Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




ஒரு மென்மையான மற்றும் கொடுமையான சோகம்

A SOFT AND VIOLENT SADNESS
(Tamil)

திரு. ஜான் சாமுவேல் கேஹன், அவர்களால்
by Mr. John Samuel Cagan

ஏப்ரல் 30, 2017 அன்று கர்த்தருடைய நாள் ஞாயிற்றுக்கிழமை காலை
வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில்
பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Morning, April 30, 2017

“அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும் பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரி, அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய பெரும்பாடு [நின்றுபோயிற்று]” (லூக்கா 8:43-44).


ஒரு ஸ்திரி மிகவும் பயங்கரமாக வியாதிப்பட்டிருந்தாள். அந்த வியாதி குணமடைய அவளால் முடிந்த எல்லாவற்றையும் செய்தாள். அவள் மருத்துவர்களிடம் சென்றாள், ஆனால் அவர்களால் அவளை குணமாக்க முடியவில்லை. தனது வியாதியை குணமாக்கிக்கொள்ள இந்த உலகத்திலே அவளுக்கிருந்த சொத்தையெல்லாம் செலவழித்தாள். அவளுக்கு முடிந்த அனைத்து வைத்தியத்தையும் முயற்சி செய்துபார்த்தாள், ஆனால் ஒன்றும் குணமாக்கவில்லை. அவளது நாட்களிலிருந்த மருத்துவர்களின் கவனிப்பிலிருந்து, அவர்கள் சொன்ன எல்லா மருத்துவமுறைகளையும் கஷ்டத்தோடு கடைபிடித்தாள். அவளது நாட்களிலிருந்த யூதமக்களால் அவள் அசுத்தமுள்ளவளாக கருதப்பட்டாள். அவள் மதச்சார மற்றும் சமூக ரீதியாக தனித்துவிடப்பட்டவளாக வாழ்ந்தாள். அவள் தனிமையாக வாழ்ந்தாள் மற்றும் அவளிடம் ஒருவரும் பேசுவதில்லை.

அவளுக்கு எந்தத் தருணமும் இல்லை. அவளுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. அவள் இயேசுவை பார்க்கும் வரைக்கும், அவளுக்கு எந்த ஒரு நம்பிக்கையும் இல்லை. அவள் இயேசுவை ஒரு கூட்டத்தில் பார்த்தாள். அவளை இயேசு குணமாக்க முடியும் என்று அறிந்திருந்தாள். அவள் இயேசுவிடம் போகவேண்டும். அவளால் இயேசுவை அடைய முடியுமா என்று அவளுக்குத் தெரியவில்லை. அவர் மிகவும் தூரமாக இருந்தார் அவள் குணமாவது ஒருபோதும் முடியாத காரியமாக இருந்தது. ஆனால் அவள் எல்லாவற்றிலும் முயற்சி செய்தாள், அவளுக்கு உதவி செய்யக்கூடியவர் இயேசு ஒருவர் மட்டுமே என்று அவள் அறிந்திருந்தாள். அவள் கூட்டத்தோடு போராடினாள், மற்றும் அவள் இயேசுவிடம் வந்து விட்டாள். அவளால் இயேசுவிடம் நேரடியாக வரமுடியவில்லை, ஆனால் அவள் அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை தொடமுடிந்தது. அவள் கிறிஸ்துவின் வஸ்திரத்தின் ஓரத்தை தொட்ட உடனே, அவளுடைய வியாதி குணமாக்கப்பட்டது, மற்றும் இயேசு அவளை குணமாக்கினார். இந்தக் கதை நேராக உனக்குத் தொடர்புடையது.

