Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




திருப்தியற்றவர்களுக்கு மட்டுமே விடுதலை

DELIVERANCE IS ONLY FOR THE DISSATISFIED
(Tamil)

மே 14, 2017 அன்று கர்த்தருடைய நாள் ஞாயிற்றுக்கிழமை காலை
வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் டாக்டர் ஆர். எல் ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால் எழுதப்பட்டு
திரு. ஜான் சாமுவேல் கேஹனால் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon written by Dr. R. L. Hymers, Jr. and preached by
Mr. John Samuel Cagan at the Baptist Tabernacle of
Los Angeles Lord’s Day Morning, May 14, 2017

“பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. நீதிமான்களை யல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்” (லூக்கா 5:31-32).


இயேசு வெளியே சென்று லேவி என்ற ஒரு ஆயக்காரனைக் கண்டார். இது மத்தேயுவின் மறுபெயராகும். இயேசு மத்தேயுவை தம்மை பின்பற்றும்படி அழைத்தார்,

“அவன் எல்லாவற்றையும் விட்டு, எழுந்து, அவருக்குப் பின்சென்றான்” (லூக்கா 5:28).

மத்தேயு ஒரு ஆயக்காரன், ரோமர்களுக்கு வரியை வசூல் செய்பவன். யூதர்கள் ஆயக்காரர்களை வெறுத்தார்கள், ஏனென்றால் அவர்கள் யூதர்களிடம் சட்டத்துக்கும் அதிகமான வரியை வசூலிக்க அனுமதித்தார்கள். அவர்கள் வசூலித்த பணத்தில் ஒரு பகுதியை கட்டி, மீதியை அவர்களுக்காக வைத்துக்கொண்டார்கள். அவ்வாறாக, அநேக ஆயக்காரர்கள் மிகவும் பணக்காரர்களாக இருந்தார்கள், மற்றும் மற்ற யூதர்கள் அவர்களை வெறுத்தார்கள். அவர்கள் யூதமக்களால் கீழ்தரமான பாவிகளாக கணிக்கப்பட்டார்கள்.

மத்தேயு இயேசுவை பின்பற்றினபொழுது, “அவன் எல்லாவற்றையும் விட்டுவிட்டான்,” அதாவது அவனுடைய வரிவசூல் செய்யும் லாபகரமான தொழிலையையும் விட்டுவிட்டான், “அவரை பின்பற்றினான்.”

அதன்பிறகு மத்தேயு தன்னுடைய வீட்டிலே ஒரு விருந்தை ஏற்பாடு செய்தான். ஒரு பெரிய ஆயக்காரர்களின் கூட்டம், மற்றும் பலதரப்பட்ட பாவிகள், இந்தப் பெரிய விருந்துக்கு வந்தார்கள். அவர்கள் மிகவும் மோசமான மக்கள். ஜினோ, கவிஞராகிய அவர், சொன்னார், “சகல ஆயக்காரர்கள் அனைவரும் திருடர்கள் ஆகும்.” பரிசேயர்கள் இந்த ஆயக்காரர்களோடு எந்தவிதமான தொடர்பும் வைத்துக் கொள்ளமாட்டார்கள், அல்லது அவர்களுடைய நண்பர்கள், அவர்களை பரிசேயர்கள் “பாவிகள் என்று அழைத்தார்கள்.”

அந்த விருந்தில் இந்தப் பெரிய ஆயக்காரர்கள் கூட்டம் மற்றும் பாவிகளால் அந்த வீடு நிறைந்திருந்தது, பரிசேயர்கள் குறைச் சொல்லிக் கொண்டு முனுமுனுத்துக்கொண்டு வந்தார்கள். அவர்கள் சீஷர்களிடம் சொன்னார்கள்,

“நீங்கள் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜன பானம் பண்ணுகிறதென்ன” (லூக்கா.5:30)

இயேசு விருந்தைவிட்டு வெளியே வந்து பரிசேயருக்கு பதில் கொடுத்தார்,

“பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. நீதிமான்களை யல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்” (லூக்கா 5:31-32).

