Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




மனித குணாதிசயத்தின் பெலன் -

டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் 75வது பிறந்த நாள் வாழ்த்து செய்தி

THE STRENGTH OF A MAN’S CHARACTER –
A TRIBUTE TO DR. HYMERS ON HIS 75TH BIRTHDAY
(Tamil)

டாக்டர் சி. எல். கேகன் அவர்களால்
by Dr. C. L. Cagan

ஏப்ரல் 10, 2016 அன்று கர்த்தருடைய நாள் மாலை வேளையில் லாஸ்
ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, April 10, 2016

“ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோவாயானால் உன் பெலன் குறுகினது” (நீதிமொழிகள் 24:10).


ஒரு மனிதனின் மதிப்பை அளப்பது எப்படி? உலகம் பணத்தை மையப்படுத்தி அளக்கிறது. ஆனால் இயேசுவோ, “ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல” என்றார் (லூக்கா 12:15). உண்மையான மதிப்பைத் தருவது பணமோ - அல்லது தலைப்புகளோ, அல்லது மரியாதைகளோ, அல்லது இன்பங்களோ அல்ல. அப்படியானால் மதிப்பு தருவது எது? நமது வேத பகுதி சொல்கிறது,

“ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோவாயானால் உன் பெலன் குறுகினது” (நீதிமொழிகள் 24:10).

“ஆபத்துக்காலம்” என்பதன் அர்த்தம் “உங்களுக்கு விரோதமான காலங்கள்”. “சோர்வு” என்பதன் அர்த்தம் “முயற்சியை விட்டு விடுதல்”. மேத்யூ பூலே வேத வர்ணனை சொல்கிறது, “உனக்கு கொஞ்சம் கிறிஸ்தவ பெலனோ அல்லது தைரியமோ இருக்கிறது என்பதின் அடையாளம் இது, அது ஆபத்துக்காலத்தில் நன்றாக வெளிப்படுவது”. மனிதனின் பரீட்சை அவனுக்கு எதிராக நடப்பவைகளுக்கு மத்தியில் எவ்விதமாக செயல்படுகிறான் என்பதில் இருக்கிறது! 1599ல் வந்த ஜெனீவா வேதாகம ஆய்வு சொல்லுகிறது, “மனிதன் பாடுகளுக்குள் சிக்கிக்கொள்ளும் வரையில் அவனுக்கு எவ்வித பரீட்சையும் இல்லை” (note ‘b’ on Proverbs 24:10).

இதுவே மனிதனுக்கு வரும் உண்மையான சோதனை - அவன் நன்றாக இருக்கும் போதல்ல, ஆனால் எல்லாமே அவனுக்கு முன்பாக இருளாய் இருக்கும்போது தான். அந்தச் சோதனையை வைத்துப் பார்த்தோமானால், நமது போதகர் ஹைமர்ஸ் அவர்கள் மிகவும் நல்ல கிறிஸ்தவர்! அவருடைய வாழ்வு முழுவதும் சோதனைகளால் நிறைந்தவை. அவர் பெலவீனமாக உணர்ந்த போதும், அவர் தளர்ச்சியடைந்து விடவில்லை. டாக்டர் பாப் ஜோன்ஸ் சீனியர் (1883 - 1968) சொன்னார், “உன் குணாதிசயத்தின் பரீட்சை மட்டுமே உன்னை தடைசெய்ய வல்லது”. இதை நாம் வேறு விதத்தில் சொல்லுவோம், “உங்கள் குணாதிசயத்தின் பரீட்சைதான் உங்களை தடைசெய்யாத ஒன்று”. “ஒன்றும் உங்களை நிறுத்திவிட முடியவில்லையென்றால் உங்களிடம் மிகப்பெரிய நற்பண்பு இருக்கிறது”. அது தான் நமது போதகருக்கும் இருக்கிறது.

இன்று நமது போதகரின் 75வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம். அவரது வாழ்வின் பெரும்பகுதி ஆபத்துக்களால் நிரம்பி இருந்தன. காரியங்கள் இவருக்கு விரோதமாக இருந்தன. ஜனங்கள் விரோதித்தனர். ஆனால் அவர் தொடர்ந்து முன்னேறினார். அது அவருடைய சொந்த வலிமையில் நடந்தது அல்ல. அவருடைய வாழ்வின் வசனம் பிலிப்பியர் 4:13, “என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினால் எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு”. இன்று நமது போதகரைக் கணப்படுத்துகிறோம் - கிறிஸ்துவுக்கு மகிமையைக் கொண்டு வருகிறோம்!

டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் வாழ்வில் சந்தித்த சிலகாரியங்களை பகிர விரும்புகிறேன். அவரது வாழ்க்கை கதை பெலத்தின் விடாமுயற்சியின் மற்றும் கிறிஸ்துவின் மூலம் வரும் வெற்றியின் கதை! அவரது வாழ்வின் பாடுகள் அவரது நற்பண்பின் ஆழத்தைக் காட்டுகிறது.

