Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




“ஆனால் இல்லை என்றால்” – தேவனுடைய மனிதர்கள் பாபிலோனில்

“BUT IF NOT” – GOD’S MEN IN BABYLON
(Tamil)

ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்கள்
by Dr. R. L. Hymers, Jr.

டிசம்பர் 3, 2017 கர்த்தருடைய நாள் மாலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, December 3, 2017

“சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவை நோக்கி: நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக்குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை. நாங்கள் ஆராதிக்கிற தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்” (தானியேல் 3:16-18).


அவர்கள் தங்கள் வீட்டிலிருந்து 1500 மையில்களுக்கு அப்பாலே இருந்தார்கள். மேலும் அவர்கள் இளம் வயதுள்ளவர்கள். அந்த நகரம் பொய்யான மதம், மதுபானம் மற்றும் பாவத்தால் நிறைந்ததாக இருந்தது. அவர்கள் பெற்றோர் அறிந்திருந்தாலும்கூட அவர்களால் எதை வேண்டுமானாலும் செய்திருக்க முடியும்! ஆனால் தேவன் அவர்களை கவனித்துக் கொண்டு இருக்கிறார் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள்.
நெபுகாத்நேச்சார் எருசலேமை கைபற்றினபொழுது அவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள். அவர்கள் நான்குபேர். அவர்கள் மற்ற பையன்களைபோல இல்லை. அவர்கள் உறுதியாக இருந்தார்கள் மற்றும் அவர்கள் ஊக்கமானவர்களாக இருந்தார்கள். அவர்கள் விளைச்சலின் சிறந்த பங்காக இருந்தார்கள் – சிறந்தவர்களில் மிகசிறந்தவர்களாக இருந்தார்கள். அவர்கள் பந்தயங்களில் வெற்றிபெறும் வீரர்கள். ஆனால் அவர்கள் நேரடியான “முதல்” மாணவர்கள். ஞானமுள்ள மனிதர்களாக பயிற்சி கொடுக்கும்படி ராஜா அவர்களை தேர்ந்தெடுத்தான். அவர்கள் பட்டம் பெற்ற பிறகு ராஜாவுக்குச் சிறப்பான ஆலோசகர்களாக இருந்திருப்பார்கள்.
அவர்கள் மிகவும் இளமையாக இருந்தார்கள். அவர்கள் நான்குபேரும் – 17 அல்லது 18 வயதுள்ளவர்களாக இருந்திருப்பார்கள் என்று வேதவல்லுனர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள். அவர்கள் ராஜாவின் பல்கலைகழகத்தில், புறஜாதி தேசத்தில், அவர்கள் தங்கள் வீட்டிலிருந்து 1,500 மையில்களுக்கு அப்பாலே இருந்தார்கள்.
இன்றுள்ள இளம் மனிதர்கள் அந்த நிலைமையில் இருந்திருந்தால் அதை விட்டுவிட்டிருப்பார்கள்! அவர்கள் குடித்து வெறித்திருப்பார்கள். அவர்கள் பாழன விருந்துகளில் பங்கு பெற்று இருந்திருப்பார்கள். அவர்கள் அந்தப் பல்கலைகழகத்தில் கற்றுக்கொண்டவைகளை உபயோகப்படுத்தி தேவனுடைய ஜீவனை மறுதலிக்க ஒரு சாக்காக எடுத்திருப்பார்கள். லோத்தின் நாட்களில் இருந்த மனிதர்களைப்போல, விருந்து மிருகங்களாக மாறியிருக்க முடியும். லோத்துதாமே சோதோமின் விருந்து அரங்கத்தை நோக்கி நகர்ந்ததுபோல, அவர்களும் தங்கள் வாழ்க்கையிலிருந்து தேவனை விட்டுவிட்டிருந்திருக்கலாம். கெட்ட குமாரன் செய்ததுபோல “அடங்காத வாழ்க்கை” வாழ்ந்து – அவர்கள் தங்கள் வாழ்க்கையை வீணாக்கி இருக்கலாம். ஊர் என்னும் கல்தேய தேசத்திலே ஆபிரகாம் உலகப் பிரகாரமான வாழ்க்கை முறையில் வாழ்ந்ததுபோல, அவர்கள் இழக்கப்பட்ட நண்பர்களை உண்டாக்கி மற்றும் பொருளாதார வாழ்க்கை முறையில் பிடிபட்டவர்களாக தங்கள் வழியை இழந்திருக்கலாம். பவுலின் நண்பன் தேமா செய்ததுபோல, அவர்கள் பின்மாற்றத்தில் திரும்பி மற்றும் தங்கள் ஆத்துமாக்களை இழந்திருக்க முடியும், “தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து... போய்விட்டான்” (II தீமோத்தேயு 4:10).
ஆனால் இந்த யூதபையன்கள், வீட்டைவிட்டு மிகவும் தூரத்தில் இருந்தார்கள், பாபிலோனிய பல்கலைகழகத்தில், ஒருபோதும் தவறுசெய்யாதவர்களாக மற்றும் தோற்றுபோகாதவர்களாக இருந்தார்கள்! அவர்கள் மோசேயின் உடன்படிக்கைக்குக் கீழாக இருந்தார்கள், அதனால் அவர்கள் கோசாரை கடைபிடித்தார்கள். அவர்கள் ராஜாவின் திராட்சரசத்தினாலும் அல்லது ராஜாவின் போஜனத்தினாலும் தங்களை தீட்டுப்படுத்தாதிருந்தார்கள். அவர்கள் தேவனுக்கும் தங்கள் வீட்டில் கற்றுக்கொண்ட மதபோதனைகளுக்கும் உண்மையாக இருந்தார்கள். அவர்கள் FOBs போல, படகிலிருந்து இறக்கப்பட்ட சீன சிறுபிள்ளைகளை போல, அவர்களுடைய பெற்றோர்கள் தங்கள் வீடுகளைவிட்டு தூர இடங்களுக்கு சீனாவில் அனுப்புபவர்களை போல இருந்தார்கள். அவர்களில் சிலர் சபைக்கு வந்து இரட்சிக்கப்படுகிறார்கள் கர்த்தருக்கு ஸ்தோத்திரம். பிறகு நீங்கள் இந்தப் பாபிலோனிய சிறையிருப்பிலிருந்த பையன்களைபோல இருப்பீர்கள்.
இந்த இளம் மனிதர்களுக்குத் தானியேல் தலைவனாக இருந்தான். அவன் மற்ற மூன்றுபேரைவிட சிறிது இளையவனாக இருந்தான். ஆனால் அவன் ஒரு இயற்கையான தலைவனாக இருந்தான். அவன் மற்ற மூவரையும் நடத்தினான். ஜான் கேஹன் போல அவனுக்கு முன் நின்று நடத்தும் திறமை இருந்தது. அதனால்தான் நான் ஜான் ஒரு போதகனாக இருக்க முடியும் என்று உணர்ந்தேன். ஜானைவிட வயதானவர்கள் அவரை பின்பற்ற முடியும் ஏன் என்றால் அவர் ஒரு தலைவர். தானியேல் ஒரு ஜெபவீரனாக இருந்தான். தானியேல் தேவனில் விசுவாசம் உள்ளவனாக மற்றும் ஒரு நோக்கத்தோடு இருந்த ஒரு இளம் மனிதன். தானியேல் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தான். அவன் ராஜாவாகிய நெபுகாத் நேச்சாருக்குப் பிரசங்கம் செய்தான் மற்றும் ராஜாவின் அரசவையிலிருந்த அனைவருக்கும் சாட்சியாக இருந்தான். தானியேல்மீது ராஜா பெரிய நம்பிக்கை வைத்தான். அவன் தானியேல் இருபது வயதாக இருக்கும்போதே ஒரு பெரிய மனிதனாக ஆக்கினான். ஆனால் தானியேல் தனது மூன்று நண்பர்களை மறக்கவில்லை. அவர்களுடைய பெயர்கள் சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்நேகோ என்பவைகள் ஆகும். பாபிலோன் அரசாங்கத்தில் தனது மூன்று எபிரேய நண்பர்களுக்கும் உயர்ந்த பதவிகள் கொடுக்க வேண்டும் என்று தானியேல் வேண்டிக்கொண்டான்.
இந்த மூன்று இளம் மனிதரும் தேவனுக்கு உண்மையாக இருந்து சோதனையில் வெற்றி பெற்றார்கள். இப்பொழுது அவர்களுடைய உண்மையின் காரணமாக அவர்களுக்கு உயர்ந்த பதவிகள் பரிசாக கொடுக்கப்படுகின்றன. நீ தேவனை முதலாவதாக வைத்திருக்கிறாய் என்று அவர் அறியும்பொழுது, உனக்கு முக்கியமான வேலையை செய்யும்படி கொடுக்கிறார். இவைகள் எனக்கு நோவா, ஜாக் மற்றும் ஆரோனை நினைவுபடுத்துகின்றன. அவர்கள் இன்னும் இளைஞர்களாக இருந்தார்கள், ஆனால் உதவிக்காரர்களாக நியமணம் செய்யப்பட்டார்கள் ஏனென்றால் அவர்களால் தேவனுடைய காரியங்களை கையாள முடியும் என்று நாம் அறிந்திருக்கிறோம். மற்றும் அவர்கள் கடினமான சோதனைகள் ஊடாக போக அவர்களை அவர் நம்பமுடியும் என்று தேவன் அறிந்திருக்கிறார்.
ராஜாவாகிய நெபுகாத் நேச்சார் அதிகமான வல்லமை மற்றும் சுயபெருமை நிறைந்தவனாக மாறினான். தனது பெருமையிலே அந்த ராஜா தன்னுடைய பெரிய ஒரு சிலையை செய்தான். அது தொண்ணூறு அடி உயரம் இருந்தது, அது பொன்னால் செய்யப்பட்டது, அல்லது பொன்னால் மூடப்பட்டிருந்தது. நெபுகாத் நேச்சார் தன்னுடைய இந்த பிரமாண்டமான சிலையை பண்ணுவித்து “தூரா என்னும் சமபூமியிலே நிறுத்தினான்” (தானியேல் 3:1). இப்பொழுது தானியேல் 3:4-6ஐ கவனியுங்கள்.