இயேசு பரிசேயர்களுக்குப் பாவிகளை விருந்துக்கு அழைத்ததற்கு காரணத்தைச் சொன்னார். நல்ல ஆரோக்கியமுள்ளவர்களுக்கு ஒரு வைத்தியன் தேவையில்லை என்பதை அவர்களுக்குச் சொன்னார். வியாதியுள்ளவர்களுக்கு மட்டுமே வைத்தியன் தேவை. தங்களுடைய சொந்தக் கருத்தின்படி, பரிசேயர்கள் மற்றும் வேதபாரகர்கள் பாவ வியாதிக்கு விடுதலையாகி இருந்தார்கள். இருந்தாலும் வேதபாரகர்கள் மற்றும் பரிசேயர்கள் நியாயபிரமாண சட்டத்தை கைக்கொண்டு வந்தார்கள், அவர்கள் தங்களை நோயாளிகளாக, பாவ நிலையில் உள்ளவர்களாக நினைக்கவில்லை. பரிசேயர்கள் அந்த நாட்களில் வைதீகமான யூதர்கள் ஆகும். வேதபாரகர்கள் வேதத்தின் பிரதிகளை கொண்டு மக்களுக்குப் போதிப்பவர்கள். அவர்களுக்குப் பெரிய வைத்தியராகிய, இயேசு வேண்டுமென்று நினைக்கவில்லை. அவர்கள் நினைத்தது என்னவென்றால்

“தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணினார்கள்” (லூக்கா 18:9).

மற்றும் இயேசுவின் பதிலானது அந்த பெருமை, சுய திருப்தி கொண்ட யூதர்களை கடிந்து கொண்டது,

“பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு [ஆரோக்கியமானவர்களுக்கு] வேண்டியதில்லை. நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்” (லூக்கா 5:31-32).

நீ நன்றாக இருப்பதாக நினைத்தால், உனக்கு இயேசு தேவை என்பதை பார்க்க மாட்டாய். நீ பாவத்தினால் அழிந்து மற்றும் மரித்துக் கொண்டிருப்பதாக உணர்ந்தால், இயேசு உனக்கு முக்கியமாக வேண்டும், மற்றும் உன்னுடைய ஆத்துமாவை குணமாக்க மற்றும் உன்னை பாவத்திலிருந்தும் அதன் விளைவுகளிலிருந்தும் விடுவிக்க அவரை நீ தேடுவாய். உன்னுடைய பாவத்தின் ஒரு உணர்வை நீ இயல்பாக அறியவேண்டியது கட்டாயமாகும், உன்னுடைய நம்பிக்கையற்ற ஒரு உணர்வை நீ இயல்பாக அறியவேண்டியது கட்டாயமாகும், உன்னுடைய இயலாமையை நீ அறியவேண்டியது கட்டாயமாகும் – இல்லையென்றால் கிறிஸ்து உனக்குத் தேவை என்று நீ உணரவே மாட்டாய்.

“பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. (லூக்கா.5:31).

I. முதலாவதாக, தங்கள் வாழ்க்கை வழியில் திருப்தி அடைந்தவர்கள் இயேசு தங்களுக்கு தேவையில்லை என்று உணர்வார்கள்.

நீங்கள் சுவிசேஷங்களை வாசிக்கும்போது, நீங்கள் கவனித்திருப்பீர்கள், இயேசு அடிக்கடி பாவிகளோடு உணவு சாப்பிட்டதைக் கவனிக்கலாம். பாவிகள் தங்கள் சொந்த வாழ்க்கையில் அதிருப்தி அடைந்தவர்கள். பாவிகள் தங்கள் வாழ்க்கையில் ஏதோ பயங்கரமான தீமை இருக்கிறது என்று உணர்ந்தவர்கள். இதன் மூலமாக சிலகாரியங்களை கற்றுக்கொள்ள முடியும். அந்த இழக்கப்பட்ட மக்கள் இயேசுவோடு இணைக்கப்பட்டிருந்தார்கள் காரணம் அவர் அவர்களோடு சிநேகமாக இருந்தார். மற்றும் அவர்களில் அநேகர் இரட்சிக்கப்பட்டார்கள்.

