Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




இன்றையப் பிசாசுகள்

DEMONS TODAY
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

அக்டோபர் 23, 2016 அன்று ஞாயிறு காலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில்
உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Morning, October 23, 2016

“பின்பு அவர்கள் கடலுக்கு அக்கரையிலுள்ள கதரேனருடைய நாட்டில் வந்தார்கள். அவர் படவிலிருந்து இறங்கினவுடனே, அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் பிரேதக்கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிராக வந்தான்” (மாற்கு 5:1-2).


கதரேனருடைய பிசாசைப்பற்றி ஒரு போதகர் பிரசங்கம் செய்ததை நான் ஒரு போதும் கேட்டதில்லை. பில்லி கிரஹம் அதைப் பற்றிப் பிரசங்கம் செய்வது வழக்கம் – ஆனால் ஒரு சபையின் போதகர் ஒருபோதும் அதைப் பற்றிப் பிரசங்கம் செய்ததில்லை. அது ஏன் அப்படி? அந்தக் கதை பிசாசுகளைப்பற்றி இருப்பதால் என்று நான் நினைக்கிறேன். அது சாத்தானுக்கும் கிறிஸ்துவுக்கும் உள்ள போராட்டத்தைப் பற்றினதாகும். அது சபையில் சில ஸ்திரீகளுக்குப் பயத்தை உண்டாக்கிவிடும். அதைப்பற்றி டேவிட் முர்ரோ முழுப் புத்தகம் எழுதி இருக்கிறார். அந்தப் புத்தகத்தின் பெயர், Why Men Hate Going to Church (Nelson Books, 2005) என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு போதகரும் அந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்! 18 முதல் 29 வயதை உடைய, இளைஞர்களும் மனிதர்களும், சபையில் குறைவாக உள்ளார்கள் (ப. 18) என்று முர்ரோ எடுத்துக்காட்டுகிறார். இளைஞர்களும் மனிதர்களும் “சவால் சார்ந்தவர்கள்” என்று அவர் சொல்லுகிறார். அவர்களுடைய முக்கிய மதிப்பீடு என்பது வீரதீரச் செயல்கள், துணிவு, தைரியம், போராட்டம் போன்றவையாகும். “அவர்கள் தைரியமானவர்கள், வீரதீரச் செயல் செய்பவர்கள் மேலும் அபாயகரமானவர்கள் என்று அறியப்பட விரும்புகிறார்கள்”. மறுபக்கத்தில் அநேக ஸ்திரீகள் மற்றும் வயதானவர்கள் “பாதுகாப்புச் சார்ந்தவர்களாக இருக்க விரும்புகிறார்கள்” (ப.19).

கிறிஸ்து அபாயகரமானதைச் செய்தார். அவர் தைரியமாகப் போராட்டத்தில் நுழைந்தார் அபாயகரமானதற்கு அஞ்சவில்லை. டேவிட் மர்ரோ கருத்துச் சரியானது தான் என்று நான் நினைக்கிறேன். சில ஸ்திரீகளும், சில வயதானவர்களும் அப்படி இல்லை. துக்கமானது என்னவென்றால் நமது சபைகளில் அவர்கள் அடிக்கடி குரல் எழுப்புகிறார்கள். அதன் விளைவாக, அவர்களுக்குப் பிசாசுகள் மற்றும் சாத்தான் பற்றிய போதனைகள் கொடுக்கப்படவில்லை. அவர்கள் எந்தப் போராட்டத்தையும் விரும்பவில்லை.

அநேக இளைஞர்கள் தீவிர முஸ்லீம்களாக மாறிக்கொண்டிருப்பதில் ஆச்சரியமில்லை. வெளியே புறப்பட்டுப்போய் உலகத்தாரைத் தங்கள் மதத்திற்கு ஜெயித்துக் கொண்டு வாருங்கள் என்று அவர்களுடைய தலைவர் சொல்லுகிறார். டெனிசியில் 24 வயது நிரம்பிய அமரிக்கன் ஒருவன் நான்கு கடல்படை வீரர்களைக் கொன்றதைப்போல அவர்கள் இருக்கிறார்கள். இன்று இது திரும்பத்திரும்ப நடந்து கொண்டிருக்கிறது. சிலவற்றை விசுவாசிக்கும்படியாக இந்த இளைஞர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய வாழ்க்கைக்குக் காரணத்தையும் நோக்கத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!

