Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




இரண்டு ஆதாம்கள்
மரித்துக் கொண்டிருக்கும் நம்முடைய சபைகளில்
நாம் கேட்க வேண்டிய போதனை!

(ஆதியாகமம் புத்தகத்தின் 90வது போதனை)
THE TWO ADAMS –
THE KIND OF SERMON WE NEED TO HEAR
IN OUR DYING CHURCHES TODAY!
(SERMON #90 ON THE BOOK OF GENESIS)
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

டிசம்பர் 4, 2016 அன்று கர்த்தருடைய நாள் ஞாயிறு மாலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, December 4, 2016

“¬தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்” (ஆதியாகமம்2:16-17).


தேவன் முதல் மனிதனை பூமியின் மண்ணினாலே சிருஷ்டித்தார். வாலிபனாக இருந்தபொழுது நான் ஒருபோதும் இதை விசுவாசிக்கவில்லை. 1961ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நான்காவது வாரம் வரையிலும், நான் வளர்தலின் தத்துவத்தை விசுவாசித்தேன். அந்த ஆண்டின் செப்டம்பர் 28ம் நாள் நான் உடனடியான ஒரு மாறுதலுக்கு உள்ளானேன், வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு மாறுதல். அந்த ஒரு வாரத்தில் எல்லாமே மாறுதலடைந்தது. அவைகளில் வேதாகமத்தில் உறுதியான விசுவாசமே மிக முக்கியமான மாறுதலாகும். அப்போதுதான் நான் உணர்ந்தேன், வளர்தலின் தத்துவம் என்பது ஏமாற்றுதல், அது வெறும் விஞ்ஞான கட்டுக்கதை, மார்மான் புத்தகத்தைப் போலும் குறானைப் போலும் இது பொய்யானது. என்னுடைய மாறுதலில் என்னுடைய மனதை டார்வினிசத்தை விசுவாசித்ததிலிருந்து வேதாகமத்தின் எபிரெய மற்றும் கிரேக்க வாய்மொழியான வார்த்தைகளின் உணர்த்துதல்களுக்கு முழுமையாக ஒப்புக் கொடுத்தேன். இப்பொழுது என்னுடைய ஆத்துமாவில் நான் உணர்ந்திருப்பது “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது… பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது” (II தீமோத்தேயு 3:16-17). ஒவ்வொரு வேத வசனமும் தேவனால் அருளப்பட்டு (theopneustos) இருக்கிறபடியினால் வேதாகமத்தில் எந்தச் சாத்தியமான தவறும் இருக்காது – ஒவ்வொரு வார்த்தையும் – ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரையிலும் – இந்தப் பரிசுத்த புத்தகத்தை எழுதின மனிதர்களுக்குத் தேவனால் கொடுக்கப்பட்டவைகளாகும்! வேதாகமம் சொல்லுகிறது, “தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்” (ஆதியாகமம் 2:7). அதன்பிறகு தேவன் முதல் மனிதனை சிருஷ்டித்தார், மனிதன் தாழ்வான உயிர்நிலையிலிருந்து வளர்ந்தவனல்ல என்று அறிந்து கொண்டேன். ஆதியாகமம் பதிவு செய்திருக்கும் மனித சிருஷ்டிப்பு எழுத்துப்பூர்வமாக உண்மை என்றும் வளர்தலின் தத்துவம் என்பது சாத்தானுடைய பொய் என்பதையும் அதன்பிறகு அறிந்து கொண்டேன்.

பிறகு தேவன் அழகான தோட்டத்திலே அவனை வைத்தார், அந்தத் தோட்டத்தில் இருந்த மரங்களெல்லாம் புசிப்பதற்கு நல்லதாகச் சத்துமிகுந்ததாக இருந்தன. அநேக ஆரோக்கிமான மரங்களும் பழங்களும் இப்பொழுது இல்லை ஏனென்றால் அந்தப் பெரிய வெள்ளத்தில் அவைகள் அழிந்து போயின.

