் நடப்பார். அவர் உயர்த்தப்பட்டு, மேன்மையும் மகா உன்னதமுமாய் இருப்பார்” (ஏசாயா 52:13).

தம் “தாசனை” நோக்கிப்பாருங்கள் என்று தேவன் நம்மிடம் கூறுகிறார். இயேசு பூமிக்கு வந்த போது, அவர்

“தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்” (பிலிப்பியர் 2:7).

பூமியில் தேவனுடைய தாசனாய், கிறிஸ்து ஞானமாய் நடந்தார், புத்திக்கூர்மையாய்க் காணப்பட்டார். இயேசு செய்தது மற்றும் அவரால் உரைக்கப்பட்ட அனைத்தும், மகா ஞானமுடன் செய்யப்பட்டது. ஒரு சிறுவனாய், தேவாலயத்தில் சென்றிருந்த இயேசுவின் ஞானத்தைக் கண்ட ரபீக்கள் ஆச்சரியமடைந்தனர். பின் நாட்களில், பரிசேயர் மற்றும் சதுசேயர் அவருக்குப் பதில் சொல்ல முடியவில்லை, ரோம ஆளுநராயிருந்த பிலாத்து இயேசுவின் பேச்சைக் கேட்டு வாயடைத்துப்போனான்.

தொடர்ந்து நமது வேத பகுதி, கிறிஸ்துவைப் பற்றி இவ்வாறு சொல்கிறது,

“அவர் உயர்த்தப்பட்டு, மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார்” (ஏசாயா 52:13).

இங்கு பயன்படுத்தியுள்ள பதங்கள் “உயர்த்தப்பட்டு”, “மேன்மையும்”, “மகா உன்னதமுமாயிருப்பார்”. அறிஞர் எட்வர்டு ஜே. யங், “இதைக் காணும் போது இயேசுவின் மேன்மையை உணர்த்தும் பிலிப்பியர் 2:9-11 மற்றும் அப்.2:33 உடன் ஒப்பிடாமல் இந்த வார்த்தைகளை வாசிப்பது கடினம்” என்கிறார். (Edward J. Young, Ph.D., The Book of Isaiah, Eerdmans, 1972, volume 3, p. 336).

“ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்” (பிலிப்பியர் 2:9).

“இந்த இயேசுவைத் தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம். அவர் தேவனுடைய வலது கரத்தினாலே உயர்த்தப்பட்டு,... இதைப் பொழிந்தருளினார்” (அப்போஸ்தலர் 2:32-33).

“இதோ என் தாசன் ஞானமாய் நடப்பார். அவர் உயர்த்தப்பட்டு, மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார்” (ஏசாயா 52:13).

உயர்த்தப்பட்டு – “எழுப்பினார்”. மேன்மையும் - “உயர்த்தி”. மகா உன்னதமுமாய் - “எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி”. இந்த வார்த்தைகள் அனைத்தும் இயேசு கிறிஸ்து உயர்வடைந்த படிகளைக் குறிக்கின்றன. அவர் மரணத்திலிருந்து உயிர்த்தார்! அவரது பரமேறுதலில் வானத்திற்கு உயர்த்தப்பட்டார்! இப்பொழுது அவர் தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்! உயர்த்தப்பட்டு – “எழுப்பினார்”! மேன்மையும் - “உயர்த்தி”. மகா உன்னதமுமாய் - “எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி”! ஆமென்!

உயர்த்தப்பட அவர் மரிக்க வேண்டியது,
   “எல்லாம் முடிந்தது” அவரது உரத்த குரல்;
இப்பொழுது விண்ணில் மேன்மையான உயரத்தில்;
   அல்லேலூயா! அருமை இரட்சகர்!
(“Hallelujah, What a Saviour!” by Philip P. Bliss, 1838-1876).

“இதோ, என் தாசன் ஞானமாய் நடப்பார். அவர் உயர்த்தப்பட்டு, மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார்” (ஏசாயா 52:13).

இயேசு இன்றும், இனிமேலும், பிதாவாகிய தேவ தாசராக – தேவ குமாரனாக - மரித்தோரிலிருந்து எழுந்தவராக, பரமேறிப்போனவராக, பிதாவின் வலது பாரிசத்தில் இருப்பவராக இருப்பார்! அல்லேலூயா! என்ன அருமையான இரட்சகர்!