நமது போதகரின் இளம் பருவமும் சோதனைகளால் நிரம்பியிருந்தது. அவர் கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்ந்தவரல்ல. உண்மையாகவே, அவர் உடைந்து போன குடும்பத்திலிருந்து வந்தவர். அவருக்கு இரண்டு வயதாயிருக்கும்போது அவர் தகப்பன் அவரை விட்டு போனார். அவரது தாயார், சிசிலியா, அவருக்கு பன்னிரண்டு வயது வரும் வரை அன்போடு அரவணைத்து வந்தார். அதற்குப் பின்பு பல உறவினர் வீடுகளில் உலவி, வர வேண்டிய கட்டாயம். அவர் உயர்நிலைப் படிப்பு முடிப்பதற்குள் 22 பள்ளிகளுக்கு மாற வேண்டிய அவலம். அவர் எப்போதும் “புதிய பையன்” - வேறு இடத்தைச் சேர்ந்தவர். அவரது வாழ்வில் எவ்வித அன்பு அல்லது பராமரிப்பு இல்லாத - ஒரு “முழுமையான அனாதையாகவே” வாழ்ந்து வந்தார்.

அப்படியிருந்தும், தேவன் அவருக்கு நல்லவராகவே இருந்தார். வேதம் சொல்கிறது, “கர்த்தர் எல்லார் மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகள் மேலுமுள்ளது” (சங்கீதம் 145:9). தம்முடைய பிள்ளைகள் இரட்சிப்படையும் முன்னரே, தேவன் தம்முடைய பிள்ளைகளைப் பராமரிக்கிறார். டாக்டர் ஹைமர்ஸின் பேச்சு மற்றும் இலக்கிய ஆசிரியர், ரே பிலிப்ஸ் அவர்கள், அவரது நடிப்புத் திறன் மற்றும் பேச்சுத்திறனைப் புரிந்து கொண்டார். அவர் நமது போதகர் மீது அக்கறை கொண்டு அவரைப் பராமரித்தார். பிலிப்ஸ் அவர்கள் அவருக்கு மிகவும் கனிவானவராகக் காணப்பட்டார். ஆனால் நாடக மேடை மாயை என்பதை டாக்டர் ஹைமர்ஸ் புரிந்து கொண்டு, சுவிசேஷப் பிரசங்கியானார்!

டாக்டர் ஹைமர்ஸ் சபையில் வளர்ந்தவரல்ல. அவருக்கு சாதாரணமான ஒரு குடும்ப உறவு இல்லை. அப்படி இருந்திருந்தால் அவர் சரளமான பழக்கமுடைய - வெளிப்படையான சுபாவமுடன் (extrovert) வளர்ந்திருப்பார். ஆனால் அவருடைய எல்லா மாற்றங்களும் வெறுப்பின் சூழல்களும் அவரை தனித்தவராக - (introvert) உள்ளான நிலையில் பார்ப்பவராக மாற்றியது. அவர் மிக ஆழமாக தன்னைக் குறித்து பார்க்கலானார், அப்போது தேவனைக் குறித்து நினைக்கலானார். இவர் நன்றாகப் பிரசங்கிப்பதால், அநேக வேளைகளில் மக்களுடன் இடைபடுவதால், டாக்டர் ஹைமர்ஸை தனிமையான நபராக நீங்கள் நினைப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால் உள்ளான நிலையில் அவர் மிகவும் மிருதுவான சுபாவமுடைய, தன் பெலவீனத்தை உணர்ந்திருக்கும் நபர். அவர் தன்னை சார்ந்து கொள்ளாமல் தேவனை சார்கிறார்.

அப்படிப்பட்ட வாழ்வின் சூழலில், “கிருபையின் கதவினை” திறந்து கொடுத்து தமது அன்பை அவர் மீது அனுப்பினார். டாக்டர் மெக்கோவன் தம்பதியினர் நமது போதகருடைய அண்டை வீட்டாராக இருந்தவர்கள். அவர்கள் அவருக்கு அந்த கிருபையின் திறப்பாய் காணப்பட்டனர். அவரை நேசித்தனர். அவருக்கு இரவு உணவு அருந்த அழைப்பு விடுத்தனர். அவரை சபைக்கு அழைத்து வந்தனர், அங்கே தான் அவர் சபை அங்கமானார். நமது போதகர் தனிமையான வாலிபராய் இருந்த காலத்தில் அவருக்கு நல்லவராக இருந்தார்.

அப்பருவ வயதில் டாக்டர் ஹைமர்ஸ் தன்னுடைய உறவினரைப் போல இருக்க விரும்பவில்லை. அவர்கள் குடிப்பழக்கமுடையவர்களாயும் சபிக்கிறவர்களாயும் இருந்தனர். அவர் சபைக்குச் சென்று நல்ல கிறிஸ்தவராக இருக்க விரும்பினார். அப்படி சிந்திக்கும் போது அவர் இரட்சிக்கப்பட்டிருக்கவில்லை. தேவன் ஆபிரகாமைப் பார்த்து, “நீ உன் இனத்தாரையும் உன் வீட்டையும் விட்டு ... நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ” (ஆதியாகமம் 12:1) என்று சொன்னது போல நமது போதகரும் காணப்பட்டார்.

“விசுவாசத்தினாலே ஆபிரகாம், தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்துக்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப் போனான்” (எபிரெயர் 11:8).

தேவன் என்ன செய்ய விரும்பினார் என்பதைக் குறித்த அறிவு ஆபிரகாமுக்கு இல்லாதிருந்தது. அவன் இன்னமும் இரட்சிப்படையவில்லை. ஆனாலும் அவன் “கீழ்ப்படிந்து; புறப்பட்டுப் போனான்.” அதைத்தான் டாக்டர் ஹைமர்ஸ் செய்தார். அவன் இன்னமும் இரட்சிப்படையவில்லை. ஆனால் அவர் தம் வாழ்வை மாற்றியிருந்தார். இறையியல் வல்லுநர்கள் இரட்சிக்கப்படும் முன்னரே தேவனுக்கு பதிலளிப்பதை - “விசுவாசத்திற்கு முன்னான விசுவாசம்” என அழைக்கின்றனர்.