ஆனால் தீவிர இஸ்லாம் அதற்குப் பதில் அல்ல! அதேபோல மென்மையான, பெண்ணியம் நிறைந்த கிறிஸ்தவத்தை அளிக்கும் இன்றுள்ள சபைகளும் அதற்கு மாறுத்தரம் அல்ல. ஆனால் கிறிஸ்துவைப் பின்பற்றுங்கள் என்று உங்களைக் கேட்கிறேன். நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு தீவிர சீஷர்களாக மாறுங்கள் என்று உங்களைக் கேட்கிறேன்! அங்கே ஒரு போராட்டம் இருக்கிறது. நாம் யுத்தம் செய்கிறோம். ஆனால் இந்த யுத்தம் சரீரப்பிரகாரமான யுத்தமல்ல. இது ஆவிக்குரிய யுத்தம் ஆகும். மிகப்பெரிய ஆங்கிலேயப் பிரசங்கியார் டாக்டர் மார்டின் லாயட் ஜோன்ஸ் (1899-1981) அந்த யுத்தத்தைப்பற்றிப் பேசி இருக்கிறார். அவர் சொன்னார், “நாம் கிறிஸ்தவ வாழ்க்கையில் வந்திருக்கும்பொழுது தேவனுடைய சேனைகளுக்கும் பாதாளத்தின் சேனைகளுக்கும் இடையில் உள்ள இந்தப் பெரிய யுத்தத்தில் நாமும் பங்கு பெறுகிறோம்... சாத்தான் காரணமாக... இந்த உலகத்தில் நம்முடைய வாழ்க்கை என்பது ஒரு ஆவிக்குரிய யுத்தம் ஆகும்” (Life in God, Crossway Books, pp. 105, 179). நான் அவரோடு முழுமையாக ஒத்துக்கொள்கிறேன்!

இயேசு மற்றும் பிசாசுபிடித்த மனிதனுடைய இந்தக் கதை முக்கியமானது. புதிய ஏற்பாட்டில் மூன்று வித்தியாசமான இடங்களில் தேவன் இதைப் பதிவு செய்திருக்கிறார் – அவை மத்தேயு, மாற்கு, லூக்கா என்பவையாகும். பயங்கரவாதம் மற்றும் ஆவிக்குரிய யுத்தமுள்ள இந்தக் காலத்தில் வாழும் இளைய மக்களுக்கு ஒரு பிரமாண்டமான பாடம் இதில் இருக்கிறது!

அந்தக் கதை எளிமையானது. இயேசு ஒரு சிறிய படகிலே கலிலேயாக் கடலைக் கடந்துபோனார். அந்தச் சிறிய கடலின், மறுகரையிலுள்ள கதரேனருடைய நாட்டிற்கு வந்தார். அநேக ஆண்டுகளுக்கு முன்பாக என் மனைவியும் நானும் அங்கே இருந்தோம். இவைகளெல்லாம் நடந்த அந்த இடத்தை எங்கள் கண்களால் நாங்கள் கண்டோம்.

“அவர் படவிலிருந்து இறங்கினவுடனே, அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் பிரேதக்கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிராக வந்தான்” (மாற்கு 5:2).

இப்பொழுது, நான் அந்த இளைஞனைப் பற்றியும் அவன் இயேசு கிறிஸ்து முன் எதிர்ப்பட்டதைப் பற்றியும், அநேகக் காரியங்கள் கொண்டுவரப் போகிறேன்.