அவர்கள் தங்கள் வாழ்க்கையின் வழியில் அவ்வளவாக அதிருப்தி அடைந்தபடியினால் அவர்கள் கிறிஸ்துவிடம் திரும்பினார்கள். நாம் லூக்கா ஐந்தாம் அதிகாரத்தில் வாசிப்பதுபோல, ஆயக்காரனாகிய மத்தேயு அப்படி செய்தான். நாம் லூக்கா பத்தொம்பதாம் அதிகாரத்தில் வாசிப்பதுபோல, ஆயக்காரனாகிய சகேயு அப்படி செய்தான். மற்றும் இயேசு அவனிடம் சொன்னார்,

“சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார். அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக்கொண்டு போனான். அதைக் கண்ட யாவரும்: இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள்... இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; ... இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்” (லூக்கா.19:5-10).

பெருமையான வேதபாரகர் மற்றும் பரிசேயர் இயேசு தேவையில்லை என்று உணர்ந்தார்கள்; அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் திருப்தி அடைந்திருந்தார்கள். ஆனால் ஆயக்காரர்கள் மற்றும் பாவிகள் அவரிடம் வந்தார்கள் மற்றும் இரட்சிக்கப்பட்டார்கள்.

“பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை” (லூக்கா 5:31).

தங்கள் சொந்த வாழ்க்கையின் வழியில் திருப்தி அடைந்திருந்தார்கள் இயேசு தேவையில்லை என்று உணர்ந்தார்கள். ஆனால் தங்கள் சொந்த வாழ்க்கையின் வழியில் பிணியாளிகளாக உணர்பவர்கள் அவரிடம் வருவார்கள் மற்றும் இரட்சிக்கப்படுவார்கள்.

உன்னைப்பற்றி என்ன? இது உங்கள் அநேகருக்கு உண்மை என்று நான் அனுபவத்தில் அறிந்திருக்கிறேன். உங்கள் வாழ்க்கையின் வழியில் நீங்கள் திருப்தி அடைந்திருந்தால், இயேசு உங்களுக்கு தேவையில்லை என்று உணர்வீர்கள், மற்றும் நீங்கள் இரட்சிக்கப்படமாட்டீர்கள். உங்கள் வாழ்க்கையின் வழியில் அப்படியே நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால், உங்களுக்கு கிறிஸ்து தேவையில்லை அவர் வந்து எதையும் மாற்ற வேண்டாம் என்று உணர்வீர்கள்.

“இயேசு அதைக்கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை” (மத்தேயு 9:12).

II. இரண்டாவதாக, தங்கள் சொந்த நன்மையில் திருப்தி அடைந்தவர்கள் இயேசு தங்களுக்குத் தேவையில்லை என்று உணர்வார்கள்.

நமது நகரத்திற்கு வெளியே பாருங்கள். அதற்குள் இருக்கும் மக்களை நினைத்துப்பாருங்கள். அவர்களில் அதிகமானவர்கள் தேவனைப்பற்றி தீவிரமாக சிந்திக்கிறார்களா? அப்படி சிந்திப்பதில்லை என்பது உனக்குத்தெரியும். வேதாகமம் சொல்லுகிறது,

“தேவனைத் தேடுகிறவன் இல்லை” (ரோமர் 3:11).

பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் மூலமாக தேவனுடைய கிருபை உனக்கு வராவிட்டால், நீங்கள் ஒருபோதும் கிறிஸ்துவில் தேவனை தேடமாட்டீர்கள். நீங்கள் தேவனில்லாமல் வாழ்ந்து, தேவனற்ற நிலைமையில் மரிப்பதில் திருப்தி அடைவீர்கள்.