II. இரண்டாவதாக, பாவத்திற்கான கிறிஸ்துவின் பரிகாரம் குறித்து நாம் காணலாம்.

தயவாய் 14வது வசனத்தை சத்தமாய் வாசியுங்கள்.

“மனுஷனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரனைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு அந்தக்கேடு அடைந்தபடியினாலே அவரைக் கண்ட அநேகர் ஜஆச்சரியமடைந்தார்கள்ஸ பிரமிப்பு அடைந்தார்கள்” (ஏசாயா 52:14).

இதை விவரிக்கையில் அறிஞர் யங் அவர்கள் இவ்வாறு உரைக்கிறார். “அவரைப் பார்த்தவர்கள் தாசருடைய சரீர உருக்குலைவைக் கண்டு ஜவரும் காலத்திலும்ஸ பிரமிப்படைவர்... அவரது உருக்குலைந்த நிலை மிகக் கெடூரமாய் இருப்பதால் ஜவரும் காலத்திலும்ஸ அவர் மனிதனைப்போன்ற தோற்றமுடையவராகவே காணப்படவில்லை...அவருடைய சரீரம் அவ்வாறு உருக்குலைந்ததால் மனிதனைப் போன்ற தோற்றம் அவருக்கு இல்லை. இது அவருடைய பாடுகளின் உச்ச நிலையை மிக அழுத்தமாகச் சொல்லும் வழிமுறையே”” (ibid., pp. 337-338).

இயேசு கிறிஸ்து பாடுபடும் போது கொடூரமாய் உருக்குலைக்கப்பட்டிருந்தார். அவர் சிலவையில் அறையப்படுவதற்கு முந்தைய இரவில் அவர் “மிகுந்த வியாகுலப்பட்டார்,”

“அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய் தரையிலே விழுந்தது” (லூக்கா 22:44).

இது அவர் கைது செய்யப்படும் முன்னமே நடந்தது. கெத்சமனேயின் இருளில், உன் பாவத்திற்கான தண்டனை இயேசுவின் மேல் விழத் துவங்கியது. சேவகர்கள் அவரைக் கைது செய்ய வரும் முன்பே அவர் இரத்த வெள்ளத்தில் மூழ்கலாயினார்.

அவரைக் கொண்டு சென்று கன்னத்தில் அறைந்தார்கள். வேறொரு இடத்தில் கர்த்தருடைய தாசரின் வார்த்தைகளை தீர்க்கதரிசி சொல்லுகிறார்,

“அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடை மயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக்கொடுத்தேன்: அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை” (ஏசாயா 50:6).

“அவரைக் கன்னத்தில் அடித்தார்கள்”இ என லூக்கா எழுதினார் (லூக்கா 22:64). மாற்கு எழுதும்போது பிலாத்து “அவரைச் சவுக்கால் அடித்து” என குறிப்பிடுகிறார் (மாற்கு 15:15). யோவானின் வார்த்தைகள,

“அப்பொழுது பிலாத்து இயேசுவைப் பிடித்து வாரினால் ஜசவுக்கடிஸ அடிப்பித்தான். போர்ச்சேவகர் முள்ளுகளினால் ஒரு முடியைப்பின்னி அவர் சிரசின் மேல் வைத்து ஜஅணிவித்துஸ சிவப்பான ஒரு அங்கியை அவருக்கு உடுத்தி: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் ஜ தாக்கினார்கள்ஸ் அடித்தார்கள்” (யோவான்19:1-3).

பின்பு அவர் கைகளையும் கால்களையும் ஆணிகளால் அடித்தார்கள். “அவருடைய சரீரம் அவ்வாறு உருக்குலைந்ததால் மனிதனைப் போன்ற தோற்றம் அவருக்கு இல்லை.” என்று அறிஞர் யங் குறிப்பி;ட்டது போல நடந்தது (iடினை.இ p. 338).

“மனுஷனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும் ஜஅவர் தோற்றம்ஸ, மனுபுத்திரனைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு அந்தக்கேடு அடைந்தபடியினாலே அவரைக் கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள்” (ஏசாயா 52:14).

அநேக நவீன கால சிலுவைக் காட்சிகள் மேல் கிப்சன் அவர்களின் “கிறிஸ்துவின் பாடுகள்” போன்று, கிறிஸ்து அடிக்கப்பட்டு, சவுக்கடிபட்டு சிலுவையில் அறைந்த போது காண்பிக்கும் தோற்றம் போல் தெளிவாகக் காண்பிக்கப்படவில்லை.