I. முதலாவது, நீ வியாதியாக இருக்கிறாய்.

மனிதவர்க்கம் வியாதியாக இருக்கிறது. மனிதவர்க்கத்தை ஒரு வியாதி தொற்றிக்கொண்டது அது மனிதவர்க்கத்தையே திருப்பிவிட்டது. இந்த வியாதியின் விளைவால், மக்கள் ஒருவரை ஒருவர் காயப்படுத்துகிறார்கள், ஒருவரை ஒருவர் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுகிறார்கள், மற்றும் இறுதியாக, அவர்களையே அழித்துக் கொள்ளுகிறார்கள். அந்த வியாதி ஓர் இரகசியமானதல்ல. அது வித்தியாசமான பெயர்களில் அழைக்கப்பட்டாலும், அறிவியல் மற்றும் வரலாறு இரண்டும் இந்த வியாதியோடு இணைந்திருக்கிறது. இந்த வியாதி தேவனால் பாவம் என்று அறியப்பட்டது. பாவம் மனிதவர்க்கம் முழுவதையும் தொற்றிக்கொண்டது. பாவம் உன்னையும் தொற்றிக்கொண்டது. வேதம் சொல்லுகிறது,

“எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர் களானார்கள்” (ரோமர் 3:23).

ஒவ்வொருவரும் பாவவியாதியால் தொற்றிக்கொள்ளப்பட்டவர்களாக இருக்கிறார்கள். பாவம் பயிற்சி செய்யப்பட்டு ஒரு வாழ்நாள் முழுவதும் பரிபூரணப்பட்டாலும், பாவம் கற்றுக்கொள்ள வேண்டிய தேவையில்லை. பாவம் இயற்கையாக பெருகி மற்றும் உனக்குள் வளருகிறது. பாவம் நீ செய்கிற எல்லாவற்றையும் பாதிக்கிறது. நீ நேர்மையற்று இருக்கும்போது, அது பாவவியாதியின் அடையாளமாகும். நீ ஆபாசமானதை, பாவம் நிறைந்திருக்கும் காரணத்தினால்தான் கவனிக்கிறாய். நீ தவறான காரியங்களில் செய்வதினால் ஒரு பாவியாவதில்லை. உனது பாவ நோய் சுதந்தரிக்கப்பட்டதாகும். நீ பிறப்பிலே பாவியாக இருக்கிறாய். நீ ஒரு பாவி, மற்றும் நீ ஒரு பாவியாக இருப்பதால், தவறான காரியங்களை செய்கிறாய். பாவம் உன் இருதயத்தை தொற்றிக்கொண்டது. உன்னுடைய அமைதியான எண்ணங்கள், நீ செய்யக்கூடாத பயங்கரமான அநேக காரியங்களை செய்ய விரும்புகிறாய். நீ அதோடுகூட வெளியே போனால் இன்னும் அதிகம் மோசமாக மாறிவிடுவாய். உன்னுடைய நுரையீரல்கள் மூச்சுவிடுவதுபோல உனது இருதயம் சுலபமாக பொய்களை கற்பனை செய்யும். உனக்குள் ஒரு நல்ல மனிதன் என்று ஒரே நேரத்தில் நினைத்து கொண்டு இருக்கும்போது உன்னுடைய இருதயம் இரகசியமாக பயங்கரமான காரியங்களை அனுமதிக்க ஆசைப்படும். நீ பாவத்தால் நோய்க்கிருமி பாதித்ததுபோல இருக்கிறாய், மற்றும் பாவம் மக்களை சுயநலம், ஏமாற்று, மற்றும் அசுத்தமாக மாற்றுகிறது. வேதம் சொல்லுகிறது,

“நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக் கொண்டுபோகிறது” (ஏசாயா 64:6).

