Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




நமது யுத்தத்துக்கான போராயுதங்கள்

THE WEAPONS OF OUR WARFARE
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

ஜனவரி 7, 2017 அன்று கர்த்தருடைய நாள் சனிக்கிழமை மாலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Saturday Evening, January 7, 2017

“எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவை களாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவ பலமுள்ளவைகளாயிருக்கிறது”
(II கொரிந்தியர் 10:4).


என் நண்பர்களே, நாம் யுத்தத்தில் இருக்கிறோம். இது உலகத்திலே பேசப்படும் யுத்தத்தைப் போன்ற யுத்தமல்ல. இது முஸ்லீம் தீவிரவாதிகளோடு செய்யும் போராட்டமும் அல்ல. இது நாடுகளுக்கு இடையே உள்ள போராட்டமும் அல்ல. இது ஒரு வித்தியாசமான போராட்டம். இவைகள் அனைத்தையும்விட இது மிகப்பெரிய யுத்தமாகும். இந்த யுத்தத்தைத் துப்பாக்கிகள் அல்லது கையெரி குண்டுகள் மற்றும் அணுகுண்டுகள் மூலமாக நாம் வெற்றிபெற முடியாது. நமது தாத்தாக்கள் இவ்விதமான ஆயுதங்கள் மூலமாக ஹிட்லரோடு யுத்தம் செய்தார்கள். அவர்கள் இரண்டாம் உலகப்போரில் வெற்றி பெற்றார்கள், அதை சர்ச்சில் இவ்வாறாக எழுதினார், “இரத்தம், உழைப்பு, வியர்வை மற்றும் கண்ணீர்களோடு உள்ள போராட்டம்”. அவர்கள் வித்தியாசமான அடக்குமுறைகளுக்கு விரோதமாகப் போராடி வெற்றி பெற்றார்கள். ஹிட்லருடைய சேனைகள் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க கூட்டுநாடுகளின் சேனைகளின் பலத்தைவிட அதிக பலம் வாய்ந்தவைகளாக இருந்தன. ஹிட்லர் வெற்றி பெற்றிருந்தால், நம்முடைய வாழ்க்கை முறைகளை அழித்துப்போட்டிருப்பான். மேலைநாட்டு நீண்ட வரலாற்றை முடிவு கட்டியிருப்பான். இப்பொழுது நாம் கொள்ளையிடப்பட்ட நிலையில் கொடூரமாக அழிக்கப்பட்டும் பாழாக்கப்பட்டும் இருப்போம் – அணுகுண்டுகளினால் அழிக்கப்பட்ட குப்பைக் கூளங்களைப் போல இருப்போம். சர்ச்சில், ரூசிவெல்ட், அவர்களோடு சேர்ந்து பின்பற்றிப்போன நம்முடைய கூட்டுப்படைகளுக்காகத் தேவனுக்கு நன்றி, அவர்கள் கொடுங்கோல் ஆதிக்கத்தை அழித்தார்கள், அந்தப் பேய்தனமான பைத்தியம் மற்றும் வெறிகொண்ட மனிதன் அடோல்பு ஹிட்லர் மற்றும் அவனுடைய நாசி என்ற போர் இயந்திரத்தையும் அழித்தார்கள்.

அந்த யுத்தத்தைப்பற்றி எனக்கு மங்கிய நியாபகம் மட்டுமே இருக்கிறது. அது என்னுடைய குழந்தை மூளையில் இருட்டடிப்பாக, பயப்படுவதைப்போல ஒலித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் நமது பாடம் வேறுவிதமான போரைப்பற்றிச் சொல்லுகிறது. இது மாம்சத்தோடும் இரத்தத்தோடும் உள்ள ஒரு விரோதிக்கு எதிரான ஒரு போராட்டமல்ல. இது மிகவும் அதிகமான உள்ளான நமக்குத் தொந்தரவு தரக்கூடிய யுத்தம், இது மாம்சத்தோடும் இரத்தத்தோடும் உள்ள ஒரு போராட்டமல்ல, ஆனால் அநேகர் கற்பனை செய்வதைவிட அதிகமான சக்திவாய்ந்ததாகும். அது சாத்தானுக்கும் அவனுடைய பொல்லாத சக்திகளின் கூட்டத்திற்கும் விரோதமாகச் செய்யும் யுத்தமாகும்.

அப்போஸ்தலனாகிய பவுல் இதை மிகவும் எளிமையாக்குகிறார். அவர் சொல்லுகிறார், “நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர்செய்கிறவர்களல்ல” – “நாங்கள் இந்தப் போராட்டத்தை மாம்சத்தின்படி போராடவில்லை” (II கொரிந்தியர் 10:3). நாம் மனிதர்கள் மட்டுமே. நாம் இந்த விரோதியை மனுஷீகமாக தோற்கடிக்க முடியாது. எந்த அரசியல்வாதியும், எந்த சேனாபதியும் அல்லது பிரதான சேனாதிபதியும் – எந்த டோனால்டு டிரம்பும், மாம்சத்தில் மற்றும் இரத்தத்தில் உள்ள எந்த ஒரு மனிதனாலும் சகல போரிலும் மிகவும் பொல்லாத இந்தப் போராட்டத்தை வெற்றி கொள்ளமுடியாது.

“எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவை களாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவ பலமுள்ளவைகளாயிருக்கிறது” (II கொரிந்தியர் 10:4).

I. முதலாவதாக, நாம் போராட்டத்தில் இருக்கிறோம் என்பதை அங்கிகரிக்க வேண்டியது அவசியமாகும்.

சாதாரண மனிதன் இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது என்பதைக்கூட உணரமாட்டான். அவன் தனது சிறிய செல்போனோடு விளையாடும் குழந்தையைப்போல இருப்பான். அவன் தனது மாரிஜூனாவை புகைப்பான் அதனால் உண்டாகும் தீமையை ஒருபோதும் நினைக்கமாட்டான். அவன் விபச்சார பெண்களோடும், வக்கிரமான ஆண்களோடும் பாலியல் விளையாட்டு விளையாடப் போவான். அவனுக்கு, டாக்டர் டோஸர் நன்றாகச் சொன்னதுபோல, “உலகம் யுத்தக் களமாக இருப்பதற்குப் பதிலாக விளையாட்டுக் களமாக இருக்கிறது.”

நமது சபைகளும்கூட பலவித வித்தியாசமான விளையாட்டுகளை விளையாடுகிறது. நமது குருடர்களான பிரசங்கிகள் ஞாயிறு மாலைக் கூட்டங்களை மூடிவிட்டார்கள். அவர்கள் ஞாயிறு இரவுகளில், எங்கும் போகமுடியாமல் பாவ இருளுக்குப் போகும் இளைஞர்களைப்பற்றி ஒருபோதும் நினைப்பதில்லை. இந்த மூளை செத்த பிரசங்கிகளுக்கு எந்த வித்தியாசமும் தெரிவதில்லை. அவர்கள் ஞாயிறு காலையில் தங்களால் முடிந்த அளவு எல்லா பணத்தையும் சேகரித்துக் கொள்ளுகிறார்கள் – அதனால் அவர்களுக்கு ஞாயிறு இரவில் ஏராளமான நேரம் தொலைகாட்சியைப் பார்க்கவும், அல்லது தங்கள் அறையை அடைத்துக்கொண்டு வெட்கமில்லாமல் பாலியல் படங்களைப் பார்க்கவும், அவர்கள் அடிமைகளாகி விட்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் மிகப்பெரியதாக இருந்த மூடி வேதாகம நிறுவனங்களில்கூட இப்பொழுது தங்கள் உத்தியோகஸ்தர் மற்றும் மேலாளர்களுக்கு குடிபோதை மற்றும் புகையிலை உபயோகிக்க அனுமதிக்கிறார்கள். பையோலா பல்கலைகழகம் சென்ற ஆண்டில் இதுபோன்ற சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது (Don Boys, Ph.D., December 26, 2016). நான் பல ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கின ஒரு சபையில் ஒரு போதகருடைய மகனின் திருமண விருந்தில் பீர் மற்றும் ஒயின் பரிமாறப்பட்டு மக்கள் நடனமாடினதைக் கண்டு நானும் என்னுடைய மனைவியும் அதிர்ச்சி அடைந்தோம். “பீர், பைபிள் மற்றும் சகோதரத்துவம்” ஒரு சபையில் கூடிக்கொண்டு ரிக்வான் புத்தகத்தை ஆராய்சி செய்கிறார்கள் அது ஆக்ஸ்போர்டு, கனெக்டிகட் என்ற இடத்தில் உள்ளது. அப்படிப்பட்ட சம்பவங்கள் அமெரிக்காவில் எல்லா இடங்களிலும் உள்ள சபைகளில் நடைபெறுகின்றன (Boys, ibid.).

ஞாயிறு காலையில் நம்முடைய அநேக சபைகளில் ஒரு மணி நேரத்திற்குப் பண்படாத இசை வாசிக்கப்படுகின்றன – அதைத் தொடர்ந்து ஒரு பதினைந்து நிமிட உலர்ந்த குப்பையைப் போன்ற வசனத்துக்கு வசனம் “போதனையும்” அதில் சுவிசேஷம் இல்லாமல் அல்லது கிறிஸ்துவைக் குறிப்பிடாமல், இழக்கப்பட்ட மக்கள் சுவிசேஷத்தின் மூலமாகச் சபைக்குக் கொண்டுவரப்படாமல், ஒரு இழக்கப்பட்ட பாவி எப்படி இரட்சிக்கப்படுவது என்று குறிப்பிடாமல் இருக்கும் ஒரு போதனை! ஆமாம், ஒரு பெரிய யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது சபை மக்கள் அதற்கு முற்றிலுமாக குருடர்களாக இருக்கிறார்கள், அவர்கள் தங்கள் சிறிய விளையாட்டுகளை விளையாடிக்கொண்டு தாங்கள் உண்மையான கிறிஸ்தவர்கள் என்று நினைக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் ஜெபக்கூட்டங்களுக்கு போவதில்லை. சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுவதைக் கேட்க அவர்கள் இழக்கப்பட்ட மக்களை ஒருபோதும் கொண்டுவருவதில்லை. “அவர்களை விட்டு வெளியே வாருங்கள்”. அப்படிப்பட்ட ஒரு சபையில் ஒருபோதும் சேரவேண்டாம். நீ அப்படிப்பட்ட ஒன்றில் ஏற்கணவே சேர்ந்திருந்தால், அதைவிட்டு ஓடு, நியாயத்தீர்ப்பின் நாளிலே லோத்து சோதோமை விட்டு ஓடினதுபோல ஓடிவிடு.