ஆனால் தேவனுடைய கிருபை உனது இருதயத்துக்குள் கிரியை செய்ய ஆரம்பித்தால், உங்கள் வாழ்க்கை இருக்கும் நிலையில் நீங்கள் அதிருப்தியாக இருப்பீர்கள். நீங்கள் எல்லாவற்றையும் வித்தியாசமாக பார்க்க ஆரம்பிப்பீர்கள். நீங்கள் ஒரு மக்கள் கூட்டத்திலிருந்தால் இப்படியாக யோசிக்க ஆரம்பிப்பீர்கள், “இந்த மக்கள் எதற்காக வாழுகிறார்கள்? அவர்களுக்குத் தேவனைப்பற்றி ஏன் அக்கரை இருக்கிறது?” நீங்கள் உங்கள் சொந்த வாழ்க்கையை பற்றியும் உங்களுக்கு வரப்போகும் மரணத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பிப்பீர்கள். உங்கள் சொந்த மதம் உங்களுக்கு மேலோட்டமாக காணப்படும், மற்றும் அது உதவியற்றதாக தெரியும். மற்ற மக்கள் எந்தவிதமான தவிர்ப்புகளை செய்தாலும், அந்தத் தவிர்ப்புகள் உங்களுக்கு எந்தவிதத்திலும் ஏற்றதாக காணப்படாது. வாழ்க்கையில் வெறுமையாக சாப்பிடுவது, தூங்குவது, படிப்பது, மற்றும் விளையாடுவது எல்லாவற்றையும்விட அதிகமான ஒன்று இருக்கவேண்டும் என்று நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள்.

உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய கிருபை கிரியை செய்ய ஆரம்பிக்கும்பொழுது உங்களுக்குள் தேவனற்ற தன்மையை உணர்வீர்கள். நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள்

“தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருந்து” (எபேசியர் 4:18).

தேவனே உங்களுக்கு அந்நியராக நீங்கள் நினைக்க ஆரம்பிப்பீர்கள், மற்றும் அவர் இல்லாததினால் நீங்கள் பயங்கரமான நிலைமையில் இருப்பீர்கள்,

“நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்” (எபேசியர் 2:12).

நான் உங்களை கேட்கிறேன், நீங்கள் இப்பொழுது இருக்கும் வாழ்க்கையில் முழுமையாக திருப்தியடைந்திருக்கிறீர்களா? அப்படியானால், உங்களுக்குக் கிறிஸ்துவிடம் வர சிறிது நம்பிக்கை உண்டு. நீங்கள் அவரிடத்தில் நீங்கள் இருக்கும் நிலையில் அப்படியே கிறிஸ்துவிடம் வாருங்கள் – தேவனை அறியாமல் ஒரு தனிப்பட்ட வழியில் வாழ்ந்து மற்றும் மரிக்கலாம் என்று இருப்பது.

“பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை” (லூக்கா 5:31).

தேவனற்ற வாழ்க்கையில் நீங்கள் திருப்தியாக இருந்தால் இயேசுவை பற்றிய தேவையை நீங்கள் உணரமாட்டீர்கள்.

சிறப்பாக இளம் மக்களுக்கு, ஒரு விதமான போக்கு இருக்கிறது, மதத்தில் அதிக விருப்பமாகயிருப்பது ஒரு பெலவீனத்தில் அறிகுறியாக நினைக்கிறார்கள். உண்மையான கிறிஸ்தவர்களாக இல்லாதவர்கள் தேவனில் அதிகமாக ஈடுபாடு கொண்டவர்களை சிறிது வித்தியாசமாக, சிறிது வழக்கமில்லாத, இயல்பான நிலையில் இல்லாதவர்களாக நினைக்கிறார்கள்.