ஆனால் தோட்டத்தின் மத்தியில் மிகமுக்கியமான இரண்டு மரங்கள் இருந்தன – ஜீவ விருட்சம் மற்றும் நன்மை தீமை அறியக்கூடிய மரம். தேவன் ஆதாமுக்கு ஒரே ஒரு சட்டத்தைக் கொடுத்தார், “நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்” (ஆதியாகமம் 2:17). ஆதியாகமம் 2:17ல் “அறிவு” என்ற வார்த்தை “யடா” என்ற மூலப் பதத்திலிருந்து வந்ததாகும். அதன் பொருள் “நெருக்கமான, ஒரு நண்பனோடிருப்பதுபோல” என்பதாகும் (உறுதியாக). விலக்கப்பட்ட கனியைப் புசித்தால் அவர்கள் அதற்கு அடிமைகளாகிவிடுவார்கள் என்பதாகும். விவாகத்திற்கு வெளியில் நிகழ்ந்த ஒரு பால் உணர்வு அனுபவமானது மனதிலே எப்பொழுதுமாகத் தங்கி இருக்கிறது ஏனென்றால் அதைச் செய்தவர் அதற்கு அடிமையாகி இருக்கிறார். ஒரு குறிப்பிட்ட போதைப் பொருளின் அனுபவம் அந்த நபருக்கு அதன்மீது அடிமைத்தன உணர்வை ஏற்படுத்தி விடுகிறது. அவருடைய கபடின்மை எப்பொழுதுமாக ஒழிந்து போகிறது. நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியைப் புசிப்பதினால் மனிதனுடைய கபடின்மை என்றென்றுமாக அழிக்கப்படுகிறது, அதன் முடிவு முதலாவது ஆவிக்குரிய மரணம் இறுதியாக சரீர மரணம் ஆகும்.

அதைச் சாத்தான் நன்றாக அறிந்திருக்கிறான். அதனால்தான் விலக்கப்பட்ட மரத்தின் கனியைப் புசிக்கும்படி அவன் மனிதனைச் சோதித்தான். மனிதன் தன் கபடின்மையை இழந்து விடுவான் பிறகு என்றென்றுமாகப் பாவியாக இருப்பான் என்று அவன் அறிவான். இந்தச் சோதனையைக் கொடுத்ததன் மூலமாக மனிதனுடைய மனசாட்சி அழிக்கப்பட்டது. அவன் என்றென்றுமாகப் பாவியாக இருப்பான். விலக்கப்பட்ட மரத்தின் கனியைப் புசிக்கும்போது அவனுடைய மனசாட்சி மரித்துப்போகும். இப்பொழுது அவன் தேவனிடமிருந்து மறைந்து கொள்ளுவான். அவனுடைய ஆத்துமா, “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்” (எபேசியர் 2:1). அவன் “அக்கிரமங்களில் மரித்தவர்” (எபேசியர் 2:5). அவனுக்கு மாம்சசிந்தை உண்டாகி இருக்கும் அவன் தேவனுக்கு விரோதமான பகைவனாவான் (ரோமர் 8:7). அவன் ஆவிக்குரியபடி மரிப்பது மட்டுமல்ல, அவனுடைய சரீரம் முதிர்ந்த வயதாகி மரணமடைவான். ஒரு மரித்த மனிதனைப்போல இருக்கும் அவனால் “தேவனுடைய ஆவியை ஏற்றுக் கொள்ள முடியாது”… இப்போது தேவனுடைய உண்மைகள் “அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்” (I கொரிந்தியர் 2:14).

ஆனால் இன்னும் மோசமாக, அவனுடைய அழிக்கப்பட்ட சுபாவம் மற்றும் ஆவிக்குரிய மரணத்தை அவனுடைய சந்ததி முழுவதும் சுதந்தரித்துக் கொள்ளும், பூமியிலுள்ள அனைவரும், “ஒரே மனுஷனுடைய [ஆதாம்] கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல” (ரோமர் 5:19; KJV, ESV). “ஆகையால் ஒரே [ஆதாமின்] மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானது” (ரோமர் 5:18). “ஆதாமுடைய ஆரம்ப பாவமானது அவனுடைய சந்ததி ஒவ்வொருவருக்கும் பிறப்பிலிருந்தே அவர்களுடைய இருதயமானது பாவத்திற்குச் சாயும்படியாக மாற்றினது... இந்த உள்ளான பாவசுபாவமானது வேராக எல்லாவித மெய்யான பாவங்களுக்கும் ஊற்றாக இருக்கிறது; அது ஆதாமிலிருந்து நமக்குக் கடத்தப்பட்டது [அல்லது சுதந்தரிக்கப்பட்டது]... நாம் பாவம் செய்யும் காரணத்தால் பாவிகளல்ல, நாம் பாவிகளாக இருப்பதால் பாவம் செய்கிறோம், பாவத்திற்கு அடிமையான சுபாவத்தோடு பிறந்திருக்கிறோம்” (The Reformation Study Bible; note on page 781). “மனிதன்... பாவத்தில் மரித்தவன் தனது சொந்த பெலத்தால் தன்னை மாற்றிக்கொள்ள முடியாது” (Westminster Confession, IX, 3).