“கட்டியக்காரன் உரத்த சத்தமாய் சகல ஜனங்களும், ஜாதிகளும், பாஷைக்காருமானவர்களே, உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது என்னவென்றால்: எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் தாழவிழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்ளக்கடவீர்கள். எவனாகிலும் தாழ விழுந்து, அதைப் பணிந்துகொள்ளாமற்போனால், அவன் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையின் நடுவில் போடப்படுவான் என்றான்” (தானியேல் 3:4-6).

இந்த அனுபவத்தின் பிரதானமான விளக்கம் தேவன் தமது உடன்படிக்கையின் இஸ்ரவேல் மக்களை அவர்களுடைய பாபிலோனிய சிறையிருப்பின் சமயத்தில் கவனித்துக் கொண்டார். அதுதான் விளக்கம் மற்றும் பிரதானமான பொறுத்தம். ஆனால் அதேசமயத்தில் இன்னொரு பொறுத்தமும் இருக்கிறது. II தீமோத்தேயு 3:16-17 நமக்குச் சொல்லுவது “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது... பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது’’ இன்றுள்ள கிறிஸ்தவர்களுக்குப் பிரயோஜனமுள்ளது. தானியேலின் இந்த பகுதி நமக்குச் சொல்லுவது என்னவென்றால் கிறிஸ்தவர்களாகிய நமக்கு இது பொறுத்தமாக இருக்க வேண்டும். இந்த மூன்று இளம் எபிரெய மக்களும் மற்ற பாபிலோனியரோடு சேர்ந்து அந்தப் பொற்சிலையை தொழுதுகொள்ள வேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. அந்தக் கூட்டத்தோடு செல்லும்படி, அவர்கள் உறுதியாக நெருக்கி ஏவப்பட்டார்கள், “தாழவிழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின [அந்த] பொற்சிலையைப் பணிந்து கொள்ளக்கடவீர்கள்” (தானியேல் 3:5).
இங்கே ராஜாவாகிய நெபுகாத்நேச்சார் சாத்தானுக்கு அடையாளமாக உறுவகப்படுத்தப்படுகிறான். புதிய ஏற்பாடு சாத்தானை “இந்தப் பிரபஞ்சத்தின் தேவன்” (II கொரிந்தியர் 4:4) என்று அழைக்கிறது. சாத்தான் தாழவிழுந்து தம்மை பணிந்து கொள்ளும்படி நம்மை அழைக்கிறான். ஆனால் கிறிஸ்து நம்மை வித்தியாசமாக அழைக்கிறார். கிறிஸ்து சொன்னார்,

“இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது... தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் (பொருளாதாரம்) ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது” (மத்தேயு 6:24).

நீங்கள்தான் தெரிந்து கொள்ள வேண்டும். சாத்தான் பொருளாதார கொள்கையை தாழவிழுந்து வணங்கும்படி உன்னை அழைக்கிறான். தம்மை மட்டும் தாழவிழுந்து வணங்கும்படி உன்னை தேவன் அழைக்கிறார். கர்த்தர் சொல்கிறார், “என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்” (யாத்திராகமம் 20:3). அது பத்துக் கட்டளைகளில் ஒன்று.

இந்த மூன்று இளம் எபிரேயர்கள், சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்நேகோ, தெரிந்துகொள்ள வேண்டும். அந்த பொற்சிலையை தொழுதுகொள்ள வேண்டுமா? அல்லது அந்த பொற்சிலையை தொழுதுகொள்ள மறுக்கவேண்டுமா? இந்த இளம் மனிதருக்கு எத்தனையோ மாறுபட்ட வழிகள் இருந்தன. அவர்கள் சொல்லி இருக்கலாம், “ராஜாவின் பிரஜைகளாக அவருக்குக் கீழ்ப்படிந்து மற்றும் தாழவிழுந்து பணிந்து கொள்ள வேண்டியது அவசியம் அது எங்கள் கடமை”. அல்லது அவர்கள் சொல்லி இருக்கலாம், “இது ஒரு உருவம் மட்டுமே. அதை வணங்கினாலும், தேவனைதான் நாம் நேசிக்கிறோம் என்று நமது இருதயத்தை அவர் அறிந்திருக்கிறார்”. அவர்கள் அதை பணிந்துகொண்டு கஷ்டத்தில் அகப்படாமல் இருந்திருக்க முடியும். வேதாகமம் சொல்லுகிறது, “யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்” (யோசுவா 24:15).
“விடுமுறை நாட்கள்” என்று உலகம் அழைப்பதை நாம் நெருங்கி கொண்டு இருக்கும் பொழுது, நீங்கள் ஒவ்வொருவரும் இந்த தெரிந்து கொள்ளுதலை உறுதி செய்ய வேண்டும். நீ சாத்தானை பணிந்து கொள்ளுவாயா, அல்லது தேவனுக்கு உண்மையாக இருப்பாயா? நீ கிறிஸ்மஸ்கு சபையில் இருப்பாயா, அல்லது லாஸ் வேகாஸ்கு ஓடிப்போவாயா? புதுவருட ஆரம்பத்தில் சபையில் இருப்பாயா, அல்லது ஒரு விருந்துக்கு ஓடிப்போவாயா? அமெரிக்க பொருளாதாரக் கொள்கை பொற்சிலைக்கு அடிப்பணிவாயா, அல்லது தேவனுடைய மக்களோடு சபையில் இருப்பாயா? நான் இப்படி சொல்லுவதன் மூலமாக பெலவீன புதிய சுவிசேஷகர்களால் கடுமையாக பரியாசம் பண்ணப்படுவேன். நான் மிகவும் கெடுபிடியாக இருப்பதாக அவர்கள் சொன்னார்கள். தேவனுக்கும் உலக பொருளுக்கும் இடையில் உங்களை தெரிந்துகொள்ள செய்வது சட்டரீதியானது என்று சொன்னார்கள். நான் அப்படிப்பட்ட சர்வாதிகாரப் போக்கை வைக்கவில்லை என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். நான் அந்தப் பாகுபாட்டை செய்யவில்லை. கிறிஸ்து செய்தார்! கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சொன்னார், “இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது”. கிறிஸ்து சொன்னார், “தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது” (மத்தேயு 6:24). கிறிஸ்து நமக்கு சொன்னார்,

“முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்” (மத்தேயு 6:33).

தி ரிபார்மேஷன் ஸ்டடி வேதாகமம் மத்தேயு 6:33ஐ சொல்லுகிறது, “தேவனுடைய தெய்வீக ஆளுகையை நாம் ஏற்றுக்கொண்டு மற்றும் அவரோடு சரியான உறவில் இருப்பது வாழ்க்கையின் மிக உயர்ந்த முதலிடத்தை வகிக்கிறது... அவருக்காக பிரயாசப்படுபவர்களுக்குத் தேவன் சகல தேவைகளையும் சந்திப்பார்” (மத்தேயு 6:33ன் மேற்குறிப்பு).