I. முதலாவது, இந்த இளைஞன் பிசாசினால் பிடிக்கப்பட்டான்.

பிசாசு பிடிப்பதை நான் நம்புகிறேனா? ஆம், நானும் நம்புகிறேன் – மிக நிச்சயமாக நான் நம்புகிறேன்! அநேகப் பிசாசுகள் இருப்பதை வேதாகமம் நமக்குக் கற்பிக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் பேசும்போது அவைகளைப்பற்றிச் சொல்கிறார்,

“மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல… வானமண்டலங் களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு” (எபேசியர் 6:12).

அந்த வசனத்திலே பலவிதமான பிசாசுகளைப்பற்றியும் பொல்லாத ஆவிகளைப் பற்றியும் அவர் பேசினார். டாக்டர் லாயட் ஜோன்ஸ் சொன்னார், “பலதரப்பட்ட பொல்லாத ஆவிகள் இருக்கின்றன. ஆயிரக்கணக்கில், ஒருவேளை லட்சக் கணக்கில், பொல்லாத ஆவிகள் இருக்கின்றன” (Christian Unity, The Banner of Truth Trust, 1980, p. 58).

சாத்தானையும் அவனுடைய பிசாசுகளையும் விசுவாசிக்காவிட்டால், பயங்கரவாதத்தைப் பற்றியும் பொருளாதாரவாதத்தைப் பற்றியும், மற்றும் அமரிக்காவின் பாவங்களைப் பற்றியும் நீஙகள் எப்படி விளக்கம் சொல்ல முடியும்?

அந்த இளைஞன் பிசாசினால் பிடிக்கப்பட்டிருந்தான். அவன் பிசாசினால் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தான். அப்படிப்பட்ட நிலைமைகளில் இருந்தவர்களோடு நான் தனிப்பட்ட விதத்தில் சலக்கிரனை செய்திருக்கிறேன். போதைப் பொருள்களை உபயோகிப்பவர்களுக்கு, சூனியம் வைக்கப்பட்டவர்களுக்கு மற்றும் மாயமான இளைஞர்களுக்கு இப்படி நடக்கும் என்று எனக்குத் தெரியும்.

ஆனால் மாற்றப்படாத ஒவ்வொருவரின் சிந்தனைகளையும் மட்டமான பிசாசுகள் கட்டுப்படுத்துகின்றன. அப்போஸ்தலனாகிய பவுல் இந்தப் பிசாசுகளைப்பற்றிச் சொல்வதாவது “கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவின் ஆவி” (எபேசியர் 2:2). அந்தப் பிசாசுகளால் என்னுடைய மனம் குருடாக்கப்பட்ட ஒரு காலம் இருந்தது. மாற்றப்படாத மற்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் விடுவிக்கப்படாத ஒவ்வொருவருக்கும் அது உண்மையாக இருக்கிறது. கிறிஸ்து நம்மை இரட்சித்து மறுபடியும் பிறப்பதற்கு முன்பாக நாம் அனைவரும் அந்த நிலைமையில் தான் இருந்தோம். உண்மையான மாற்றம் சாத்தானுடைய வல்லமையிலிருந்து விடுவிக்கப்படுதல் ஆகும்!

இயேசு உன்னுடைய பாவத் தண்டனையின் கிரயத்தைச் செலுத்த சிலுவையிலே மரித்தார். எல்லா பாவங்களிலிருந்தும் உன்னுடைய மனதையும் இருதயத்தையும் சுத்திகரிக்க அவர் தம்முடைய இரத்தத்தைச் சிந்தினார். உனக்கு ஜீவனைக் கொடுக்க அவர் சரீரப் பிரகாரமாக மரணத்திலிருந்து உயிரோடெழுந்தார் – பிசாசின் குருட்டாட்டத்திலிருந்து உன்னை விடுவிக்க! பெரியப் பிரசங்கியார் மற்றும் பாடலாசிரியர் சார்லஸ் வெஸ்லி (1707-1788) நன்றாகச் சொன்னார்,

மூடப்பட்ட பாவத்தின் வல்லமையை அவர் உடைக்கிறார்,
   சிறைப்பட்டவரை அவர் விடுதலையாக்குகிறார்;
அதிக அழுக்கை அவருடைய இரத்தத்தால் சுத்தமாக்கலாம்;
   அவருடைய இரத்தம் எனக்குத் தயாராக இருக்கிறது.
(“O For a Thousand Tongues” by Charles Wesley, 1707-1788).

