Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




ஒர் எழுப்புதலின் தரிசனம்

A VISION OF REVIVAL
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ் ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

ஜூலை 3, 2016 அன்று கர்த்தருடைய நாள் மாலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, July 3, 2016


என்னோடுகூட ஏசாயா 64:1க்கு திருப்பிக் கொள்ளுங்கள். அது ஆங்கில வேதாகமத்தில் ஸ்கோப்பீல்டு ஸ்டடி பைபிளில் 768ம் பக்கத்தில் இருக்கிறது.

“ஆ, உமது நாமத்தைச் சத்துருக்களுக்குத் தெரியப் பண்ணுவதற்கும், ஜாதிகள் உம்முடைய சந்நிதிக்கு முன்தத்தளிப்பதற்கும், தேவரீர் வானங்களைக் கிழித்திறங்கி, உருக்கும் அக்கினி எரியுமாப்போலவும், அக்கினி தண்ணீரைப் பொங்கப்பண்ணுமாப்போலவும், பர்வதங்கள் உமக்கு முன்பாக உருகும்படிசெய்யும், நாங்கள் எதிர்பார்த்திராத பயங்கரமான காரியங்களை நீர் செய்த போது, நீர் இறங்கினீர், உமது சந்நிதியில் பர்வதங்கள் உருகிப்போயின. தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் செய்பவைகளை, நீரேயல்லாமல் உலகத்தோற்றம்முதற்கொண்டு ஒருவரும் கேட்டதுமில்லை, செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டதுமில்லை” (ஏசாயா 64:1-4).

ஆமென். நீங்கள் அமரலாம்.

எழுப்புதலானது ஏற்கனவே மாற்றப்பட்ட மக்கள் மூலமாக வழக்கமாக வருகிறது. ஆனால் அவர்கள் தங்கள் மத்தியில் இருக்கும் தேவனுடைய பிரசன்னத்தின் மெய்யான விழிப்புணர்வை தங்கள் வாழ்க்கையில் பெற்றுக் கொள்ளாமல் இருக்கிறார்கள். பழக்க வழக்கமாக அவர்கள் சபைக்கு வருகிறார்கள், ஆனால் அவர்களுக்கு தேவனுடைய பிரசன்னத்தின் ஜீவனுள்ள உணர்வு இல்லை. அவர்கள் ஜெபிக்கிறார்கள், ஆனால் வெறும் வார்த்தைகளை சொல்லுவதாகவே உணருகிறார்கள். தேவன் அவர்களை கேட்கிறார் என்ற மெய்யான உணர்வு அவர்களுக்கு இல்லை. அவர்களுடைய ஜெபங்களுக்கு பதிலளிக்கப்படும் என்ற மெய்யான உணர்வு அவர்களுக்கு இல்லை. தேவன் அவர்களை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்ற உணர்வு அவர்களுக்கு இல்லை. அவர்கள் ஜெபக்கூட்டங்களில் அற்புதமாக ஜெபிப்பார்கள். அவர்களுடைய ஜெபம் வல்லமையான சத்தத்தோடு இருக்கும். ஆனால் தேவனோடு அவர்களுக்கு இதயபூர்வமான உரையாடல் இருப்பதில்லை. மிகுந்த வல்லமையோடு அடிக்கடி எழுப்புதலுக்காக ஜெபங்களை நடத்துபவர்கள் தாம் பின் வரும் வசனத்தின்படி தங்களுடைய பாவங்களை முதலில் உணரக்கூடியவராவர் “உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் [அவர்களுக்கு] செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது” (ஏசாயா 59:2).

தங்கள் பாவங்களினிமித்தமாக தேவனுடைய நுட்பமான பிரசன்னத்தின் உணர்வையும் மற்றும் பரிசுத்தத்தையும் இழந்தோம் என்று உணர்வடைந்த நல்ல கிறிஸ்தவ தலைவர்கள் மூலமாக அடிக்கடி எழுப்புதல் ஆரம்பிக்கிறது. சிறிது நேரத்தில் நான் உங்களுக்கு ஒரு பெரிய எழுப்புதலைப்பற்றிப் படிக்கிறேன். அது எப்படி ஆரம்பித்தது? அது சனிக்கிழமை இரவு ஜெபக்கூட்டத்தில் ஆரம்பமானது. அங்கே வழக்கமான ஜெபங்கள் நடைபெற்றன, ஆனால் அதில் தேவனுடைய பிரசன்னத்தின் உணர்வில்லாதிருந்தது. “பிறகு ஒரு போதகர் மனமுடைந்து அழுதார். இது ஒரு வழக்கமில்லாத காரியமாகும்”. அவர் அந்த முழு கூட்டத்திற்கு முன்பாக வெளிப்படையாக “தனது இருதயம் கடினப்படுத்தினதாக” அறிக்கையிட்டார். அவர் தமது கண்ணீரோடு பேசினபொழுது, “அங்கே அந்த அழுகையும், பெருமூச்சும், புலம்பலும்... கூட்டம் முழுவதற்கும் பரவினது”. அவர்கள் அனைவரும் மனமாறப்பட்ட மக்கள், ஆனால் அந்தப் போதகருடைய வெளிப்படையான அறிக்கையின் மூலமாக அவர்களும் கூட தங்கள் இருதயங்கள் கடினப்பட்டிருப்பதை உணர்ந்து கொண்டார்கள். “அந்த கூட்டமானது அதிகாலை 2 மணி வரையிலும் தொடர்ந்தது... இந்த சமயத்தில் தான் அந்தக் கூட்டத்தில் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்”.