நான் நரைத்த முதிர் வயதானவன். சில நாளில் நான் இங்கே இருக்கமாட்டேன். ஆனால் நான் உங்களுக்கு எச்சரித்துச் சொல்லுவது என்னவென்றால் நமது சபையில் கூடுபவர்கள் இப்படிப்பட்ட பைத்தியக்காரத்தனத்துக்கு இடங்கொடுக்க வேண்டாம். இப்படிப்பட்ட உலகப்பிரகாரமான முட்டாள்தனத்திற்கு ஒருபோதும் இடந்தர வேண்டாம். ஒருபோதும் வேண்டாம்! ஒருபொதும்! ஒருபோதும்! ஒருபோதும். கடந்த காலத்தின் எழுப்புதலின் பழைய பாடலை ஒருபோதும் விட்டுவிட வேண்டாம். சற்றுமுன் திரு. கிரிஃபித் பாடின அந்த மிகப்பழைய பாடலை ஒருபோதும் விட்டுவிட வேண்டாம்! அது உங்கள் பாட்டுத்தாளில் 10வது பாடலாகும். அது “தொடர்ந்து செல், கிறிஸ்தவப் போர்வீரனே” என்ற பாடலாகும். எழுந்து நின்று பாடுவோம் – சத்தமாகவும் தெளிவாகவும்!

தொடர்ந்து செல், கிறிஸ்தவப் போர்வீரனே,
   போராட்டத்தில் முன்னேறுவதுபோல,
கிறிஸ்துவின் சிலுவையோடு
   முன்னேறிச் செல்வதைப் போல்;
கிறிஸ்துவாகிய இராஜரீக தலைவர்
   சத்துருவுக்கு எதிராக நடத்துகிறார்;
யுத்தத்திற்கு முன்னாக,
   அவரது கொடிகள் பேகிறதைப் பார்.
தொடர்ந்து செல், கிறிஸ்தவ போர்வீரனே,
   போராட்டத்தில் முன்னேறுவதுபோல,

கிறிஸ்துவின் சிலுவையோடு
   முன்னேறிச் செல்வாய்.
வல்லமையான சேனை போவதுபோல
   தேவனுடைய சபை முன்னேறுகிறது;
சகோதரர்களே, பரிசுத்தவான்கள் நடந்த
   அடிச்சுவட்டில் நாம் நடக்கிறோம்;
நாம் பிரிக்கப்பட்டில்லை,
   நாம் அனைவரும் ஒரே சரீரமாக இருக்கிறோம்,

ஒரே நம்பிக்கையிலே மற்றும் போதனையிலே,
   அன்பின் கிரியையிலே நமக்கு ஒற்றுமை.
தொடர்ந்து செல், கிறிஸ்தவ போர்வீரனே,
   போராட்டத்தில் முன்னேறுவதுபோல,
கிறிஸ்துவின் சிலுவையோடு
   முன்னேறிச் செல்வாய்.
கிரிடங்கள் மற்றும் முட்கள் அழிந்துபோகலாம்,
   இராஜ்ஜியங்கள் எழலாம் மற்றும் விழலாம்,
ஆனால் இயேசுவின் சபை
   நிலையாக நிலைக்கும்;

பாதாளத்தின் வாசல்கள் ஒருபோதும்
   சபையை வெற்றிகொள்ள முடியாது;
நமக்கு கிறிஸ்துவின் சொந்த வாக்கு உண்டு,
   அது தோல்வியுற முடியாது.
தொடர்ந்து செல், கிறிஸ்தவ போர்வீரனே,
   போராட்டத்தில் முன்னேறுவதுபோல,
கிறிஸ்துவின் சிலுவையோடு
   முன்னேறிச் செல்வாய்.
(“Onward, Christian Soldiers” by Sabine Baring-Gould, 1834-1924).

நீங்கள் அமரலாம்.

“எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவை களாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவ பலமுள்ளவைகளாயிருக்கிறது” (II கொரிந்தியர் 10:4).

நம்முடைய போராயுதங்கள் மாம்சத்துக்கு, அல்லது மனிதர்களுக்கு உரியதல்ல. அவைகள் அதிஉன்னதமான போராயுதங்கள். அவைகள் அதிஉன்னதமான ஆயுதங்களாக இருக்க வேண்டும் ஏன் என்றால் நாம் அதிக உன்னதங்களிலுள்ள சக்திகளோடு போராடுகிறோம். நாம் சாத்தானோடும் அவனுடைய பிசாசுகளோடும் போராடுகிறோம். நாம் போராடுவது “பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்க” (எபேசியர் 6:11). கிறிஸ்தவர்களாகிய நாம் பிசாசின் திட்டங்களுக்கு விரோதமாகப் போராடுகிறோம். நாம் பொய்யான யோசனைகள் மற்றும் திரிக்கப்பட்ட காரியங்கள் போன்ற சாதனங்களுக்கு விரோதமாகப் போராடுகிறோம். மாற்றப்படாத மக்கள் மனதில் பிசாசு கொடுக்கும் எண்ணங்களுக்கு விரோதமாகப் போராடுகிறோம். வேதம் சொல்லுகிறது, “மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு” (எபேசியர் 6:12 NIV). நாம் பிசாசுக்கு விரோதமாகவும், பொல்லாத சக்திகளுக்கு விரோதமாகவும் போராட வேண்டியது அவசியமாகும். ஒவ்வொரு இழக்கப்பட்ட ஆத்துமாவுக்காகவும் பிசாசுக்கு விரோதமாகப் போராடி சபைக்குக் கொண்டுவர வேண்டியது அவசியமாகும். ஒரு போராட்டம் இல்லாமல் அவன் அவர்களைப் போகவிட மாட்டான்.

