Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




கதவும் அடைக்கப்பட்டது

AND THE DOOR WAS SHUT
(Tamil)

மே 28, 2017 அன்று கர்த்தருடைய நாள் ஞாயிற்றுக்கிழமை காலை
வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் டாக்டர் ஆர். எல் ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால் எழுதப்பட்டு
திரு. ஜான் சாமுவேல் கேஹனால் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon written by Dr. R. L. Hymers, Jr.
and preached by Mr. John Samuel Cagan
at the Baptist Tabernacle of
Los Angeles Lord’s Day Morning, May 28, 2017

“கதவும் அடைக்கப்பட்டது” (மத்தேயு.25:10).


உங்களில் அநேகர் உங்களுடைய எதிர்காலத்தை பற்றி பயமில்லாமல் இருக்கிறீர்கள். நீங்கள் பயப்படவில்லை, ஏனென்றால் நீங்கள் விழிப்படையவில்லை. உங்கள் வாழ்க்கை உங்களைவிட்டு கடந்து போகும்பொழுது, நீங்கள் தூங்கி கொண்டிருக்கிறீர்கள். போதனையின்போது நீங்கள் தூங்குகிறீர்கள். ஆலோசனை கொடுக்கப்படும்போது நீங்கள் தூங்குகிறீர்கள். உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் தூங்குகிறீர்கள். கோபமான தேவனுடைய கரங்களால் கடைசியாக நீங்கள் எழுப்பப்படும் வரையிலும், நீங்கள் தூங்குவீர்கள். நீங்கள் விழிப்படைய வேண்டும், உங்களது ஆவிக்குரிய சூழ்நிலையை உணர்ந்து கொள்ள வேண்டும். நீங்கள் பயப்பட வேண்டும். உங்களுடைய ஆத்துமாவின் மெய் தத்துவத்தை அறிந்துகொள்ள வேண்டும். நீங்கள் பயப்படுத்தபட வேண்டும். கர்த்தருடைய பயங்கரத்தை நீங்கள் அனுபவிக்க வேண்டும். நீங்கள் பயப்பட வேண்டும், அதாவது உங்கள் தூக்கத்தை இழக்க வேண்டும். வேதம் சொல்லுகிறது,

“கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்” (நீதிமொழிகள் 1:7).

கிறிஸ்தவ வரலாறு முழுவதும் கிறிஸ்துவின் வருகையைபற்றி உயிரோடிருப்பவர்களுக்கும் மற்றும் இறந்தவர்களுக்கும் பேசப்பட்டு வருகிறது. இது ஒரு இரகசியம் என்று அழைக்கப்படுகிறது, ஆனால் அது இப்பொழுது வெளியரங்கமாக்கப்பட்டது, மற்றும் நீங்கள் பயமில்லாமல் இருக்கிறீர்கள்.

1. இரகசியம் (“மஸ்டெரியன்”), முற்காலங்களில் மறைக்கப்பட்ட ஒரு உண்மை தற்பொழுது புதிய ஏற்பாட்டில் வெளிப்படுத்தப்பட்டது. புதிய ஏற்பாட்டில் 11 இரகசியங்கள் வெளிப்படுத்தப்பட்டன. அவைகளில் எடுத்துக்கொள்ளப்படுதல் ஒன்றாகும்.

2. எல்லாரும் மரிப்பதில்லை, ஆனாலும் அனைவரும் மாற்றப்படுவார்கள் (I கொரிந்தியர் 15:51).

3. இந்த மாறுதல் ஒரு இமைபொழுதில் நடைபெறும் (I கொரிந்தியர் 15:52).

4. மரித்தவர்கள் அழிவில்லாமல் எழுப்பப்படுவார்கள் மற்றும் நாமும் மரூபமாக்கப்படுவோம் (I கொரிந்தியர் 15:52).

“இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை: ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போம்” (I யோவான் 3:2).

வேதாகமம் சொல்லுகிறது,

“ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப் பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்” (I தெசலோனிக்கேயர் 4:16-17).

1. கிறிஸ்து வானத்திலிருந்து இறங்கி வருவார் (I தெசலோனிக்கேயர் 4:16).

2. அவர் நேராக பூமிக்கு வந்துவிடமாட்டார், “கர்த்தரை ஆகாயத்தில் சந்திப்போம்” (I தெசலோனிக்கேயர் 4:17).