பாவம் ஒரு நோயாகும். பாவத்திற்கு அறிகுறிகள் அதே சமயத்தில் பாதிப்புகள் உண்டு. பாவத்தின் விளைவாக, மக்கள் தங்கள் சொந்த வாழ்க்கைகளில் அடிக்கடி மகிழ்ச்சியை இழந்து போகிறார்கள். மக்கள் வெட்கப்படுகிறார்கள், மனஅழுத்தம், மற்றும் வேதனையை பாவத்தின் விளைவாக அடைகிறார்கள். அமைதியான சில நேரங்களில், உனக்குள்ளாக இருளான ஒரு உணர்வு உனக்குள் பிரதிபலிப்பதை நீ உணரமுடியும். நேரத்திற்கு நேரம், உன்னுடைய கபடின்மை காணப்படாமல் உனக்குள் மனச்சோர்வு ஏற்படுவதை உணர்வாய். உன்னுடைய வாழ்க்கை ஒரு விவரிக்கமுடியாத வெறுமையான உணர்வினால் நினைக்கப்பட்டது. பாவத்தின் அறிகுறியை உணர்வாய். சில நேரங்களில், உன்னுடைய ஆழத்தில், உன்னுடைய நிலைமை இழுக்கப்படுவதையும், அது இழுக்கப்படும்போது மெதுவான மற்றும் கொடிய துக்கம் உனக்கு உண்டாகும். இப்படியாக உணர்ந்த தருணங்கள் உனக்கு இருந்தது, ஆனால் எப்படியோ இதே உணர்வோடு நீண்ட நேரம் உன்னால் வாழமுடியாது என்ற உணர்வு இருந்தது. ஒரு உயிர் கிட்டத்தட்ட உள்ளுணர்வால் மறுமொழி கொடுப்பது போல இருக்கும், நீ சிகிச்சை எடுக்கத் தேடுவாய். இந்த உலகத்தில் காணப்படும் சிகிச்சைகளை எல்லாம், மற்றவர்களை போல நீ சிகிச்சை எடுக்க தேட ஆரம்பித்தாய்.

“அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும் பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரி” (லூக்கா 8:43).

II. இரண்டாவதாக, உனது வியாதிக்காக சிகிச்சைகளை நீ தேடினாய்.

பாவத்தின் அறிகுறிக்காக கொடுக்கப்படும் அநேக சிகிச்சைகள் உண்டு. பாவத்தின் அறிகுறியை போக்கும்படியாக மகிழ்சியை அனுபவிக்க மக்கள் கற்றுக் கொண்டார்கள். உலகமுழுவதிலும், பாவத்தின் அறிகுறியிலிருந்து தப்புவதற்காக மக்கள் போதைபொருள்களை உபயோகிக்கிறார்கள். உயிர் வாழ்வது அவ்வளவு அதிருப்தியை கொடுத்தபடியினால், ஒரு மாத்திரை, அல்லது ஒரு ஊசி, அல்லது ஒரு பாட்டில், மூலம் அது போகமுடியும் என்று நினைக்கிறார்கள், அப்படியானால் சிறிது நேரத்துக்கு மட்டுமே. பாவத்தின் அறிகுறியை தவிர்க்கும் ஒரு முறையினால், நீ மகிழ்ச்சியில் உன்னையே நீ இழந்து போகலாம். நீங்கள் தெரிந்துகொள்ளும் போதைப்பொருள் எராயின் அல்லது சாராயமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அது எதுவாக இருந்தாலும், அது ஒரு சிகிச்சை, அது போதை.

மகிழ்ச்சியின் சிகிச்சை அநேக மாறுவேடங்களில் தரப்படுகிறது. இன்று மக்கள் இந்த உண்மையான உலகத்தில் போதைக்கு அடிமைகளாக இருக்கிறார்கள். சமீபத்தில் வியாபாரத்தில் உள்ளவர்கள் மத்தியில் எடுக்கப்பட்ட கணிப்பில் ஒரு நாளைக்கு சராசரியாக 2,000 முதல் 5,000 தடவைகள்வரை ஸ்மார்ட்போனில் ஒரு நபர் தொடுகிறார் என்று முடிவு செய்யப்பட்டது. மக்கள் தொழில் நுட்பம் கொடுக்கும் தகவலுக்காக, தொடர்புக்காக, மற்றும் கண்டுபிடிப்புகளுக்காக போதையில் அலைகிறார்கள். அவர்கள் தொடர்ந்து செய்தி குறிப்புகளுக்காக அதிகமாக சூடேற்றப்பட்டிருக்கிறார்கள், அதனால் பாவத்தின் அறிகுறியை உணர – அவர்கள் ஒருபோதும் நினைப்பதில்லை.