உனது குடும்பத்தாரும் இழக்கப்பட்ட நண்பர்களும் உன்னை கிறிஸ்மஸ்கும் புதுவருடத்துக்கும் சபைக்குப் போகவிடாதபடி இழுக்க பெரிய அளவில் முயற்சி செய்வார்கள். சபைக்கு போனால் அவர்கள் உன்னை “மாயக்காரன்” அல்லது ஒரு “மதவாதி” என்று அழைப்பார்கள், அந்த நேரங்களில் லாஸ் வேகாஸ், சான் பிரான்சிஸ்கோ, அல்லது வேறு எங்காவது ஓடாமல் சபைக்கு போனால்! நீதான் தீர்மானிக்க வேண்டும் அவர்களுடைய விக்கிரகங்களை பணிந்து கொள்ள போகிறாயா – அல்லது இங்கே சபையிலே தேவனை சேவிக்க போகிறாயா! நீதான் தீர்மானிக்க வேண்டும்!
நான் எப்பொழுதும் சீன சபையில் சகோதர சகோதரிகளோடு புதுவருடத்தை கொண்டாடும்போது என்னுடைய தகப்பனார் கோபமாகக் கத்துவார். அவர் கோபமாகக் கத்தினார், “நீ குடும்பத்தோடு இருப்பதற்கு பதிலாக ஏன் அந்த சீன மக்களோடு புதுவருடத்தை செலவிட விரும்புகிறாய்?” நான் அவரோடு வாக்குவாதம் செய்ய மாட்டேன். நான் கிறிஸ்மஸ்கும் புதுவருடத்துக்கும் சபையில்தான் நிலைத்திருப்பேன். நான் அவரிடம் என்னோடு சபைக்கு வரும்படி அழைத்தேன். அவர் வரமறுத்தபோது நான் எனக்குள் சொல்லிக் கொள்வேன், “உம்மால்தான் குடும்பம் பிரிக்கப்பட்டது! நீர்தான் என்னோடு சபைக்குவர மறுக்கிறீர்!”
நீங்கள் பாருங்கள், அப்படிப்பட்ட நடத்தைதான் பெயர் கிறிஸ்தவர்களுக்கும் உண்மையான கிறிஸ்தவர்களுக்கும் வித்தியாசத்தை உண்டாக்குவதாகும்! மென்மையான புதிய சுவிசேஷகர்களோடு நீங்கள் தொடர்பு வைத்துக்கொண்டால், அவர்களுடைய மதம் ஒரு ஒத்துப்போவது – பிசாசோடு ஒத்துப்போவது என்பதை காண்பீர்கள்! தீவிரமாக கிறிஸ்தவராக இருக்கும் நமது இளம் மக்களில் ஒருவரை விவாகம் செய்வது மெய்யாகவே முடியாத காரியமாகும். அவர்களும் ஒத்துப்போகமாட்டார்கள் மற்றும் தங்கள் தீவிரத்தை விட மாட்டார்கள் – அல்லது நீ உனைனை நீயே விட்டுக்காடுத்து உண்மையான கிறிஸ்தவனாக மனந்திரும்ப வேண்டும் – நீ பெயர் (நாமகார) கிறிஸ்தவனிலிருந்து மாறவேண்டும்! நாங்கள் மாறப்போவதில்லை! அதனால், நீ மாறவேண்டியது நல்லதாகும் – அப்படி இல்லையானால், வேறு சபைக்குப் போ! சி. எஸ். லேவிஸ் இதை நன்றாக சொன்னார், “நான் ஒரு மாற்றப்பட்ட புறமதஸ்தனாக இருந்தேன், அப்போஸ்டேட் பூரிடன்ஸ் மத்தியில் வாழ்ந்தேன்”. அதேபோல கிப்லிங் இப்படி சொன்னார், “கிழக்குக் கிழக்குதான் மற்றும் மேற்கு மேற்குதான், இவை இரண்டும் ஒருபோதும் சந்திக்காது.” சுவிசேஷகம் சுவிசேஷகம்தான், மற்றும் அடிப்படை கொள்கை அடிப்படை கொள்கைதான், இவை இரண்டும் ஒருபோதும் சந்திக்காது. எங்களோடுகூட வா மற்றும் உண்மையான கிறிஸ்தவனாக மாறிவிடு! புதிய சுவிசேஷகம் என்ற உபயோகமற்ற மற்றும் மரித்த மதத்தை விட்டுவிடு! அதை விட்டுவிடு! எங்களோடுகூட வந்து உண்மையான கிறிஸ்தவனாக மாறிவிடு.
உங்களுக்குத் தெரியும், ஒரு நபரை அழிப்பதற்கு புதிய சுவிசேஷகத்தோடு அதிக தொடர்பு அவசியமில்லை. ஒரு சில மாதங்கள் அவர்களோடு போனால் – அவர்களுடைய பள்ளி அல்லது அவர்களுடைய சபைக்கு – தேவனுடைய ஒரு அற்புதத்தினால் எங்களோடு வந்துவிடுவாய்! எங்களைபோல நினைப்பது உனக்கு மாற்றத்தின் அற்புதமாக இருக்கும்! ஜார்ஜ் பெர்னாட்ஷா சொன்னார் சிறு அளவில் தடுப்பூசி போட்டது போன்ற கிறிஸ்தவம் சிறுபிள்ளையை போன்றவர்கள் மெய்யான காரியத்தை பெற்றுக்கொள்ளுதல் அரிதாக இருக்கும். டாக்டர் கர்டிஸ் ஹட்சன் ஒரு சிறு புத்தகம் எழுதினார் அதன் பெயர், “புதிய சுவிசேஷகம், அடிப்படை கொள்கைக்கு விரோதி”. அவர் சொன்னது சரியாக இருந்தது. அவர்கள் எதிரிகளாக நமக்கு இருக்கிறார்கள். நம்மால் முடிந்த வரையிலும் அவர்களோடு நன்றாக இருக்லாம் – ஆனாலும் அவர்கள் எப்பொழுதும் நம்மை தாக்குவார்கள்! ஏன்? ஏன் என்றால் அவர்கள் தீவிரமான கிறிஸ்தவத்தை விரும்புவதில்லை, அதனால்தான்! நான் ஒரு மாற்றப்பட்ட புறமதஸ்தனாக இருந்திருக்கிறேன், அப்போஸ்டேட் புதிய சுவிசேஷகர் மத்தியில் வாழ்ந்திருக்கிறேன்! நான் அறிந்து கொண்டேன், வருடக்கணக்கில், அவர்கள் எனது நம்பிக்கையை விரும்பாமல் மற்றும் எனக்கு விரோதமாக பேசினதை! நீயும் அதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் – நீ உண்மையான மாறுதலை அனுபவிக்க விரும்பினால், மெய்யான கிறிஸ்தவனாக மாறவிரும்பினால்!