கிறிஸ்து பாவத்தின் “வல்லமையை உடைக்கிறார்”! கிறிஸ்து “சிறைப் பட்டவர்களை விடுவிக்கிறார்”. நான் இருபது வயதாக இருக்கும்போது ஒரு காலைப் பொழுதில் அதை எனக்குச் செய்தார் – அப்படியே அவர் உனக்கும் அதைச் செய்ய முடியும்! இங்கே இருக்கும் அநேகர் இந்தக் காலைப் பொழுதிலே கிறிஸ்து தங்களைப் பாவம் மற்றும் பிசாசுகளிடமிருந்து விடுதலையாக்கினார் என்று உங்களுக்குச் சொல்ல முடியும். நீங்கள் இயேசுவினால் இரட்சிக்கப்பட்டிருந்தால், இப்பொழுது எழுந்து நில்லுங்கள்! – நீங்கள் அமரலாம். இவர்கள் ஒவ்வொருவருக்கும் செய்ததை உங்களுக்கும் கிறிஸ்து செய்ய முடியும்!

II. இரண்டாவது, இந்த இளைஞன் தனிமையாக இருந்தான்.

வேதாகமம் சொல்லுகிறது அவன் “வீட்டில் தங்காமல் பிரேதக் கல்லறைகளிலே தங்கினவன்” (லூக்கா 8:27). என்னுடைய மனைவியும் நானும் அங்கே இருந்தோம். குன்றுகளின் மீது அந்தப் பிரேதக் கல்லறைகள் இருந்ததை நாங்கள் பார்த்தோம். அவைகள் அங்கே இருந்தன – அந்தக் குன்றுகளின் பாறைகளில் ஓட்டைகள் இருந்தன, செத்தப் பிணங்கள் உள்ளே இருந்தன. வேதாகமம் சொல்லுகிறது,

“அவன் எப்பொழுதும் இரவும் பகலும், மலைகளிலும் கல்லறைகளிலும் இருந்து, கூக்குரலிட்டு, கல்லு களினாலே தன்னைக் காயப்படுத்திக்கொண்டிருந்தான்” (மாற்கு 5:5).

அநேக இளம் ஸ்திரீகள் தங்களைத் தாங்களே ஷவரக் கத்திகளினால் வெட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் அதை ஏன் செய்கிறார்கள் என்று அவர்களால் விளக்க முடியவில்லை. ஓர் இளம் பெண், அப்படியாகத் தன்னுடைய கைகளைத் தொடர்ச்சியாக வெட்டிக்கொண்டதை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன். அப்படி ஏன் செய்கிறாள் என்று பேட்டி எடுத்தவர் அவளைக் கேட்டார். அதற்கு அவள் சொன்னாள், “எனக்குத் தெரியாது. நான் அப்படிச் செய்யவேண்டும் என்று ஏவப்படுகிறேன். என்னால் நிறுத்த முடியவில்லை”. அந்த இளம் பெண்ணுக்குத் தேவையானது என்னவென்றால் இயேசு கிறிஸ்து! அந்தச் சாத்தானுடைய கட்டுகளைக் கிறிஸ்துவினால் உடைக்க முடியும்!

நமது பாடத்திலிருக்கும் இந்த மனிதன் தனிமையாக இருந்தான்! அவனைக் குடும்பத்திலிருந்து அந்தத் தனிமையான இடத்திற்கு அந்தப் பிசாசுகள் துரத்தி விட்டன, அங்கே அவனை இயேசு சந்தித்தார். இன்று அமரிக்கா மற்றும் மேற்கில் தனிமையைவிடப் பெரிய பிரச்சனை இளைஞர்களுக்கு இல்லை. தனிமை! இளைஞர்களில் அநேகர் அனுபவிக்கும் பிரச்சனைகள் தனிமையில் வேர் ஊன்றி இருக்கின்றன. இதைப் பற்றிப் பிரபலமான பாடல் ஒன்று உண்டு, “தனிமையான மக்கள் அனைவரும், எங்கிருந்து வருகிறார்கள்?” (“Eleanor Rigby”).