ஆதாமுடைய பாவம் அவனுடைய சந்ததி முழுவதிற்கும் கடத்தப்பட்டது (இந்த முழு மக்களுக்கும்). இந்த உண்மை நிரூபிக்கப்பட்டது. ஆதாமுக்குப் பிறந்த முதல் பிள்ளையாகிய காயின், தன்னுடைய சொந்த சகோதரனைக் கொலை செய்ததின் மூலமாக இது நிரூபிக்கப்பட்டது (ஆதியாகமம் 4:8ஐ பார்க்கவும்). அவ்வாறாக நீ ஆதாமுடைய பிள்ளையாக இருக்கிறாய். நீ சுபாவப்படி ஒரு பாவியாக இருக்கிறாய். நீ செய்வதும் சொல்வதொன்றும் உன்னை இரட்சிக்காது. நீ செய்வதொன்றும் உன்னை இரட்சிக்க உதவி செய்ய முடியாது. நீ சுபாவப்படி ஒரு பாவியாக இருக்கிறாய். சபைக்கு வருவது உன்னை இரட்சிக்காது. உன்னுடைய ஜெபம் உன்னை இரட்சிக்காது. உன்னால் முடிந்தவரையிலும் நல்லவராக இருப்பது உன்னை இரட்சிக்காது. ஒன்றும் – மறுபடியுமாகச் சொல்லுகிறேன் – நீ செய்வது சொல்வது ஒன்றும் உன்னை இரட்சிக்காது. நீ இழக்கப்பட்ட ஒரு பாவியாக இருக்கிறாய். நான் அறிந்தவரையிலும் சில படுமோசமான பாவிகள் பிரசங்கிகளாக இருக்கிறார்கள் – ஒவ்வொரு நாளும் வேதாகமத்தைப் படிக்கிறவர்களாக இருக்கிறார்கள். நான் அறிந்தவரையிலும் சில மோசமான கீழ்ப்படியாத பாவிகள் கிறிஸ்தவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளாக இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் கலகக்காரர்களாக வளர்கிறார்கள், தேவனுக்கு விரோதமாகக் கலகம் செய்கிறார்கள், கிறிஸ்துவுக்கு விரோதமாகக் கலகம் செய்கிறார்கள், அவர்களுடைய பெற்றோருக்கு விரோதமாகக் கலகம் செய்கிறார்கள், அவர்கள் சபையிலே கற்றுக்கொண்ட ஒவ்வொன்றிற்கும் விரோதமாகக் கலகம் செய்கிறார்கள். அவர்கள் வேதாகமத்தை நன்றாக அறிந்திருக்கலாம், ஆனால் அவர்கள் அதற்கு விரோதமாகக் கலகம் செய்கிறார்கள். வேதாகமத்தைப் பிரசங்கிக்கும் போதகர்களுக்கு விரோதமாகக் கலகம் செய்கிறார்கள். அவர்கள் விரோதமாகக் கலகம் செய்கிறார்கள் ஏனென்றால் தங்கள் இருதயங்களில் அவர்கள் சத்தியத்தை வெறுக்கிறார்கள். “சபைப் பிள்ளைகள்” பிசாசைப் போலப் பொல்லாதவர்களாக இருப்பதை நான் அறிந்திருக்கிறேன். இளம் வாலிபப் பிள்ளைகளோடு பாலுறவு கொள்ளும்படி இளம்பெண்கள் சபையிலே எழும்புகிறார்கள். அடுத்த ஞாயிற்றுக் கிழமைகளில் அவர்கள் உண்மையில் நிர்ப்பந்தமான பாவிகளாக இருந்தும், சிறிய தேவதூதர்களைப் போலப் பாடல்களைப் பாடுகிறார்கள். வாலிபப் பிள்ளைகளான சில “சபைப் பிள்ளைகள்” அப்படிப்பட்ட இளம் பெண்களோடு பாலுறவு கொண்டு அதை மற்ற பிள்ளைகளிடம் தற்புகழ்ச்சிக்காகப் பெருமையாகச் சொல்லி, அவர்களுடைய மனங்களில் இச்சையை உண்டாக்கி அவர்களையும் கெடுத்தழிக்கிறார்கள்.

நீங்கள் சொல்லலாம், “நான் ஒருபோதும் அப்படிச் செய்யவில்லை!” ஆனால் அப்படிச் செய்யும்படி நினைத்திருப்பீர்கள். உங்களுடைய மனதிலே அசுத்தமான காரியங்களை செய்தீர்கள், இல்லையா? நீங்கள் நினைப்பது செய்வதைப் போன்ற பாவமாகும் என்று இயேசு சொல்லி இருக்கிறார்!