பாருங்கள், புதிய சுவிசேஷகர்கள் மெய்யாகவே வேதாகமத்தை நம்புவதில்லை. அவர்கள் மெய்யாக நம்புவதில்லை அதாவது அவர்களது இருதயம் “திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது” – அதன் அர்த்தம் அவர்கள் எரேமியா 17:9ஐ விசுவாசிப்பதில்லை. மற்றவர்களைபோல அவர்கள் மோசமாக இல்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள், மற்றவர்களைபோல அவர்கள் மோசமாக இல்லை என்பதால் அவர்கள் பரலோகத்துக்கு போய்விடலாம் என்று நினைக்கிறார்கள். அதன் அர்த்தம் அவர்கள் வேதாகமத்தை நம்புவதில்லை, “தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான்” (லூக்கா 18:14); “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்து கொள்ளும்: என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்” (சங்கீதம் 139:23, 24). புதிய சுவிசேஷகர்கள் பாவ உணர்த்துதலுக்குக் கீழாக வருவதில்லை, ஏனென்றால் அவர்கள் வேதாகமத்தை தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை. அவர்கள் சாக்குப் போக்குச் சொல்லுகிறார்கள்; அதனால் அவர்கள் இரட்சிக்கப்பட முடியாது. அவர்கள் அப்போஸ்டேட் பூரிடன்களாக மட்டுமே இருக்க முடியும். டாக்டர் ஏ. டபல்யு. டோசர் சொன்னார், “வேதாகமம் உலகத்திலேயே மிகவும் உண்மையுள்ள புத்தகமாகும். தேவன் உண்மையானவர், அதன்படி அப்படியே பாவமும் அப்படியே மரணமும் நரகமும் ஆகும், அவற்றை நோக்கி நடத்துவது பாவமே ஆகும்” (Born After Midnight).
இந்த இளம் மனிதர்கள் புதிய சுவிசேஷகர்கள் அல்ல. அவர்கள் ஒரு பொய்யான, தேவனை பற்றிய மற்றும் பாவத்துக்குத் தண்டனை உண்டு உணர்வற்றவர்களான விஷம் உள்ளவர்களாக இல்லை. சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்நேகோ என்பவர்கள் கண்டிப்பானவர்கள், வேதத்தை விசுவாசிக்கும் அடிப்படையானவர்கள். அவர்கள் தேவபயத்தினால் நடுங்கினார்கள். அவர்கள் தேவனுக்கு அவ்வளவாக பயந்த படியினால் ராஜாவின் சிலையை வணங்கி தேவனுக்குக் கீழ்ப்படியாமல் போவதைவிட தாங்கள் அக்கினியில் எரிக்கப்படவும் சித்தமாக இருந்தார்கள். வேதாகமம் சொல்லுகிறது, “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்” (நீதிமொழிகள் 1:7). ஆனால் புதிய சுவிசேஷகர்கள் தேவனுக்குப் பயப்படுவதில்லை. வேதாகமம் சொல்லுகிறது, “அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை” (ரோமர் 3:18). நீங்களே உங்களுக்கு ஒரு பரீட்சை வையுங்கள். இந்த இளம் மனிதர்களைபோல நீ தேவனுக்குப் பயப்படுகிறாயா? அல்லது “உன்னுடைய கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லையா?” அப்படி உன் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லையானால், நீ ஒரு புதிய சுவிசேஷகர். நீ தேவனுக்குப் பயப்பட வேண்டியது அவசியமாகும்! வேதத்திலிருந்து உனக்குச் சொல்லப்பட்டது நீ இழக்கப்பட்டிருக்கிறாய்! அது உன்னை வேதனை படுத்துகிறதா? அது உன்னை இரவு நேரங்களில் விழித்திருக்கச் செய்து, நரகத்துக்குப் பயப்படும்படி செய்கிறதா? அப்படி இல்லையானால் நீ ஒரு புதிய சுவிசேஷகர்களால் விஷமாக்கப்பட்டிருக்கிறாய். அது விஷம்! அது விஷம்! அது விஷம்! நீ தேவனுடைய கோபாக்கினைக்குப் பயப்பட வேண்டும்!
அந்த ராஜா அவர்களிடம் சொன்னான், “தாழ விழுந்து, நான் பண்ணிவைத்த சிலையைப் பணிந்து கொள்ளஆயத்தமாயிருந்தால் நல்லது. பணிந்துகொள்ளாதிருந்தீர்களேயாகில், அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படுவீர்கள். உங்களை என் கைக்குத் தப்பவிக்கப்போகிற தேவன் யார் என்றான்” (தானியேல் 3:15).
இந்த இளம் மனிதர்கள் மூவரும் மாற்றப்பட்டவர்கள். அவர்கள் கர்த்தருக்கு பயப்பட்டார்கள். அவர்கள் கர்த்தரை நம்பி இருந்தார்கள். அவர்கள் பாபிலோனியர் பாவங்களில் பங்குபெறக்கூடாது என்று வருடக்கணக்காக கற்பிக்கப்பட்டார்கள். அவர்கள் தேவனுக்கு முன்பாக தனிமையில் நிற்க கற்றிருந்தார்கள்!