நீ இன்னும் இரட்சிக்கப்படாவிட்டால் இப்பொழுது உன்னுடைய மனதில் பிசாசுகள் கிரியைசெய்து கொண்டிருக்கின்றன! இப்பொழுதே இந்தக் கூட்டத்திலே, பிசாசுகள் கிரியைசெய்து கொண்டிருக்கின்றன. நான் பேசிக்கொண்டு இருக்கும்பொழுதே, உன்னுடைய மனதில் பிசாசு தன்னுடைய தந்திரங்களையும் திட்டங்களையும் கொடுத்துக் கொண்டிருக்கிறான். பிசாசு, “கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவின் ஆவி” (எபேசியர் 2:2 NIV). உன்னுடைய மனதில் மற்றும் இருதயத்தில் பிசாசு “இப்பொழுது கிரியை செய்கிறான்” என்று வேதம் சொல்லுகிறது.

ஜூலி என்ற பெண் இரட்சிக்கப்படுவதற்கு முன்பாக என்ன சொன்னாள் என்று கவனியுங்கள். “டாக்டர் ஹைமர்ஸ் என்னிடம் நான் இழக்கப்பட்டேன் மற்றும் விசாரனை அறைக்குப் போகவேண்டும் என்று சொன்னார். அதனால் நான் சபைக்கு வருவதற்கு பயப்பட்டேன்”. அதுதான் அவளுடைய மனதில் மற்றும் இருதயத்தில் பிசாசு பேசினதாகும். உங்களில் சிலர் இப்பொழுதே பிசாசினால் ஏமாற்றப்படுகிறீர்கள். நீங்கள் இழக்கப்பட்டீர்கள் என்று நான் சொல்லுகிறேன், ஆனால் நீங்கள் அதைக் கேட்க விரும்பவில்லை. நீங்கள் இழக்கப்பட்டீர்கள் என்பதைக் கேட்க விரும்பவில்லை, ஏனென்றால் நீங்கள் சாத்தானுடைய எண்ணங்களை, பிசாசினுடைய எண்ணங்களைக் கவனிக்கிறீர்கள். ஜூலி சொன்னாள், “நான் நல்லவள் என்று நான் நினைத்தேன், என் வாழ்க்கைக்குத் தேவையானதெல்லாம் அதுவாகவே இருந்தது”. அவள் தனது வாழ்நாள் முழுவதும் சபையில் உள்ளவளாக இருந்தாள், அது போதுமான நல்லதல்லவா? நான் இழக்கப்பட்டவள் என்று ஏன் டாக்டர் ஹைமர்ஸ் சொல்லுகிறார்? நான் நல்லவளாக இருந்தேன். “மற்றப் பிள்ளைகள் செய்வதைப்போல நான் செய்யாதபடியினால் நான் பெருமையாக இருந்தேன்… நான் எனக்கு நானே பெருமையாக இருந்தேன் என்னில் எந்த தவறும் இல்லை என்று நினைத்திருந்தேன்”. அதுதான் அவளுடைய மனதில் பிசாசு செய்த கிரியையாகும்.

நீயும் அதைப் போல நினைக்கிறாயா? நீ போதுமான அளவிற்கு நல்லவன் என்று நினைக்கிறாயா? வேதாகமம் சொல்லுகிறது பிசாசு “கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிறான்”. பிசாசு இப்பொழுது உனக்குள் கிரியை செய்கிறான். உன்னுடைய மனதுக்குள்ளும் இருதயத்துக்கு உள்ளும் அவன் கிரியை செய்கிறான்!