தேவனை நேசிக்கிறேன் என்று நீ சொல்லலாம், ஆனால் நீ அவருக்குக் கீழ்ப்படிகிறாயா? உன்னுடைய முழு இருதயத்தோடு நீ தேவனை நேசிக்கிறாயா? நீ தினமும் வேதாகமத்தை வாசிப்பதை விரும்புகிறாயா? நீ தேவனை நேசித்து ஒவ்வொரு நாளும் ஜெபத்தில் அவரோடு தனிமையாக நேரம் செலவிடுகிறாயா? அல்லது உன்னுடைய விடுமுறை நேரங்களை வீடியோ விளையாட்டு விளையாடுவதிலும் தொலைக்காட்சியில் விளையாட்டுகளைப் பார்ப்பதிலும் செலவிடுகிறாயா – அப்படிப்பட்ட நேரங்களில் ஜெபிக்கவும் வேதம் வாசிக்கவும் நினைக்காமல் இருக்கிறாயா? அப்படியானால் நீ தேவனை நேசிக்கவே இல்லை என்று நான் சொல்லுவேன் – மெய்யாகவே இல்லை – நீ தேவனை நேசிப்பதாகப் பேசுகிறாய் அவ்வளவுதான். ஆனால் நீ தேவனை மெய்யாகவே நிந்திக்கிறாய். உன்னைத்தான் நீ மெய்யாக நேசிக்கிறாய். யோசித்துப்பார்! அது உண்மையில்லையா? நீ தேவனை நிந்திக்கும் மெய்யான பாவியாக இல்லையா? நீ போதகருக்குப் பயப்படுகிறாயா? எனக்கு ஏன் பயப்படுகிறாய்? நான் தேவனைப் பற்றியும் பாவத்தைப் பற்றியும் நினைக்கும்படியாகச் செய்கிறேன் என்பதினாலா? இல்லையென்றால் எனக்காக ஏன் பயப்படுகிறாய்?

டேட்டிங் செய்வது எப்படி என்ற ஜான் கேஹனின் போதனையை நீ மெய்யாக நேசித்தாயா? நீ நேராக உட்கார்ந்து தீவிரமாக அதைக் கவனித்தாய். நான் பாவம், இரட்சிப்பு மற்றும் கிறிஸ்துவைப் பற்றிப் பேசினபோது அப்படிச் செய்யவில்லை! கிறிஸ்துவைப் பற்றி உபதேசிப்பதைவிட யாரையாவது டேட்டிங் செய்வது பற்றிய சிந்தனை சிலருக்கு விருப்பமாக இருக்கிறது – உன்னை இரட்சிக்க சிலுவையிலே மரித்ததைப் பற்றி நான் பேசக் கேட்பதைவிட அதிக முக்கியமான விருப்பமாக இருக்கிறது. அப்படி நீ இருந்தால், நான் சொல்வது சரி என்று ஒத்துக்கொண்டால், நீ ஒரு நிர்ப்பந்தமான பாவி என்றும் உன்னுடைய இருதயத்தில் மெய்யான கிறிஸ்துவின் அன்பு இல்லை என்றும் அது நிரூபிக்கிறது. இதை ஒத்துக்கொள். நீ ஒத்துக்கொண்டாக வேண்டும் நீ ஒரு இழக்கப்பட்ட பாவி என்று ஒத்துக்கொள்ள வேண்டும். நீ ஒத்துக்கொண்டாக வேண்டும் அல்லது உனக்கு நம்பிக்கையே இல்லை. உனக்கு நம்பிக்கை இல்லவே இல்லை!

“தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்” (நீதி மொழிகள் 28:13).