ஒரு தானியேலை போல தைரியமாக இரு,
   தனிமையாக நிற்க தைரியமாக இரு!
ஒரு நோக்கத்தில் உறுதியாக தைரியமாக இரு!
   அதை அறிவிக்க தைரியமாக இரு!
(“Dare to be a Daniel,” Philip P. Bliss, 1838-1876).

இதை எழுந்து நின்று பாடுங்கள்!

ஒரு தானியேலை போல தைரியமாக இரு,
   தனிமையாக நிற்க தைரியமாக இரு!
ஒரு நோக்கத்தில் உறுதியாக தைரியமாக இரு!
   அதை அறிவிக்க தைரியமாக இரு!

நான் ஒரு இளம் மனிதனாக இருந்தேன். நான் தனிமையாக இருந்தேன்! என்னிடம் பணம் இல்லாதிருந்தது! என்னை பின்னிருந்து உயர்த்த ஒருவரும் இல்லை! டாக்டர் கிரின் என்னை பார்த்து சொன்னார், “வேதாகமத்தை தள்ளிவிடும் விரியுரையாளர்களுக்குப் பதில் சொல்வதை நீ நிறுத்தாவிட்டால், உனக்கு சதர்ன் பாப்டிஸ்ட் சபை போதகர் பதவி ஒருபோதும் கிடைக்காது!” நான் தேவனுக்காக தனிமையாக நிற்க கற்றுக்கொண்டேன். நான் கல்லூரி மூலமாக என்னுடைய வழியில் உழைத்தேன். நான் ஒரு நாளைக்கு 16 மணி நேரம், வாரத்தில் ஏழு நாட்கள் உழைத்தேன் – நான் கல்லூரி மூலமாக என்னுடைய வழியில் கல்லூரி மற்றும் செமினரிக்கு கட்டணம் செலுத்த உழைத்தேன். நான் மனிதனைவிட, தேவனுக்கு பயப்பட கற்றுக்கொண்டேன். டாக்டர் கிரின் சொன்னார், “விரியுரையாளர்களுக்குப் பதில் சொல்வதை நீ நிறுத்தாவிட்டால் உனக்கு சதர்ன் பாப்டிஸ்ட் சபை போதகர் பதவி ஒருபோதும் கிடைக்காது.”
நான் அவருடைய கண்ணை நேராக பார்த்து சொன்னேன், “அதுதான் அதன் கிரயம் என்றால் அப்படிப்பட்ட ஒன்றை நான் விரும்பவில்லை!” அப்படிப்பட்ட ஒன்றை நான் விரும்பவில்லை அதுதான் அதன் கிரயம் என்றால்! அப்படிப்பட்ட ஒன்றை நான் விரும்பவில்லை!

ஒரு தானியேலை போல தைரியமாக இரு,    தனிமையாக நிற்க தைரியமாக இரு! ஒரு நோக்கத்தில் உறுதியாக தைரியமாக இரு!    அதை அறிவிக்க தைரியமாக இரு!

எனக்குப் பாதுகாப்பான எந்த வலையுமில்லை! இதோடு என்னுடைய உத்தியோகம் முடிந்தது என்று நான் நினைத்தேன். நான்கு வருட கல்லூரி படிப்பும் மற்றும் மூன்று வருட செமினரியிலும் நான் விரயம் செய்துவிட்டேன் என்று நான் நினைத்தேன். ஆனால் அதைபற்றி அதற்குமேல் நான் கவலைபடவில்லை. நான் வேதாகமத்துக்காக நிற்க வேண்டியதாக இருந்தது! எனக்கு ஊழியம் செய்ய ஒரு சபையும் ஒருபோதும் கிடைக்கவிட்டாலும் நான் வேதாகமத்துக்காக நிற்க வேண்டியதாக இருந்தது! அவர்கள் என்னை எரிகிற, அக்கினி சூளையிலே போட்டாலும்! ஒரு சபையும் ஒருபோதும் கிடைக்கவிட்டாலும்!

அதுதான் அதன் கிரயம் என்றால் – அப்படிப்பட்ட ஒன்றை நான் விரும்பவில்லை! நான் பயந்தேனா? ஒரு வேளை பயந்திருக்கலாம்! ஆனால் எனது வாழ்க்கை கதையை சென்ற வாரம் நான் ஏழுதி முடித்தேன். எனது புத்தகத்தின் தலைப்பு இங்கே – எல்லா பயத்துக்கும் எதிராக!

அநேக பிரபலமான பெரிய பிரசங்கிகள் எனது புத்தகத்தை ஆமோதித்துக் கையெழுத்திட்டார்கள். அவர்களுடைய தகவல்கள் அட்டையில் உள்ளன! டாக்டர் பில் மோன்ரோய், அவர்கள் கடந்தகால பாப்டிஸ்டு வேதாகம ஐக்கியத்தின் தலைவர், சொன்னார், “ஹைமர்ஸ் அவர்கள் ஒரு நவீனகால பாபிலோனில் – டவுன்டவுன் லாஸ் ஏன்ஜல்ஸ்சின் ஒரு நவீனகால தானியேல். அவருடைய கதையைப் படித்து நான் ஆசீர்வதிக்கப்பட்டதுபோல, நீங்களும் படியுங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்!”

டாக்டர் நீல் வேவர், லூசியானா பாப்டிஸ்டு பல்கலைகழக தலைவர், எழுதினார் – ஹைமர்ஸ் “எல்லா எதிர்ப்புகளுக்கும் விரோதமாக [அவர்] உணர்த்தப் பட்டவைகளுக்காக போராட பயப்படவில்லை. அந்த மனிதன் என்னுடைய நல்ல நண்பன், டாக்டர் ஆர். எல். ஹைமர்ஸ், ஜூனியர்.”

டாக்டர் ஹெர்பர்ட் எம். ராலிங்ஸ் அவர்கள், டாக்டர் ஜான் ராலிங்ஸ் அவர்களின் மகன், மற்றும் ராலிங்ஸ் பவுண்டேசனின் CEO சொன்னார், ஹைமர்ஸ் அவர்கள் “ஒரு அமெரிக்கன் ஒரிஜனல்! ஒரு தரிசனமுள்ளவர்! கிறிஸ்துவுக்காக மற்றவர்களை அன்பினால் அசைப்பதை அவருடைய வாழ்க்கை காட்டுகிறது.”

