Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




சுவிசேஷ ஊழியத்தை நாம் – ஏன் செய்கிறோம் அதில் என்ன செய்கிறோம்

WHY WE DO WHAT WE DO – IN EVANGELISM
(Tamil)

சி. எல். கேஹன் அவர்களால் எழுதப்பட்டு
அக்டாபர் 28, 2018 கர்த்தருடைய நாள் காலை வேளையில்
லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில்
ரெவரண்ட் ஜான் சாமுவேல் கேஹனால் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon written by Dr. C. L. Cagan
and preached by Rev. John Samuel Cagan
at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Morning, October 28, 2018

“நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா” (லூக்கா 14:23).


மக்கள் நமது சபைக்கு வந்து சுவிசேஷத்தை கேட்கும்படியாக நாம் சுவிசேஷ ஊழியத்தை செய்கிறோம். மற்ற சபைகளில், உறுப்பினர்கள் தெருவில் ஒரு “பாவியின் ஜெபத்தை” செய்கிறார்கள் பிறகு அவர்களைச் சபைக்கு அழைக்கிறார்கள் “தீர்மானம்” செய்வதற்காக. ஆனால் நாம் செய்யும் முதலாவது காரியம் மக்களைச் சபைக்கு அழைப்பது. அதன்பிறகு அவர்களைச் சபைக்குக் கொண்டு வருகிறோம். அவர்கள் சபைக்குள் வந்தபோது, நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ளுகிறார்கள். அங்கே பிரசங்கிக்கப்படும் சுவிசேஷத்தை அவர்கள் கேட்கிறார்கள். அவர்களில் சிலர் நிலைத்திருந்து கிறிஸ்துவை விசுவாசிக்கிறார்கள். அவர்கள் அற்புதமான கிறிஸ்தவர்களாக மாறுகிறார்கள். இந்தப் புதிய முறை நமது போதகர், டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் மூலமாக வந்தது. மற்ற எல்லாமுறைகளும் இழக்கப்பட்ட மக்களை நமது சபைக்குக் கொண்டுவர முடியாமல் தவறிப்போன காரணத்தால் அவர் இதை ஏற்படுத்தினார்.

டாக்டர் ஹைமர்ஸ் முறை என்பது என்ன? சுவிசேஷ ஊழியத்தில் நாம் என்ன செய்கிறோம்? புதன் கிழமை இரவிலும், வியாழக்கிழமை இரவிலும் மற்றும் பிறநேரங்களிலும் நாம் இரண்டு இரண்டுபேராக லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கல்லுரிகளுக்கும், கடைகளுக்கும் மற்றும் பொது இடங்களுக்கும் செல்லுகிறோம். நம்மில் அநேகர் சொந்தமாகவே இதைச் செய்கிறோம். இந்த இடங்களில் நாம் நடந்து சென்று, மக்களிடம் பேசுகிறோம். அப்பொழுதே அவர்கள் கிறிஸ்துவை நம்ப வேண்டும் என்று நாம் முயற்சி செய்வதில்லை. ஒரு “பாவியின் ஜெபத்துக்கு” அவர்களை நாம் நடத்துவதில்லை. அதற்குப் பதிலாக, சபையில் இருப்பது என்ன என்று நாம் அவர்களுக்குச் சொல்லுகிறோம். சபையிலே அவர்களை நண்பர்களாக்கிக்கொள்ள அநேக இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு செய்தியைக் கேட்பார்கள். அவர்கள் (காலையில் வந்தால்) ஒரு மத்திய உணவு சாப்பிடுவார்கள் அல்லது (மாலையில் வந்தால்) ஒரு மாலை உணவு சாப்பிடுவார்கள். அவர்கள் ஒரு திரைபடம் பார்ப்பார்கள். அவர்கள் ஒரு விருந்திலும் பங்குபெறுவர்கள் – நமது சபையிலுள்ள ஒவ்வொருவருடைய பிறந்த நாட்களையும் நாம் கொண்டாடுகிறோம். அவர்கள் ஒரு பெரிய நேரத்தை அனுபவிப்பார்கள். அவர்களில் அநேகர் வரவிரும்புவார்கள்!