உன்னுடைய பாவ இருதயத்தின் உள்ளான பாவத்தன்மையை இப்பொழுது அறிக்கையிடு, அல்லது உன்னுடைய நித்தியத்தை அக்கினிக் கடலிலே கழிப்பாய்! இதுவே சத்தியம். பெரியவர்களாகிய உங்களிடம் பேசுகிறேன். இது ஒரு இனிமையான ஞாயிறுப் பள்ளிப் பாடமல்ல. ஜோயல் ஓஸ்டீன் பேசும் ஒரு இனிமையான பாடமல்ல. இது ஒரு வார்த்தைக்கு வார்த்தை விளக்கும் ஜான் மெக்ஆர்த்தர் பாடமல்ல. இது ஒரு பழமை வாய்ந்த உன்னை எழுப்புதல் அடையச் செய்யும் நல்ல போதனையாகும். இது ஒரு பழைய பள்ளியின் சுவிசேஷ போதனையாகும். பாவத்திலே மரித்துக் கிடக்கும், பாவம் நிறைந்த இருதயத்தை உடையவராக இருக்கும் உன்னை எழுப்ப தேவன் இந்தப் போதனையைக் கொடுக்கிறார். ஒவ்வொரு பிரசங்கியாரும் பேசவேண்டியதை நான் உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். உங்கள் பணம் எனக்கு வேண்டியதில்லை! பணத்தோடு நரகத்திற்குப் போவீர்கள். உன்னுடைய ஆத்துமா எனக்கு வேண்டும். நீ இயேசுவின் மூலமாக இரட்சிப்படைவதை நான் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். உன்னுடைய பாவம் நிறைந்த இருதயத்தை மாற்றி, கிறிஸ்துவின் இரத்தத்தினால் சுத்தம் செய்யப்பட்டதைப் பார்க்க நான் விரும்புகிறேன். அதுதான் எனக்கு வேண்டும். இப்பொழுது நீங்கள் இருக்கும் மாயமாலமான கிறிஸ்தவத்திற்குப் பதிலாக மகிழ்ச்சியான கிறிஸ்தவர்களாக மாறவேண்டுமென்று நான் விரும்புகிறேன்! ஒரு மாயமாலமான நபர் கிறிஸ்தவனைப்போல காணப்படுவான், ஆனால் உள்ளான இருதயத்திலே “வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும். அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்” (மத்தேயு 23:27,28). நீங்கள் இருக்கிறபடியே இருக்க விரும்புகிறீர்கள். உங்கள் இருதயம் பாவம் நிறைந்ததாக இருப்பதால் நீங்கள் ஒரு கிறிஸ்தவரைப் போல இருக்க முடிந்த வரையிலும் முயற்சிக்கிறீர்கள் – ஆனால் உங்கள் இருதயத்தைப் பாருங்கள்! உங்கள் இருதயம் பாவம் நிறைந்ததாக, இச்சை மற்றும் அவிசுவாசமானதாக இருக்கிறது. காயினுடைய இருதயம் கலகமுள்ளதாக இருந்ததைப்போல உங்கள் இருதயமும் இருக்கிறது.

ஆதாமின் பாவம் இந்த மனித வர்க்கம் முழுவதையும் அழித்தது என்பதை ஆதியாகமம் 5:1,3 நிரூபிக்கிறது. அதனால்தான் உன்னுடைய இருதயம் பாவத்தில் மரித்திருக்கிறது. ஆதியாகமம் 5:1ல் “தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த நாளிலே அவனைத் தேவசாயலாக உண்டாக்கினார்” (ஆதியாகமம் 5:1). ஆனால் ஆதாம் கலகம் மற்றும் பாவத்தினால் தமது கபடின்மையைத் தூரப்படுத்தினான். அதன்பிறகு நாம் வாசிப்பது ஆதாம் “தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்றான்” (ஆதியாகமம் 5:3). ஆதாம் கபடில்லாதிருந்தபோது அவன் தேவ சாயலாக சிருஷ்டிக்கப்பட்டான் – தேவனைப் போலக் கபடில்லாதவன்! ஆனால் அவன் பாவம் செய்த பிறகு “தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்றான்” – பாவக்குற்ற உணர்வு உள்ளவனாக, சுபாவத்தின்படி பாவியாக! (ஆதியாகமம் 5:3).