நமது போதகர் சபைக்குச் சென்றதால் எவ்வித ஆதரவோ அல்லது புகழ்ச்சியையோ பெறவில்லை. அவரைப் பார்த்து “பக்தியுள்ள பூனை” என கிண்டல் செய்தனர். ஆனாலும் அந்தப் பரியாசங்களுக்கு மத்தியில் நமது போதகர் தேவ சத்தத்தைப் பின்தொடர்ந்தார். நமது வேதபகுதி சொல்கிறது, “ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோவாயானால் உன் பெலன் குறுகினது”. கடவுளுக்கு நன்றி அவர் சோர்ந்து போகவில்லை. அவர் பெலன் குறுகியிருக்கவில்லை, ஏனெனில் தேவன் அவருக்கு பெலன் தந்திருந்தார்!

இயேசு சொன்னார், “ஒருவனை பிதா இழுத்துக்கொள்ளாவிட்டால், அவன் தானாக என்னிடத்தில் வரான்” (யோவான் 6:44). அது எப்படிப்பட்ட இழுத்துக்கொள்ளுதல்? நாம் அநேகமாக நினைப்பது ஒரு மனிதன் இரட்சிப்படையும் முன்னர் தேவன் அவன் மனதில் அசைவாடுகிறார் என்பது. ஆனாலும் தேவ இழுத்துக்கொள்ளுதல் என்பது அதற்கும் முன்பாக தொடங்க வல்லது. மேக்கோவன் தம்பதியினரை பயன்படுத்தி டாக்டர் ஹைமர்ஸை பாப்திஸ்து சபைக்கு அழைத்து வந்தது, அவரை தேவன் இழுத்துக் கொண்டதின் ஒரு அங்கமாகும்.

பதினேழாம் வயதில் டாக்டர் ஹைமர்ஸ் அவரது போதகர் மேப்பில்ஸ் செய்தி கொடுக்கும் வேளையில் சொன்னார், “ஊழியத்திற்கு ஒப்புக்கொடுக்க வேண்டிய வாலிபன் ஒருவன் இங்கே இருக்கிறான்”. டாக்டர் ஹைமர்ஸ் அவரது போதகரை அதிகமாக நேசித்து அவரைப் போல இருக்க விரும்பினார். இந்த சிந்தையை இங்கே கொடுத்தது யார்? அது தேவனே. டாக்டர் ஹைமர்ஸ் தேவ ஊழியத்திற்கு தன்னை அர்ப்பணித்தார். இதைச் செய்யப்பண்ணினது யார்? அதுவும் தேவ இழுத்துக் கொள்ளுதலின் ஒரு அங்கமே. அவர் பிரசங்கம் செய்ய ஆரம்பித்த போது அதிகமாய் தோல்வியுற்றாலும், அவர் தொடர்ந்தார். பின்நாட்களில், அவர் சீனர்களுக்கு மிஷனரியாக விரும்பினார். ஆகவே அவர் முதல் சீன பாப்திஸ்து சபைக்குச் சென்றார். அதுவும் கூட, தேவ இழுத்துக் கொள்ளுதலின் ஒரு அங்கமே.

1961ல் நமது போதகர் பயோலா கல்லூரிக்குச் சென்றார். டாக்டர் சார்லஸ் ஜே. வுட்பிரிட்ஜ் ஒருவாரம் ஆலயத்தில் பிரசங்கித்தார். டாக்டர் வுட்பிரிட்ஜ் சீன தேசத்தில் பிறந்தவர். அவர் ஃபுல்லர் செமினரியை விட்டு வெளி வந்தவர். காரணம் அங்கே வந்து கொண்டிருந்த தாராளமய இறையியல். ஆக, அந்த இரண்டு காரணங்களால் டாக்டர் ஹைமர்ஸ் ஈர்க்கப்பட்டு, அவரது செய்திகளை கவனமாகக் கேட்டார். அதை ஆயத்தம் செய்யதது யார்? தேவனே! அந்த ஆலய நேரங்களில் டாக்டர் ஹைமர்ஸ் சார்லஸ் வெஸ்லியின் பாடல்களைப் பாடினார், “என்ன ஆச்சரியமான அன்பு! என் தேவனே, எனக்காக எப்படி நீர் மரித்தீர்?” இயேசு அவரை நேசித்து அவருக்காக இரத்தம் சிந்தியதை உணர்ந்தார். செப்டம்பர் 28, 1961ல் டாக்டர் பிரிட்ஜ்வுட் பிரசங்கித்துக் கொண்டிருந்த வேளையில், காலை 10:30 மணியளவில் டாக்டர் ஹைமர்ஸ் கர்த்தரை விசுவாசித்து இரட்சிப்படைந்தார்!