உங்கள் பையிலும் ஒரு ஸ்மார்ட்போன் நீங்கள் வைத்திருக்கலாம். ஒவ்வொரு ஓய்வு நேரத்திலும், உங்களை நீங்களே உங்கள் போனில் இழந்துவிடுகிறீர்கள். வெளிப்படையான செயல்பாடுகளுக்கு இடையில், உங்களை அறியாமலே அதை உங்கள் பையிலிருந்து வெளியே எடுக்கிறீர்கள். உங்களுக்குத் தப்பி செல்ல ஒருவழி கிடைத்தது. உங்களுக்கு ஒரு சிகிச்சை கிடைத்தது. நீங்கள் அதனால் பாவத்தின் அறிகுறியை உணராமல் சிகிச்சை கொடுக்கிறீர்கள், ஆனால் நீங்கள் குணமாக்கப்படவில்லை.

“அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும் பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரி” (லூக்கா 8:43).

தொழில் நுட்பம் இன்னொரு உலகத்திற்கு செல்ல உங்களுக்கு வழிவகுக்கிறது. நீங்கள் பிறந்த உலகத்தைவிட அதிக கவர்ச்சியான ஒரு உலகத்தை நீங்கள் கண்டுகொள்ள தொழில் நுட்பம் உங்களை அனுமதிக்கிறது. சமூக மீடியா வலைதளங்களில் மக்கள் ஒவ்வொருநாளும் பல மணிநேரங்களை செலவிடுகிறார்கள். மக்கள் தங்கள் சுயத்தை பேணுவதற்காக தங்கள் வீரத்தை பரிபூரணமாக அறிமுகம் செய்வதற்காக, மக்கள் பத்து அல்லது பதினைந்து அல்லது இருபது தடவைகள் தங்களைத் தாங்களே படம் எடுத்துக் கொள்ளுகிறார்கள். தாங்கள் இருக்க வேண்டும் என்று நம்பமுடியாத அளவிற்கு, சில காரியங்களில் தங்களை முன்வைக்கிறார்கள். தாங்கள் யார் என்று மிகைப்படுத்தி உலகம் பார்க்கும்படியாக காட்டும் விதத்தில், அவர்கள் ஒவ்வொரு படத்தையும் கவனமாக கிராப்ட் செய்கிறார்கள்.

உங்களுக்கு ஒரு பேஸ்புக் கணக்கு இருக்கலாம். உங்களுக்கு ஒரு இன்ஸ்டால்கிராம் கணக்கு இருக்கலாம். உங்களுக்காக சில சிறந்த கோணத்தை மற்றும் அம்சங்களை தேர்ந்தெடுக்க, நீங்கள் அதிக நேரம் செலவிடுகிறீர்கள், அதனால் உலகம் உங்களை உண்மையான நிலையில் பார்க்க முடியாதபடி செய்கிறீர்கள். அப்படி நீங்கள் சரியாக செய்தால், ஒருவேளை உலகம் உங்களை உணர்த்தி நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள், அதனால் நீங்கள் பாவத்தின் அறிகுறியால் பாடுபடவில்லை என்று சொல்லும். உங்களுக்கு ஒரு சிகிச்சை கிடைத்தது, நீங்கள் அதனால் பாவத்தின் அறிகுறியை உணராமல் சிகிச்சை கொடுக்கிறீர்கள் ஆனால் நீங்கள் இன்னும் குணமாக்கப்படவில்லை.

“அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும் பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரி” (லூக்கா 8:43).