அப்படிப்பட்ட சாயலோடுதான் நீயும் பிறந்திருக்கிறாய் – ஆதாம் கலகம் செய்ததுபோல நீயும் சுபாவத்தில் பாவியாக இருக்கிறாய். நீ சுபாவத்தில் இயற்கையாகப் பாவியாக இருக்கிறாய். உன்னுடைய பெற்றோர் சுபாவத்தில் பாவியாக இருக்கிறார்கள். பள்ளியிலோ அல்லது வேலை இடத்திலோ நீ அறிந்திருக்கிற ஒவ்வொருவரும் பாவசுபாவம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். தங்கள் பொல்லாத இருதயத்தைத் திருத்த முடியாத பாவிகளாக ஒன்றும் செய்ய இயலாதவர்களாக இருக்கிறார்கள். “என்ன?” நீங்கள் கேட்கலாம், “என்னுடைய அம்மாவுக்குப் பாவ இருதயம் இருக்கிறதா?”. ஆமாம்! அவளுடைய இருதயம் உன்னுடைய இருதயத்தைப்போலக் கலகமுள்ள பாவம் நிறைந்தது, வேறு எந்த ஓர் ஆதாமுடைய சந்ததியாக இருந்தாலும் அவரும் அப்படியே பாவம் மற்றும் கலகம் நிறைந்தவர்களாகவே இருக்கிறார்கள். இந்த மனித வர்க்கம் முழுவதும் அழிந்து கிடக்கிறது, எல்லாருக்கும் மரணம் வந்தது. ஆதாமுடைய பாவத்தின் காரணமாக இவையெல்லாம் வந்தது. அவன், எச்சரிக்கப்பட்டான் என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள். அவன், கீழ்ப்படியாமல் இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள். அவன், மரித்துப்போவான் என்பதை முழுவதுமாக அறிந்திருந்தான் இனிமேலும் எந்தக் காலத்திற்கும் பிறக்கப்போகும் மற்றவர்களும் மரித்துப்போவார்கள் என்பதையும் அறிந்திருந்தான் என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள். குறித்துக் கொள்ளுங்கள், ஆதாம், அவ்வளவு நல்ல சுத்தமான மனிதன் – பாவத்தினால் இவ்வளவு கொடுமையாக மாற்றப்பட்டான்! ஒவ்வொரு அறிவுள்ள மனிதனும் ஹிட்லரை வெறுப்பார்கள் காரணம் அவன் ஆறு மில்லியன் யூதர்களைக் கொன்றான். ஆனால் ஹிட்லரை ஆதாமோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அவன் ஒரு தூதனைப்போலக் கபடில்லாதவன். ஹிட்லர் ஆறு மில்லியன் மக்களைக் கொன்றான். ஆனால் ஆதாம் இந்த மனித வர்க்கம் முழுவதையும் கொன்றான்! பில்லியனுக்கு மேல் பில்லியன் மக்கள்! ஆதாம் உன்னுடைய இருதயத்தையும் அழித்தான். ஆதாம் உன்னை ஒரு சபைக்குப் போகிற மாயமாலக்காரணாக மாற்றி இருக்கிறான் – தன் இருதயத்தை மாற்றமுடியாத ஒரு மாயமாலக்காரனாக உன்னை மாற்றி இருக்கிறான் – நரகத்திற்குப் போகும் ஒரு மாயமாலக்காரனாக, அவன் சுதந்தரித்துக்கொண்ட பாவசுபாவம் அவன் அங்கே போவதற்குத் தகுதியாக்கினது, அவனை இரட்சிக்கவல்ல ஒரே ஒருவரை தள்ளிவிட்ட காரணத்தினால் அவன் நரகத்திற்குப் போகப்போகிறான் அவர்தான் – இயேசு, கடைசி ஆதாம். முதல் ஆதாம் கலகம் செய்யக்கூடிய பாவமுள்ள இருதயத்தைக் கொடுத்தான். கடைசி ஆதாமாகிய, கிறிஸ்து, ஒருவர் மட்டுமே உனக்குப் புதிய இருதயத்தைக் கொடுக்க முடியும். கிறிஸ்து ஒருவர் மட்டுமே உன்னுடைய கல்லான இருதயத்தை எடுத்துப் போட்டு “சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்” (எசேக்கியேல் 36:26). புதுஜென்மம் என்பதன் பொருள் அதுதான். புதுப்பிறப்பு என்பதற்குப் பொருள் அதுதான்.

இப்பொழுது நாம் கடினமான பகுதிக்கு வருகிறோம். தன் இருதயத்தை மாற்றிக்கொள்ள முடியாத ஒருவன் எப்படி என்றென்றுமாக இரட்சிக்கப்பட முடியும்? நீங்கள் புதுஜென்மமாக மாறவேண்டியது அவசியம். புதுஜென்மம் என்பது ஒரு மிக முக்கியமான போதனையாகும். இப்பொழுது பிரசங்கிகள் இதைப்பற்றிப் பேசினதை நான் கேட்டதில்லை. நமது சபைகள் மரித்துக் கொண்டிருப்பதில் ஆச்சரியமில்லை! “மறுஜென்மம்” என்ற வார்த்தையானது தேவன் ஒருவருடைய இருதயத்தை மாற்றி அதை மரணத்திலிருந்து ஜீவனுக்குள் கொண்டு வரும் செயலாகும். மறுஜென்மம் என்பதை “மறுபடியும் பிறத்தல்” என்று கிறிஸ்து அழைக்கிறார், ஒரு ஆவிக்குரிய மறுரூபம், பரிசுத்த ஆவியானவர் மூலமாக புது இருதயம் சிருஷ்டிக்கப்படும் ஒரு செயல், ஒரு நபரை ஆதாமுடைய மகன் என்பதிலிருந்து தேவனுடைய மகனாக மாற்றும் ஒரு செயலாகும். மறுஜென்மம் என்பது கர்த்தரால் மட்டுமே செய்யக்கூடிய செயல் ஆகும், ஆதாமிடத்திலிருந்து சுதந்தரித்த மரித்த இருதயத்தை, மறுபடியுமாக, அவர் உயிரடையும்படி செய்வதாகும். நீ மறுஜென்மம் பெற்றுக்கொள்வதற்கு முன்பாக உன்னுடைய இருதயம் மரித்திருக்கும் காரணத்தினால் புதுபிறப்பு உனக்கு அவசியமாக இருக்கிறது.