3. கிறிஸ்து வானத்தில் வரும்பொழுது அங்கே ஒரு “சத்தம்” மற்றும் எக்காளம் தொனிக்கும்சத்தம் இருக்கும் (4:16).

4. ஏற்கனவே மரித்த கிறிஸ்தவர்கள் உயிரோடு எழுப்பப்படுவார்கள் மற்றும் எடுத்து கொள்ளப்படுவார்கள் – மேலே உயர்த்தப் படுவார்கள் (4:17அ).

5. அதன்பிறகு இயேசுவை ஆகாயத்தில் சந்திக்க உயிரோடிருக்கும் உண்மையாக மாற்றப்பட்ட மக்கள் எடுத்துக்கொள்ளபடுவார்கள் (4:17ஆ).


புத்தியுள்ள மற்றும் புத்தியில்லாத கன்னிகைகளை பற்றி வேதாகமம் பேசுகிறது. இந்த உவமைக்கு ஒரு அர்த்தம் மற்றும் ஒரு நோக்கம் இருக்கிறது. இந்த உவமை எடுத்துக்கொள்ளுதலை பற்றி பேசுகிறது. வேதாகமம் சொல்லுகிறது,

“கதவும் அடைக்கப்பட்டது” (மத்தேயு 25:10).

இந்த காலையில் மூன்று கருத்துகளை தியானிப்போம்.

1. நீங்கள் மாற்றப்படாதிருந்தால் எடுத்துக்கொள்ளப்படும் சமயத்தில், நீங்கள் வெளியில் தள்ளப்படுவார்கள் – பின்னால் விடப்படுவீர்கள்.

2. எடுத்துக்கொள்ளப்படுதல் எந்த நேரத்திலும் இருக்கலாம் அடையாளங்கள் எல்லாம் இதை அறிவிக்கின்றன.

3. நீ எடுத்துக்கொள்ளப்படும்பொழுது விடப்பட்டால் நீ மரணத்தை விரும்புவாய்.

I. முதலாவதாக, நீங்கள் மாற்றப்படாதிருந்தால் எடுத்துக்கொள்ளப்படும் சமயத்தில், நீங்கள் வெளியில் தள்ளப்படுவீர்கள் – பின்னால் விடப்படுவீர்கள்.

வேதாகமம் சொல்லுகிறது:

“அப்படியே அவர்கள் வாங்கப் போனபோது மணவாளன் (கிறிஸ்து வந்தார்), வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்த வர்கள் அவரோடே கூடக் கலியாண வீட்டிற்குள் பிரவேசித்தார்கள் (பரலோகத்தில்); கதவும் அடைக்கப் பட்டது” (மத்தேயு 25:10).

நோவாவின் நாட்களில் நடந்த காரியங்களின் ஒரு பெரிய உவமையாக இது சொல்லப்படுகிறது:

“உள்ளே பிரவேசித்தன (பேழைக்குள்); அப்பொழுது கர்த்தர் அவனை உள்ளேவிட்டுக் கதவை அடைத்தார்” (ஆதியாகமம் 7:16).

மற்றும் தேவன் சொன்னார்:

“இன்னும் ஏழுநாள் சென்றபின்பு, நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையை வருஷிக்கப் பண்ணுவேன்” (ஆதியாகமம் 7:4)

ஜலபிரலயம் ஏற்படுவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பாக தேவன் பேழையின் கதவை அடைத்துவிட்டார். இது எடுத்துக்கொள்ளப்படுதலின் போது தேவன் பவுல் நியாயத்தீர்ப்புகளுக்கு முன்பாக, கதவை அடைப்பதற்கு அடையாளமாகும்.

“கதவும் அடைக்கப்பட்டது” (மத்தேயு 25:10).

நீ மாற்றப்படாமல் இருந்தால், எடுத்துக்கொள்ளப்படும்பொழுது வெளியே தள்ளப்படுவீர் – பின்னால் விடப்படுவீர். அதனால் தான் உன்னுடைய ஆத்துமாவோடு இப்பொழுது சலகிரணை செய்யவேண்டியது அவசியமாகும். இப்பொழுது சொல்லப்படும் போதனைக்கு நீ செவிக்கொடுக்க வேண்டியது அவசியம். இயேசுவை நீ இப்பொழுது நம்ப வேண்டியது அவசியமாகும். இயேசு சொன்னார்:

“அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே!... உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்” (மத்தேயு 7:23).

“நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்” (II கொரிந்தியர் 13:5).

நீ மாற்றப்படாவிட்டால், நீ இயேசுவை மெய்யாகவே நம்பாவிட்டால், நீ உன்னுடைய உணர்வுகளை நம்பியிருந்தால் அல்லது போதனைகளை நம்பியிருந்தால், நீ எடுத்துக்கொள்ளப்படுவதற்கு ஆயத்தமாக இல்லை. நீ பின்னால் விட படுவாய்!

“கதவும் அடைக்கப்பட்டது” (மத்தேயு 25:10).

II. இரண்டாவதாக, அடையாளங்கள் எல்லாம் நிறைவேறி வருகின்றன என்பதை நீ உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்த காலையில் நீ வெளியே தள்ளப்படுவாய்.

1. யூத மக்கள் தங்கள் தாய் நாட்டுக்கு திரும்புதலோடு, இஸ்ரவேலின் மறுமலர்ச்சி 1948-ல் மறுபடியும் நிறுவப்பட்டது (லூக்கா 21:24; மத்தேயு 24:32-34; எசேக்கியேல் 37:21; 38:8).

2. கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்களுக்கு விரோதமான உபத்திரவங்கள் உலகளவில் பெருகி வருகின்றன (மத்தேயு 24:9-10; எரேமியா 30:7; தானியேல் 12:1).

3. பஞ்சங்கள், நிலையற்ற சூழலியல், எய்ட்ஸ் போன்ற தொற்று நோய் வியாதிகள், மற்றும் அதிகமான எண்ணிக்கையில் பூமி அதிர்ச்சிகள் உலகளவில் பெருகி வருகின்றன (மத்தேயு 24:7).

4. கிறிஸ்தவத்தில் விசுவாச துரோகம் அதிகமாக பெருகி வருகிறது (II தெசலோனிக்கேயர் 2:3; மத்தேயு 24:11-12).

5. நோவாவின் நாட்களில் ஜலபிரளயத்தின் போது நடந்தது போல, மக்களுடைய நிலைமை மாறி வருகிறது (மத்தேயு 24:37-40).


வேதாகமம் நோவாவின் நாட்களுக்கும் கிறிஸ்துவின் வருகையின் நாளுக்கும் ஒப்பிட்டு பேசுகிறது.

1. நோவாவின் நாட்களில், இரட்சிப்பை பற்றி மக்கள் அக்கறையில்லாமல் இருந்தார்கள். அவர்கள் விழிப்படையவில்லை. அவர்களும் உன்னை போல – பயமில்லாமல் மற்றும் குற்ற உணர்வில்லாமல் இருந்தார்கள்.

2. நோவாவின் நாட்களில் ஏற்பட்ட அடையாளங்கள் இங்கே நடைபெறுகின்றன. மற்றும் நீ பின்னால் விடப்படபோகிறாய்!


அவளுக்கு ஒரு சத்தம் கேட்டது மற்றும் தலையை திருப்பிப்பார்த்தாள் – அவர் போய்விட்டார்.
நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.
இரண்டு மனிதர் ஒரு குன்றின்மேல் நடந்தார்கள்,
ஒருவர் மறைந்துவிட்டார் மற்றும் ஒருவர் விடப்பட்டு நின்றிருந்தார்,
நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்…
அங்கே உனது மனதை மாற்றிக்கொள்ள நேரமிருக்காது.
குமாரன் வந்து விட்டார், மற்றும் நீ பின்னால் விடப்பட்டாய்.
(“I Wish We’d All Been Ready,” Larry Norman, 1947-2008).

“கதவும் அடைக்கப்பட்டது” (மத்தேயு 25:10).

ஆனால் எடுத்துக்கொள்ளப்பட்டுக் கதவு அடைக்கப்படும் வரையிலும் நீ காத்திருக்க வேண்டியதில்லை. நீ இன்று காலையிலே தேவனால் என்றென்றுமாக வெளியே தள்ளப்படுவாய். தேவன் உன்னை விட்டுவிடுவார். தேவன் உனக்கு இரட்சிப்பின் கதவை சாத்திவிடுவார். நீ ஒருபோதும் உணராதபடி, மன்னிக்க முடியாத பாவத்தை செய்திருக்கிறாய். நீ ஒருபோதும் இரட்சிக்கப்படாதபடி தருணத்தை இழந்துபோக முடியும். தேவன் உனக்குக் கதவை மூடும்பொழுது, இனிமேலும் உனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. கதவு அடைக்கப்படும், மற்றும் நீ என்றென்றும் இழக்கப்படுவாய்.