உங்கள் வாழ்க்கை எவ்வளவு ஓய்வில்லாததாக மாறியிருக்கிறது என்று கவனியுங்கள். உங்கள் உண்மையான நிலையை உணருவதற்கு அதிக நேரமாகும். அதனால் உங்கள் உண்மையான நிலையிலிருந்து தப்பிக்கொள்ள முயற்சி செய்கிறீர்கள், நேரமுழுவதும் அதற்காக செலவிட அமைத்துக் கொள்ளுகிறீர்கள். உங்கள் ஓய்வு நேரம்கூட ஓய்வாக இல்லை. உங்கள் மனச்சாட்சி திசைதிருப்பப்பட்ட அதிக பாரத்தால் நிறைந்திருக்கிறது. நீங்கள் ஒவ்வொரு நாளும் வீடியோ கேமில் பல மணிநேரத்தை செலவிடுகிறீர்கள். உங்கள் உண்மையான உலகம் படையெடுக்கும் உண்மையான ஒன்றாகயிருக்கிறது. நீ வகுப்பில் அமர்ந்திருக்கும்பொழுது, அல்லது சாலை நிறுத்தத்தில் நிற்கும்பொழுது, அல்லது இந்தப் போதனையின்பொழுது, வீட்டுக்கு வந்து, வீடியோ கேம்கள், இன்னும் சிறிது நேரம் விளையாடலாம் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் மென்மையான மற்றும் கொடூரமான வருத்தத்தை உணராமல் அதிக பிஸியாகயிருக்கிறீர்கள். உங்களுடைய சொந்த சூழ்நிலையை உண்மையாக உணராத பிடியில் அதிக ஓய்வில்லாதிருக்கிறீர்கள்.

ஒரு கணினியின் திரைக்கு முன்பாக நாள்முழுவதும் உட்கார்ந்து உங்கள் நாட்களை இழந்தீர்கள். உங்கள் சொந்த மனதோடு தனிமையாக உட்கார்ந்து அது என்ன உணர்கிறது என்று பார்க்க நீங்கள் விரும்பவில்லை, மற்றும் அதனால் நீங்கள் இணையதளத்தில் நிலையான தொடர்பு ஐக்கியம் வைத்திருக்கிறீர்கள். ஒரு சஷண நேரம்கூட உங்களால் நிறுத்தமுடியவில்லை ஏனென்றால் நீங்கள் அதில் எப்பொழுதும் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் இசையில் இணைக்கப் பட்டிருக்கிறீர்கள், வீடியோகேமில் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள், இணையதளத்தில் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள், இன்பம் தரும் அனுபவங்களால் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள், மற்ற அநேக காரியங்களில் ஆனால் வாழ்க்கையின் உண்மையில் இணைக்கப்படவில்லை. நீங்கள் பாவத்தின் அறிகுறிக்கு மெய்யாக பயப்படவில்லை என்று, உங்களுக்கு நீங்களே சொல்லுகிறீர்கள். நீங்கள் இவைகள் எல்லாம் செய்கிறீர்கள் காரணம் உங்களுக்குச் சலித்துப்போய்விட்டது. நீங்கள் இவைகளை எல்லாம் செய்கிறீர்கள், ஏனென்றால் அவைகள் விளையாட்டாக இருக்கிறது, நீங்கள் செய்ய வேண்டுமென்று செய்வதில்லை. இருந்தாலும், நீங்கள் எவ்வளவு கடினமான விளையாடுகிறீர்கள் என்பதை கவனிக்க தவறினால், உங்கள் வாழ்க்கைக்காக ஓடவேண்டியது இருக்கிறது என்று நீங்கள் கவனிக்க வேண்டியது அவசியம். கவலைப்படவோ அல்லது துக்கப்படவோ இப்பொழுது நேரமில்லை, ஏனென்றால் உங்கள் வாழ்க்கையை அதிக ஓய்வில்லாததாக அமைத்து கொண்டீர்கள். வேதாகமம் சொல்லுகிறது,

“வருத்தத்தோடும் மனச்சஞ்சலத்தோடும் இரண்டு கைப்பிடியும் நிறையக்கொண்டிருப்பதைப்பார்க்கிலும், அமைச்சலோடு ஒருகைப்பிடி நிறையக் கொண்டிருப்பதே நலம்” (பிரசங்கி 4:6).