அதன்பிறகு அவர்களுடைய முதல் பெயர்களை மற்றும் போன் எண்களைக் கொடுக்கும்படி கேட்போம். பிறகு, அந்தப் பெயர்களை மற்றும் போன் எண்களை உதவிகாரர்கள் மற்றும் அனுபவமுள்ள கிறிஸ்தவ பணியாளர்களிடம் கொடுப்போம். இந்தப் பணியாளர்கள் மக்களைத் தொலைபேசியில் அழைப்பார்கள், நமது சபையைப்பற்றி சொல்லுவார்கள், சபைக்கு வரவேற்பார்கள், அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் சபைக்கு வருவதற்கு நமது அங்கத்தினர்களில் ஒருவரைத் துணையாளர்களாக ஏற்படுத்துவார்கள். ஞாயிற்றுக் கிழமைகளில், அவர்களை அழைத்துக்கொண்டு, அவர்களை நாங்கள் சபைக்குக் கொண்டுவருவோம், மற்றும் திரும்ப வீடுகளுக்குக் கொண்டுபோய் விடுவோம். முதலாவதுமுறை போன் செய்யும்போது அநேக மக்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் சபைக்கு வருவார்கள். மற்றவர்கள் அந்த நாளில் அலுவலாக இருக்கக்கூடும் அவர்கள் பிறகு வருவார்கள். அவர்கள் சபைக்கு வரும்பொழுது, அங்கே பிரசங்கிக்கப்படும் சுவிசேஷத்தை கேட்பார்கள் மற்றும் அதன்பிறகு உணவு நேரத்திலும் விருந்து வேளைகளிலும் தங்களுக்கு நண்பர்களை உண்டாக்கிக்கொள்ள பெரிய நேரம் இருக்கும் – மற்றும் அவர்களில் அநேகர் திரும்பி வருவார்கள்!

இந்தமுறை வேலை செய்கிறது! கடந்த ஐந்து வாரங்களாக, முதல் இரண்டாவது மற்றும் மூன்றாம்தரமாக, ஒரு நூறு மக்களுக்கும் மேலாக நமது சபைக்கு மக்கள் வந்தார்கள். சிலர் கிறிஸ்துவை நம்பினார்கள் மற்றும் சபையில் நிலைத்திருக்கிறார்கள். இந்தமுறை உண்மையாக மக்களை நமது சபைக்குள் கொண்டுவருகிறது. இது வேலை செய்கிறது!

டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் நாம் சுவிசேஷ ஊழியம் செய்யும் இந்த வழியை ஏற்படுத்தினார் லூக்கா 14:23ல் கிறிஸ்து சொன்னதைப் பின்பற்றி, “நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா.” இழக்கப்பட்ட மக்களை, நாம் முதலாவதாக சபைக்கு அழைத்து வருகிறோம். அங்கே அவர்கள் சுவிசேஷத்தை கேட்கிறார்கள் மற்றும் கிறிஸ்துவை நம்புகிறார்கள். நவீன அமெரிக்க சபைகள் இதை மாறுதலாக செய்கிறார்கள். அவர்கள் தெருக்களில் ஒரு துரிதமான “தீர்மானத்தை” எடுக்க மக்களை நடத்துகிறார்கள். ஆனால் ஏறக்குறைய அவர்களில் ஒருவரும் சபைக்கு வருவதில்லை. அவர்களுடையமுறை மாறுதலுக்கு அல்ல, தீர்மானத்துக்கு நடத்துகிறது. அவர்கள் செய்வதிலிருந்து மாறுதலான ஊழியத்தை நாங்கள் ஏன் செய்கிறோம் என்று நான் உங்களுக்கு இன்று விளக்க விரும்புகிறேன்.