III. மூன்றாவதாக, எடுத்துக்கொள்ளப்படும்பொழுது நீ விடப்பட்டால் நீ மரணத்தை விரும்புவாய் – மற்றும் கதவும் அடைக்கப்பட்டது.

இவைகளெல்லாம் வெறும் கதை என்று நீ நினைக்கலாம். உனது மனதை இப்பொழுது வேறு ஏதோ சிலகாரியங்கள் மீது திருப்பி இருக்கலாம். ஆனால் எடுத்துக்கொள்ளப்படும்பொழுது விடப்பட்டால் நீ மரணத்தை விரும்புவாய். இதை வேதாகமம் நமக்கு தெளிவாக சொல்லுகிறது:

“அந்நாட்களில் மனுஷர்கள் சாவைத்தேடியும் அதைக் காணாதிருப்பார்கள், சாகவேண்டுமென்று ஆசைப்படு வார்கள்...” (வெளிப்படுத்தல் 9:6).

எடுத்துக் கொள்ளப்படும்பொழுது நீ விடப்பட்டால் தற்கொலை செய்வதைப்பற்றி நிலையாக நினைப்பாய். நீ மரணத்தை விரும்புவாய். ஏன்?

1. வெளிப்படுத்தல் 9:1,2ன்படி, பாதாள குழியிலிருந்து விடுவிக்கப்பட்ட பிசாசுகளால் நீ வாதிக்கப்படுவாய். டாக்டர் ஜான் ஆர். ரைஸ் இந்தப் பிசாசுகளை பற்றி கொடுத்த விளக்கத்தை கவனியுங்கள்:

“இங்கே குறிப்பிடப்பட்ட வெட்டுகிளிகளானது சந்தேகமில்லாமல் பிசாசுகளாகும்... வாதிக்கும்படியாக வந்தவைகள் ‘தேவனுடைய முத்திரையை தங்கள் நெற்றிகளில் பெற்றில்லாத மக்களை வாதிக்கும்படியாக வந்தவைகள்.’ இந்த ‘வெட்டுகிளிகளால்’, வேதனை மற்றும் உபத்திரவப்படுத்தப் படுவார்கள் இவைகள் நரகத்திலிருந்து வந்த பிசாசுகள், ‘அந்த நாட்களில் மனிதர் மரணத்தை தேடுவார்கள்...’

...இங்கே குறிப்பிடப்பட்ட உபத்திரவமானது ஆவிக்குரிய உபத்திரவம் ஆகும், ஒரு கஷ்டத்தோடு, வேதனையுள்ள மனம். இந்த வெட்டுகிளிகளின் படமானது அற்புதமான, ஒரு பயங்கர கனவுக்கு ஒப்பானது, மனிதனுக்கு உண்டாகும் பயங்கள் மற்றும் கஷ்டங்கள் மற்றும் இருதய உடைப்புகளில் நீந்துவதை போன்றது... அவைகள் ஆத்துமாவை (மனம்) வாதிக்கும்... மனிதன் பொல்லாத ஆவிக்கு திரும்பும்பொழுது ஏற்படும் பயங்கரமான அழிவை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?” (John R. Rice, Behold, He Cometh! A Commentary on Revelation, Sword of the Lord, 1977, pp. 169-171).

நீ பிசாசுகளால் இரவும் பகலும் மனரீதியாக வாதிக்கப்படுவாய். உனக்கு உதவி செய்ய ஒருவரும் இருக்கமாட்டார்கள், உன்னை தணித்துக்கொள்ள புரோசாக் அல்லது வேறு எந்த போதை பொருள்களும் இருக்காது. நாம் அந்த உபத்திரவத்தில் இருப்போம் மற்றும் அங்கே உனக்கு அந்த பொருள்கள் கிடைக்காது, அங்கே மில்லியன் கணக்கான மற்றவர்களும் பிசாசுகளினால் கொடுமைப்படுத்தப்படுவார்கள். நீ அங்கே பைத்தியங்களை போல துரத்தப்படுவாய். நீ சாகலாம் என்று விரும்புவாய். நீ தற்கொலை செய்துகொள்ளுவதை பற்றி விடாமல் நினைப்பாய். உனக்கு உதவி செய்வார் ஒருவரும் அங்கே இருக்க மாட்டார்கள்! நீ அதிகநேரம் காத்திருந்தாய். நீ பின்னால் விடப்பட்டாய்.