ஸ்கோஃபீல்டு வேதாகமம; இந்த வசனம் குறித்து விளக்கும் போது, ‘இதன் நேரடி காட்சி மிகவும் பயங்கரமானது: ‘மனுசனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரனைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும் அந்தக் கேடடைந்திருந்தது’ – அப்படியானால் மனிதனாக அல்ல – அந்த கொடூரங்களின் விளைவினை மத்தேயு 26 விவரிக்கிறது....”. ஜோசப் ஹார்ட் அவர்களின் பாமாலையைக் கேளுங்கள் (1712-1768),

முட்களால் அவர் நெற்றி குத்திக் கிழிக்க,
எப்பக்கமும் இரத்த ஊற்று அனுப்ப;
உரத்த அடிகளால் அவர் முதுகு கிழிக்கப்படினும்,
கிழிந்ததாமவர் இருதயம் கூர்மையான சாட்டைகளால்.

நிர்வாணியாய் சாபமான மரத்தில் அடிக்கப்பட்டவராய்,
புவிக்கும் விண்ணுக்கும் இடையே வெளிப்படையாய்,
காட்சிப்பொருளான காயங்களும் இரத்தமும்,
காயப்பட்ட அன்பின் ஒரு சோகமான காட்சி!
     (“His Passion” by Joseph Hart, 1712-1768;
     to the tune of “‘Tis Midnight, and on Olive’s Brow”).

ஏன் அரும் இரட்சகா, ஏன் சொல்லும்
இரத்த வெள்ளத்தில் பாடனுபவித்துக கிடந்தீர்?
என்ன மகா நோக்கம் உம்மை அசைத்தது?
நோக்கம் நேரானதே – அஃது அனைத்தும் அன்பிற்கே!
     (“Gethsemane, the Olive-Press!” by Joseph Hart, 1712-1768;
     to the tune of “‘Tis Midnight, and on Olive’s Brow”).

ஏன் அரும் இரட்சகா, ஏன் சொல்லும் “மனுஷனைப்பார்க்கிலும் ஜஉம்முடையஸ முகப்பார்வையும், மனுபுத்திரனைப்பார்க்கிலும் ரூபமும், இவ்வளவு அந்தக்கேடு அடைந்தது?” அதற்கான பதில் 53 ஆம் அதிகாரம் கடைசி வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. “அவர் அநேகருடைய பாவத்தை சுமந்தார்” (ஏசாயா 53:12). இது உன் பாவத்துக்காகவே கிறிஸ்து பட்ட பாடுகள். உன் பாவத்திற்காக பாடுபட்டு மரித்தார். உன் இடத்தில் கிறிஸ்து மரித்தார் – சிலுவை மீதினில்! இவ்வாறு நாம் கிறிஸ்து தேவனுக்கு செய்த சேவையைக் காண்கிறோம். இவ்வாறாக கிறிஸ்து நமது பாவத்திற்கு விலைக்கிரயம் செலுத்தும்படி நமக்காக பலியானதைப் பார்க்கிறோம்.

III. மூன்றாவதாக, நடைமுறை வாழ்வில் கிறிஸ்துவின் இரட்சிப்பைப் பார்ப்போம்.

தயவு செய்து எழுந்து நின்று ஏசாயா 52:15 ஐ சத்தமாய் வாசிப்போம்.

“அப்படியே, அவர் அநேகம் ஜாதிகளின் மேல் தெளிப்பார்; அவர் நிமித்தம் ராஜாக்கள் தங்கள் வாயை மூடுவார்கள்; ஏனெனில், தங்களுக்கு தெரிவிக்கப்படாதிருந்ததை அவர்கள் காண்பார்கள்; கேள்விப்படாதிருந்ததை அவர்கள் அறிந்து கொள்வார்கள்” (ஏசாயா 52:15).