ஏன் சபைக்கு மக்களை வரவேற்க மற்றும் நாம் வெளியே சென்று பெயர்களைச் சேர்க்கிறோம், மற்றும் அவர்களோடு பேசும்பொழுது மக்களை இரட்சிப்புக்கு நடத்த முயற்சி செய்வதில்லை?

முதலாவதாக, ஏனென்றால் நமது வழி வேதாகமத்தின் வழியாகும். இவை அனைத்தும் புதிய ஏற்பாட்டின் மூலமாக வந்ததாகும். அந்திரேயா பன்னிரெண்டு சீஷர்களில் ஒருவராகும். வேதாகமம் சொல்லுகிறது,

“யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் [குரு] பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன். அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம். பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டு வந்தான்” (யோவான் 1:40- 42).

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

எங்களது பிரசங்கம் இப்போது உங்கள் கைப்பேசியில் கிடைக்கிறது.
WWW.SERMONSFORTHEWORLD.COM என்கிற இணையதளத்திற்குச் செல்லவும்,
“APP” என்று எழுதப்பட்ட அந்தப் பச்சை நிற பொத்தானை அழுத்தவும்.
அதன்பிறகு வரும் வழிமுறையைப் பின்பற்றவும்.

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

அந்திரேயா எந்தக் காரியத்தையும் சரியாக அறியவில்லை. ஆனால் இயேசுவை மேசியா என்று அவர் அறிந்திருந்தார். அந்திரேயா ஒரு பாவியின் ஜெபத்தை சொல்லிக்கொண்டு சுற்றி திரியவில்லை. ஆனால் தன் சகோதரனாகிய சீமோன் பேதுருவை இயேசுவிடம் அழைத்து வந்தார். அதன்பிறகு பேதுரு மாற்றப்பட்டார். பெந்தேகொஸ்தே நாளில் அவர் பிரசங்கித்தபொழுது மூவாயிரம் மக்கள் கிறிஸ்துவை நம்பினார்கள். ஆனால் அவர் தனது சகோதரனைப் பின்பற்றி இயேசுவை சந்தித்ததினால் இது ஆரம்பித்தது.

நாத்தான்வேலிடம் சீஷனாகிய பிலிப்பு அதே காரியத்தைச் சொன்னார். அவர் நாத்தான்வேலிடம் சொன்னார், “வந்துப்பார்” (யோவான் 1:46). பிலிப்பு அதிகமாக அறியவில்லை. ஆனால் அவர் நாத்தான்வேலை இயேசுவைப் பார்க்கும்படி கொண்டுவந்தார், மற்றும் அது அனைத்து வித்தியாசத்தையும் உண்டாக்கியது.

ஒருநாள் இயேசுவானாவர் சமாரிய வழியாக நடந்து சென்றார் மற்றும் ஒரு ஸ்திரீயை இரட்சிப்புக்கு நடத்தினார். அவள் வேதாகமத்தை அறியவில்லை. அவள் ஒரு யூத ஜாதியில்லை. ஆனால் அவள் இயேசுவை நம்பினாள். அவள் தன்னுடைய நாட்டுக்குச் சென்று அந்தப் பாவியின் ஜெபத்தை சொல்லவில்லை மற்றும் மக்களை அப்படி நடத்தவில்லை. ஆனால் அவள் அவர்களை இயேசுவிடம் அழைத்து வந்தாள் மற்றும் அவரைப் பார்க்க செய்தாள். வேதாகமம் சொல்லுகிறது,

“அப்பொழுது அந்த [சமாரிய] ஸ்திரீ, தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளேபோய், ஜனங்களை நோக்கி: நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள்” (யோவான் 4:28, 29).