நான் எழுப்புதல் என்று சொல்லும்போது அநேக ஆண்டுகளாக இங்கே இருக்கும் உங்களின் சிலருக்கு அதை கேட்க விருப்பம் இருக்காது. அது ஏனென்றால் நீங்கள் ஒருபோதும் எழுப்புதலை பார்த்ததில்லை மற்றும் நாம் எதை இழந்து இருக்கிறோம் என்று உங்களுக்குத் தெரியாது. ஜான் கேஹன் என்னிடம் எனக்கு எழுப்புதல் வேண்டும் ஏனென்றால் நான் “அதை ருசிக்க முடியும்” என்று சொன்னார். நான் ஒரு எழுப்புதலைப் பார்த்தேன் மற்றும் அதன் “ருசியை” விரும்பினேன் அது மறுபடியும் கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன். நீங்கள் ஒருபோதும் இதை ருசித்தது இல்லை அதனால் நீங்கள், “இந்த போதகர் எதைப்பற்றி பேசுகிறார்? எழுப்புதலை பற்றி தொடர்ந்து ஏன் பேசி கொண்டு இருக்கிறார்?” என்று நினைக்கலாம். நீங்கள் எப்பொழுதாவது இதை ருசித்திருந்திருந்தால், நீங்களும்கூட இதை வேண்டுமென விரும்புவீர்கள். நீங்கள் அதற்காக ஏங்குவீர்கள். தேவனுடைய பிரசன்னம் நம் மத்தியில் இறங்கி வர வேண்டும் என்ற ஏக்கம் உங்களுக்கு இருக்கும்.

இன்று காலையில் நான் “புதிய ஞானஸ்நான ஆசாரிப்பு கூடாரத்தில்” பிரசங்கித்தேன். ஆனால் ஓர் ஆலயத்தின் சில பொருள்களை மாற்றி, அந்த சபையின் அமைப்பை “இயந்திரம்” மூலம் பழுதுபார்த்து அதைப் புதிய ஆலயமாக மாற்றிவிடமுடியாது. நமக்கு புதிய ஜீவன் அவசியம் வேண்டும்! தேவனிடத்திலிருந்து மட்டுமே புதிய ஜீவன் வர முடியும். டாக்டர் A. W. டோசர் சொன்னார், “தேவன் ஜீவனை கொடுக்கிறார், ஆனால் முன்னேற்றம் அடைந்த பழைய ஜீவனுக்கு அல்ல. அவர் மரணத்திலிருந்து ஜீவனை அளிக்கிறார்... ஜீவனுக்காக நாம் முழுமையாக மற்றும் தொடர்ச்சியாகத் தேவனை சார்ந்து இருக்க வேண்டும், அவரே ஜீவனுக்கு ஊற்று மற்றும் மூல காரணர் ஆவார்”. நாம் “புதிய” ஞானஸ்நான ஆசாரிப்பு கூடாரத்தை நம்முடைய இருதயங்கள் செப்பனிடப்படாமல், புதுப்பிக்கப்படாமல், திருந்திவிடாமல் மற்றும் புத்துயிர் பெறாமல் பெற்றுவிட முடியாது. இதை விவரிக்க ஒரு வார்த்தை உள்ளது. அந்த வார்த்தை தான் எழுப்புதல்! எழுப்புதலைப் பற்றி வேதத்தில் ஏசாயா ஜெபிப்பதாவது,

“ஆ உமது நாமத்தைச் சத்துருக்களுக்குத் தெரியப் பண்ணுவதற்கும், ஜாதிகள் உம்முடைய சந்நிதிக்கு முன்தத்தளிப்பதற்கும், தேவரீர் வானங்களைக் கிழித்திறங்கி, உருக்கும் அக்கினி எரியுமாப்போலவும், அக்கினி தண்ணீரைப் பொங்கப்பண்ணுமாப்போலவும், பா;வதங்கள் உமக்கு முன்பாக உருகும்படிசெய்யும், நாங்கள் எதிர்பார்த்திராத பயங்கரமான காரியங்களை நீர் செய்த போது, நீர் இறங்கினீர், உமது சந்நிதியில் பர்வதங்கள் உருகிப்போயின. தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் செய்பவைகளை, நீரேயல்லாமல் உலகத்தோற்றம்முதற்கொணடு; ஒருவரும் கேட்டதுமில்லை, செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டதுமில்லை” (ஏசாயா 64:1-4).

“என்னுடைய பார்வையை எல்லாம் நிரப்பும்” என்று பாடுவதை என்னால் நிறுத்த முடியாது. நான் பூங்காவைச் சுற்றி நடந்து வரும்போதும் ஜெபிக்கும்போதும், அதைப் பாடுவேன். நான் ஒரு பிரசங்க செய்தியைத் தயார் செய்யும்போதும், அதைப் பாடுவேன். நாள்முழுவதும் அதை எனக்குள் பாடிக் கொண்டே இருப்பேன். இரவிலே படுக்கைக்குப் போவதற்கு முன்பாகக் கடைசியாகப் பாடும் பாடலும் அதுவாகும்.