பின்பு அவரது கிறிஸ்தவ வாழ்வைத் துவங்கினார். அது அவ்வளவு எளிதாக இல்லை. அவர் கல்லூரி செல்ல வேண்டியதாயிருந்தது. அது அவருக்குக் கடினமாக இருந்தது. அவரது உறவினர்கள் எவரும் கல்லூரிக்குச் சென்றதில்லை. அவருக்கு ஊக்கமோ அல்லது பணமோ கிடைக்கவில்லை. அவரால் முடியாது என்று உணர்ந்தார். எனினும் மிஷனெரி ஆக வேண்டுமானால் அவர் கல்லூரிக்குச் சென்றாக வேண்டும் என்பதால் சென்றார். தேவன் அவருக்கு வாழ்வு வசனமாக, “என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினால் எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு” (பிலிப்பியர் 4:13) வசனத்தைத் தந்தார். அவர் செய்ய முடியாது என உணர்ந்த காரியத்தை கிறிஸ்துவின் பெலத்தால் செய்து முடித்தார்! பகலில் முழு நேர வேலை செய்து மாலை நேர வகுப்பில் கலந்து கொண்டு - பல வருடங்களாக, சபையில் பல மணி நேர பணியும் செய்து பயின்றார். பாதை நீண்டதும் கடினமானதுமாயிருந்தாலும், அவர் மயங்கிவிடவில்லை. அவர் இளங்கலை முதுகலை என மட்டுமல்லாமல் மூன்று ஆய்வுப் பட்டங்களையும் வென்றார். கிறிஸ்துவில் அவருக்கு பெலன் இருந்தது. “ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோவாயானால் உன் பெலன் குறுகினது” (நீதிமொழிகள் 24:10). ஆனால் கிறிஸ்துவுக்குள், அவருடைய பெலன் பெரிதாயிருந்தது!

டாக்டர் ஹைமர்ஸ் இன்னுமொரு நபரைக் குறித்தும் பேசச்சொன்னார். அது டாக்டர் ஹைமர்ஸ் வேலை செய்த இடத்தில் இருந்த நடுத்தர வயது பெண்மணி. அநேக ஆண்டு இரவு பள்ளியினிமித்தம் அவர் அதிக மன அழுத்தத்திற்குள்ளானார். இந்த பெண், கிவென் டெல்வின், அவரோடு ஒவ்வொரு இரவும் பேசி ஊக்கப்படுத்தினார். அவருடைய உதவி இல்லாமல் இதை அவரால் செய்திருக்க முடியாது என அடிக்கடி என்னிடம் பகிர்ந்து கொண்டதுண்டு.

இந்த செய்தியைக் கொடுத்தபின்னர் டாக்டர் ஹைமர்ஸ் தனக்கு உதவியாயிருந்து மேலும் நான்கு பேரைக் குறித்து பகிரச் சொன்னார். சீன சபையில் இளம் தம்பதியாயிருந்த மர்ஃபி மற்றும் லோர்னா லம். டாக்டர் ஹைமர்ஸ் அங்கே ஊழியத்திற்குச் சென்ற போது அவரைத் தங்கள் சிறிய சகோதரனைப் போலப் பாவித்து அன்பு பாராட்டினர். அவரைத் தங்கள் வீட்டில் ஏற்றுக்கொண்டனர். ஒவ்வொரு ஞாயிறு மாலையிலும் அவரை அழைத்துச் சென்று நல்ல இரவு விருந்து கொடுப்பர். டாக்டர் ஹைமர்ஸ் சொல்ல விரும்பின மூன்றாம் நபர் யூஜின் வில்கெர்சன். இவர் சீன சபையில் இருந்த வயதான நபர். அவர் சபையின் காரியதரிசியாய் இருந்து பல காரியங்களை செய்தவர். அவர் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுடன் வாழ்நாள் நண்பராக மாறினார். நமது போதகர் அவரோடு அதிக நேரங்கள் செலவிட்டுள்ளார். சனிக்கிழமை இரவுகளில் அவர் சபை ஆராதனை பிரதிகளைத் தயாரித்த பின்னர் அவரை வீட்டிற்கு நமது போதகர் அழைத்துச் செல்வார். அவர் மரித்த போது, அவருடைய குடும்பத்தார் அவரது அடக்க ஆராதனையை முதல் சீன பாப்திஸ்து சபையில் வைத்து நடத்தும்படி கேட்டுக்கொண்டனர். டாக்டர் ஹைமர்ஸ்க்கு உதவியாய் இருந்த மற்றொருவர் ஜேக்ஸன் லூ, அவருக்கு நல்ல நண்பரான இளம் சீன வாலிபர்.

சீன சபையில், டாக்டர் ஹைமர்ஸ், அவரது போதகர் டாக்டர் தீமோதி லின் (1911-2009) அவர்களுக்கு கீழ் பணிபுரிந்தார். டாக்டர் லின் அற்புதமான வேத வல்லுநர். அவர் ஒரு பரிசுத்தவான். கிறிஸ்தவம் வெளித்தோற்றமான காரியமல்ல, மாறாக ஜீவனுள்ள மார்க்கம் என விசுவாசித்தார். தேவன் இவரை டாக்டர் லின் அவர்கள் கீழ் பழக்கி வல்லமையான தேவ மனுஷனாக இவரையும் மாற்றினார்.