ஒவ்வொருவரும் இதைச் செய்யலாம் – ஒருவேளை நீ இரட்சிக்கப்படவில்லையானாலும் நீயும் செய்யலாம். நீ ஒரு வகுப்புக்குச் சென்று வேதாகமப் போதனைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. மக்களுடைய கேள்விகளுக்கு நீ பதில் சொல்ல முயற்சிக்க வேண்டியதில்லை. தெருவில் மக்களை இரட்சிப்புக்கு நடத்த நீ முயற்சிக்க வேண்டியதில்லை. அவர்களைச் சபைக்கு வரவேண்டுமென்று நீ அழைத்தால் போதும், நல்ல நண்பர்களை உண்டாக்க மற்றும் நல்ல நேரத்தை அனுபவிக்க கொண்டுவந்தால் போதும். இதை ஒவ்வொருவரும் செய்யலாம் – மற்றும் நாங்கள் அதை செய்கிறோம்.

இரண்டாவதாக, எங்களுடைய முறை செயல்படுகிறதாக இருக்கிறது. அநேக சபைகள் சுவிசேஷ ஊழியம் செய்வதில்லை. ஆனால் அவர்கள் செய்தாலும், அவர்கள் மக்களிடம் தெருவில் அல்லது அவர்களுடைய முன் கதவில் நின்று இதைச் செய்கிறார்கள். அவர்கள் இழக்கப்பட்ட மக்களுக்கு “இரட்சிப்பின் திட்டத்தை” விரைவாக கொடுக்கிறார்கள் மற்றும் ஒரு “பாவியின் ஜெபத்தை” சொல்ல செய்து அங்கேயே முடிக்கிறார்கள். இது “தீர்மானஇஸம்”. ஒரு “தீர்மானத்தை” செய்யும் நபர் மாற்றப்பட்ட ஒரு நபராக கணக்கிட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் அந்த மக்களை “காப்பாற்றப்பட்டதாக” கணக்கெடுத்துக் கொள்கிறார்கள். அதன்பிறகு, சபைகள் இந்த மக்களைப் “பின்தொடர்கிறது” – ஆனால் ஏறக்குறைய ஒருவரும் சபைக்கு வருவதில்லை. என்னுடைய தகப்பனார், டாக்டர் கேஹன் ஒருமுறை ஒரு அடிப்படை பாப்டிஸ்டு சபைக்கு விஜயம் செய்தார் அவர்கள் 900 மக்களோடு ஒரு வாரத்தில் ஜெபித்தார்கள் – ஆனால் அந்தச் சபையில் 125 மக்கள் மட்டுமே நிலைத்திருந்தார்கள். அந்த 900 மக்கள் ஒரு தீர்மானத்தை எடுத்தார்கள், ஆனால் அவர்கள் ஒருபோதும் சபைக்கு வரவில்லை. அவர்கள் ஒரு ஜெபத்தை செய்தார்கள், ஆனால் ஒருபோதும் சபைக்கு வரவில்லை.

அந்தச் சபைகள் செய்வதைப் போல நாங்கள் ஏன் செய்வதில்லை? அது வேலை செய்யவில்லை. சபை உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கான மக்களை ஒரு பாவியின் ஜெபத்தை செய்ய சொல்லி நடத்துகிறார்கள். ஆனால் ஏறக்குறைய ஒருவரும் சபைக்கு வருவதில்லை. அவர்கள் கிறிஸ்தவர்களாக மாறுவதில்லை. அவர்கள் ஒரு “தீர்மானம்” எடுக்கிறார்கள் ஆனால் அவர்கள் மாற்றப்படுவதில்லை.