நான் வாசித்ததிலேயே மிகச்சிறந்த ஒரு இளம் நபரின் சாட்சி ஜான் கேஹனுடைய சாட்சியாகும். இதை வாசித்த ஒருவர் என்னிடம் சொன்னார் இது ஒரு பதினைந்து வயது பையனிடமிருந்து வந்திருக்க முடியாது என்று. இந்த மனிதர் இதை நான் எழுதியிருப்பேன், அல்லது குறைந்தது அதைத் திருத்தியாவது அதனோடு கூட்டியிருப்பேன் என்று என்னைக் குற்றப்படுத்தினார். ஆனால் ஜான் இங்கே என்னோடு மேடையில் அமர்ந்திருக்கிறார். அவர் உங்களுக்கு நிச்சயமாகச் சொல்லமுடியும் அதாவது நான் இதை எழுதவுமில்லை அல்லது எந்தவிதத்திலும் மாற்றம் செய்யவுமில்லை – அவருடைய தந்தை, டாக்டர் கேஹனும் எதையும் செய்யவில்லை. இதை வெறுமையாக வாசித்தவர்களும் அல்லது இதை வாசிக்கக் கேட்டவர்களும் இரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள்.

முதலாம் ஆதாமுக்குள் உள்ள மனிதனின் மரித்த இருதயம் திருப்பப்பட வேண்டும், அது கடைசி ஆதாமாகிய, கிறிஸ்துவின் மூலமாக மறுபடியுமாக உயிர்பிக்கப்பட வேண்டும். இது அப்போஸ்தலனாகிய பவுலின் மூலமாக மிகவும் தெளிவாக்கப்படுகிறது,

“ஆகையால் ஒரே [ஆதாம்] மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே [கிறிஸ்து] எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று. அன்றியும் ஒரே மனுஷனுடைய [ஆதாமுடைய] கீழ்ப்படியாமையினாலே அநேகர் [இங்கே] பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய [கிறிஸ்து] கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப் படுவார்கள்” (ரோமர் 5:18,19).

மறுபடியுமாக, அப்போஸ்தலன் ஆதாம் மற்றும் கிறிஸ்துவுக்கு இருக்கும் பேதத்தைக் காட்டுகிறார்,

“அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் [கிறிஸ்து] உயிர்ப்பிக்கிற [ஜீவவைக் கொடுக்கிற] ஆவியானார்” (I கொரிந்தியர் 15:45).

கிறிஸ்து (கடைசி ஆதாம்) மட்டுமே ஒரு பாவியின் மரித்த இருதயத்தை உயரடையச் செய்ய முடியும். கிறிஸ்துவானவர் பாவ அடிமைத்தனத்தில் இருக்கும் இருதயத்தை, தேவனை நேசிக்கும் புதிய இருதயமாக மாற்றுகிறார். தேவனுடைய ஆவியானவர் உன்னுடைய பாவம் நிறைந்த இருதயத்தை உணர்த்தும்பொழுது இந்த வேலை ஆரம்பமாகிறது (யோவான் 16:8). அதன்பிறகு தேவனுடைய ஆவியானவர் கிறிஸ்துவை உனக்கு வெளிப்படுத்துகிறார் (யோவான் 16:14,15). இறுதியாகத் தேவன் உன்னைக் கிறிஸ்துவினிடம் அழைத்துச் செல்லுகிறார் (யோவான் 6:44). மறுஜென்மமாகுதலின் அந்த மூன்று படிகள் ஜான் கேஹனின் சாட்சியில் காட்டப்படுகிறது. ஜான் தனது முதல் பத்தியில் ஆதாமிடத்திலிருந்து சுதந்தரித்த பொல்லாத இருதயத்தைப் பற்றிப் பேசுகிறார். இரண்டாவது பத்தியில், அதனாலே பலமாக வாதிக்கப்பட்ட தம்மைத் தேவன் எப்படி உணர்த்தினார் என்று ஜான் பேசுகிறார். அவர் சொன்னார், “என்னையே நான் வெறுக்க ஆரம்பித்தேன், அது என்னை அப்படியாக உணரச்செய்து என் பாவத்தை வெறுக்க செய்தது”. மூன்றாவது பத்தியில் என்னுடைய பிரசங்கத்தை அவருடைய பாவம் நிறைந்த இருதயம் வெறுத்தது, கிறிஸ்துவையும் வெறுத்தது என்று ஜான் சொல்லுகிறார். இது அவருடைய பாவம் நிறைந்த இருதயத்திற்கும் தேவனுக்கும் இடையில் நடந்த ஒரு டைட்டானிக் யுத்தம் போன்றது, கிறிஸ்துவினிடத்தில் வரமுடியாமல் தவித்த அவருடைய இயலாமையாகும். நான்காவது பத்தியில் ஜானுடைய பாவத்திலிருந்து அவரை இரட்சிக்க கிறிஸ்து சிலுவையிலே பட்டபாடுகளை நினைத்ததைப்பற்றி நமக்குச் சொல்லுகிறார். இந்த எண்ணம் அவருடைய பிடிவாதமான சித்தத்தை உடைத்து அவர் கடைசியாகக் கிறிஸ்துவுக்குள் இளைப்பாறுதலைப் பெற்றுக் கொண்டார். இறுதியாக, தமது மாறுதலின் முடிவில் ஜான் சொல்லுகிறார், “கிறிஸ்து தமது ஜீவனை எனக்காகக் கொடுத்தார் அதற்காக நான் என்னுடைய எல்லாவற்றையும் அவருக்குக் கொடுக்கிறேன்... அவர் என்னை மாற்றினதற்காக”. நீங்கள் பந்தயம் வையுங்கள்! அவர் ஒரு பொல்லாத வாலிபராக இருந்தார்! ஆனால் இப்பொழுது அவர் ஒரு தேவ மனிதர் ஆனார்!