அந்த வருடங்கள் எளிதானவை அல்ல. டாக்டர் ஹைமர்ஸ் மட்டுமே அந்த சபையில் இருந்த ஒரே வெள்ளை இனத்தவர். வேலை மிகவும் கடினமானது, வெள்ளி, சனி இரவு மற்றும் ஞாயிறு முழுவதும் பிரசங்கம் மற்றும் போதனை செய்ய வேண்டியதாயிருந்தது. அந்த ஒழுக்கம் மிகவும் கட்டாயமான ஒன்று. ஆனால் அது மிகவும் நன்றாய் அமைந்தது. வேதம் சொல்கிறது, “ஒருவன் தன் இளம் பிராயத்தில் தன் நுகத்தை சுமப்பது அவனுக்கு நல்லது” (புலம்பல் 3:27). அவைகளை உபயோகப்படுத்தி அவரை வல்லமையான பாத்திரமாக மாற்றியது. அது தான் அவருக்கு உண்மையான வேத கலா சாலை. இந்த வேலையைப் பயன்படுத்தி கிறிஸ்தவ ஊழியம் என்ன என்பதை அவருக்கு கற்றுக் கொடுத்தார். அந்த வருடங்கள் மிகக் கடினமானவை. அந்த வழியின் கடினம் நமது போதகரின் நற்குணத்தின் பெலனைக் குறிக்கிறது. டாக்டர் ஹைமர்ஸ் சோர்ந்து போக வில்லை. பாதை மிகவும் கடினமாயிருந்தது - ஆனால் அவருடைய வலிமை பெரிதாயிருந்தது!

அந்த சீன சபை தென் பாப்திஸ்து சபை. ஆகவே டாக்டர் ஹைமர்ஸ் தென் பாப்திஸ்து வேதாகமக் கல்லூரிக்குச் சென்றார். ஆனால் அது தாராளமய இறையியல் வல்லுநர்களால் வேதத்தை தாக்கிய கல்லூரி. அவர் தனியே நிற்க வேண்டியதாயிருந்தாலும், வேதத்திற்காக எழும்பி நிற்க நமது போதகரை தேவன் பயன்படுத்தினார். அவர் தனிமையாக சோர்வாக உணர்ந்த போது தேவன் அவரை பெலப்படுத்தி ஊக்கம் தந்தார். “என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினால் எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு” (பிலிப்பியர் 4:13).

ஊழியராக டாக்டர் ஹைமர்ஸ் துணிவானவராகவும் உண்மையானவராகவும் இருந்தார். இன்று அநேக பிரசங்கியார்கள் சுலப பாதையைத் தெரிந்து கொள்கின்றனர். அவர்கள் ஒன்றும் சொல்வதுமில்லை செய்வதுமில்லை. அவர்கள் எரேமியா உரைத்த பிரசங்கியார்கள் போன்றவர்கள்,

“தீர்க்கதரிசிகள் முதல் ஆசாரியர்கள் மட்டும் ஒவ்வொருவரும் பொய்யர்… சமாதானமில்லா திருந்தும் சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனத்தின் காயத்தை மேற்பூச்சாய் குணமாக்குகிறார்கள்” (எரேமியா 6:13, 14).

ஆனால் கடினமான நேரங்களிலும் டாக்டர் ஹைமர்ஸ் சத்தியத்தைப் பேசினார். தென் பாப்திஸ்து செமினரிகளில் இருந்த தாராளமயதாரர்களுக்கு எதிராக நின்றார். அவைகளை வெட்ட வெளிச்சமாக்கும்படி புத்தகம் எழுதினார், எல்லா சபைகளுக்கும் இலக்கியங்களை அனுப்பி அவைகளை மீண்டும் வெட்ட வெளிச்சமாக்கினார். இன்று இந்த செமினரிகள் சத்தியத்திற்கு சார்புடையவையாய் மாறிவிட்டன.

அவர் பெயரளவு கொள்கைக்கும் விரோதமாக நின்றார் - நீங்கள் கிறிஸ்தவராகவும் இருந்து கொண்டு பாவமும் செய்யலாம் என்னும் கருத்து அது. தற்போதைய சுவிசேஷ மார்க்கத்தார் ஞாயிற்றுக் கிழமைகளில் ஆலயத்தைத் தவிர்த்து, நடனமாடுவது, போதை மருந்து புகைப்பது, திருமணமாகாமலேயே பாலுறவு வைத்துக்கொள்வது போன்றவைகளில் ஈடுபட்டனர். டாக்டர் ஹைமர்ஸ் அன்றும் சொன்னார் - இன்றும் சொல்கிறார் - அப்படி வாழ்பவர்கள் கிறிஸ்தவர்களே அல்லர்!

நமது போதகர் கருக்கலைப்புக்கு எதிராக குரல் கொடுத்தார். அது எளிதல்ல. டாக்டர் ஹைமர்ஸ் கருக்கலைப்பு செய்யும் ஆஸ்பத்திரிக்கு முன்பாக, அடியையும் சிறை வாசத்தையும் பொருட்படுத்தாமல் காவலர் சூழ எதிர்ப்புக் குரல் கொடுத்தார். நமது சபையோ இரு கருக்கலைப்பு ஆஸ்பத்திரிகளை மூடிவிட்டது. எதிர்ப்பு வலியதாய் இருந்தது, ஆனால் டாக்டர் ஹைமர்ஸ் சோர்ந்து போகவில்லை. என்ன அற்புதமான தேவ மனிதர்!