ஜூலி சொன்னாள், “என்னால் முடிந்த வரையிலும் நான் நல்லவளாக இருந்தேன். அவர்களுக்கு இன்னும் என்ன வேண்டும்?... ஒவ்வொரு பிரசங்கத்தின் போதும் நான் கவலைப்பட்டேன். அந்த வாரத்தின் ஒவ்வொரு நாளும் நான் ஒருவிதமான கஷ்டத்தை உணர்ந்தேன்”. பிசாசு அவளுக்குக் கிரியை செய்துகொண்டிருந்தான், அவள் தன்னை நல்லவள் என்று கூறும்படியாக. அவள் இரட்சிக்கப்படவேண்டிய அவசியமில்லை என்று பிசாசு நினைத்தான். அவள் நல்லவளாக இருக்கிறாள் என்று பிசாசு நினைக்க வைத்தான். மற்றவர்கள் அவளைவிட மிகவும் பாவம் நிறைந்தவர்களாக இருந்தார்கள் என்று பிசாசு நினைக்க வைத்தான். அவர்கள் இரட்சிக்கப் படவேண்டிய அவசியம் இருந்தது. ஆனால் அவள் அல்ல! அவள் ஏற்கனவே போதுமான அளவு நல்லவள். அதுதான் பிசாசிடமிருந்து வந்தது. அவள் சாத்தானுடைய பிடியில் இருந்தாள். அவள் பிசாசுக்கு அடிமையாக இருந்தாள். அவள் பிசாசினால் கட்டப்பட்டிருந்தாள், அவனால் கட்டப்பட்டாள் ஏன் என்றால் அவள் போதுமான அளவு நல்லவள் என்ற பொய்யை விசுவாசித்தாள், மற்றவர்கள் மட்டுமே கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட வேண்டியது அவசியம். ஆனால் அவள் அல்ல. எல்லாவற்றும் மேலாக, அவள் ஒவ்வொரு ஞாயிறும் சபைக்கு வந்தாள். எல்லாவற்றும் மேலாக, அவள் வேதம் வாசித்து ஜெபித்தாள். “அவர்களுக்கு இன்னும் என்ன வேண்டும்?” அவள் இழக்கப்பட்டாள் என்று நான் சொல்வதை ஜூலி விரும்பவில்லை. இயேசுவின் இரத்தத்தினால் சுத்தமடையாமல் இழக்கப்பட்டாள். ஆனால் எதிர்க்க முடியாத தேவனுடைய கிருபையினால் அவள் மறுபடியும் மறுபடியுமாக நமது சபைக்கு இழுக்கப்பட்டாள். இரட்சிக்கப்பட அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை எதிர்க்க முடியாத தேவனுடைய கிருபையினால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷத்தைக் கேட்பதற்கு அவள் திரும்ப இழுக்கப்பட்டாள்.

அவள் ஏன் திரும்பி வந்து கொண்டிருந்தாள்? நான் அவளிடம் விசாரனை அறைக்குப் போகவேண்டியது அவசியம் என்று சொன்னபொழுது அவள் தன்னோடு நமது சபைக்குக் கூட்டிக்கொண்டு வந்திருந்த ஒரு தோழி மிகவும் கவிழ்ந்துவிட்டாள் அதனால் அவள் ஒருபோதும் திரும்ப வரவில்லை. அந்தப் பெண் பிசாசை நம்பினாள் ஆகையால் தன்னுடைய பழைய சபைக்குத் திரும்பிப் போய்விட்டாள், அந்த சபையில் அவள் இழக்கப்பட்டாள் என்று ஒருவரும் சொல்லவில்லை. அந்தப் பெண் பிசாசைக் கவனித்தாள் அதனால் இந்தச் சபையை விட்டு ஓடிப்போய்விட்டாள் ஏன் என்றால் அவளுடைய பாவத்திற்கு விரோதமாக நான் பிரசங்கிப்பதை அவள் விரும்பவில்லை. அந்த பெண்ணின் பாவம் என்ன என்று ஜூலியின் தகப்பனார் எனக்குச் சொன்னார். அது ஒரு அசுத்தமான பாவம் அதை விட்டுவிட அவள் விரும்பவில்லை. அவள் சத்தியத்தை விட்டு ஓடிப்போனாள் ஒருவேளை அவள் ஒருபோதும் இரட்சிக்கப்படாமல் போகலாம் – ஏனென்றால் அவள் அடிமையாக இருந்த தன்னுடைய எஜமானுக்கு, பிசாசுக்குக் கீழ்ப்படிந்தாள்.

அவளைப்போல இருக்கும் மக்கள் இந்த அறையில் இருக்கிறார்கள். நீ பிசாசினால் கட்டப்பட்டிருக்கிறாய். உன்னுடைய பாவத்தை நீ நேசிக்கிறாய். உன்னுடைய பாலியல் வீடியோவை நீ நேசிக்கிறாய். உன்னுடைய அசுத்தத்தை நீ நேசிக்கிறாய். நீ உள்ளாக இருக்கிறபடி உன்னை நீ நேசிக்கிறாய். அதை உணராமலேயே, நீ பிசாசுக்கு உன்னை அடிமையாக்கிவிட்டாய்!

நீ இயேசுவை புறக்கணிப்பதுதான் உன்னுடைய மோசமான பாவம். அவர் உன்னை இரட்சிக்க விரும்புகிறார் உன்னுடைய பாவங்களிலிருந்து உன்னை தமது இரத்தத்தினால் கழுவுவார். ஆனால் நீ இயேசுவைப்பற்றிய எண்ணங்களை எல்லாம் உனது மனதுக்கு வெளியே தள்ளிவிட்டு உன்னுடைய பாவத்திலே தொடர்ந்து போகிறாய்.