டாக்டர் டான் டேவிட்சன், சேன்டா அன்னா போதகர், கலிபோர்னியா, சொன்னார், “அவர் பாதையில் ஏற்பட்ட இடறல்கள்... டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பாதையில் மினிஸ்ட்டிரியில் ஏற்பட்ட இடறல்கள் – டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றார்!

ரெவரன்ட் ரோகார் ஹாப்மேன் எழுதினார், “நான் இந்த புத்தகத்தை உயர்வாக சிபாரிசு செய்கிறேன். நீங்கள் ஒரு பிரசங்கியாக இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம், இது உங்களை ஊக்குவிக்கும் மற்றும் உங்கள் நம்பிக்கையை வர்த்திக்க செய்யும்.”

டாக்டர் ராபர்ட் எல். சம்னார் சொன்னார், “எல்லா சக்திகளும் அவருக்கு விரோதமாக இருந்தாலும், சத்தியத்துக்காக நிற்க சித்தமுள்ள ஒரு மனிதனை நான் நேசிக்கிறேன். ராபர்ட் லெஸ்லே ஹைமர்ஸ், ஜூனியர். அப்படிப்பட்ட ஒருவிதமான கிறிஸ்தவராகும்.”

டாக்டர் பாய்ஜி பேட்டர்சன், பெரிய அகஸ்டு தென்மேற்கு [தெற்கு] பாப்டிஸ்டு தியாலஜிகல் செமினரியின் தலைவர் எழுதினார், “எல்லா பயத்துக்கும் எதிராக நிருபணமில்லாமல் மற்றும் அற்புதவண்ணமான ராபர்ட் எல். ஹைமர்ஸ், ஜூனியரின் கதையாகும், சுவிசேஷத்தை உண்மையோடு பிரசங்கிப்பவர். இந்தப் புத்தகத்தை வாசியுங்கள் மற்றும் நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.”

டாக்டர் பாப் ஜோன்ஸ் III, பாப் ஜோன்ஸ் பல்கலைகழக சான்சிலர், எழுதினார், “அவருடைய சுயசரிதை அவரை இருக்கிற வண்ணமாக வெளிப்படுத்துகிறது... ஒரு பழைய ஏற்பாட்டு தீர்க்க தரிசியைபோல... நானும் எனக்கு முன்னிருந்த எனது அப்பாவும், டாக்டர் ஆர். எல். ஹைமர்ஸ், ஜூனியர் அவர்களை நண்பராக பெருமையுடன் அழைப்போம்.”

டாக்டர் கிரைட்டன் எல். சென் எழுதினார், “இந்தப் புத்தகத்தை படியுங்கள் உங்கள் தோல்வி பயங்கள் ஜன்னல் வழியாக பரந்து போய்விடும்! டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் வாழ்க்கையிலிருந்து நீங்கள் பெலத்தை பெற்றுக்கொள்ளுவீர்கள். இந்தப் புத்தகத்தை படியுங்கள்! இது உங்களை உற்சாகப்படுத்தும்.”

டாக்டர் எடி பூர்வான்டோ இந்தோனேசியாவை சேர்ந்தவர் எழுதினார், “தேவன் ஒரு மனிதனோடு இருக்கும்பொழுது அவன் தோல்வி அடைய முடியாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் அநேக பயங்கரமான போராட்டங்களை போராடின ஒரு ஹீரோ.”