ஹாலிவுட் துர் உபதேச படமான “கிறிஸ்துவின் இறுதி சோதனை” (“The Last Temptation of Christ.”) என்ற படத்தைத் தயாரித்தது. அநேகர் இந்தப் படத்தை ஏற்றுக் கொள்ளாதிருப்பது உண்மையே. ஆனால் டாக்டர் ஹைமர்ஸ் அதற்கு எதிராகப் போராடினார். போர்வீரர் அழைக்கும் “குறியான மனிதன்” என்பது போல போர்க்களத்தின் முன்னணியில் இவர் நின்றார். எதிர்ப்பு வலியதாய் இருந்தது, ஆனால் டாக்டர் ஹைமர்ஸ் சோர்ந்து போகவில்லை. 1988 ஆகஸ்டு மாதம் வெளிவந்த Christianity Today, பத்திரிக்கையில் டாக்டர் பாப் ஜோன்ஸ் ஜூனியர், பாப் ஜோன்ஸ் பல்கலைக்கழகத் தலைவர் சொன்னார், “டாக்டர் ஹைமர்ஸின் போராட்டங்கள் மட்டுமே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது!” ஹாலிவுட் அதற்குப்பின்பு அப்படி ஒரு படம் எடுத்ததில்லை! அவருடைய பாதையின் கஷ்டம் மற்றும் வலி டாக்டர் ஹைமர்ஸ் எப்படிப்பட்ட மனிதர் என்பதை நமக்குக் காண்பிக்கிறது. ஜனாதிபதி தியோடர் ரூஸவெல்ட் சொன்னார்,

விமர்சகன் முக்கியமானவனல்ல; வலிமையான மனிதன் எவ்வாறு வீழ்ச்சி அடைந்தான் என்று சொல்பவனல்ல, அல்லது கிரியை செய்பவன் அதைவிட மேலானவைகளை செய்ய முடியும். உண்மையான மதிப்பு போர்க்களத்தில் இருந்து, தன் முகம் தூசு படிந்து இரத்தமும் வியர்வையும் சிந்தி, போராடுபவனையே சாரும்… அவன் நல்ல காரியத்தில் தன்னை செலவிடுகிறான், அவன் தன் மேலான சாதனைகளின் வெற்றியோ, அல்லது மிக மோசமாக அவன் தோற்றுப் போனாலோ, அவன் பெரிய சாதனை முயற்சியில் தோற்றான், அவனுடைய இடம் வெற்றியையோ தோல்வியையோ காணாமல் பயந்து அனலற்ற ஆத்துமாக்களுடன் இராது.

டாக்டர் ஹைமர்ஸ் போர்க்களத்தின் முன்னணியில் இரத்தமும் வியர்வையும் சிந்திய மனிதர் - தன் இரட்சகருக்காக!

டாக்டர் ஹைமர்ஸ் ஒரு போதகராக உண்மையுள்ளவராயிருந்தார். அவர் இரண்டு சபைகளை ஸ்தாபித்தார். அதில் ஒன்று நமது சபை. ஆனால் எங்கும் எதிர்ப்புகளும் தீங்குகளும், ஏறத்தாழ நாற்பதாண்டு கால போராட்டங்களும் கஷ்டங்களும் உள்ளடக்கம். அது அப்போஸ்தலன் பவுல் சொன்னது போல, “இங்கே பெரிதும் அனுகூலமுமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது: விரோதஞ்செய்கிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள்” (1 கொரிந்தியர் 16:9). அநேகர் அவருக்கு விரோதமாய் இருந்த, கடினமான நாற்பது ஆண்டுகள். அப்போஸ்தலன் பவுல் சொன்னது போல, “என் சுய ஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச் சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்” (2 கொரிந்தியர் 11:26). டாக்டர் ஹைமர்ஸ் பவுலுக்கு “சபைகளைக் குறித்த நெருக்கம்” (2 கொரிந்தியர் 11:28) உண்டானது போலவே பாரஞ்சுமந்தார். எனினும் டாக்டர் ஹைமர்ஸ் விட்டுவிடவில்லை. அவர் தம்மால் முடியாது எனவும், அழுத்தமுள்ளவராகவும் உணர்ந்தார். இருந்தாலும் அவர் விட்டுவிடவில்லை. அவருடைய நற்பண்பின் வலிமை பெரிது!

எனினும் அங்கே கிருபையின் ஜன்னல்கள் இருக்கவே செய்தன. தேவன் டாக்டர் ஹைமர்ஸ்க்கு அற்புதமான மனைவியையும் இரண்டு ஆண்பிள்ளைகளையும் - ஒரு பேத்தியையும் கொடுத்தார். அதைவிட மேலாக, அநேகர் இரட்சிப்படைந்தனர். உலகத்தில் வெகு சில போதகர்களே பல ஜனங்களை இரட்சிப்பிற்குள் நடத்துகின்றனர். மாறாக அவர்கள் மற்ற சபை மக்களை தங்கள் சபைக்கு மாற்றம் செய்கின்றனர். டாக்டர் ஹைமர்ஸ்க்கான வாழ்த்து என்னவெனில் அவர் கிறிஸ்தவரல்லாதவர்கள் இரட்சிப்படையக் காரணமாய் இருக்கிறார். அவருக்கே எல்லா கனமும் உண்டாவதாக!

அப்படியிருந்தும், அவரது வாழ்வில் அநேக யுத்தங்களும் பின்னடைவுகளும் இருந்தன. இரண்டடி முன் சென்றால் ஒரு அடி பின் செல்லும் நிலை - அநேக வேளைகளில் இரண்டடி முன்னே, மூன்றடி பின்னே என்னும் நிலை. டாக்டர் ஹைமர்ஸ் தூசியைப் போல நடத்தப்பட்டார், சில வேளைகளில் அவ்வாறே உணர்ந்தார். ஆனால் அவர் உண்மையாய் இருந்தார். அவர் சோர்ந்து போகவில்லை!