நாம் பாவிகளோடு பேசும்பொழுதே அதே இடத்தில் அவர்களைக் கிறிஸ்தவர்களாக மாற்ற முயற்சிப்பதில்லை ஏன்? ஏனென்றால் அவர்கள் கிறிஸ்தவர்களாக மாறவில்லை! அதற்குப் பதிலாக, நாம் வெளியே சென்று நமது சபைக்கு மக்களை வரவேற்கிறோம். அவர்களுடைய முதல் பெயர்களை மற்றும் போன் எண்களைக் கொடுக்கும்படி கேட்போம். போன் எண்களைக் கொண்டு உதவிகாரர்கள் மற்றும் தலைவர்கள் அவர்கள் வர ஏற்பாடுகளைச் செய்வார்கள் அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் சபைக்குக் கொண்டு வருவதற்கு நமது அங்கத்தினர்களில் ஒருவரை துணையாளர்களாக ஏற்படுத்துவார்கள். அவர்களை நாங்கள் எங்கள் சொந்த கார்களில் சபைக்குக் கொண்டு வருவோம். நாங்கள் அவர்களோடு நட்பு கொள்வோம். நாங்கள் ஞாயிற்றுக்கிழமை காலை கூட்டம் முடிந்த பிறகு எப்பொழுதும் மத்திய உணவு உண்போம், மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலை கூட்டம் முடிந்த பிறகு இரவு உணவு உண்போம். சபையில் அவர்களை நாங்கள் சந்தோஷப்படுத்துவோம். அதன்பிறகு எங்கள் உதவிகாரர்கள் மற்றும் தலைவர்கள் அவர்களைப் போன் செய்து மறுபடியும் வரவேண்டும் என்று அழைப்பார்கள்.

நாம் செய்வதை ஏன் இப்படி செய்கிறோம்? ஏனென்றால் இது வேலை செய்கிறது. எங்கள் ஒழுங்குமுறை மக்களை சபைக்குக் கொண்டு வருகிறது, மற்றும் சபைக்குள்ளும் கொண்டு வருகிறது. சபையில் அவர்கள் சுவிசேஷ பிரசங்கத்தைக் கேட்கிறார்கள். சிலர் உடனடியாக கிறிஸ்துவை நம்புகிறார்கள், ஆனால் அநேகர் மாற்றப்பட வேண்டியதற்கு முன்பாக பல வாரங்கள் அல்லது மாதங்கள் சுவிசேஷ பிரசங்கத்தைக் கேட்க வேண்டியதாக இருக்கிறது. அதன்பிறகு அவர்கள் தங்கள் வாழ்க்கையின் மீதியான நாட்களை கிறிஸ்தவர்களாக வாழ்வார்கள். அந்த மற்ற ஒழுங்கு முறையானது ஒரு போனிதந்திரமாகும் அது யாரையும் வெற்றி கொள்ளாது!

சில மாதங்களுக்கு முன்பாக என்னுடைய தகப்பனார் டாக்டர் கேஹன் மற்றும் நோவா சாங் அவர்களோடு நான் ஆப்பிரிக்காவுக்குச் சென்றேன். நாங்கள் உகாடண்டா, கென்னியா மற்றும் ரிவாண்டாவின் சபைகளில் பிரசங்கம் செய்தோம். கென்னியாவில் ஒரு போதகர்கள் கான்பிரன்ஸில் நாங்கள் பேசினோம். மதியானத்தில் காலதாமதமாக கூட்டம் முடிந்தது. டாக்டர் கேஹன் போதகர்களுக்குச் சொன்னார், “நாம் வெளியே சென்று பெயர்களைச் சேகரிப்போம்.” நாங்கள் நெரோபி, கென்னியாவின் தெருக்களில் ஊடாக சுவாகிளியில் போதகர்களின் மொழிப்பெயர்ப்போடு சென்றோம். நாங்கள் மக்களோடு பேசினோம் மற்றும் அவர்களுடைய போன் எண்களைப் பெற்றோம். நாங்கள் அவர்களைச் சபைக்கு வரவேற்றோம். போதகர்கள் அவர்களுக்குப் போன் செய்து அவர்களது வரவுக்கு ஏற்பாடுகள் செய்தார்கள். அடுத்த நாளில் ஐந்து வருகையாளர்கள் அவர்களுக்குக் கிடைத்தது! அதன்பிறகு நாங்கள் ரெவாண்டாவுக்குப் பறந்தோம், போதகர்கள் அதை மறுபடியும் செய்தார்கள் மற்றும் அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை இன்னும் ஐந்து வருகையாளர்கள் கிடைத்தார்கள்!