இது வழக்கமாக பேசப்படுவது இல்லை. மக்கள் பொதுவாக சொல்லுவதில்லை, “அந்தப் பையன் ஒருவிதமான விசித்திரமாக இருக்கிறான். அவன் தனக்குத் தானே ஜெபம் செய்யும்படி போகிறான்.” அதை ஒரு சட்டமாக அவர்கள் சொல்லுவதில்லை. ஆனால் அதை அவர்கள் நினைக்கிறார்கள். உங்கள் கிறிஸ்தவ அல்லாத நண்பர்கள் அதை நினைக்கிறார்கள். அவர்கள் இப்படிப்பட்ட காரியத்தை சொல்லுவார்கள், “அதிக மதவாதியாகிவிடாதே. வெறியனாக மாறி விடாதே” – அப்படிப்பட்ட காரியங்களை சொல்லுவார்கள். இப்படி இருப்பதற்கு காரணம் என்னவென்றால் மனிதவர்க்கம் பாவ நிலையில் இருக்கிறார்கள்.

“எப்படியென்றால், மாம்சசிந்தை [தேவனுக்கு விரோதமான பகை]; அது தேவனுடைய நியாயப் பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக் கூடாமலும் இருக்கிறது.” (ரோமர் 8:7).

அவர்களுடைய இரட்சிக்கப்படாத நிலைமையில், எல்லா மனிதவர்க்கமும்

“சுபாவத்தின்படி கோபாக்கினையின் பிள்ளைகளா யிருந்தோம்” (எபேசியர் 2:3).

அதனால் தான் இரட்சிக்கப்படாத நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவர்களால் முடிந்த வரையிலும் நீங்கள் தேவனை தீவிரமாக தேடாமல் இருக்கும்படி அறிவுறுத்துவார்கள். அவர்கள் உன்னை வேறு சபைக்குப் போகும்படியாக செய்ய முயற்சி செய்வார்கள், அல்லது “அவர்களுடைய” சபைக்குப் போகும்படி முயற்சி செய்வார்கள் – மறுபடியும் நீங்கள் இந்தச் சபைக்கு வராதபடி செய்ய எதை வேண்டுமானாலும் செய்வார்கள்! ஏன்? ஏனென்றால் “அவர்களுடைய” சபை குளிர்ந்து போயிருக்கிறது, மற்றும் அங்கே தேவன் இல்லை என்று அவர்களுக்குத் தெரியும். அவர்கள் உண்மையான நோக்கம் உன்னை தேவனிடமிருந்து பிரிக்க முயற்சி செய்வதாகும்,

“எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை” (ரோமர் 8:7).

மறு உருவாக்கம் பெறாத நிலையில், மனுவர்க்கம் தேவனுக்கு விரோதமான கலகம் செய்கிறது. தேவன் உங்களை அழைக்க ஆரம்பிக்கும்பொழுது, உங்கள் இழக்கப்பட்ட நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களை இழுக்க மற்றும் தேவனிடமிருந்து தூரமாக்க முயற்சி செய்வார்கள். பெற்றோர்களும் உங்கள் இழக்கப்பட்ட நண்பர்களும் அதே காரியத்தை செய்யலாம்.

ஆனால் இயேசு சொன்னார்,

“மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (யோவான் 5:25).

எபேசியர் 2:1, 5ன்படி நீங்கள் ஆவிக்குரிய நிலையில் மரித்தவர்களாக இருந்தாலும், தேவகுமாரன் உங்களை அழைக்க ஆரம்பித்து இருக்கிறார். உங்கள் மரித்த நிலைமையிலிருந்து, நீங்கள் “தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்கிறீர்கள்.” அது நடக்கும்பொழுது நீங்கள் தேவகுமாரனாகிய இயேசு இல்லாத வாழ்க்கையில், திருப்தி கொள்ளமாட்டீர்கள். அதைவிட மேலான சிலவற்றை விரும்புவீர்கள். அதன்பிறகு நீங்கள் இயேசு கிறிஸ்துவை தேடுவீர்கள். ஆனால் நீங்கள் உயிர்பிக்கப்படாத மரித்த நிலைமையில் இருக்கும்பொழுது, நீங்கள் கிறிஸ்து இல்லாமல் திருப்தியாக வாழ்ந்து மற்றும் மரிப்பீர்கள். உங்களுக்குள் ஏதோ தவறு இருக்கிறது – உங்கள் இருதயம் தேவனற்ற நிலையில் இருக்கிறது –என்று பரிசுத்த ஆவியானவர் காட்டும்பொழுதுதான் இந்த குறை உனக்குள் இருக்கிறது என்று காட்டும்பொழுது மட்டுமே நீங்கள் இயேசு கிறிஸ்துவில் விருப்பம் கொள்ளுவீர்கள்.

“பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை” (லூக்கா 5:31).

III. மூன்றாவதாக, தங்கள் சொந்த இருதயத்தின் தீமையினால் திருப்தி அடைந்தவர்கள் இயேசு தங்களுக்கு தேவையில்லை என்று உணர்வார்கள்.

தேவன் வழக்கமாக நமது உணர்வுகளில் முதலில் பேசுகிறார். பரிசுத்த ஆவியானவர் தமது உணர்த்தும் வேலையை ஆரம்பிக்கும்பொழுது, நாம் பாவம் நிறைந்தவர்கள் என்பதை உணரும்படி செய்கிறார்.

எவ்வளவாக மக்கள் உணர்வினால் நடத்தப்பட்டபொழுது அவர்கள் மாற்றப்பட்டார்கள் என்பதை அடிக்கடி வேதத்தில் பார்க்கிறோம். இயேசுவின் பாதங்களை முத்தம் செய்த அந்த ஸ்திரி உணர்வினால் உந்தப்பட்டாள்.

“அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரி அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டுவந்து, அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்” (லூக்கா 7:37-38).

அவள் விரைவில் இயேசுவிடம் வந்தாள் மற்றும் இரட்சிக்கப்பட்டாள்.

பெந்தேகொஸ்தே நாளில், பேதுருவின் போதனையை கேட்டவர்கள்

“தங்கள் இருதயங்களில் குத்தப்பட்டார்கள்” (அப்போஸ்தலர் 2:37).

எழுத்தின்படி இதன் பொருள் என்னவென்றால் “இருதயத்தில் குத்தப்படுதல்.” அது உணர்ச்சியை குறித்து பேசுகிறது. பிலிப்பு பட்டணத்தில் சிறைச்சாலைக்காரன்

“வந்து நடுநடுங்கினான்” (அப்போஸ்தலர் 16:29).

பவுல் அப்போஸ்தலன் சொன்னார்,

“நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” (ரோமர் 7:24).

வேதத்தில் காணப்படும் இந்த காரியங்கள் மக்களின் உணர்வுகளை அசைத்தது அதனால் தனது பொல்லாத இருதயத்தில் அதிருப்தி அடைந்தார். ஒரு உண்மையான மாறுதல் அடைந்தவர்களின் பொதுவான அடையாளம், எல்லா உண்மையான மாறுதல் அடைந்தவர்களின் காரியங்களும் ஒன்று போலவே இருக்கும், அதனால் – மக்கள் தங்கள் உள்ளான நிலையில் போதுமென்ற நிறைவு அற்றவர்களாக மாறுகிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த இருதயங்களில் பார்க்கிறார்கள் மற்றும் அங்கே பாவத்தை காண்கிறார். அவர்கள் தங்களுக்குள் பார்த்தலில் விருப்பமற்றவர்களாக அவர்கள் வருகிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த இருதயத்தை அங்கீகரிக்க முடிவதில்லை! தாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதில் அவர்கள் விருப்பமற்றவர்களாக காணப்படுகிறார்கள்.

இயேசுவிடம் ஆயக்காரர்கள் மற்றும் பாவிகள் அவ்வளவாக நெருக்கி வந்ததற்கு பின்னால் ஒரு மனுஷிக காரணி இருக்கிறது – வேதபாரகர்கள் மற்றும் பரிசேயர்கள் அவரை விட்டு தனிமையாக நிற்கும்பொழுது.

“பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை” (லூக்கா 5:31).