என் பார்வையை எல்லாம் நிரப்பும், தெய்வீக இரட்சகரே,
     உமது மகிமையினால் எனது ஆவி பிரகாசிக்கும் வரையிலும்.
என் பார்வையை எல்லாம் நிரப்பும், அதை அனைவரும் பார்க்கும்படியாக.
     உமது பரிசுத்த சாயல் என்னில் பிரதிபலிக்கும்படியாக.
(“Fill All My Vision,” Avis Burgeson Christiansen, 1895-1985).

இந்தப் பல்லவியை எல்லோரும் எழுந்து நின்று என்னோடே பாடவும்.

என் பார்வையை எல்லாம் நிரப்பும், தெய்வீக இரட்சகரே,
     உமது மகிமையினால் எனது ஆவி பிரகாசிக்கும் வரையிலும்.
என் பார்வையை எல்லாம் நிரப்பும், அதை அனைவரும் பார்க்கும்படியாக.
     உமது பரிசுத்த சாயல் என்னில் பிரதிபலிக்கும்படியாக.

நீங்கள் அமரலாம்.

ஏசாயா ஜெபித்தார், “ஆ, தேவரீர் வானங்களைக் கிழித்து இறங்கி (விரிவாகத் திறந்து) பர்வதங்கள் உமக்கு முன்பாக உருகும்படி செய்யும்” (ஏசாயா 64:1). டாக்டர் லாயட்-ஜோன்ஸ் அதை “எழுப்புதலுக்கு (என்று) இறுதி ஜெபம்” என்று அழைக்கிறார் (Martyn Lloyd-Jones, M.D., Revival, Crossway Books, 1992 edition, page 305).

லாஸ் ஏன்ஜல்சில் உள்ள முதலாவது சீன பாப்டிஸ்ட் சபையாகிய என்னுடைய சபையிலே, எழுப்புதல் உண்டான குறிப்புகளை வைத்திருக்கவில்லையே என்று நான் மிகவும் வருந்துகிறேன். எதற்காக ஜெபிக்க வேண்டும் என்ற ஒரு ஒளியை அது கொடுத்திருக்கும். ஆனால், ஐயோ, நான் அதைப்பற்றின எழுத்து மூலமான குறிப்புகளை வைத்திருக்கவில்லையே. நான் உங்களுக்குச் செய்யமுடிந்த மிகச்சிறந்த காரியம் என்னவென்றால், 1960களில் சீன சபையில் நான் பார்த்த பெரிய எழுப்புதலைப் போன்று இன்னுமொரு எழுப்புதல் பற்றின விபரங்களைக் கொடுப்பதே. இந்த விபரங்கள் ரெவரன்ட் டேவிட் டேவிஸ் அவர்களால் 1989ல் கொடுக்கப்பட்டது. அந்த நகலில் இருந்து நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். ரெவரன்ட் டேவிஸ் சொன்னார்,

         …இது ஒரு சுவிஷேச படைமுயற்சி அல்ல, மற்றும் ஏதோ ஒரு துடைத்துப்போடுகிற காரியமும் அல்ல. எழுப்புதல் என்பது தேவன் தமது பிரசன்னத்தோடு இறங்கி வருகிற காரியமாகும்.