நீ உன்னிடம் நீ இப்படியே ஓய்வில்லாமலிருந்தால் உனக்கு உதவி செய்துகொள்ள முடியாது என்று சொல்லு. உனக்கு ஒரு மத்திய வேலை வந்திருக்கிறது, பிறகு ஒரு திட்டம், மற்றும் அதன்பிறகு ஒரு வேலையிருக்கிறது. இது சிலநாள் மாறாது. நீ இந்த ஓய்வில்லாத நிலையில் எப்பொழுதும் இருந்தே ஆகவேண்டும். உன்னுடைய எதிர்காலத்தில் எங்கோ வெளியே இருப்பாய் என்று நீ நம்புகிறாய், நீ நம்புவது வித்தியாசமாகயிருக்கும். நீ பட்டம் பெற்று, பணம் சம்பாதிக்க ஆரம்பிப்பாய், மற்றும் நீ இறுதியாக பெருமையாக மாறினவாகயிருப்பாய். ஆனால் நீ எங்கே பட்டம் பெற்றாலும் பரவாயில்லை, நீ எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் பரவாயில்லை, நீ திருப்தியடையமாட்டாய், மற்றும் அது உனக்கு ஒருபோதும் போதுமானதாக இருக்காது. வேதாகமம் சொல்லுகிறது,

“தன் தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாய் வந்தான்; வந்ததுபோலவே நிர்வாணியாய்த் திரும்பிப்போவான். அவன் தன் பிரயாசத்தினால் உண்டான பலனொன்றையும் தன் கையிலே எடுத்துக்கொண்டு போவதில்லை” (பிரசங்கி 5:15).

உனது நம்பிக்கைகள் உனக்கு ஒன்றுக்கும் உதவாது. எவ்வளவு பணமிருந்தாலும், அல்லது எந்த ஒரு பரிபூரணமான வேலையும் உனக்கு அதிசுத்தமான அனுபவத்தை தரமுடியாது அது உனது ஆத்தும பசியை போக்க முடியாது. உன்னுடைய வாழ்க்கை உன்னை ஒருபோதும் திருப்தியாக்காது. நீ மகிழ்ச்சியாகயில்லை. நீ பாவ அறிகுறியால் பாதிக்கப்பட்டு பாடுப்படுகிறாய், அதற்குச் சிகிச்சை அளித்துக்கொண்டு இருக்கிறாய். நீ உனது பாவ அறிகுறிக்குச் சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கிறாய், ஆனால் நீ ஒருபோதும் குணமடைய முடியாது.

“அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும் பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரி” (லூக்கா 8:43).

பாவத்திற்கு எந்த ஒரு சிகிச்சையும் பலன் கொடுக்க முடியாது ஒருபோதும் குணமாக்காது. இந்த உலகத்தின் சந்தோஷம் முழுவதும் ஒருபோதும் உன்னுடைய பாவ வியாதியை குணமாக்கமுடியாது. இந்த உலகத்தின் பணமெல்லாம் ஒன்றுதிரட்டி செலவழித்தாலும் உன்னால் குணத்தை வாங்க முடியாது. ஒரு பழைய பாடல் இவ்வாறாகயிருக்கிறது,

ஏக்கர் கணக்கில் வைரங்கள், மலையளவு பொன்,
   ஆறுகள் போல் வெள்ளி, சொல்லிமுடியாத நகைகள்,
இவையனைத்தும் ஒன்றுசேர்த்தாலும்
   உன்னாலும் என்னாலும் விலைக்கு வாங்க முடியாது
நாம் உறங்கி கொண்டிருக்கும்பொழுது சமாதானம், மன அமைதி.
(“Acres of Diamonds” by Arthur Smith, 1959).