இந்தக் காலையிலே உங்களிடம் கேட்கப்படும் கேள்வி: நீங்கள் போதுமென்ற மனதுடன் இல்லாமல் இருக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கை வழியில் நீங்கள் மகிழ்ச்சியற்று இருக்கிறீர்களா? நீங்கள் தேவன் இல்லாத வாழ்க்கையில் வியாதியாக இருக்கிறீர்களா? நீங்கள் சொந்த இருதயத்தை வெறுக்கிறீர்களா? உங்களுடைய பாவங்களினால் நீங்கள் உணர்த்தப்பட்டு இருக்கிறீர்களா? உங்களுக்கு எந்த நிலையிலாவது மகிழ்ச்சியற்ற மற்றும் இந்த காரியங்களினால் பாவத்தின் உணர்த்துதலின் இருந்தால், அப்பொழுது நீங்கள் பெரிய வைத்தியராகிய, இயேசுவிடம் தயாராக வாருங்கள். எல்லாவற்றையும்விட, கிறிஸ்து ஒருவர் மட்டுமே பாவத்திலிருந்து உங்களை இரட்சிக்க முடியும். அவர் ஒருவர் மட்டுமே உங்களுடைய பாவத்திற்காக மரித்து உங்கள் பாவகிரயத்தை செலுத்தினார். அவர் ஒருவர் மட்டுமே உங்களுடைய பாவத்திற்காக மரித்து சரீரபிரகாரமாக உயிர்த்தெழுந்து உங்களுக்கு ஜீவனை கொடுக்க கூடியவராக இருக்கிறார். அவர் ஒருவர் மட்டுமே பரலோகத்தில், உங்களுக்காக ஜெபித்துக்கொண்டு, தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். அவரிடத்தில் வர நீ தயாராக இருக்கிறாயா? அவருடைய இரத்தத்தினால் உன்னுடைய பாவங்களை கழுவி சுத்தம் செய்து கொள்ள நீ தயாராக இருக்கிறாயா?

“பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை” (லூக்கா 5:31).

கிறிஸ்துவில் இருக்கும் இரட்சிப்பை பற்றி நீ எங்களோடு பேச விரும்பினால், தயவுசெய்து முன்னே வந்து முன் இரண்டு வரிசையில் உட்காரவும் மற்றவர்கள் விருந்துக்காக மேல் மாடிக்கு செல்லவும். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களே, நீங்கள் வந்து தயவுசெய்து இந்த கூட்டத்தை முடிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

பிரசங்கத்துக்கு முன்னதாக வேதப் பகுதியை வாசித்தவர் திரு. நோவா சாங்: லூக்கா 5:27-35.
போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:
“I Am Amazed” (by A. H. Ackley, 1887-1960).


முக்கிய குறிப்புகள்

திருப்தியற்றவர்களுக்கு மட்டுமே விடுதலை

DELIVERANCE IS ONLY FOR THE DISSATISFIED

டாக்டர் ஆர். எல் ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால் எழுதப்பட்டு
திரு. ஜான் சாமுவேல் கேஹனால் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon written by Dr. R. L. Hymers, Jr. and preached
by Mr. John Samuel Cagan

“பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. நீதிமான்களை யல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்” (லூக்கா 5:31-32).

(லூக்கா 5:28, 30; 18:9)

I.      முதலாவதாக, தங்கள் வாழ்க்கை வழியில் திருப்தி அடைந்தவர்கள் இயேசு தங்களுக்கு தேவையில்லை என்று உணர்வார்கள், லூக்கா 19:5-10;
மத்தேயு 9:12.

II.    இரண்டாவதாக, தங்கள் சொந்த நன்மையில் திருப்தி அடைந்தவர்கள் இயேசு தங்களுக்கு தேவையில்லை என்று உணர்வார்கள், ரோமர் 3:11;
எபேசியர் 4:18; 2:12; ரோமர் 8:7; எபேசியர் 2:3; யோவான் 5:25.

III.  மூன்றாவதாக, தங்கள் சொந்த இருதயத்தின் தீமையினால் திருப்தி அடைந்தவர்கள் இயேசு தங்களுக்குத் தேவையில்லை என்று உணர்வார்கள்,
லூக்கா 7:37-38; அப்போஸ்தலர் 2:37; 16:29; ரோமர் 7:24.