அடுத்த மாதம் ஜான் கேஹன் ஒரு பாப்டிஸ்டு ஊழியராக மாறுவதற்கு ஆயத்தப்படும்படியாக ஒரு வேதாகமப் பள்ளியில் நுழையப் போகிறார்.

நீ யாராக இருந்தாலும் சரி – உன்னுடைய இருதயம் மரித்துப்போன நிலையில், நீ ஒரு இழக்கப்பட்ட பாவியாக இருக்கிறாய், ஏன் என்றால் நீ ஆதாமுடைய பாவச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு மரித்திருக்கிறாய். நீ அப்படி இருப்பாயானால், இயேசு கிறிஸ்து ஒருவரே உன்னுடைய நம்பிக்கை – அவர் மட்டுமே “விலக்கப்பட்ட பாவத்தின் வல்லமையை உடைத்து கைதியை விடுவிக்க முடியும்” என்று சார்லஸ் வெஸ்லி சொல்லுகிறார். உன்னுடைய இருதயத்தை மாற்றித் தம்முடைய சொந்த இரத்தத்தினால் சுத்தம் செய்ய கிறிஸ்துவுக்குள் வல்லமை இருக்கிறது. அவரை விசுவாசிப்பாயாக அவர் உன்னை இரட்சிப்பார். இயேசுவின் மூலமாக நீ பாவத்திலிருந்து இரட்சிப்பை பெற்றுக்கொள்வதைப்பற்றி எங்களோடு பேச விரும்பினால், தயவுசெய்து டாக்டர் கேஹன், ஜான் கேஹன், மற்றும் என்னிடம் வாருங்கள். திரு. கிரிஃபீத் அவர்கள் “கிறிஸ்துவுக்குள்” என்ற பாடலை, மூன்று சரணங்களையும் இரண்டுமுறை பாடும்பொழுது நீங்கள் வந்து எங்களிடம் பேசுங்கள்.

நான் ஓர் ஆயிரம் வீணான வழிகளில் முயற்சி செய்து பார்த்தேன்
   என் பயங்கள் அடங்கி, என் நம்பிக்கை எழும் என்று யோசித்தேன்;
ஆனால் எப்பொழுதும், இயேசு மட்டுமே எனக்குத்தேவை என்று,
   வேதாகமம் விளக்கிச் சொல்லுகிறது.
என் ஆத்துமா இருளானது, என் இருதயம் இரும்பானது –
   என்னால் இதைப் பார்க்க முடியாது, உணரவும் முடியாது;

வெளிச்சத்திற்காக, ஜீவனுக்காக, நான் முறையிட வேண்டும்
   இயேசுவிடம் எளிமையான விசுவாசத்தின் மூலமாக.
சிலர் சிரித்தாலும், சிலர் குற்றம் சாட்டினாலும்,
   என் குற்ற உணர்வோடும் வெட்கத்தோடும் அவரிடம் போவேன்;
ஏன் என்றால் அவருடைய நாமம் எல்லா நாமத்திற்கும்,
   மேலான, இயேசு என்ற நாமம்.
(“In Jesus” by James Procter, 1913).

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

பிரசங்கத்திற்கு முன்னால் திரு. நோவா சாங் வாசித்த வேத பகுதி: ரோமர் 5:17-19.
பிரசங்கத்திற்கு முன்னதாகப் பாடப்பட்ட தனிப்பாடலைப் பாடியவர் திரு.
பென்ஜமின் கின்கேய்டு கிரிஃபீத்: “In Jesus” (James Procter, 1913).