இன்னும் அதிகமாக என்னால் படிக்க முடியும், ஆனால் இது போதும். என்னை ஒரு ஹீரோவாக நான் நினைப்பதில்லை. நான் ஒரு மனிதன், ஒரு மனிதன், சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்நேகோ என்பவர்களைப்போல. வேதாகமத்தை புறக்கணித்த அவதூரானவர்களை பணிந்து கொள்ளாத தேவனுக்கு போதுமான அளவுபயந்த ஒரு மனிதன், ஆலிவுட் இயேசுவை தாக்கினபோது அதற்கு அடிபணியாதவன், ரிச்சடு ஆலிவாசுக்கு அடிபணியாத ஒரு மனிதன், அல்லது லாஸ் ஏஜ்ஜல்ஸ் டைம்ஸ்க்கு, அல்லது அமெரிக்காவின் ஒவ்வொரு டிவி செய்தி நிகழ்ச்சிகளுக்கும் அடிபணியாத ஒரு மனிதன். நான் ஒரு மனிதன், சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்நேகோ என்பவர்களைபோல!
இந்தக் காரியத்தைக் குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை. நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும் (ஹா! ஹா! – அவ்வளவுதான்). “விடுவிக்காமற்போனாலும் நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்வதுமில்லை என்கிறது உமக்குத் தெரிந்திருக்கக்கடவது.” திருவாளர் மானுவேல் மேன்சிகா எனக்கு ஒரு பிளாக்கை கொடுத்தார் அது சபையின் எனது அலுவலகத்திலே, என்னுடைய மேஜையில் இருக்கிறது. அந்த பளாக்கிலே திருவாளர் மேன்சிகா நமது பாபிலோனின் ஹீரோக்களுடைய வார்த்தைகளை பொறித்திருந்தார், விடுவிக்காமற்போனாலும்! தேவன் எங்களை விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும் – ஒருவேளை எரிக்கப்பட்டு மரணம் அடைந்தாலும், “நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது உமக்குத் தெரிந்திருக்கக்கடவது”.
எனக்கு அன்பான இளம் நண்பர்களே, நான் பிரசங்கித்ததை நீங்கள் அநேக தடவைகள் கேட்டிருக்கிறீர்கள். நான் உங்களைப்பற்றி மிகவும் பெருமை அடைகிறேன்! நான் போகும் இடமெல்லாம் இரட்சிக்கப்பட்ட உங்களைப்பற்றி பாராட்டியிருக்கிறேன். ஆனால் உங்களில் சிலர் இன்னும் இரட்சிக்கப்படவில்லை. புதிய சுவிசேஷகத்தின் விலங்குகளையும் சங்கிலிகளையும் நீங்கள் எரிந்து போட வேண்டும்! நீங்கள் இயேசுவிடம் வரவேண்டியது அவசியம். உங்களுக்காக மரித்த இரட்சகரிடம் உங்களை நீஙகளே சமர்ப்பிக்க வேண்டும். உங்களை நீஙகளே இயேசுவிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவர் உங்களை இரட்சிப்பார். அவர் உங்கள் பாவங்களை மன்னித்து உங்களுக்கு நித்திய ஜீவனை கொடுப்பார். நீ சொல்லுகிறாய், “அவர் எங்களை இரட்சிக்கமாட்டார்”. நமது எபிரெய ஹீரோக்களின் வார்த்தைகளிலிருந்து நான் உனக்கு பதில் சொல்லுகிறேன், “விடுவிக்காமற்போனாலும், தெரிந்துகொள்ளக்கடவது, சாத்தானே, நாங்கள் உன்னுடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, எங்களை மயக்கக்கூடிய நீ நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை!”
அப்படிப்பட்ட நம்பிக்கை அவர்களுக்கு எப்படிக் கிடைத்தது? அவர்கள் பிசாசை நம்பி இருந்தால் அவர்கள் இருந்த வண்ணமாகவே பெலவீனமாக இருந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் தங்கள் சொந்த பெலத்தை மற்றும் தங்கள் சொந்த திறமையை நம்பி இருக்கவில்லை. அவர்கள் கிறிஸ்துவை நம்பினார்கள் (அவர் அவர்களோடு அந்த அக்கினி சூளையிலே இருந்தார்). “கிறிஸ்துவை நம்பு”, நீங்கள் சொல்கிறீர்கள், “எனக்குத் தேவையானது அனைத்தும் அவ்வளவுதானா?” ஆமாம், உனக்குத் தேவையானது அனைத்தும் அவ்வளவுதான். நான் அறிந்திருக்கிறேன், அநேக நேரங்களில் எனக்கு நம்புவதற்கு ஒன்றுமில்லாதிருந்ததை! நான் மிகவும் பெலவீனனாக மற்றும் உதவி அற்றவனாக உணர்ந்தேன். ஆனால் நான் மிகவும் பெலவீனனாக இருந்த போதும், கிறிஸ்து என்னை எப்பொழுதும் இரட்சித்திருக்கிறார். ஒவ்வொரு பெலவீனத்திலும் மற்றும் சோதனையிலும் கிறிஸ்து என்னை பாதுகாப்பாக வைத்து இருக்கிறார். மகத்துவமுள்ள ஸ்பர்ஜன் சொன்னார், “நீ கிறிஸ்துவை நம்பினால் அதனால் குறைவுபட்டால், உன்னோடுகூட நானும் குறைவு படுவேன். என்னுடைய ஒரே இரட்சிப்பின் நம்பிக்கை கிறிஸ்துவில் உள்ளது. நான் இயேசுவை நம்புகிறேன் மற்றும் அவரே எனது பெலனும் இரட்சிப்புமாக இருக்கிறார்.” நீ சொல்லுகிறாய், “அவர் என்னை இரட்சிக்கமாட்டார்”. அதுதான் பிசாசு. அவனுக்குச் செவிகொடுக்க வேண்டாம்! இயேசுவை நம்பிய எந்த ஒரு ஆத்துமாவையும் அவர் இழக்கவில்லை. இயேசுவை நம்பிய எந்த ஒரு தனி ஆத்துமாவும் இழக்கப்படவில்லை! மற்றும் ஒருபோதும் இழக்கப்படப் போவதில்லை.
இயேசுவை நம்புவது என்றால் அர்த்தம் என்ன? அது இரவிலே படுக்கையில் படுப்பதை போன்றது. அந்தப் படுக்கை என்னை தாங்கிக்கொள்ளும் என்று நான் நம்புகிறேன். அதில் நான் படுத்து இளைப்பாறுகிறேன். இயேசுவை நம்புவது என்றால் அர்த்தம் அதுதான். கிறிஸ்துவில் படுத்துக்கொள்ளுங்கள். அவரை நம்புங்கள் “எல்லாவிதமான பெரிய அபாயம் மற்றும் புயலிலும்”. அவரை நம்புங்கள் “உனது ஆத்துமா சுற்றிக்காட்டும் எல்லா வழிகளிலும்”. “நான் இனிமையான பிரேமை நம்பத் துணியமாட்டேன், ஆனால் இயேசுவின் நாமத்தில் முழுமையாக சார்ந்து கொள்ளுவேன்.” இயேசுவில் சார்ந்து கொள்ளுங்கள். இரவிலே படுக்கையில் படுப்பதை போல அவரில் உங்களை ஒப்படைத்துவிடுங்கள். அந்த படுக்கை உன்னை விழவிடாது. இயேசு உன்னை தோல்வி அடைய விடமாட்டார். இரவிலே படுக்கையில் நம்பிக்கை வைப்பது போல அவரில் நம்பிக்கை வையுங்கள். மிகமோசமான நேரத்திலும், அவர் உனக்கு துணைசெய்வார். எனது அனுபவத்தினால் இதை அறிந்திருக்கிறேன். “ஆனால் விடுவிக்காமற்போனாலும் ஓ ராஜாவே, நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது உமக்குத் தெரிந்திருக்கக்கடவது.” கிறிஸ்துவை நம்பு! கிறிஸ்துவை நம்பு! அவர் உன்னை இரட்சிக்க பாடுபட்டு உன்னுடைய ஸ்தானத்தில் மரித்தார். அவரை நம்பு அவர் உனக்கு துணை செய்வார் வாழ்க்கையின் “ஒவ்வொருவிதமான பெரிய அபாயம் மற்றும் புயலிலும்”! பயத்திலும் சோதனையிலும் அவரை நம்புங்கள். ஒவ்வொரு சூழ்நிலையிலும், மரணமேயானாலும், இயேசு உன்னை தோற்றுப்போக விடமாட்டார்!

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்: “Dare to be a Daniel” (Philip P. Bliss, 1838-1876).