“கதவும் அடைக்கப்பட்டது” (மத்தேயு 25:10).

2. அந்த நாட்களில் நீ ஒரு கிறிஸ்தவனாக வேண்டுமென்று விரும்பினால் கொலை செய்யப்படுவாய். வேதம் அதைபற்றி பேசுகிறது “இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன்” (வெளிப்படுத்தல் 20:4).


நீ உபத்திரவத்தில் அகப்பட்டு விட்டாய் என்று உணர்ந்து கொள்ளுவாய். அவர்கள் உனக்குள் மைக்கோரோ சிப், அல்லது அதே போன்ற வேறொரு பொருளை, உன்னுடைய கையில் அல்லது நெற்றியில் தோலுக்குள் பொருத்த விரும்புவார்கள். இது உன்னை அந்திகிறிஸ்துவை ஆராதிக்கிறவனாக மாற்றும் என்பதை நினைவில் கொள். அப்பொழுது நீ சொல்லுவாய், “இல்லை, நான் இதை என்னுடைய சரீரத்தில் பொருத்தி கொள்ள மாட்டேன்”. ஆனால் அது இல்லாமல் உன்னால் எதையும் வாங்க முடியாது. நீ எதை வாங்க போனாலும் உன்னுடைய கை “ஸ்கேன்” பண்ணப்படும். நீ வாதிக்கப்படுவாய். உன்னால் கடையில் உணவு வாங்க முடியாது! யாராவது உன்னை உள்ளே திருப்பிவிடுவார்கள். நீ ஒரு கிறிஸ்தவனாக இருப்பதால், அவர்கள் உன் தலையை வெட்டிவிடுவார்கள். எப்படியானாலும் நீ எல்லாவற்றையும் இழந்து விட போகிறாய், ஏனென்றால் நீ பின்னால் விடப்பட்டாய்!

“கதவும் அடைக்கப்பட்டது” (மத்தேயு 25:10).

3. நீ சில நியாயதீர்ப்புகளுக்கு போக வேண்டியதாக இருக்கும். யாரோ ஒருவர் சொல்லுகிறார், “நல்லது, அந்த மைக்கோரோசிப்பை என்னுடைய கையின் தோலில் வைக்கட்டும். எனக்கு அது பரவாயில்லை. அவர்கள் என்னுடைய தலையை வெட்ட மாட்டார்கள்.” ஆனால், உனது தலை வெட்டப்படுவதிலிருந்து நீ தப்பி கொள்ளலாம், இருந்தாலும் நீ சில நியாயதீர்ப்புக்கு போக வேண்டும்!


(1) ஒருவித பயங்கரமான புண் உன்னுடைய சரீரத்தில் உண்டாகும் அது உனக்கு இரவு பகலும் பயங்கரமான வேதனையின் அனுபவத்தை கொடுக்கும் (வெளிப்படுத்தல் 15:6).

(2) நீர் நிலைகளில் உள்ள தண்ணீர் முழுவதும் சமுத்திரம் மற்றும் நல்ல தண்ணீர் அனைத்தும் விஷமாக மாறும். தண்ணீர் முழுவதும் விஷமாக மாறும். நீ குடிப்பதற்கு உனக்கு ஒன்றும் கிடைக்காது. (வெளிப்படுத்தல் 16:3-4).

(3) நீ உஷ்ணத்தினால் வாதிக்கப்படுவாய். ஒரு விண்கல் விழும் மற்றும் உன்னை காயப்படுத்தும். உன்னுடைய சரீரம் பயங்கரமாக வெந்துபோகும். அங்கே எந்தவிதமான மருந்தும் இருக்காது. உன்னுடைய உடலில் வெந்த புண்களிலிருந்து சீழ்வடிய நீ சுற்றிலும் நடப்பாய் (வெளிப்படுத்தல் 16:8-9).

(4) மின்சாரமெல்லாம் தீர்ந்துபோய்விடும். இரவில் முழுவதுமாக இருள் இருக்கும், வேதனை அதிகமாக இருப்பதினால் உனது நாக்கை கடித்து கொள்ளுவாய் (வெளிப்படுத்தல் 16:10-11).