அவர் சொன்னார்,

         எங்கள் பகுதியிலிருக்கும் அனேக சபைகளுக்கு நான் தலைவராக இருக்கிறேன். அவைகள் அதிக அலுவல்கள் நிறைந்த சுறுசுறுப்பான சபைகள். எங்களுக்கு அநேகக் கூட்டங்கள் இருந்தன… ஆனால் மக்கள் குளிர்ந்த நிலையில் இருந்தார்கள்; அவர்கள் முன்பு வந்தது போல வாஞ்சையோடு ஜெப கூட்டங்களுக்கு வருவது இல்லை. சந்தேகமில்லாமல் இரட்சிப்பு இருந்தது மற்றும் மக்கள் மனமாற்றப்பட்டார்கள், ஆனால் ஏதோ ஒன்று இல்லாமல் இருந்தது. ஒரு பிரசங்கியார் சொன்னார், “நாம் வெளியில் இருப்பவர்களுக்கு நல்லவர்களாக காணப்படுகிறோம்”. [என்னுடைய விளக்கம்: நம்முடைய ஊழியங்களில் ஏதோ ஒன்று குறைவு படுவதை உணர முடியவில்லையா?]
         யாரோ ஒருவர் தலைவர்களிடம் ஜெபத்திற்காக ஒவ்வொரு மாதமும் ஒருநாள் முழுவதும் செலவிட வேண்டும் என்று வலியுறித்திக் கொண்டிருந்தார். நாங்கள் அப்படிச் செய்தோம். எங்களில் அநேகர் தேவனுக்காக நெருப்பாக இல்லை என்று உணர்ந்தோம். எங்களுக்குள் தவறான உறவு முறைகள் இருப்பதை உணர்ந்து கொண்டோம், மற்றும் நாங்கள் ஒருவருக்கொருவர் சரிசெய்து கொண்டோம்.
         இந்த எழுப்புதலானது சனிக்கிழமை இரவு வேத ஆராய்ச்சி மற்றும் ஜெபக்கூட்டத்தில் தான் ஆரம்பமானது. சில காலங்களாக அப்போஸ்தலர் நடபடிகளின் புத்தகத்திலிருந்து, ஆரம்ப சபையிலிருந்த தேவனுடைய ஆராதனையை மையமாகக் கொண்டு வேத ஆராய்ச்சி நடத்தப்பட்டது. ஜெபத்திலே சுதந்தரம் இல்லை என்பதைப் பற்றியும், கூட்டங்கள் முழுமனதாகத் திருப்தியுடன் நடைபெறவில்லை என்றும் பிரசங்கிகள் கரிசனையாக இருந்தனர். அதன் பிறகு ஒரு போதகர் மனமுடைந்து அழுதார். அது மிகவும் வழக்கமில்லாத காரியமாக இருந்தது. அவருக்கு கடினமான இருதயம் இருந்ததாக அவர் விளக்கிச் சொன்னபோது அந்த உணர்த்துதல் பரவியது - அங்கே அழுகையும், கண்ணீரும், பெருமுச்சும் மற்றும் புலம்பலும், கூட்டம் முழுவதற்கும் பரவியது. மக்கள் முகங்குப்புற விழுந்து அழுதார்கள் மற்றும் ஜெபித்தார்கள். ஸ்பர்ஜன் ஒருமுறை, “கர்த்தாவே, மகிமையான ஒழுங்கின்மையின் காலத்தை எங்களுக்குள் அனுப்பும்” என்று ஜெபித்ததை நான் நினைத்தேன். அந்தத் தலைவர்கள் எல்லாவற்றையும் நிறுத்த முயற்சி செய்தார்கள், ஆனாலும் தோற்று போனார்கள், மற்றும் அந்தக் கூட்டம் காலை 2 மணி வரையிலும் நடந்தது.
         என்னுடைய சொந்த சகோதரர் இந்த எழுப்புதலை பற்றிக் கேள்விப்பட்டு அது அதிகப்படியான உணர்ச்சிப் பூர்வமானதாகக் காணப்படுவதால் அதற்கு விரோதமாக நின்றார். அவர் எழுப்புதலுக்காக ஜெபம் செய்து கொண்டு வந்தவர், என்றாலும் இது அவர் விரும்பினது அல்ல என்று தேவனிடம் சொன்னார். அதன்பிறகு அவருடைய அவிசுவாத்தால் உண்டான கல்லான இருதயத்தால் எழுப்புதலின் அக்கினி குளிர்ந்து போனதைப் பற்றித் தேவன் அவரோடு பேசினார். இவ்விதமாக அந்தக் கூட்டத்தில் ஆவியானவர் இறங்கினார். [என்னுடைய விளக்கம்: அதாவது தேவன் உடைக்கும்பொழுது, ஸ்பர்ஜன் சொன்னது போல “மகிமையான ஒழுங்கீனம்” காணப்படும் என்பதாகும்).