உனது பாவ வியாதிக்கு அதிகமான சிகிச்சை உனக்கு அவசியமில்லை. நீ முயற்சி செய்யும் சிகிச்சையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக அறிகுறியை மட்டுமே உண்டாக்கும். சிகிச்சைகள் அறிகுறிகளை சமாளிக்கும், ஆனால் வியாதியை அகற்ற முடியாது. நீ தொடர்ந்து உன்னுடைய சிகிச்சையில் நீடிப்பாய் உனது வாழ்க்கை முடியும்வரை அப்படியே இருப்பாய். பிறகு ஒருநாள், உடனடியாக, அது மிகவும் காலதாமதமாகிவிடும். உன்னுடைய பாவ வியாதி மோசமாக இருக்கிறது, மற்றும் அது தொடர்ந்து மோசமாகி கொண்டேயிருக்கும். உன்னுடைய நாள்பட்ட, மற்றும் வீரியமிக்க வியாதி, உனது இறுதி கட்டத்தில் இருக்கிறது. உன்னுடைய பாவ வியாதி உன்னை அழித்துவிடும். வேதம் சொல்லுகிறது,

“பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்” (ரோமர் 6:23)

நீ உன்னுடைய வியாதிலியிருந்து குணமடைய வேண்டும். உனக்குக் குணமடைதல் மட்டுமே அவசியம். உனக்கு இயேசுகிறிஸ்து வேண்டும்.

III. மூன்றாவதாக உன்னுடைய பாவ வியாதி இயேசுவால் குணமடையும்.

உன்னுடைய பாவ வியாதியின் குணமடைதல் இயற்கையான சிகிச்சையைவிட இன்னும் ஆழமாக போக வேண்டியது அவசியம். நம்முடைய பாடத்தின் ஸ்திரி, சிகிச்சைகளினால் குணமடையமுடியாமல் இயேசுவிடம் திரும்பினது போல, நீயும் அவரிடம் திரும்ப வேண்டியது அவசியமாகும்.

“அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும் பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரி, அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய பெரும்பாடு நின்றுபோயிற்று” (லூக்கா 8:43-44).

அந்த ஸ்திரி தன்னால் முடிந்ததையெல்லாம் முயற்சி செய்தாள், அவள் இயேசுவிடம் திரும்பும்வரையிலும், அவளை ஒன்றும் குணமாக்கவில்லை. நிறைய பேர் முயற்சித்தார்கள், ஆனால் அவள் குணமடையவில்லை. இறுதியாக இயேசுவிடம் மனமுடைந்து வந்தாள், இயேசு அவளைக் குணமடையச் செய்தார். பாவ வியாதிக்கு இயேசு ஒருவரே குணமாக்க வல்லவராகயிருக்கிறார். இயேசு ஒருவரே உனது பாவ வியாதியை குணமாக்க முடியும், ஏனென்றால் இயேசு ஒருவரே உனது பாவங்களுக்காக மரித்தார். இயேசு எல்லாவிதத்திலும் பரிபூரணராக இருந்தார். இயேசு கறையற்றவர், பாவமில்லாத ஆட்டுக்குட்டி அவர் தமது சரீரத்திலே சிலுவையின் மேல் உன்னுடைய பாவ பாரம் முழுவதையும் சுமந்துதீர்த்தார். உன்னுடைய பாவ நிவாரண பலியாக அவர் சிலுவையிலே ஆணியடிக்கப்பட்டார். இயேசு தமது இரத்தத்தை உனது பாவத்துக்கு மாற்று மருந்தாக சிந்தினார். வேதாகமம் சொல்லுகிறது,

“மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (ஏசாயா 53:4-5)

இயேசு இவைகளையெல்லாம் செய்தார் ஏனென்றால் அவர் உன்னை நேசிக்கிறார். உன்னுடைய பாவவியாதி குணமடையதக்கதாக அவர் உனது பாவத்திற்காக மரித்தார். நீ ஒரு பாவியாக இருக்கிறாய். நீ சிகிச்சைகளை முயற்சி செய்தாய். அந்தச் சிகிச்சைகள் உன்னுடைய பாவத்தை குணமாக்கவில்லை. எந்தச் சிகிச்சையின் எந்த அளவு மருந்துகளும் உன்னை குணமாக்கவில்லை. நீ பாவ வியாதியாகிய மரணவியாதியினால் பாடுபட்டுக்கொண்டிருக்கிறாய். நீ வியாதியாய் இருக்கிறாய் என்று நீ உணர்த்தப்பட வேண்டியது அவசியமாகும். நீ வியாதியாய் இருக்கிறாய் என்று நீ உணராவிட்டால், வியாதியின் அறிகுறிகள் வற்புறுத்தாவிட்டால் உனக்கு ஒரு குணமாக்குதல் அவசியமில்லை என்று நீ இருப்பாய். ஆனால் உனக்கு ஒரு குணமாகுதல் அவசியம்தேவை. இயேசு சொன்னார்,

“பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை; நீதிமான்களை யல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்” (மாற்கு 2:17).