அவர் வாழ்வில் பெரும் ஆபத்து வந்தது. நமது சபையின் “முன்னால் தலைவர்” ஒருவர் சபையை விட்டு கடந்து போனார். அவர் 400 நபர்களையும் கொண்டு சென்றார். நமது சபை அனைத்தையும் இழந்தது. நாம் ஏறத்தாழ கடனுக்குள் தள்ளப்பட்டோம். ஒரு பிரசித்தி பெற்ற பிரசங்கியார் டாக்டர் ஹைமர்ஸை ஸ்டான் ஜோஸிற்கு அருகில் உள்ள சபையில் நிலைநிறுத்த விரும்பி கேட்டார். அவர் சொன்னார், “நீங்கள் வெளியே செல்ல இது தான் கடைசி வாய்ப்பு”. அநேக போதகர்கள் வெளியேறி இருப்பார்கள். சபை மக்கள் சபையை விட்டுப் போன பின்பும் சபை கடினமான சூழலில் தத்தளித்த போதும் - டாக்டர் ஹைமர்ஸ் நிலைத்து நின்றார்! அவராலும் அவரோடு இணைந்த உண்மையுள்ள “முப்பத்து ஒன்பது” நபர்களின் நேரமும் பணமும் செலவிடப்பட்டதால், இப்போது உங்களுக்காக ஒரு சபை இருக்கிறது!

அப்போது தான் ஒரு மனிதனின் பரீட்சை அவன் கடினமான சூழலில் என்ன செய்கிறான் என்பதிலிருந்து வருகிறது என்று புரிந்து கொண்டேன். இருபது ஆண்டு காலம் எல்லாம் கெட்டதாக இருந்தது. நமது போதகர் கடந்து வந்த பாதை அவரது நற்பண்பின் பெலத்தைக் காட்டுகிறது. ஆபத்து பெரிதாயிருந்தது. எவ்வளவு பெரிய வலிமை!

இப்போதோ சபை உடையவில்லை. ஆனால் வேறுவிதமான போராட்டம் இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு டாக்டர் ஹைமர்ஸ் தனக்கு இன்னமும் சில போராட்டம் இருப்பதாக என்னிடம் பகிர்ந்து கொண்டார். அவர் 70 வயதைத் தாண்டி இருந்தார். நான் அறுபதைக் கடந்திருந்தேன். என்றாலும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் சொன்னேன், “என்ன? உங்கள் மரணப்படுக்கையில் நீங்கள் கிறிஸ்துவை மறுதலிப்பதில்லை!” எனினும் பரீட்சைகள் இருந்தன, கிறிஸ்துவுக்குள் நமது போதகர் வயோதிப கால சோதனைகளையும் ஜெயித்தார்.

75 வயதில், புற்று நோய் பாதிப்புடன் மருத்துவ ரீதியான பெலவீனத்தில், அநேக மனிதர்கள் ஓய்வு பெற்று விடுவர். ஆனால் நமது போதகர் நமது சபைக்காகவும் தேவனுக்காகவும் இன்னும் உழைத்துக்கொண்டிருக்கிறார்! அவர் மேடைக்கு தள்ளாடி வருவதைப் பார்த்திருக்கிறேன், நடக்க முடியாமல், முந்தய நாள் உறக்கமின்றி வயிறு வேதனையுடன் இருப்பதை அறிவேன். எப்படி அவர் பேசுகிறார்? சிங்கத்தைப் போல! அவரது களைப்பான செய்தி வேறு பகுதிகளில் கிடைப்பதைவிட சிறந்த செய்தி என்பேன். ஆகவே தான் 140,000 பேர் அவரது செய்தி பிரதிகளை வாசித்தும் அவரது வீடியோவை 217 நாடுகளில் கடந்த மாதம் கண்டிருக்கின்றனர். ஆகவே உலகில் உள்ள போதகர்கள் அவரது செய்தியை தங்கள் சபைகளில் பயன்படுத்துகின்றனர். அவரது வாழ்வு வசனத்திற்கு அவர் சிறந்த நிரூபணம், “என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவால் எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு” (பிலிப்பியர் 4:13).

அவர் புற்று நோயில் இருந்து விடுதலை பெற்று இன்னும் அதிக காலம் ஊழியம் செய்ய வேண்டும் என்று ஜெபிக்கிறேன். ஆனால் டாக்டர் ஹைமர்ஸ் என்றென்றைக்கும் நிலைத்து வாழப்போவதில்லை. வேதம் சொல்லுகிறது, “எங்கள் நாட்களை எண்ணத்தக்க ஞானமுள்ள இருதயத்தை எங்களுக்குத் தாரும்” (சங்கீதம் 90:12). அநேகர் வாழ்வின் குறுகிய காலத்தை உணர்வதில்லை. அநேக போதகர்கள் கூட. அவர்கள் போன பின்பு என்ன செய்ய வேண்டும் என திட்டமிடுவதில்லை. ஆகவே அவர்களுடைய சபை வெடித்து சிதறி, அல்லது வலிமையிழந்து மரித்து விடுகிறது. நமது சபையைக் குறித்து நமது போதகர் கரிசனை உடையவராக இருப்பதால் தேவனுக்கு நன்றி! அவருடைய பெலவீனத்தினிமித்தமாகவோ சுய பரிதாபத்திற்காகவோ தமது எதிர்கால மரணம் குறித்து அவர் பேசுவதில்லை இளைஞர்களே - அது தைரியம் மற்றும் உண்மையின் செயல்பாடு! அவர் கிறிஸ்தவ இளம் நபர்களுடன் அதிக தூரம் கர்த்தருக்காக உழைக்கப் பேசும் போது - அது அவரது பொறுப்பு மற்றும் கடமை, மற்றும் மரியாதை அன்பு கலந்த செயல்பாடாக வெளிப்படுகிறது!