ரெவரன்ட் டேவிஸ் சொன்னார்,

         இப்பொழுது சந்தேகப்படுவது என்னுடைய பங்காகும். என்னுடைய சகோதரன் என்ன நடந்து கொண்டிருந்தது என்பதை உச்ச அளவான மொழியில் விவாதித்தபொழுது நான் கலக்கம் அடைந்தேன். ஆனால், பிறகு, எழுப்புதல் எப்பொழுதும் வித்தியாசமானது ஏனென்றால் அது மனிதனால் உண்டாக்கப்பட்டது அல்ல. அந்த எழுப்புதலானது புதரில் பற்றிய நெருப்பு போல நூற்றுக்கணக்கான மைல்களுக்குப் பரவியது, அதுமட்டுமல்லாமல் அதன் மூலமாக மற்ற சபைகளும் தொடப்பட்டன.
         ஒரு இளம் பிரசங்கியார் ஒரு வல்லமையான செய்தியைக் கொடுத்தார், ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. அதனால் நான் கடைசியாக ஒரு பல்லவியைப் பாடி ஜெபத்துடன் கூட்டத்தை முடித்தேன். கூட்டம் கலைந்து போய் கொண்டிருக்கும்போது, ஒரு இளம் ஆசிரியர் வந்து முன்பாக உட்கார்ந்தார். அவர் அடக்கமுடியாமல் நடுங்கினார் மற்றும் புலம்பினார். ஒரு இளம் பெண் கதறி அழுதாள், “நான் என்ன செய்வேன்? நான் என்ன செய்வேன்? நான் நரகத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்!” மக்கள் மறுபடியுமாகத் திரும்ப சபைக்கு ஓடி வந்தார்கள். அந்தப் பெண் ஒரு நல்ல கிறிஸ்தவளாக அறியப்பட்டவள். ஆனால் அவள் ஏமாற்றுதல் என்ற பாவத்தால் உணர்த்தப்பட்டாள். அந்த இளம் வாலிபன் பொறாமை என்ற குற்றம் செய்தான், மற்றவர்களுக்கு அது சிறிய காரியம், ஆனால் அது அவனைப் பயமுறுத்தியது.
         என்னுடைய மனைவி நான் வீட்டிற்கு வர வேண்டும் என்ற தகவலை ஒருவர் என்னிடம் சொன்ன போதுதான் அப்படி அழுது கொண்டிருந்தவர்களுக்கு நான் ஆலோசனை கொடுத்துக் கொண்டிருந்தேன். ஒரு நல்ல கிறிஸ்துவர் வேதனையோடு தரையில் விழுந்து கிடந்ததை நான் பார்த்தேன், அவர் அதிகமதிகமாக அழுது கொண்டிருந்தார், “நான் என்ன செய்வேன்? நான் என்ன செய்வேன்?” சிறிது நேரத்திற்குப் பிறகு அவர் தன்னுடைய பாவத்தை வெளிப்படையாக அறிக்கையிட்டு மகிழ்ச்சியாக, “என்னுடைய இருதயம் இயேசுவின் இரத்தத்தினால் சுத்தமானது” என்று சொன்னார். நாங்கள் அனைவரும் இன்னொரு கூட்டத்துக்காக ஆலயத்திற்குத் திரும்பினோம். அடுத்த நாள் வெளிப்படையான பாவ அறிக்கையின் நாள், அதன் மூலம் ஒருவருக்கொருவர் காரியங்களைச் சரிசெய்து கொண்டனர். உடனே தேவன் இறங்கி வந்தார் அது ஒரு பரலோக சந்திப்பாக இருந்தது.
நாங்கள் கட்டுப்பாட்டுக்குள் இல்லை. தேவன் கட்டுபாட்டில் வைத்திருந்தார், சகலமும் பரிபூரண ஒழுங்கில் இருந்தது. முதலாம் நாள் சபையின் தலைவர்கள் பாதிக்கப்பட்டதை நான் கவனித்தேன். இரண்டாம் நாள் வேலையாட்கள் உணர்த்தப்பட்டார்கள். மூன்றாவது நாள், பெண்கள், நான்காவது நாள் பள்ளிச் சிறுவர்கள், மற்றும் ஐந்தாவது நாள் பள்ளிக்கூடப் பெண்கள் ஆவார்கள். பிரசங்கிகளான நாங்கள் பார்வையாளர்கள் போல, தேவன் கிரியை செய்ததை கவனித்துக் கொண்டு இருந்தோம்.
         அந்த நேரத்தில் மனமாற்றப்பட்ட மக்கள் மத்தியில் உண்டான எழுப்புதல் இதுவாகும். மிக சிறிய அளவான அவிசுவாசிகள் முதல் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இரட்சிக்கப்பட்டார்கள். தேவன் முதலாவதாக ஆலயத்தைச் சுத்திகரிப்புச் செய்தார். இருதயங்கள் ஆராயப்பட்டன. சில மக்களின் பாவங்கள் வருடகணக்காக மறைக்கப்பட்டு இருந்தன; மற்றும் அவர்கள் இந்தப் பாவங்களைப் பற்றிக் கவலைப் படாதிருந்தார்கள். தேவன் ஒவ்வொரு தனிப்பட்ட நபரோடும் வேதனையோடு சலக்கிரனை செய்தார். ஒரு பெரிய, வல்லமையுள்ள பிரசங்கியார் தம்முடைய கைகளைப் பிசைந்து கொண்டிருந்தார், அவருடைய முகத்தில் கண்ணீர் வழிந்து ஓடினது. இந்த மனிதர் அநேகரை கிறிஸ்துவிடம் நடத்தினவர். ஆனால் அவருக்கு அறிக்கை செய்ய வேண்டிய பாவம் இருந்தது, முழு சபைக்கும் முன்பாக அவர் நின்று தனது பாவத்தை அறிக்கை செய்யும் வரையிலும் அவருக்கு சமாதானம் இல்லை. அவருடைய வார்த்தைகள் மின்சாரத் தாக்குதலைப் போல இருந்ததால் மக்கள் மனந்திரும்பி தரையிலே விழுந்தார்கள். இந்தச் சமயத்தில் அந்த முழு நகரமும் தேவனைப் பற்றியே பேசிக் கொண்டு இருந்தது. [என்னுடைய விளக்கம்: கிறிஸ்தவர்கள் மனந்திறக்கப்பட்டு ஒருவருக்கொருவர் மெய்யான நிலைக்கு வரும்பொழுது இழக்கப்பட்டவர்கள் உணர்த்தப்படுவார்கள்].
         சில சமயங்களில் உணர்த்தப்படுதல் ஒரு பயங்கரமான காரியமாக இருக்க முடியும், வெளிப்படையாக அறிக்கை செய்வதை எதிர்ப்பவர்களின் பாவங்கள் அவர்களை அதிக அளவில் பாடுபடுத்தும். ஒரு மனிதன் கடந்து போனார். ஒரு பெண் அனைவருக்கும் முன்பாக தனது பாவத்தை அறிக்கையிடும் வரையிலும் தனக்குப் பைத்தியம் பிடித்துவிடும் என்று உணர்ந்தாள். தேவனை எதிர்த்து மற்றும் தங்கள் பாவங்களை மறைக்க முயர்ச்சி செய்த சிலருக்கு, இதுவே விலைக்கிரயமாக இருந்தது. இந்த அதிசய சம்பவம் விரைவில் முடிவுற்றது, ஆனால் அதனால் உண்டான எழுப்புதலின் பலன்களாவன பரிசுத்தம், இணக்கம், வேதவசனத்தின் மீதும் ஜெபத்தின் மீதும் ஏற்படும் ஓர் அன்பு, மற்றும் கிறிஸ்துவையும் அவரது பணியையும் மேன்மை படுத்துதும் செயல் போன்றவை ஆகும். [என்னுடைய விளக்கம்: கிறிஸ்தவர்கள் தங்கள் முகமூடிகளை எடுத்துப்போட்டு ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்கும்பொழுது அது சபையிலே புதிய மென்மையையும் மற்றும் அன்பையும் உண்டாக்கும். பழைய பொறாமை, பயங்கள் மற்றும் கௌரவங்கள் மாறி மெய்யான இரக்கம் மற்றும் மென்மையான அன்பு உண்டாகும்].
         நீண்டநேரமாக நடைபெற்றாலும், ஒவ்வொருவரும் கூட்டங்களுக்கு வந்தார்கள். காலை 6.30 மணிக்கு ஆரம்பித்த ஒரு கூட்டம் மதியம் வரையிலும் நடந்தது வழக்கத்திற்கு மாறானதாக இல்லை. தேவன் தங்களுக்கு மிகநெருக்கமாக இருந்ததை உணர்ந்தமையால் மக்கள் இரகசியமாகப் பேசிக்கொண்டார்கள். ஒரு மனிதர், “தேவனுடைய தரிசனத்தால் சுற்றிக் கட்டப் பட்டவர்களைப் போலக் காணப்படுகிறோம்” என்று சொன்னார். தேவன் அவ்வளவாக உண்மையுள்ளவராக இருந்தபடியினால் என்னால் இருக்கையில் உட்காறுவதற்கும் தைரியமில்லாமல் அந்தக் கூட்டங்களில் தவித்தேன். யோபு 42:5ல் சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைவு கூர்ந்தேன், “என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண்கள் உம்மைக் காண்கிறது”.
         இதற்குமுன் எப்பொழுதும் இல்லாதபடி மக்கள் ஜெபித்தார்கள். எழுப்புதலில் ஒருமித்த ஜெபம் பொதுவான ஒரு காரியமாகும், ஆனால் அது கண்டபடியாகவோ அல்லது ஒழுங்கற்ற தன்மையாகவோ காணப்படவில்லை. சுவிஷேச ஊழியத்தின் மீதும் மக்களுக்கு ஆவல் ஏற்பட்டது. நூற்றுக்கணக்காக மற்றும் ஆயிரக்கணக்காக மக்கள் இரட்சிக்கப்பட்டார்கள். [என்னுடைய விளக்கம்: இரண்டு எழுப்புதல்களில் இப்படியாக நடந்ததை நான் பார்த்திருக்கிறேன்].