நீங்கள் அமர்ந்து கொள்ளலாம். 14 ஆம் வசனம் கூறும் இயேசுவின் பாடுகளும் தியாக பலியும் இந்த வசனத்தில் விளக்கப்பட்டு அப்பியாசப்படுத்தப்படுகிறது என்று அறிஞர். யங் கூறுகிறார்இ

அவர் ஜகிறிஸ்துஸ ஏன் அந்;தக் கேடடைந்தார் என தீர்க்கதரிசி விளக்குகிறார். இந்த நிலையில்... “அவர் அநேகம் ஜாதிகளின் மேல் தெளிப்பார்”. அந்தக் கோலமடைந்தவர் ஜதாசர்ஸ பிறருக்காக ஒன்றைச் செய்கிறார், அதனால் சுத்திகரிப்பை உண்டு பண்ணுகிறார். அவரது அந்தக்கேடு ஜஅவரது பாடுகள்ஸ வழியாக தேசங்களை தம்மிடம் கொண்டு வந்து சுத்திகரிப்பார். தெளிப்பார் என்னும் வினைச் சொல் ஜபேசுவதுஸ அவரது தண்ணீர்; அல்லது இரத்தத்தினாலான சுத்திகரிப்பே... இது ஜகிறிஸ்துவின் ஆசாரியத்துவஸ செயல்பாடு. அதன் நோக்கம் தேசங்களுக்கு சுத்திகரிப்பையும் பரிசுத்தமாக்குதலையும் கொண்டு வர வேண்டும் என்பதே. ஒரு ஆசாரியராக மற்றவர்களுக்கு சுத்திகரிப்பை அவர் கொண்டு வருவார். அதை பாடுபடுகிறவராக அந்தப் பாடுகளின் வழியாக... சுத்திகரிப்பை உண்டுபண்ணி ஒரு வித்தியாசமான மாற்றத்தை அவரை நோக்கிப் பார்க்கிறவர்களில் ஏற்படுத்தவே இதைச் செய்தார் (ibid., pp. 338-339).

இந்த தீர்க்கதரிசனம் நிறைவேறும் விதத்தில், கிறிஸ்துவைப்பற்றிய சுவிசேஷம் யூத மதப்பிடியிலிருந்து விடுபட்டு உலகளாவிய மார்க்கமாக உருவெடுத்தது. முதல் நூற்றாண்டில் இருந்தே “அனேக தேசங்கள்” சுவிசேஷ மயமாக்கப்பட்டன, உலகின் பல பகுதியைச் சேர்ந்தவர்கள் இயேசுவின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்பட்டு, கிறிஸ்து இயேசுவுக்குள் இரட்சிப்படையும் படி அவர்களைக் கொண்டு வந்து, அறிஞர் யங் சொல்வது போல “அவரை நோக்கிப் பார்க்கிறவர்களின் மனநிலையில் வித்தியாசமான மாற்றத்தை ஏற்படுத்தினார்” ஒருவேளை எல்லா தேசங்களின் ராஜாக்களும் இரட்சிப்படையவில்லை என்றாலும், அந்த நிலையிலும் கிறிஸ்தவம் உலகம் முழுவதும் வளர்ந்தது. அவர்கள் “வாயையாவது அவருக்கு முன்பாக அடைத்துக் கொண்டு” பெயரளவில் கிறிஸ்தவர்களானார்கள், அவருக்கு விரோதமாகப் பேசவில்லை. இந்நாள் வரை, இரண்டாம் எலிசபெத் ராணி “அவருக்கு முன்பாக” தன் வாயை அடைத்துக் கொண்டு, வெஸ்டுமினிஸ்டர் அப்பேயில் கிறிஸ்தவ ஆராதனைகளில் அமைதியாக பணிந்து கொள்கிறார். அநேக மேற்கத்திய ராஜாக்கள் மற்றும் கிழக்கத்திய ராஜாக்கள்; பெயரளவிலாவது அவருக்கு கனம் செலுத்துகின்றனர், விக்டோரியா ராணி போன்றவர்கள் உண்மையாகவே வெளிப்படையான கனத்திற்கும் அதிகமான கனத்தை தருகின்றனர். ஆரம்ப கிறிஸ்தவ சரித்திரத்திலும் அப்படியே மற்றவர்களைப்போல காண்ஸ்டன்டைன் பேரரசரும் கிறிஸ்துவை கனம் பண்ணினார்.

“ஏனெனில், தங்களுக்கு தெரிவிக்கப் படாதிருந்ததை அவர்கள் காண்பார்கள்; கேள்விப் படாதிருந்ததை அவர்கள் அறிந்து கொள்வார்கள்” (ஏசாயா 52:15).