பிலிப்பு ஸ்லேட்டர் ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார் (The Pursuit of Loneliness: American Culture at the Breaking Point, Beacon Press, 2006 edition). The Pursuit of Loneliness என்ற புத்தகத்தில், ஆசிரியர் தனிமையை “தொழில்நுட்பத்தில் அடிமைப்படும் தேசம்” என்று குறிப்பிடுகிறார். திரு. ஸ்லேட்டர் சொன்னார், “உதாரணமாக, தானியங்கி, எல்லாவற்றையும்விட அதிகமாக அமரிக்காவில் சமுக வாழ்க்கையை அழிக்கிறது. அது... அவர்கள் ஒருவருக்கொருவர் பழகாதபடியாகச் சிதறிப்போகச் செய்கிறது” (ப. 126,127).

இளைஞர்கள் தங்கள் வாகனத்தில் ஏறி சேன்டா பார்பரா அல்லது பெர்க்லி போன்ற இடங்களில் உள்ள கல்லூரிக்குப் போகிறார்கள். இது மிகவும் சுலபம், ஆனால் அவர்கள் தங்கள் நண்பர்களை எல்லாம் இழக்கிறார்கள், நிரந்தரமாக. கல்லூரி வயதில் இளைஞர்கள் தனிமையாக இருப்பதில் ஆச்சரியமில்லை. நீங்கள் சொல்லலாம், “நாங்கள் தொடர்பு வைத்துக் கொள்கிறோம்” என்று. நீங்கள் ஒருவருக்கொருவர் குறுஞ்செய்திகள் மூலம் தொடர்பு வைத்துக் கொள்ளலாம். ஆனால் அது உங்களைத் “தொடர்பில்” வைத்துக்கொள்ளுமா? இல்லை – ஒரு கைப்பேசி மூலமாக மெய்யான “தொடுகை” இருக்க முடியவே முடியாது.

என்னுடைய மனைவியின் பாட்டி குவாட்டமாலாவில் ஓர் ஆர்வமுள்ள சமூகவியலாளராக இருந்தார். அவருடைய மகன்கள் ஒரு தொலைப்பேசியை வீட்டில் வைக்க முயற்சி செய்தார்கள். அவர் சொன்னார், “வேண்டாம். என்னிடம் தொலைப்பேசி இருந்தால், நீங்கள் என்னைப் பார்க்க ஒருபோதும் வரமாட்டீர்கள்”. இளைஞர்கள் தங்கள் கைகளில் கைப்பேசியை வைத்துக்கொண்டு சுற்றுவதைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. உண்மையான நண்பர்களுடைய இடத்தை ஓர் இயந்திரம் எடுத்துக்கொள்ளுகிறது.

“Her (அவள்)” என்ற திரைப்படத்தைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டீர்களா? நான் அதைப் பரிந்துரைக்க மாட்டேன் – அது தனிமையான இளைஞன் ஒருவன் தன்னுடைய கணினி மீது காதல் கொள்ளும் திரைப்படமாகும், அந்தக் கணினியை அவன் “சமந்தா” என்று அழைத்தான். நான் அதைப் பார்க்கவில்லை. அது வெளிப்படையாகப் பாலுணர்வு கொள்ளும் காட்சிகள் உள்ளவை. ஆனால் அதை அதிகமான இளம் அறிவாளிகள் பார்த்தார்கள் – ஓர் இயந்திரத்தின் மீது காதல் கொண்ட இளைஞன்! அந்தத் திரைப்படத்தைப் பற்றி விக்கிபீடியா மூலமாக நீங்கள் படித்துத் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும். நீங்கள் அதைப் பார்க்க நான் பரிந்துரைக்க மாட்டேன்.

அமரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தனிமைக் கலாச்சாரத்தைச் சாத்தான் உபயோகப்படுத்தி இளம் மக்களை அடிமைப்படுத்தி அழிக்கிறான் என்று நான் நம்புகிறேன். கடற்படை வீரர்களைக் கொன்ற அந்த இளைஞன் “கணினி” என்ற இயந்திரத்தின் மூலமாக ISIS என்ற இயக்கத்தோடு தொடர்பு கொண்டிருந்தான். அவன் மெய்யாகவே தனிமையாக இருந்தவன்! இயேசுவுக்கு எதிராக வந்த மனிதன் கல்லறைகளில் தனிமையாக இருந்தான். அவன் பிசாசுகளால் கட்டுப்படுத்தப்பட்டவனாக மாறினான்! தேவன் நமக்கு உதவி செய்வாராக!

உங்கள் தொலைப்பேசியையும் கணினியையும் உபயோகிக்காதீர்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் நான் சொல்வது, “அந்த இயந்திரங்கள் உங்களைக் கட்டுப்படுத்த அனுமதிக்காதீர்கள்! போதுமானவரை கணினியை விட்டுவிலகி சில உண்மையான நண்பர்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்! போதுமானவரை கணினியை விட்டுவிலகி சில நிரந்தரமான நண்பர்களை உருவாக்கிக் கொள்ளுங்கள் – இந்தச் சபையில்!” அந்தக் கல்லறைகளிலிருந்த மனிதனைப்பற்றிய பாடலைக் கவனியுங்கள்,

வீட்டிலிருந்தும் நண்பர்களிடமிருந்தும்
   அந்தப் பொல்லாத ஆவிகளால் அவன் துரத்தப்பட்டு,
கல்லறைகள் மத்தியில்
   பரிதாபமாக வாழ்ந்தான்;
தன்னைத்தானே அவன் வெட்டிக் கொண்டான்
   பிசாசுகளின் சக்தியால் அவன் பிடிக்கப்பட்ட பொழுது,
பிறகு இயேசு வந்தார்
   அந்தச் சிறைப்பட்டவனை விடுவித்தார்.

இயேசு வந்தபொழுது
   சோதனைக்காரனின் வல்லமை உடைக்கப்பட்டது;
இயேசு வந்தபொழுது
   கண்ணீர்த் துளிகள் துடைக்கப்பட்டது.
அவர் துக்கத்தை எடுத்துக்கொண்டு
   வாழ்க்கையை மகிமையினால் நிரப்புவார்,
எல்லாம் மாற்றப்பட்டது
   இயேசு தங்கும்படி வந்த பொழுது.
(“Then Jesus Came” by Oswald J. Smith, 1889-1986;
music by Homer Rodeheaver, 1880-1955).

வாலிப மக்களே, நம்முடைய சபைக்கு வாருங்கள் என்று உங்களைத் துரிதப்படுத்துகிறேன். ஞாயிற்றுக்கிழமை காலையிலும் ஞாயிற்றுக்கிழமை இரவிலும் இங்கே இருங்கள். சனிக்கிழமை இரவிலும் இங்கே எங்களோடு இருங்கள்! நான் வாக்குக் கொடுக்கிறேன் – நாங்கள் உங்கள் நண்பர்களாக இருப்போம் என்று! நான் வாக்குக் கொடுக்கிறேன் – நீங்கள் எங்களோடு வந்தால் தனிமையை உணரமாட்டீர்கள் என்று! ஆமென்!

III. மூன்றாவது, இந்த இளைஞன் இயேசுவுக்குப் பயந்தான்.

வேதம் சொல்லுகிறது அவன்

“இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாத படிக்குத் தேவன்பேரில் உமக்கு ஆணையென்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான்” (மாற்கு 5:7).