உன்னுடைய பாவ வியாதியின் மெய் தத்துவத்தை நீ பார்க்க வேண்டியது அவசியம். நீ அவைகளை ஒருமுறை உணர்ந்தால், எந்தச் சிகிச்சைக்கும் போக வேண்டாம், குணமாகுதலுக்குத் திரும்பு. உனது பாவத்தின் அறிகுறியை மறைப்பதிலிருந்து திரும்பு, இயேசுவிடம் திரும்பு. இயேசு ஒருவர் மட்டுமே உன்னை பாவத்திலிருந்து இரட்சிக்க முடியும். இயேசு கொடுக்கும் இரட்சிப்பை வேறு எந்தவிதத்திலும் சம்பாதிக்க முடியாது. அந்த ஸ்திரி குணமாக்கப்பட்டாள், பாவத்திலிருந்து மன்னிப்பைப் பெற்றாள், இயேசுவினால் இரட்சிக்கப்பட்டாள். அவள் தான் குணமானதற்காக எதையும் கொடுக்கவில்லை. இயேசு அவளை குணமாக்க வேண்டுமென்று அவள் வற்புறுத்தவும் இல்லை. அவள் இயேசுவிடம் போக முடியாதது போல காணப்பட்டது, ஆனால் அவள் அவரிடம் எல்லாவிதத்திலும் சென்றடைந்தாள். அவள் இயேசுவிடம் வந்தாள், மற்றும் அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள், மற்றும் அவள் விசுவாசத்தினால் இரட்சிக்கப்பட்டாள்! ஒருவேளை நீ இயேசுவிடம் வரமுடியாமல் இருக்கலாம், அவரை நோக்கி வா! ஒருவேளை நீ இயேசுவிடம் வர முடியாமல் இருந்தாலும், விசுவாசத்தினாலே கிறிஸ்துவிடம் வா, மற்றும் அவர் உன்னை இரட்சிப்பார்! விசுவாசத்தின் மூலமாக இயேசுவை நம்பு, மற்றும் அவர் உன்னை இரட்சிப்பார்! இயேசுவை நம்பு, மற்றும் உன்னுடைய பாவ வியாதியிலிருந்து சுகத்தை பெற்றுக் கொள்வாய். ஆமென்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

பிரசங்கத்துக்கு முன்னதாக வேதப் பகுதியை வாசித்தவர் திரு. நோவா சாங்: லூக்கா 8:43-48.
போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:
“Turn Your Eyes Upon Jesus” (by Helen H. Lemmel, 1863-1961).


முக்கிய குறிப்புகள்

ஒரு மென்மையான மற்றும் கொடுமையான சோகம்

A SOFT AND VIOLENT SADNESS

திரு. ஜான் சாமுவேல் கேஹன், அவர்களால்
by Mr. John Samuel Cagan

“அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும் பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரி, அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய பெரும்பாடு [நின்றுபோயிற்று]” (லூக்கா 8:43-44).

I.      முதலாவது, நீ வியாதியாக இருக்கிறாய், ரோமர் 3:23; ஏசாயா 64:6.

II.    இரண்டாவதாக, உனது வியாதிக்காக சிகிச்சைகளை நீ தேடினாய்,
பிரசங்கி 4:6; 5:15; ரோமர் 6:23.

III.  மூன்றாவதாக, உன்னுடைய பாவ வியாதி இயேசுவால் குணமடையும்,
ஏசாயா 53:4-5; மாற்கு 2:17.