ரெவரன்ட் டேவிஸ் சொன்னார்,

இதோடு முடிந்ததா? நான் பதினெட்டு மாதங்களாக நாள்குறிப்புகளை எழுதி வைத்திருந்தேன், அந்த முடிவின் காலத்திலும் தேவனுடைய வல்லமை அங்கே தொடர்ந்து இருந்தது. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு இருந்த சபையின் தலைவர்கள் அந்த எழுப்தலினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாவர். ஆனால் அங்கே ஒரு புதிய தலைமுறைக்குத் தமது சொந்த எழுப்புதல் தேவையாக இருக்கிறது – ஏனென்றால், “கர்த்தரையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த கிரியையையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப்பின் எழும்பிற்று” (நியாயதிபதிகள் 2:10). உங்களது தனிப்பட்ட வாழக்கையில் எழுப்புதல் வரவேண்டுமென்ற விருப்பம் உங்களுக்கு இல்லாதவரை, சபைக்கு எழுப்புதல் வரவேண்டுமென்பதற்காக நீங்கள் ஜெபிக்க முடியாது - “உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள்” (யாக்கோபு 5:16).

இந்தக் குறிப்புகள் ரெவரன்ட் டேவிட் டேவிஸ் அவர்களிடம் இருந்தவைகள். அவைகளில் சிலவற்றை எடுத்து நான் தயார் செய்தேன், சுலபமாக புரிந்து கொள்ளும்படியாக சில வார்த்தைகளை நீக்கிவிட்டேன், பிரையின் எச். எட்வார்ட்ஸின், எழுப்புதல்! A People Saturated With God, Evangelical Press, 1991 edition, pp. 258-262.

ரெவரன்ட் டேவிஸ் சொன்னார், “தேவன் எழுப்புதலின் வல்லமையோடு வரும்பொழுது அது நீ கற்பனை செய்யும் எல்லாவற்றையும்விட வித்தியாசமானதாக இருக்கும்... தேவன் தம்முடைய பிரசன்னத்தோடு கீழே இறங்கி வருவதுதான் எழுப்புதலாகும். ஒரு சபைத்தலைவர் மனமுடைந்து அழுதபோது அது ஆரம்பித்தது. அவர் தனக்கு கடின இருதயம் இருந்ததை விவரித்தார், அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே ஏற்கனவே மனமாற்றப்பட்ட மக்களிடையே அழுகையும், புலம்பலும் மற்றும் பெருமூச்சும் மிகுந்த உணர்த்துதலுடன் பரவினது. மக்கள் அழுதுகொண்டும் ஜெபித்துக்கொண்டும் இருந்தார்கள், கூட்டம் காலை இரண்டு மணிவரையிலும் தொடர்ந்தது”.