(5) உலகத்தின் போர் படைகள் அணிதிரட்டப்படும். இது உனக்கு அதிகமான அசௌகரியத்தையும் மற்றும் குழப்பத்தையும் கொடுக்கும் – எப்பொழுதும் யுத்தம் நடந்துகொண்டேயிருக்கும். உங்களில் அநேகர் – ஆண்கள் மற்றும் பெண்கள் – உங்கள் விருப்பத்துக்கு மாறாக போர் படையில் சேர்ந்து கொள்ள கட்டாயப்படுத்தப்படுவீர்கள் (வெளிப்படுத்தல் 16:12-16).

(6) ஒரு பெரிய பூமியதிர்ச்சி உண்டாகும், இதுவரையிலும் பதிவாகியிராத அளவுக்கு மிக பெரிதான பூமியதிர்ச்சியாக அது இருக்கும். ஆலங்கட்டி மழையை போல பூமியின் மீது விண்கற்கள் விழும். நீ எங்கே பதுங்கி கொள்ளுவாய்? பூமியதிர்ச்சியினால் கட்டிடங்கள் அழிந்துபோகும். நீ எங்கே ஒளிந்து கொள்ளுவாய்? (வெளிப்படுத்தல் 16:17-21).


நீ உன்னுடைய மனமாறுதலை தள்ளிவிட்ட காரணத்தினால் இவைகளெல்லாம் உனக்கு நடக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள். இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்து உன்னுடைய பாவங்களின் கிரயத்தை செலுத்தினார் என்று உனக்கு தெரியும். அவர் மரித்தோரிலிருந்து உயிர்தெழுந்து மற்றும் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார், சர்வ வல்லமையுள்ள தேவனுடைய வலது பக்கத்தில் இருக்கிறார் என்று உனக்கு தெரியும். உன்னுடைய பாவங்களை தேவகுமாரன் மன்னித்து மற்றும் அவருடைய இரத்தத்தினால் கழுவுவதற்கு அவர் உனக்கு வேண்டும் என்று நீ அறிந்திருக்கிறாய். இவைகள் எல்லாம் நீ அறிந்திருக்கிறாய் – ஆனால் நீ முற்றிலும் முட்டாளாக இருக்கிறாய். நீ விளையாடினாய் மற்றும் சிரித்தாய், மற்றும் சாக்குபோக்கு சொன்னாய். நீ பின்னால் விடப்பட்டுவிட்டாய்!

“கதவும் அடைக்கப்பட்டது” (மத்தேயு 25:10).

டாக்டர் ஹைமர்ஸ் அவர்களே, தயவுசெய்து வந்து இந்தக் கூட்டத்தை நிறைவு செய்யும்படி கேட்டு கொள்ளுகிறேன்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

பிரசங்கத்துக்கு முன்னதாக வேதப் பகுதியை வாசித்தவர் திரு. நோவா சாங்: மத்தேயு 25:1-10.
போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:
“I Wish We’d All Been Ready” (Larry Norman, 1947-2008).


முக்கிய குறிப்புகள்

கதவும் அடைக்கப்பட்டது

AND THE DOOR WAS SHUT

டாக்டர் ஆர். எல் ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால் எழுதப்பட்டு
திரு. ஜான் சாமுவேல் கேஹனால் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon written by Dr. R. L. Hymers, Jr.
and preached by Mr. John Samuel Cagan

“கதவும் அடைக்கப்பட்டது” (மத்தேயு.25:10).

I.      முதலாவதாக, நீங்கள் மாற்றப்படாதிருந்தால் எடுத்துக்கொள்ளப்படும் சமயத்தில் நீங்கள் வெளியில் தள்ளப்படுவீர்கள், மத்தேயு 25:10-13;
மத்தேயு 7:21-23; II கொரிந்தியர் 13:5.

II.    இரண்டாவதாக, எடுத்துக்கொள்ளப்படுவதற்கான அடையாளங்கள் எல்லாம் நிறைவேறி வருகின்றன என்பதை நீ உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியமாகும், மத்தேயு 24:37-41.

III.  மூன்றாவதாக, எடுத்துக்கொள்ளப்படும்பொழுது நீ விடப்பட்டால் நீ மரணத்தை விரும்புவாய், வெளிப்படுத்தல் 9:6; 9:1-12; 20:4; 16:1-21.