II. இரண்டாவதாக, நமது யுத்தத்தின் போராயுதங்கள்.

நமது பாடம் சொல்லுகிறது, “எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக் கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவை களாயிருக்கிறது”. நாம் பிசாசுக்கு விரோதமாக பிரதானமாக உபயோகப்படுத்தும் போராயுதங்கள் ஜெபம் மற்றும் தேவனுடைய பிரமாணம், நீ இழக்கப்பட்ட ஒரு பாவி என்று சொல்லும் பிரமாணமாகும். நீ பாவம் நிறைந்தவன் என்று பிரமாணம் சொல்லுகிறது. எங்களுடைய ஜெபங்கள் பரிசுத்த ஆவியானவரைக் கீழே கொண்டுவந்து உன்னுடைய பாவங்களை உணர வைப்பதாகும்.

அதனால்தான் இழக்கப்பட்டவர்கள் தங்கள் பாவ உணர்வை அடைய வேண்டும் என்று நாம் முழு இருதயத்தோடும் ஜெபிக்க வேண்டியது அவசியம். நாம் ஜெபிக்காவிட்டால் அவர்கள் இரட்சிக்கப்பட மாட்டார்கள் என்ற சில மக்கள் இன்று இரவிலே இந்த சபையிலே இருக்கிறார்கள். அவர்களுக்காக நாம் மிகுந்த தைரியத்தோடும் கண்ணீரோடும் ஜெபிக்கத் தவறினால் அவர்கள் இரட்சிக்கப் படமாட்டார்கள். நாம் கண்ணீரோடு ஜெபிக்கும்போது மட்டுமே இழக்கப்பட்ட பாவிகள் பாவ உணர்வுக்குள்ளாக வருவார்கள். கண்ணீரில்லாத ஜெபங்கள் பதில் பெற முடியாதவைகள். ஏசாயா செய்ததுபோல நாம் ஜெபிக்கவேண்டியது அவசியமாகும்,

“தேவரீர் வானங்களைக் கிழித்திறங்கி, உருக்கும் அக்கினி எரியுமாப்போலவும் அக்கினி தண்ணீரைப் பொங்கப் பண்ணுமாப்போலவும், பர்வதங்கள் உமக்குமுன்பாக உருகும்படிசெய்யும்” (ஏசாயா 64:2).

நாம் ஜெபிக்கவேண்டியது அவசியமாகும், இதுவரையிலும் ஒருபோதும் ஜெபிக்காததுபோல, தேவனுடைய ஆவி இரங்கிவந்து இழக்கப்பட்ட மக்களை பாவ உணர்வடையச் செய்யும்படி ஜெபிக்க வேண்டும். பாலியல் வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் பாவத்தை அவர்கள் உணர்த்தப்படும்படி ஜெபிக்க வேண்டும். அவர்கள் தங்கள் பெற்றோரை வெறுக்கும் பாவத்தை உணர்த்தும்படி ஜெபிக்க வேண்டும். தங்கள் சொந்த நன்மையிலே இருக்கும் பெருமை என்ற பாவத்தை உணர்த்தும்படி ஜெபிக்க வேண்டும். இயேசுவைப் புறக்கணிக்கும் பாவத்தை உணர்த்தும்படி ஜெபிக்க வேண்டும்.

அவர்களுக்குப் பிரமாணத்தைப் பிரசங்கிக்க வேண்டியது அவசியம். பிசாசுக்கு விரோதமாகச் செய்யும் யுத்தத்தில் நமது பிரதான ஆயுதங்கள் ஜெபம் மற்றும் பிரமாணத்தை பிரசங்கித்தலாகும். நான் ஜூலிக்கு ஞாயிறுக்குப்பின் ஞாயிறாகத் தொடர்ந்து பிரசங்கித்துக் கொண்டு வந்தேன். அவள் சொன்னாள், “டாக்டர் ஹைமர்ஸ் நேராக என்னுடைய பாவத்திற்கு விரோதமாகப் பிரசங்கம் செய்ய ஆரம்பித்துவிட்டார். அவர் பிரசங்கத்தார் எப்பேற்பட்ட பாவமுள்ள பிள்ளைகளாக [இருக்கிறோம்] என்றும் எப்படியாகத் தங்கள் பெற்றோருக்கு விரோதமாகத் திரும்புகிறார்கள் என்றும் பிரசங்கித்தார், நான் உடைக்கப்பட்டுக் கண்ணீர் விட்டேன். அந்தப் [பாவத்தைக்] குறித்துத் தேவன் என்னோடு சலக்கிரனை செய்ய ஆரம்பித்தார். நான் [மெய்யாகவே] ஒரு பயங்கரமான பிள்ளை, விசேஷமாக என்னுடைய பெற்றோருக்கு. என்னுடைய தகப்பனார்மீது இருக்கும் வெறுப்பை மூடும்படியான ஒரு செயல் அது. நான் மெய்யாகவே நல்லவள் அல்ல என்று பரிசுத்த ஆவியானவர் காட்டினார். நான் மெய்யாகவே நல்லவள் அல்ல. மக்கள் என்னைப் பார்ப்பதுபோல நான் மெய்யாகவே அவ்வளவு நல்லவள் அல்ல, நான் என்னைப் பற்றி நினைத்தது போலவும் நல்லவள் அல்ல. நான் ஒரு பயங்கரமானவளாக இருந்தேன், நான் சுயநலவாதியாகவும் மிகவும் பெருமையுள்ளவளாகவும் இருந்தேன், என்னைப்பற்றி மிகவும் வெட்கமாக உணர்ந்தேன், உள் ஆழத்திலே நான் யாராக இருந்தேன் என்பதற்காக வெட்கப்பட்டேன். எனக்கு மன்னிப்பு கட்டாயம் அவசியமாக இருந்தது, ஆனால் அதற்கு இன்னும் நான் தகுதியற்றவளாக உணர்ந்தேன். நான் பாவம் நிறைந்தவள் மற்றும் தவறானவள் என்று உணர்ந்தேன். என்னைப் போன்ற ஏமாற்றும் பாவிக்கு யார் மன்னிப்புக் கொடுக்க முடியும்?” போராயுதங்களான ஜெபம் மற்றும் தேவனுடைய பிரமாணம் பிரசங்கிக்கப்பட்டதானது அவள்மீது இருந்த பிசாசினுடைய வல்லமையைக் கொன்றுகொண்டு இருந்தது. “எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிற தற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது” (II கொரிந்தியர் 10:4). சாத்தானுடைய அரண்கள் மிகவும் பலமுள்ளவைகள். அவைகள் உன் இருதயத்திற்குள் இருக்கும் சாத்தானுடைய சிறையில் உன்னை வைத்திருக்கும் கோட்டைகள். அது தேவனுடைய வல்லமையைக் கொண்டு சாத்தானுடைய மதில் சுவர்களைத் தகர்த்து உன்னை விடுதலையாக்கும்.