இது நான் 1960ல் சீன ஞானஸ்நான சபையில் பார்த்ததைப் போன்ற அதே விதமான எழுப்புதல் ஆகும். எழுப்புதலில் பிரதானமான அம்சங்கள் கண்ணீர்கள், ஜெபங்கள், மற்றும் முழுசபைக்கும் முன்பாக வெளிப்படையான பாவ அறிக்கை ஆகும். இது கரிஸ்மாடிக் அல்லது பெந்தெகோஸ்த்தே கூட்டங்களுக்கு அதிக வித்தியாசமானதாகும். அங்கே “பாஷைகள்” அல்லது குணமாக்குதல், அல்லது சிறப்பான இசையும் இல்லை. அங்கே “ஆராதனை” இல்லை. அங்கே வெளிப்படையான பாவ அறிக்கையும், அழுகையும், மற்றும் மக்கள் ஒருவருக்கொருவர் மன்னிப்புக் கேட்பதும் மட்டுமே இருந்தது. அநேக வாரங்களுக்குப் பிறகு சபையில் இல்லாத அநேகர் புதிதாக வந்தார்கள் மற்றும் இரட்சிக்கப்பட்டார். ஜான் கேஹன் என்னிடம் இழக்கப்பட்ட மக்கள் எப்படி அங்கே மீண்டும் வந்தார்கள் என்று கேட்டார். அதற்குப் பதில் சொல்லுவது எனக்குக் கடினமாக இருந்தது. மக்கள் தங்கள் நண்பர்களையும் மற்றும் குடும்ப அங்கத்தினர்களையும் தங்களோடு கூட்டிக் கொண்டு வந்தார்கள். சுவிஷேச படை முயற்சிகள் ஒன்றும் ஏற்படுத்தப்படவில்லை. அது அப்படியே நடந்தது. கடைசியாக 2000 மக்கள் அந்த சீன சபைக்கு வந்தார்கள் இரட்சிக்கப்பட்டார்கள், ஞானஸ்நானம் பெற்றார்கள் மற்றும் நிலையான சபை உறுப்பினர்களாக மாறினார்கள். நூற்றுக் கணக்கான மக்கள் இந்த நாள் வரையிலும் அங்கே இருக்கிறார்கள்! பரிசுத்த ஆவியானவருடைய நிரப்புதலினால் இப்பொழுது நான்கு புதிய சபைகள் அதிலிருந்து உண்டாகி இருக்கின்றன.

“ஆ, உமது நாமத்தைச் சத்துருக்களுக்குத் தெரியப் பண்ணுவதற்கும், ஜாதிகள் உம்முடைய சந்நிதிக்கு முன்தத்தளிப்பதற்கும், தேவரீர் வானங்களைக் கிழித்திறங்கி, உருக்கும் அக்கினி எரியுமாப்போலவும், அக்கினி தண்ணீரைப் பொங்கப்பண்ணுமாப்போலவும், பர்வதங்கள் உமக்கு முன்பாக உருகும்படிசெய்யும், நாங்கள் எதிர்பார்த்திராத பயங்கரமான காரியங்களை நீர் செய்த போது, நீர் இறங்கினீர், உமது சந்நிதியில் பர்வதங்கள் உருகிப்போயின” (ஏசாயா 64:1-3).

தயவுசெய்து எழுந்து நின்று எட்டாவது பல்லவியை பாடவும்.

என் பார்வையை எல்லாம் நிரப்பும், இரட்சகரே, நான் ஜெபிக்கிறேன்,
   இயேசுவை மட்டும் இன்று நான் பார்க்கும்படி செய்யும்;
பள்ளதாக்கிலே நீர் என்னை நடத்தினாலும்,
   உமது மட்டற்ற மகிமை என்னை சுற்றிக் கொள்கிறது.
என் பார்வையை எல்லாம் நிரப்பும், தெய்வீக இரட்சகரே,
   உமது மகிமையினால் எனது ஆவி பிரகாசிக்கும் வரையிலும்.
என் பார்வையை எல்லாம் நிரப்பும், அதை அனைவரும் பார்க்கும்படியாக
   உமது பரிசுத்த சாயல் என்னில் பிரதிபலிக்கும்படியாக நிரப்பும்.

என் பார்வையை எல்லாம் நிரப்பும், ஆசைகள் அனைத்தும்
   உமது மகிமைக்காகவே; என் ஆத்துமாவை ஊக்குவியும்,
உமது பரிபூரணத்தாலும், பரிசுத்த அன்பாலும்,
   பரத்திலிருந்து வரும் ஒளி என் பாதையில் பாய்ந்தோடும்.
என் பார்வையை எல்லாம் நிரப்பும், தெய்வீக இரட்சகரே,
   உமது மகிமையினால் எனது ஆவி பிரகாசிக்கும் வரையிலும்.
என் பார்வையை எல்லாம் நிரப்பும், அதை அனைவரும் பார்க்கும்படியாக
   உமது பரிசுத்த சாயல் என்னில் பிரதிபலிக்கும்படியாக நிரப்பும்.