போதகர்கள் ஆச்சரியம் அடைந்தார்கள். அவர்கள் வேலை செய்யக்கூடிய ஒரு ஒழுங்குமுறையைக் கண்டுக்கொண்டார்கள்! மக்கள் தீர்மானம் எடுப்பதற்காக நாங்கள் அதிகமான பிரயாசங்கள் எடுத்தோம் மற்றும் ஏராளமான பணத்தைச் செலவழித்தோம் ஆனால், அவைகளில் ஒன்றும் செயல்படவில்லை ஒருவரும் சபைக்கு வரவில்லை என்று அவர்கள் எங்களுக்குச் சொன்னார்கள். சுவிசேஷ ஊழியம் செய்வதற்கு அது ஒன்றுதான் வழியென்று அந்த போதகர்கள் நினைத்தார்கள். வேலை செய்யக்கூடிய மெய்யாக மக்களைச் சபைக்குள் கொண்டுவரக்கூடிய, எங்களுடைய ஒழுங்குமுறையை கற்றுக்கொள்ளுவதற்கு அவர்கள் மகிழ்ச்சியாகயிருந்தார்கள்.

மூன்றாவதாக, உங்களுக்கு எங்களுடைய ஒழுங்குமுறை நல்லது, ஏதோ பெயருக்காக அழைக்கப்பட்டவர்களுக்கு அல்ல. நீங்கள் தொடர்ந்து சுவிசேஷ ஊழியம் செய்தால் அது உங்களை ஒரு உறுதியான கிறிஸ்தவனாக மாற்றும். உங்களால் அழைக்கப்பட்டு சபைக்கு வந்தவர்கள், சபையில் நிலைத்தவர்கள், மற்றும் கிறிஸ்துவை நம்பினவர்களை நீங்கள் காணும்போது அது உங்கள் விசுவாசத்தை உறுதிபடுத்தும். நீ சபைக்கு வரும்படி அழைத்து வந்த ஒருவரைப் பார்க்கும்போது அங்கே ஒரு பெரிய சந்தோஷம் உண்டாயிருக்கும். அவர்கள் இரட்சிக்கப்படுவதைப் பார்க்கும்போது அங்கே ஒரு பெரிய சந்தோஷம் உண்டாயிருக்கும். அந்த சந்தோஷம் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்!

நாம் ஏன் கைபிரதிகளைக் கொடுக்கக்கூடாது? சில மக்கள் இதைச் செய்கிறார்கள். ஒரு கைபிரதி என்றால் என்ன என்று ஒருவேளை உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஒரு கைபிரதி என்றால் அது ஒரு துண்டு தாள் ஆகும், பொதுவாக அது மடிக்கப்பட்டிருக்கும், அதை வாங்கிக்கொள்பவர்களுக்குப் பெரிய எண்ணிக்கையில் அவர்கள் அதைக் கொடுப்பார்கள். ஒரு கைபிரதி ஒரு கதையைச் சொல்லும் மற்றும் அது இரட்சிப்பின் திட்டத்தைக் கொடுக்கும். அதன் முடிவில் ஒரு நபர் ஒரு ஜெபத்தை சொல்லி அல்லது அதில் அவருடைய பெயரைக் கையெழுத்திடுவதன் மூலமாக கிறிஸ்துவை நம்ப வேண்டும் என்று அது சொல்லும்.

அநேக சபைகள் தங்கள் மக்கள் கைபிரதிகளைக் கொடுக்கும்படி செய்கின்றன. அவர்கள் மக்களைக் கிறிஸ்துவிடம் கொண்டு வருவதாக அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் கைபிரதிகள் மக்களைக் கிறிஸ்துவிடம் கொண்டு வருவதில்லை. அவைகள் மக்களைச் சபைக்குள் கொண்டு வருவதில்லை. அந்த மக்கள் எங்கே? கைபிரதிகள் ஒரு நேரம் மற்றும் பணவிரயம் ஆகும். அதனால்தான் நாங்கள் அவைகளை உபயோகப்படுத்துவதில்லை.