அவர் தள்ளிவிடப்பட்ட பாவத்தின் வல்லமையை உடைக்கிறார்,
   அவர் சிறைப்பட்டவரை விடுதலையாக்குகிறார்.
அவருடைய இரத்தம் அதிக அழுக்கையும் சுத்திகரிக்க முடியும்,
   அவருடைய இரத்தம் எனக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்தது.
(“O For a Thousand Tongues” by Charles Wesley, 1707-1788).

உன்னுடைய பலமான அரண் என்ன? உன்னைச் சாத்தானுடைய சிறையில் பூட்டி வைத்திருப்பது என்ன? அது ஆபாச வீடியோக்களா? அது போதைப் பொருள்களா? நீ போதுமான அளவிற்கு நல்லவன் என்ற எண்ணம் உள்ளவனா, நீ சபைக்கு வருவதால் வேதாகமத்தைப் படிப்பதால் மற்றும் ஜெபிப்பதால் நீ மாறுதல் அடைய வேண்டிய அவசியமில்லை என்ற எண்ணம் உள்ளவனா? இவ்விதமாக உன்னைப் பிசாசினுடைய சிறையில் – அரணில் பூட்டி வைத்திருப்பது என்ன?

ஜூலி விடுதலையாக்கப்படும்படியாக நமது மக்கள் கஷ்டப்பட்டு ஜெபித்தார்கள் அதற்காகத் தேவனுக்கு நன்றி! நான் பிரமாணத்தைப் பிரசங்கித்தேன், பிறகு ஒவ்வொரு போதனையிலும் அவள் இழக்கப்பட்டாள் என்று அவளிடம் சொன்னேன் அதற்காகத் தேவனுக்கு நன்றி.

“எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவை களாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவ பலமுள்ளவைகளாயிருக்கிறது” (II கொரிந்தியர் 10:4).

என்னுடைய ஒரு போதனையை முடித்த பிறகு ஜூலி என்னை வந்து பார்த்தாள். அவள் சொன்னாள், “டாக்டர் ஹைமர்ஸ் என்னிடம் சொன்னார் என்னுடைய இடத்தில் இயேசு சிலுவையில் மரித்தார், [தேவனுடைய] நியாயத்தீர்ப்பு அவர்மேல் விழுந்தது அதனால் அது என்மேல் விழாது என்றார். இயேசுவும் அவருடைய இரத்தமும் எனக்கு ஏன்வேண்டும் என்று இப்பொழுது நான் அறிந்திருக்கிறேன்… எனக்கு இயேசு வேண்டும் ஏனென்றால் என்னுடைய பாவங்கள் முழுவதுமாக [அவருடைய இரத்தத்தினால்] கழுவப்பட முடியும். என்னுடைய வாழ்க்கையில் என்ன பாவம் இருந்தாலும் பரவாயில்லை இயேசு என்னை நேசிக்கிறார் மற்றும் இரட்சிப்பார் என்று டாக்டர் ஹைமர்ஸ் என்னிடம் சொன்னார். இயேசுவை நம்பவேண்டும் என்று அவர் சொன்னார். நான் அதை இனிமேலும் எளிமையாக எடுத்துக் கொள்ள முடியாது. எனது முகம் கண்ணீரால் மூழ்கினது நான் கிறிஸ்துவை நம்பத் தயாராக இருந்தேன்… முழங்கால் படியிட்டு, நான் கிறிஸ்துவை நம்பினேன். நான் கிறிஸ்துவை நம்பினேன், என்னுடைய நன்மையை அல்ல. நான் கிறிஸ்துவிலும் அவருடைய இரத்தத்திலும் நம்பிக்கை வைத்தேன்… நான் இனிமேலும் எவ்வளவு நல்லவள் என்பதில் நிலைத்திருக்க மாட்டேன் என்னுடைய தற்பெருமையை விட்டுவிடுகிறேன். நான் இயேசுவை நம்பினேன் அவர் என்னை இரட்சித்தார்!”