தீர்க்கதரிசியால் முன்னறிவிக்கப்பட்ட படியே, கிறிஸ்துவின் சுவிசேஷம் உலக நாடுகள் எங்கும் பிரசித்தமாயிற்றுஇ

“அவர் அநேகம் ஜாதிகளின் மேல் தெளிப்பார்” (ஏசாயா 52:15).

அமெரிக்காவின் குடியரசுத்தலைவர் கூட பெயரளவில் கிறிஸ்தவரானாலும், அவரது தலை சில சமயங்களில் சபையில் வணங்குகிறது கிறிஸ்துவுக்கு முன்பாக (அவரது) “வாயை அடைத்துக்” கொள்கிறார்.

ஆனாலும் இந்த அற்புதமான முன்னறிவிப்பு ஐரோப்பா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவைப் பற்றி ஒருகாலத்தில் சொல்லப்பட்டது போல மட்டுமல்ல. மேற்கத்திய சபைகள் “தாராளமய” உபதேசத்தால் அதிக குழப்பத்திலும் பிரச்னையிலும் சிக்கிக் கிடக்கிறது, சபையின் பெலவீனத்திற்கு காரணம் ஃபின்னி மற்றும் அவரால் பின்பற்றப்படும் “டிசிஸனிஸம்” கொள்கை உடையோரால் வௌ;வேறு விதத்தில் தாக்கம் பெற்றதும் ஆகும். எனினும், மூன்றாம் தர நாடுகளில் அநேக இடங்களில் பெரும் உயிர்மீட்சியும் எழுப்பதல்கள் நடைபெறுகின்றன. ஒரு காலத்தில் தவறான உபதேசத்திற்குக் காரணமான பெலவீனமாகப் பார்க்கப்பட்ட மேற்கத்திய சபைகள் இன்று வளர்ச்சி பெறுகின்றன. சீனாவிலும், தென் கிழக்கு ஆசிய, இந்திய நாடுகள் போன்றவைகளில் இந்த மணி நேரத்திலும் சுவிசேஷம் ஊடுருவிப் பாய்வது நமது இருதயங்களைக் குளிரப்பண்ணுகிறது! ஆம், சில சபைகள் உபத்திரவப் படுத்தப் படுகின்றன. ஆனால் தெர்த்துல்லியன் சொல்லியது போல “இரத்த சாட்சிகளின் இரத்தம் சபையின் வித்து” என்பது வளரும் நாடுகள் அனைத்திலும் மெய்யாகிறது. ஆமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் கிறிஸ்தவ பின்னணியத்திலிருந்து சந்தேகம் மற்றும் ஆவிக்குரிய குழப்பங்களில் விழுந்து கொண்டிருக்கும் நிலையில், ஸ்பர்ஜன் முன்னறிவித்தது போலவே,

இயேசு .... யூதர் மீது மட்டும் இரத்தம் தெளிக்காமல், எங்குமுள்ள புறஜாதிகளிலும் இரத்தம் தெளிப்பார்... எல்லா தேசங்களும் உம்மைக் குறித்து கேள்விப்பட்டு, புல்களி;ன் மீது விழும் நீரைப் போல உம்மை உணர்வர். தூரத்தில் இருக்கும் கோத்திரங்கள், சூரியன் அஸ்;தமிக்கும் திசையில் வாழும் ஜனங்கள் உம் உபதேசத்தைக் கேட்டு அதைப் பருகுவார்கள். நீர் அநேக தேசங்களின் மீது உமது கிருபையுள்ள வார்த்தையால் தெளிப்பீர் (iடினை. p. 248).

ஸ்பர்ஜனின் “தீர்க்கதரிசன” செய்தி 100 ஆண்டுகளுக்கு முன் அவர் சொன்ன காலகட்டத்தை விட இன்று அதிகமான சத்தியமாய் திகழ்கிறது. அது அப்படி இருப்பதால் சந்தோஷமடைகிறோம்! ஆமென்!

இந்த வாக்கு இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை. ஆனால் அது நிறைவேறும் - ஏனெனில் கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று – ஏசாயா மூலமாக இவ்வாறு சொன்னார்,

“உம்முடைய வெளிச்சத்தினிடத்திற்கு ஜாதிகள் கடந்து வருவார்கள்” (ஏசாயா 60:3).

“ஜாதிகளின் பலத்த சேனை உன்னிடத்திற்கு வரும்” (ஏசாயா 60:5).