அவன் இயேசுவுக்குப் பயந்தவனாக உணர்ந்தான். அதுவும், கூட, இளைஞர்கள் மத்தியில் இன்று பொதுவாகக் காணப்படுகிறது. இயேசு மற்றும் இந்தச் சபை உங்களுக்கு உதவி செய்ய முடியும், ஆனால் நீங்கள் பயப்படலாம்! உங்களுக்கிருக்கும் பொறுப்புகளுக்காக நீங்கள் பயப்படலாம். ஒவ்வொரு வாரக்கடைசியிலும் ஒருசில மணி நேரங்கள் எங்களோடு சபையில் செலவிடுவதற்காக நீங்கள் பயப்படலாம். இது எனக்கு மிகவும் துக்கத்தை உண்டாக்குகிறது என்று மட்டும் உங்களுக்குச் சொல்லுவேன். உங்களது பயம் சாத்தானிடத்திலிருந்து வந்தது என்று நான் அறிவேன். அவன் இதை ஏன் செய்கிறான்? ஏனென்றால் நீங்கள் எங்களிடம் வந்து இயேசுவிடம் வந்தால் அவன் உங்களை இழந்துவிடுவான் என்று அவனுக்குத் தெரியும்.

நான் 19 வயதாக இருக்கும்பொழுது இரவில் லாஸ் ஏன்ஜலஸ் நகரத்தின் தெருக்களில் தனியாக நடந்தேன். என்னுடைய உயர்நிலைப் பள்ளி நண்பர்கள் போய்விட்டார்கள். நான் தனியாக இருந்தேன், மிகவும் தனிமையாக. ஒரு சனிக்கிழமை இரவு நான் ஒல்வெரா தெருவைச் சுற்றி நடந்தேன். நான் சைனாடவுனைக் கடந்து நடந்தேன். வலதுபக்கமாகத் திரும்பி யேல் தெருவை அடைந்தேன். அந்தத் தெரு முடிவில் ஒரு சபையைப் பார்த்தேன். அது சீன பாப்திஸ்து சபை. நான் அந்தக் கதவைத் தட்ட லோர்னா லம் என்ற ஓர் இளம் பெண் கதவைத் திறந்து என்னோடு பேசினாள். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை, சபைக்கு வரும்படி என்னை வரவேற்றாள். மறுநாள் நான் அங்கே போனேன். அதன்பிறகு நான் அநேக வருடங்கள் அங்கே போனேன். நான் அங்கே இருக்கும் பொழுது இயேசு என்னை இரட்சித்தார். நான் உண்மையான, நிலையான நண்பர்களை அங்கே உருவாக்கிக் கொண்டேன்; லோர்னா மற்றும் மர்ஃபி லம் போன்ற நண்பர்களை.

எங்களைப்பற்றிப் பயப்பட வேண்டாம்! இயேசுவைப் பற்றியும் பயப்பட வேண்டாம்! எங்களோடு வாருங்கள் நாங்கள் உங்களுக்கு நன்மை செய்வோம்! நான் உங்களுக்கு வாக்குக் கொடுக்கிறேன், திரும்பவும் எங்களோடு வாருங்கள், அது உங்கள் வாழ்க்கையை மிகவும் நல்லபடியாக மாற்றும். அடுத்த வார இறுதியில் எங்களிடம் நீங்கள் மறுபடியும் வந்தால் – இயேசுவிடமும் வந்தால் – இப்பொழுதிருந்து ஓர் ஆயிரம் வருடங்களுக்கு நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்!

இயேசு அந்தக் கதரேனருடைய மனிதனிடமிருந்த அந்தப் பிசாசுகளைத் துரத்தினார். இயேசு அவனை இரட்சித்தார்! ஆமாம், அவன் இயேசு கிறிஸ்துவினால் இரட்சிக்கப்பட்டான்!

அதனால் மனிதர்கள் இன்று
   இரட்சகரைக் கண்டுகொள்ள முடிகிறது,
அவர்களால் காதல், இச்சை மற்றும்
   பாவத்தை ஜெயிக்க முடியாது;
உடைபட்ட இருதயங்கள் அவர்களைத்
   துக்கம் மற்றும் தனிமையில் தவிக்கவிட்டது,
பிறகு இயேசு தாமே,
   உள்ளே வந்தார், தங்கினார்.