இன்று நமது போதகர் முதுமை, நோய் மற்றும் வாழ்வின் குறுகிய தன்மையை எதிர்கொள்கிறார். காரியங்கள் ஒரு மனிதனுக்கு எதிராய் இருக்கும் போது, அவனது மதிப்பு அளவிடப்படுகிறது. டாக்டர் ஆர். எல். ஹைமர்ஸ் ஜூனியரில், மெய்யாகவே ஒரு பெரிய மனிதரைக் காண்கிறோம்!

இவையெல்லாவற்றையும் அவர் எப்படி செய்தார்? அவராகவே செய்தாரா? கிறிஸ்துவில்! நமது போதகர் சந்தோஷமாகச் சொல்வார், “[அவரைப்] பெலப்படுத்தின கிறிஸ்துவால் [மட்டுமே] அவரால் எல்லாம் செய்ய முடிந்தது” என்று. பெலம் எங்கே இருக்கிறது? கிறிஸ்து, கிறிஸ்து மறுபடியும் கிறிஸ்து மட்டுமே!

அப்போஸ்தலன் பவுல் சொன்னார், “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுவது போல, நீங்களும் என்னைப் பின்பற்றுங்கள்” (1 கொரிந்தியர் 11:1). நான் உங்களுக்குச் சொல்கிறேன், நமது போதகர் கிறிஸ்துவைப் பின்பற்றுவது போல அவரைப் பின்பற்றுங்கள். கிறிஸ்துவை நம்புங்கள். உங்களால் கூடுமானமட்டும் அவருக்கு சேவை செய்யுங்கள். நான் உங்களுக்குச் சொல்கிறேன், கிறிஸ்து, கிறிஸ்து மறுபடியும் கிறிஸ்து மட்டுமே!

இன்றிரவு நமது போதகரின் 75வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம். அவருக்காக ஒரு அன்பு காணிக்கை எடுத்திருக்கிறோம். ஆனால் இங்கே அதைவிட முக்கியமான ஒன்றை நீங்கள் செய்ய முடியும். அவருக்கு நல்ல சபையாராக இருங்கள்! நான் நமது சபை எப்படி இருக்க முடியும், எப்படி இருக்க வேண்டும், தேவ கிருபையால், எப்படி இருக்கப் போகிறது! என்று காண விரும்புகிறேன். சபை நிரம்ப வாலிபரை அவருக்குத் தாருங்கள்! ஜெபியுங்கள், சுவிசேஷம் அறிவியுங்கள், ஜனங்களை நேசித்து தேவன் விரும்பும் விதத்தில் சபை மாறும் வரை முயற்சி செய்யுங்கள்! அவருக்கு நல்ல சபையைத் தாருங்கள்!

நான் இப்பொழுது கேட்கிறேன், உங்களிடம் நமது போதகரின் கிறிஸ்து இருக்கிறாரா? அவருடைய இரட்சகர் உங்களிடம் இருக்கிறாரா? இயேசுவை விசுவாசிக்கிறீர்களா? கிறிஸ்து இல்லையெனில் பாவத்தை அல்லாமல் உங்களிடம் வேறொன்றும் இல்லை. நீங்கள் அவரை நம்புவீர்களானால், அவரது இரத்தத்தால் உங்களுக்கு பாவமன்னிப்பு கிடைக்கும். நீங்கள் அவரை நம்புவீர்களானால், நித்திய ஜீவனுக்கேதுவாக நீங்கள் மறுபடி பிறப்பீர்கள். நீங்கள் இயேசுவை சீக்கிரமாக நம்பும்படி உங்களுக்காக ஜெபிக்கிறேன். ஆமேன்.

இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால், டாக்டர் ஹைமர் அவர்களுக்கு e-mail அனுப்புங்கள். அவர் உங்களிடமிருந்து பதிலைப் பெற விரும்புகிறார். நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென்றும் குறிப்பிடவேண்டும். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் e-mail: rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம். ஆனால், முடிந்தால் ஆங்கிலத்தில் எழுதவும். தபால் மூலம் அனுப்பவிரும்பினால், அவரது விலாசம்: Dr. Hymers P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசி மூலமும் தொடர்பு கொள்ளலாம்: (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை Internet மூலம் ஒவ்வொரு
வாரமும் கேட்கலாம்: www.sermonsfortheworld.com.
தமிழ்ப் பிரசங்கங்களுக்கு இங்கே கிளிக் பண்ணவும்

இந்தப் பிரசங்கங்களைப் பயன்படுத்த Dr. Hymers அவர்களின் அனுமதி
பெற வேண்டியதில்லை. அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். ஆனால்,
Dr. Hymers அவர்களின் video செய்திகளை அனுமதி இல்லாமல்
பயன்படுத்தக்கூடாது.

பிரசங்கத்திற்கு முன்னால் வேத பகுதி வாசித்தவர் திரு. ஆபேல் புருதோம் :
டாக்டர் ஹைமர்ஸின் பிடித்தமான சங்கீதம், சங்கீதம் 27:1-14.
பிரசங்கத்திற்கு முன்னால் தனிப்பாடல் பாடியவர் திரு. பென்ஜமின் கினாசிட் கிரிஃபித்:
“The Master Hath Come” (by Sarah Doudney, 1841-1926).