என்ன ஒரு அற்புதமான சாட்சி! இப்பொழுது ஜூலி இரட்சிக்கப் பட்டிருக்கிறாள், அவள் என்னுடைய தோழி! இப்பொழுது அவள் ஒரு கிறிஸ்தவள் என்று நான் உண்மையாக நம்புகிறேன். அப்படியே டாக்டர் கேஹனும் நம்புகிறார். இனி உள்ள எதிர்காலத்தில் நான் விரைவில் அவளுக்கு ஞானஸ்நானம் கொடுப்பேன்.

இன்று இரவிலே அவளுடைய வார்த்தைகள் உன்னிடம் பேசுகிறதா? நீ எவ்வளவு பாவம் நிறைந்தவன் என்று உணர்ந்தாயா? இயேசுவை நம்பவேண்டிய தேவையை நீ பார்த்தாயா உன்னுடைய எல்லா பாவங்களிலிருந்தும் அவர் சிலுவையிலே சிந்தின இரத்தத்தில் சுத்திகரித்துக் கொண்டாயா? இயேசு உன்னை மிகவும் அதிகமாக நேசிக்கிறார். நீ கீழே இறங்கி வந்து என்னோடு, ஜான் கேஹன், மற்றும் டாக்டர் கேஹன் அவர்களோடு இயேசுவை நம்புவதைப் பற்றிப் பேச முடியுமா? ஒவ்வொருவரும் உணவுக்காக மேல்மாடிக்குப் போகும்போது, நாங்கள் உனக்கு ஆலோசனை சொல்லி உன்னோடு ஜெபிக்க நீ இங்கே கீழே இறங்கி வருவாயா? நீ ஓய்வு அறைக்கு போகவேண்டியிருந்தால், சென்று திரும்பி இங்கே வரலாம் – அல்லது நாம் பாடலைப் பாடும்போது இப்பொழுதே நேராக வரலாம். தேவனே இந்த ஆகாரத்தை ஆசீர்வதியும் மற்றும் இன்று இரவில் இயேசுவை நம்பும் ஒவ்வொருவரையும் ஆசீர்வதியும்! ஆமென்!

நீங்கள் எழுந்து நின்று உங்கள் பாட்டுத்தாளில் பதினோராவது பாடலைப் பாடவும். “என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும்” என்ற பாடலைப் பாடுங்கள். அது உங்கள் பாட்டுத் தாளில் உள்ள பதனோராவது பாடலாகும். நாம் பாடும்பொழுது, நீங்கள் இறங்கி இங்கே வரலாம் அதனால் நான் உங்களுக்கு ஆலோசனை கொடுக்கவும் உங்களோடு ஜெபிக்கவும் முடியும்.

என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், இரட்கரே, நான் ஜெபிக்கிறேன்,
   இயேசுவை மட்டும் இன்று நான் பார்க்கும்படி செய்யும்;
பள்ளதாக்கிலே நீர் என்னை நடத்தினாலும்,
   உமது மட்டற்ற மகிமை என்னைச் சுற்றிக் கொள்கிறது.
என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், தெய்வீக இரட்சகரே,
   உமது மகிமையினால் எனது ஆவி பிரகாசிக்கும் வரையிலும்.
என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், அனைவரும் பார்க்கட்டும்
   உமது பரிசுத்த சாயல் என்னில் பிரதிபலிப்பதை.

என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், பாவமில்லாமலும்
   பாவத்தில் பிரகாசிக்கும் வெளிச்சத்தின் நிழலுமில்லாமலும்.
உம்முடைய ஆசிர்வதிக்கப்பட்ட முகத்தை மட்டும் பார்ப்பேனாக,
   உமது அளவில்லாத கிருபையினால் என் ஆத்துமாவுக்கு விருந்தளியும்.
என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், தெய்வீக இரட்சகரே,
   உமது மகிமையினால் எனது ஆவி பிரகாசிக்கும் வரையிலும்.
என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், அனைவரும் பார்க்கட்டும்
   உமது பரிசுத்த சாயல் என்னில் பிரதிபலிப்பதை.
(“Fill All My Vision” by Avis Burgeson Christiansen, 1895-1985).

ஆமென்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

பிரசங்கத்துக்கு முன்னதாக வேதப் பகுதியை வாசித்தவர் திரு. ஜான் சாமுவேல் கேஹன்:
II கொரிந்தியர் 10:3-5.
போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:
“Onward, Christian Soldiers”
(by Sabine Baring-Gould, 1834-1924; stanzas and chorus, verses 1, 2 and 3).


முக்கிய குறிப்புகள்

நமது யுத்தத்துக்கான போராயுதங்கள்

THE WEAPONS OF OUR WARFARE

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

“எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவை களாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவ பலமுள்ளவைகளாயிருக்கிறது”
(II கொரிந்தியர் 10:4).

I. முதலாவதாக, நாம் போராட்டத்தில் இருக்கிறோம் என்பதை அங்கிகரிக்க வேண்டியது அவசியமாகும், எபேசியர் 6:11,12; எபேசியர் 2:2.

II. இரண்டாவதாக, நமது யுத்தத்தின் போராயுதங்கள், ஏசாயா 64:1.