என் பார்வையை எல்லாம் நிரப்பும், பாவமில்லாமலும்
   பாவத்தில் பிரகாசிக்கும் வெளிச்சத்தின் நிழலிமில்லாமலும்.
உம்முடைய ஆசிர்வதிக்கப்பட்ட முகத்தை மட்டும் பார்ப்பேனாக,
   உமது அளவில்லாத கிருபையினால் என் ஆத்துமாவுக்கு விருந்தளியும்.
என் பார்வையை எல்லாம் நிரப்பும், தெய்வீக இரட்சகரே,
   உமது மகிமையினால் எனது ஆவி பிரகாசிக்கும் வரையிலும்.
என் பார்வையை எல்லாம் நிரப்பும், அதை அனைவரும் பார்க்கும்படியாக
   உமது பரிசுத்த சாயல் என்னில் பிரதிபலிக்கும்படியாக நிரப்பும்.
(“என் பார்வையை எல்லாம் நிரப்பும்” ஆவிஸ் பர்கேசன் கிறிஸ்டியன்சன், 1895-1985).

எழுப்புதல் அனுப்பும்படி தேவனிடம் ஜெபிப்பதை நிறுத்த வேண்டாம். தேவன் தமது வானத்தைக் கிழித்து இறங்கி நம் மத்தியில் வரவேண்டும் என்று ஜெபிப்பதை நிறுத்த வேண்டாம்! கர்த்தரிடம் ஜெபிப்பதை நிறுத்தவேண்டாம் அதுவே நம்மைப் பாவங்களிலிருந்து “நீங்கள் [நாம்] சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் [நம்முடைய] குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள்” (யாக்கோபு 5:16). இந்த எழுப்புதலின் காரியங்கள் இப்போது சீனாவிலும் மற்றும் மூன்றாம் உலகின் மற்றப் பகுதிகளிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேவன் இறங்கி வந்து நமது இருதயத்தைக் குணமாக்கிப் புதிய இருதயத்தைக் கொடுத்து அதிகமாக அன்பு கூறவும் அதிக வல்லமையான ஞானஸ்நான ஆசாரிப்புக் கூடாரத்தைக் கொடுக்க வேண்டுமாதலால் ஜெபிப்பதை நிறுத்த வேண்டாம்! தேவன் நம்மத்தியில் இறங்கி வரும்படி ஆரோன் யான்சி மற்றும் ஜான் கெஹன் இருவரும் எழுந்து நின்று நம்மை ஜெபத்தில் வழிநடத்த வேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஆரோன் முதலில், பிறகு ஜான். இன்னும் யாராவது இருக்கிறீர்களா? தயவுசெய்து எழுந்து நின்று ஜெபிக்கவும்!

இயேசு கிறிஸ்து இந்தப் பூமிக்கு வந்து பாடுப்பட்டு பாவிகளின் ஸ்தானத்தில் சிலுவையிலே மரித்தார். நீங்கள் இன்னும் இரட்சிக்கபட வில்லையானால், உங்களுடைய பாவம் நிறைந்த மற்றும் சுயநலமான வாழ்க்கை முறையிலிருந்து நீங்கள் திரும்ப வேண்டியது அவசியமாக இருக்கிறது. நீங்கள் மனந்திரும்பி, தேவனுடைய ஒரேபேரான குமாரனாகிய இயேசுவை விசுவாசிக்க வேண்டும். அவர் மட்டுமே உங்களுடைய பாவங்களைத் தம்முடைய இரத்தத்தினால் கழுவிச் சுத்தம் செய்ய முடியும். நரக அக்கினியிருந்து உங்களை விடுவிக்க அவரால் மட்டுமே முடியும். பாவத்திலிருந்து உங்களை இரட்சிக்க இயேசு ஒருவரால் மட்டுமே முடியும். உங்களுக்கு ஆலோசனை வேண்டுமானால் டாக்டர் கெஹன் அவர்களிடம் முன் அனுமதி பெற்று வியாழன் இரவு அவரைச் சந்திக்கவும். நீங்கள் அவரிடம் போனில் பேசி முன் அனுமதி பெறலாம் அல்லது இந்தக் கூட்டம் முடிந்தவுடன் அவரோடு பேசலாம். ஆமென்.

இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால், டாக்டர் ஹைமர் அவர்களுக்கு e-mail அனுப்புங்கள். அவர் உங்களிடமிருந்து பதிலைப் பெற விரும்புகிறார். நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென்றும் குறிப்பிடவேண்டும். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் e-mail: rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம். ஆனால், முடிந்தால் ஆங்கிலத்தில் எழுதவும். தபால் மூலம் அனுப்பவிரும்பினால், அவரது விலாசம்: Dr. Hymers P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசி மூலமும் தொடர்பு கொள்ளலாம்: (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை Internet மூலம் ஒவ்வொரு
வாரமும் கேட்கலாம்: www.sermonsfortheworld.com.
தமிழ்ப் பிரசங்கங்களுக்கு இங்கே கிளிக் பண்ணவும்

இந்தப் பிரசங்கங்களைப் பயன்படுத்த Dr. Hymers அவர்களின் அனுமதி
பெற வேண்டியதில்லை. அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். ஆனால்,
Dr. Hymers அவர்களின் video செய்திகளை அனுமதி இல்லாமல்
பயன்படுத்தக்கூடாது.

பிரசங்கத்திற்கு முன்னால் திரு. ஆபேல் புருதோம் வாசித்த வேத பகுதி: ஏசாயா 64:1- 4.
பிரசங்கத்திற்கு முன்னதாகப் பாடப்பட்ட தனிப்பாடலைப் பாடியவர் திரு. பென்ஜமின் கின்சாடு கிரிபீத்:
“Fill All My Vision” (Avis Burgeson Christiansen, 1895-1985).