“இதோ, இவர்கள் தூர தேசத்திலிருந்து வருவார்கள்;; இதோ அவர்கள் வடக்கிலும் மேற்கிலுமிருந்து வருவார்கள். இவர்கள் சீனீம் தேசத்திலுமிருந்து வருவார்கள்” (ஏசாயா 49:12).

சீன தேசத்திற்கு முதலில் ஊழியத்திற்குச் சென்ற ஜேம்ஸ் ஹட்சன் டெய்லர் “சீனீம்” சீன தேசத்தைக் குறிக்கிறது என்றார், அவ்வாறேஸ்கோஃபீல்டு ஆய்வு வேதாகமமும; அதன் ஏசாயா 42:19 குறிப்பில் கூறுகிறது. இதே காரியம் சீனாவில் நம் கண் முன்னே நடந்து வரும் வேளையில் டெய்லருக்கும் ஸ்கோஃபீல்டுக்கும் நாம் எவ்வாறு மறுப்பு தெரிவிக்க முடியும்? அது மெய்யாகவே சத்தியம், மிக சிறிய அப்பியாசம்! இன்று ஆயிரக்கணக்கில் சீன மக்கள் கிறிஸ்;துவிடம் வந்து கொண்டிருக்கிறார்கள், அதைப்போலவே தூர தேசங்களிலுமிருந்தும் வருகிறார்கள். அதற்காய் சந்தோஷமடைகிறோம்!

அமெரிக்கா ஒவ்வொரு நாளிலும் மூவாயிரம் கர்ப்பத்தில் இருக்கும் நாதியற்ற கருக்கலைப்பு செய்து கொண்டிருக்கும் வேளையில், சபைகள் ஆயிரக்கணக்காய் மூடப்படும் சூழலில், தூர தேசங்களில் கிறிஸ்துவின் வேலை வளர்ந்து பெருகுகிறது! தேவனே அவர்களுக்கு இன்னும் அதிக ஆத்தும ஆதாயங்களைத் தாரும்! தேவனே ஜனங்கள் உம்மை அறிந்து, கிறிஸ்துவின் நாமத்திற்காய் பாடுபட ஒப்புக்கொடுத்து, சீக்கிரத்தில் கிறிஸ்துவின் இரண்;டாம் வருகையில் ஜாதிகளுக்குள் மேற்கொள்பவர்களாய் இருப்பார்களாக!

ஆனால் இந்த காலையில் “உங்களுக்கு இயேசுவைத் தெரியுமா? என்று கேட்க விரும்புகிறேன். உங்கள் பாவத்திற்காக, ஆம் - உங்கள் பாவத்திற்காகவே ‘மனுஷரைப்பார்க்கிலும் அந்தக் கேடடைந்தவரை’ விசுவாசத்தில் நோக்கிப்பார்த்திருக்கிறீர்களா? அவர் உன் பாவத்தின் மீது இரத்தம் தெளித்து, தேவனுடைய புத்தகத்தில் உன் பெயரை எழுதியிருக்கிறாரா? உலகின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தால் கழுவி சுத்தமாக்கப்பட்டிருக்கிறீர்களா? அப்படி இல்லை எனில், அவருடைய பிரசன்னத்தில் ‘வாயடைத்து மௌனமாய்’ அவருடைய பிரசன்னத்தில் பணிந்து இயேசுவை உங்கள் சொந்த இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக்கொள்வீர்களா? இப்போதே அதைச் செய்வீர்களா?”

தயவாய் எழும்பி பாடல் தாளில் ஏழாம் பாடலைப் பாடலாம்.

அதிக பாரமான மானிட மாசு இரட்சகர் மீது சுமத்தப்பட்டது;
   ஓலமுடன் கந்தையுடன், பாவிகளுக்காய் உடுத்தப்பட்டார்,
பாவிகளுக்காய் உடுத்தப்பட்டார்.

மரண ஓலத்தினிடையே கடந்து போய் அழுது, அவர் எனக்காய் ஜெபித்தார்;
   மாசான என் ஆத்துமாவை நேசித்து அணைத்து சிலுவையில் தொங்கினார்.
சிலுவையில் தொங்கினார்.

ஓ ஆச்சரியமான அன்பு! மனித நாவால் சொல்ல முடியா உயரமான அன்பு;
என்றும் பேசப்படப் போகும் நித்திய பாடல் பொருளாகிய அன்பு.
ஒரு நித்திய பாடல்.
   (“Love in Agony” by William Williams, 1759;
   To the tune of “Majestic Sweetness Sits Enthroned”).