இது எங்களுக்கு எப்படி தெரியும்? நாங்கள் இதை முயற்சி செய்தோம். நாங்கள் ஒரு மில்லியன் கைபிரதிகளை விநியோகம் செய்தோம். மக்கள் அவைகளை வாசித்தார்கள். ஆனால் அவர்களில் ஒருவரும் சபைக்கு வரவில்லை! அந்தத் தாளை வாசித்தபொழுது அவர்கள் மாற்றப்படவில்லை. அந்த ஒழுங்குமுறை வேதாகமத்தைச் சேர்ந்தது அல்ல. கிறிஸ்தவர்கள் கைபிரதிகளைக் கொடுக்க வேண்டும் என்று வேதாகமம் ஒருபோதும் சொல்லவில்லை. ஆனால் வெளியில் சென்று பாவிகளைக் கட்டாயப்படுத்தி உள்ளே – ஸ்தல சபைக்கு உள்ளே அழைத்து வாருங்கள் என்று வேதாகமம் சொல்லுகிறது! மற்றும் அதைத்தான் நாங்கள் செய்கிறோம்.

நாங்கள் இரண்டு இரண்டு பேராக ஏன் போகிறோம்? ஏனென்றால் இயேசுவானவர் அவ்விதமாக தமது சீஷர்களை வெளியே அனுப்பினார். வேதாகமம் சொல்கிறது இயேசு, “பன்னிருவரையும் அழைத்து... அவர்களை இரண்டு இரண்டு பேராக அனுப்பினார்” (மாற்கு 6:7, 11). மறுபடியுமாக, வேதாகமம் சொல்லுகிறது “கர்த்தர் வேறே எழுபதுபேரை நியமித்து [தெரிந்து கொண்டு], தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார்” (லூக்கா 10:1).

ஒருவேளை, சுவிசேஷ ஊழியத்தைச் செய்ய நீயாகவே போகலாம். வேதாகமம் ஒருபோதும் அதை வேண்டாம் என்றும் சொல்லவில்லை. அதிலே தவறு ஒன்றும் இல்லை. ஆனால் இரண்டு இரண்டு பேராக போகவேண்டும் என்பது வேதாகமத்தை அடிப்படையாக கொண்டது, மற்றும் அது வேலை செய்கிறது!

இரண்டு இரண்டு பேராக போவது அதிக மக்களை சபைக்கு கொண்டு வருகிறது. லாஸ் ஏன்ஜல்ஸ் நகரிலும் மற்ற பெரிய நகரங்களிலும், மக்கள் சந்தேகப்படுபவர்களாக இருக்கிறார்கள். தாங்கள் அறியாத ஒருவரிடம் அவர்கள் பேசவிரும்ப மாட்டார்கள். இளம் மக்கள் வயதான மக்களை சந்தேகப்படுவார்கள். பெண்கள் பையன்களை சந்தேகப்படுவார்கள். இருவர் இணைந்து வெளியே செல்லும்போது அவர்களுடைய சந்தேகம் மற்றும் பயங்கள் அமைதியாகிறது மற்றும் அதிகமான பெயர்களை உள்ளே கொண்டு வருகிறது.

இரண்டு இரண்டு பேராக போவது உங்களுக்கு நல்லதாகும். ஒரு அனுபவமிக்க கிறிஸ்தவரோடு நீ போவதன் மூலமாக, மக்களை எப்படி சபைக்கு அழைப்பது என்று நீ கற்றுக்கொள்ளுவாய் மற்றும் இதை செய்வது வசதியாக இருக்கும். ஆரம்பத்தில், உனக்குப் பயமாக இருக்கலாம். என்ன செய்ய வேண்டும் என்று உனக்குத் தெரியாது. ஆனால் யாராவது ஒருவரோடு நீ போகும்போது எப்படி செய்ய வேண்டும் என்று நீ தெரிந்து கொள்ளலாம். விரைவாகவே நீ பெயர்களை உள்ளே கொண்டு வருவாய்!