இயேசு வந்தபொழுது
   சோதனைக்காரனின் வல்லமை உடைக்கப்பட்டது;
இயேசு வந்தபொழுது
   கண்ணீர்த் துளிகள் துடைக்கப்பட்டது.
அவர் துக்கத்தை எடுத்துக்கொண்டு
   வாழ்க்கையை மகிமையினால் நிரப்புவார்,
எல்லாம் மாற்றப்பட்டது
   இயேசு தங்கும்படி வந்த பொழுது.

கிறிஸ்து உங்களைச் சாத்தனிடமிருந்து விடுவிக்க முடியும்! கிறிஸ்து உங்களுக்கு ஜீவனையும் வல்லமையையும் கொடுக்க முடியும்! கிறிஸ்து உங்களுடைய வாழ்க்கையை மாற்ற முடியும்! இயேசு கிறிஸ்துவிடம் செல்லும் வழியை உங்களுக்குக் காட்ட எங்களுக்கு ஒரு தருணத்தைக் தாருங்கள்! நாங்கள் உங்களுக்கு அந்த வழியைக் காட்டும்படி நீங்கள் திரும்பவும் வாருங்கள்! ஒருவேளை சிலர் சொல்லலாம், “நான் பிசாசுகள் மற்றும் சாத்தானை நம்புவதில்லை”. அது சரி. நானும் அவைகளை ஒரு காலத்தில் நம்பாமல் இருந்தேன். ஆனால் அது முக்கியமான காரியமல்ல. மிக முக்கியமான காரியம் என்னவென்றால் இயேசு உங்களை நேசிக்கிறார் என்று அறிந்து கொள்வதும், நாங்களும் உங்களை நேசிக்கிறோம் என்று உணர்ந்து கொள்வதும் தான்! நிரந்தரமான நண்பர்களை உண்டாக்கிக் கொள்ளும் இடம் இதுதான். நீங்கள் அங்கீகரிக்கப்படவும் நேசிக்கப்படவும் ஏற்ற இடம் இதுதான்! தேவனுடைய ஒரேபேரான குமாரனாகிய கிறிஸ்துவிடம், உங்களுடைய நம்பிக்கையை வையுங்கள், அவர் எல்லா காலத்திற்குமான பாவத்தண்டனைக் கிரயத்தைச் சிலுவை மரணத்தின் மூலமாகச் செலுத்தி உங்களை இரட்சிப்பார். ஆமென்!

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

பிரசங்கத்திற்கு முன்னால் திரு. ஆபெல் புருதோம் வாசித்த வேத பகுதி: மத்தேயு 8:28-34.
பிரசங்கத்திற்கு முன்னதாகப் பாடப்பட்ட தனிப்பாடலைப் பாடியவர் திரு.
      பென்ஜமின் கின்கேய்டு கிரிஃபீத்:
      “Then Jesus Came” (words by Dr. Oswald J. Smith, 1889-1986; music
by Homer Rodeheaver, 1880-1955).


முக்கிய குறிப்புகள்

இன்றையப் பிசாசுகள்

DEMONS TODAY

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ் ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

“பின்பு அவர்கள் கடலுக்கு அக்கரையிலுள்ள கதரேனருடைய நாட்டில் வந்தார்கள். அவர் படவிலிருந்து இறங்கினவுடனே, அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் பிரேதக்கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிராக வந்தான்” (மாற்கு 5:1-2).

I.   முதலாவது, இந்த இளைஞன் பிசாசினால் பிடிக்கப்பட்டான்,
எபேசியர் 6:12; 2:2.

II.  இரண்டாவது, இந்த இளைஞன் தனிமையாக இருந்தான், லூக்கா 8:27; மாற்கு 5:5.

III. மூன்றாவது, இந்த இளைஞன் இயேசுவுக்குப் பயந்தான், மாற்கு 5:7.