கிறிஸ்துவை விசுவாசித்து கிறிஸ்தவராக மாற விரும்பினால், தயவாய் ஒரு படி முன்னே மேடைக்கு அருகில் வாருங்கள். டாக்டர். கேகன் உங்களை அமைதலான இடத்திற்கு அழைத்துச் சென்று உங்களோடு பேசுவார்கள். இப்போதே அதைச் செய்யுங்கள். டாக்டர். சான், தயவாய் முன் வந்தவர்களுக்காக ஜெபியுங்கள். ஆமென்.

இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால், டாக்டர் ஹைமர் அவர்களுக்கு e-mail அனுப்புங்கள். அவர் உங்களிடமிருந்து பதிலைப் பெற விரும்புகிறார். நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென்றும் குறிப்பிடவேண்டும். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் e-mail: rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம். ஆனால், முடிந்தால் ஆங்கிலத்தில் எழுதவும். தபால் மூலம் அனுப்பவிரும்பினால், அவரது விலாசம்: Dr. Hymers P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசி மூலமும் தொடர்பு கொள்ளலாம்: (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை Internet மூலம் ஒவ்வொரு
வாரமும் கேட்கலாம்: www.sermonsfortheworld.com.
தமிழ்ப் பிரசங்கங்களுக்கு இங்கே கிளிக் பண்ணவும்

இந்தப் பிரசங்கங்களைப் பயன்படுத்த Dr. Hymers அவர்களின் அனுமதி
பெற வேண்டியதில்லை. அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். ஆனால்,
Dr. Hymers அவர்களின் video செய்திகளை அனுமதி இல்லாமல்
பயன்படுத்தக்கூடாது.

பிரசங்கத்திற்கு முன்னால் வேதம் வாசித்தவர் திரு.ஆபேல் புருதோம் : மத்தேயு 27:26-36.
பிரசங்கத்திற்கு முன்னால் தனிப்பாடல் பாடியவர் திரு.பென்ஜமின் கினாசிட் கிரிஃபித்:
“Love in Agony” (by William Williams, 1759; sung to the tune of “Majestic Sweetness Sits Enthroned”).


முக்கிய குறிப்புகள்

கர்த்தருடைய தாசரின் பாடு மற்றும் வெற்றி!

(செய்தி எண்:1 ஏசாயா.53)

THE SUFFERING AND TRIUMPH OF GOD’S SERVANT!
(SERMON NUMBER 1 ON ISAIAH 53)

முக்கியக் குறிப்புகள்
by Dr. R. L. Hymers, Jr.

“இதோ, என் தாசன் ஞானமாய் நடப்பார். அவர் உயர்த்தப்பட்டு, மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார். மனுஷனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரனைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு அந்தக்கேடு அடைந்தபடியினாலே அவரைக் கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள். அப்படியே, அவர் அநேகம் ஜாதிகளின் மேல் தெளிப்பார்; அவர் நிமித்தம் ராஜாக்கள் தங்கள் வாயை மூடுவார்கள்; ஏனெனில், தங்களுக்கு தெரிவிக்கப்படாதிருந்ததை அவர்கள் காண்பார்கள்; கேள்விப்படாதிருந்ததை அவர்கள் அறிந்து கொள்வார்கள். (ஏசாயா 52:13-15).

(அப்போஸ்தலர் 8:34-35)

I. முதலாவதாக, கிறிஸ்து தேவனுக்குச் செய்யும் ஊழியத்தைக் காணலாம், ஏசாயா 52:13; பிலிப்பியர் 2:7; 2:9;
அப்போஸ்தலர் 2:32-33.

II. இரண்டாவதாக, பாவத்திற்கான கிறிஸ்துவின் பரிகாரம் குறித்து நாம் காணலாம், ஏசாயா 52:14; லூக்கா 22:44; ஏசாயா 50:6; லூக்கா 22:64; மாற்கு 15:15; யோவான் 19:1-3; ஏசாயா 53:12.

III. மூன்றாவதாக, நடைமுறை வாழ்வில் கிறிஸ்துவின் இரட்சிப்பைப் பார்க்கலாம், ஏசாயா 52:15; 60:3இ5; 49:12.