உனக்கு நல்ல கிறிஸ்தவ ஐக்கியம் கிடைக்கும். கிறிஸ்துவுக்காக வேலைச்செய்வது உன்னோடு வேலைச்செய்யும் கிறிஸ்தவர்களோடு நெருக்கம் உண்டாகும். “வேலையின் ஐக்கியம்” உண்மையாகவே மிகச்சிறந்த ஐக்கியமாகும்.

மற்ற வழி வேலை செய்வதில்லை என்பது எங்களுக்கு எப்படி தெரியும்? நாங்கள் அதை வருடக்கணக்காக முயற்சி செய்திருக்கிறோம்! நாங்கள் வீடு வீடாக சென்று மக்களை இரட்சிப்பின் திட்டம் என்ற ஒரு பில்லி கிராம் கைபிரதிகளை விநியோகம் செய்தோம். பாவியின் ஜெபத்தை அவர்களுடைய முன் கதவு, அல்லது தெருவில் ஜெபித்தோம். நாங்கள் ஒரு மில்லியன் கைபிரதிகளை விநியோகம் செய்தோம். ஆனால் மக்கள் உள்ளே வரவில்லை. அவர்கள் மாற்றப்படவில்லை. அந்த வழி வேலை செய்யவில்லை.

ஆனால் எங்களுடைய ஒழுங்குமுறை வேலைச்செய்கிறது! லாஸ் ஏஞ்சல்சின் மையப்பகுதியில் எங்களுக்கு ஒரு சபை இருக்கிறது. லாஸ் ஏஞ்சல் ஒரு தேவதை மற்றும் பொல்லாத மாநகரமாகும். எல்லாவிதமான பாவமும் இங்கே நடக்கிறது. மக்கள் வேலை பள்ளி மற்றும் குடும்பம் மற்றும் நண்பர்கள் என்று அதிக அலுவலாக இருக்கிறார்கள். தொலைகாட்சி மற்றும் வலைதளம் மற்றும் ஐபோன்கள் மற்றும் எல்லாவிதமான காரியங்களாலும், அநேக தொந்தரவுகள் இருக்கின்றன. மிகவும் குறைவான மக்களே சபைக்குப் போகிறார்கள். மிகவும் குறைவானவர்களே உண்மையான கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள். மக்களைத் தெருவில் ஜெபத்தில் நடத்தி நாங்கள் முயற்சி செய்தோம். ஆனால் அது ஒரு சபையைக் கட்டவில்லை. அது மக்களைக் கிறிஸ்துவுக்காக வெற்றி கொள்ளவில்லை.

நாங்கள் அனுபவத்தில் கற்றுக்கொண்டோம். நாங்கள் வெளியே சென்று மக்களைச் சபைக்கு வரவேற்றோம். அதன்பிறகு அவர்கள் நண்பர்களைக் கண்டுகொள்ள மற்றும் சுவிசேஷத்தை கேட்க முடியும்படியாக அவர்களைச் சபைக்குக் கொண்டு வந்தோம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இழக்கப்பட்ட மக்கள் எங்கள் சபையில் இருப்பார்கள். அவர்கள் மற்ற சபைகளிலிருந்து வரவில்லை. அவர்கள் கிறிஸ்தவ குடும்பங்களிலிருந்து வரவில்லை. அவர்கள் உலகத்தின் எல்லா பாவத்திலிருந்தும் வந்தவர்கள். மற்றும் அவர்களில் சிலர் அற்புதமான கிறிஸ்தவர்களாக மாறினார்கள். அதனால்தான் எங்கள் சபை ஆவிக்குரியதாக மற்றும் ஜீவனுள்ளதாக இருக்கிறது. எங்கள் ஒழுங்குமுறை உண்மையான கிறிஸ்தவர்களை உருவாக்குகிறது, மற்றும் அவர்களுக்காக நாங்கள் தேவனை ஸ்தோத்தரிக்கிறோம் ! ஆமென்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

போதனைக்கு முன்னதாக தனிப்பாடல் பாடியவர் திரு. ஜேக் நான்:
“Bring Them In” (Alexcenah Thomas, 19th century).